Social Icons

Pages

Tuesday, April 29, 2008

காற்றின் ஒலி இசையா?

இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.

மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும்.

காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

பொரியரை விளவின் புண்புற விளைபுழல்
அழலெறி கோடை தூக்கலின் கோவலர்குழலென...(பாடல்219)


கோடைவெய்யிலில் மூங்கில்கள் உலர்ந்துவிட்டன. மேல்கற்றுவீசும்போது நெல் உதிர்ந்து பொறிகிறது. அப்போது நகம் நெறிவதுப்பொல ஓசைவருகிறது இதையும் அகப்பாடல் ஒன்றுதெரிவிக்கிறது.

குன்றின்மீது சுனை நீர்வற்றிவிட்டது காற்று சுனைக்கு உள்ளே மோதிச்செல்கிறது அப்பொழுது பறைமுழங்குவதைபோல ஓசைகேட்கிறது.

இவை நம்நாட்டு ஒலிகள்.

இதைப்போன்ற வினோத சில மேல்நாட்டு ஒலிகளைக்கேட்கலாமா?

பாலைவனங்களில்பயணம் செய்தவர்கள் இனிமையான இசையொலிகளைக்கேட்டதாகக் கூறுவார்கள்.

மணி ஒலிப்பதைப்போலவும் வேறு சில ஒலிகள் கேட்பதாயும் சொல்வார்கள்.
எந்தக்கருவியிலிருந்து எந்ததிசையிலிருந்து என சொல்லமுடியவில்லை என்பார்கள்

விலங்குகளோ பறவைகளோ அலலது வண்டுகளோ இந்த ஒலியை உண்டாக்குவதில்லை. பாலைவனத்தில் ஆள்நடமாட்டமே இலலாத இடத்தினிலிருந்து இத்தகைய ஒலிகள் வருவது பற்றி டாக்டர் எமிலி சோரேல் என்னும் பௌதீகப் பேராசிரியருக்கு வியப்பாகி, இதனைக்குறித்து சில பரிசோதனைகள் செய்ய முன்வந்தார்.

டாக்டர் எமிலி தனது துப்பாக்கியை பாலைவன காற்று வேகமாக வந்து மோதும் திசைக்கு எதிராக 45டிகிரி கோணத்தில் நிற்கவைத்தார். என்ன ஆச்சர்யம்? உலோகக்கம்பி அதிர்வதுபோல ஓசை கேட்டது. பிறகு துப்பாக்கியை அப்படியும் இப்படியும் மாற்றிவைத்து பாலைவனத்தில் வழக்கமாய் கேட்கும் கம்பிச்சுருள் அதிர்வதைப்போன்ற ஒலி வரும்படிச் செய்தார் .பிறகு இந்த அமைப்பை மற்றவர் பார்வையில் படாமல் மறைத்துவிட்டு ஒருவிவசாயியை அழைத்து வந்து அந்த ஒலியைக் கேட்கச்செய்தார்.

பாலைவன இசையைக்கூர்ந்து கேட்ட விவசாயி மணியோசைமிகவும் இனிமையாக இருக்கிறது என்றார்.

டாக்டர் எமிலி இந்தப்பரிசோத்னையின்படி கூறும் கருத்து...

'அந்த விவசாயயநண்பர் என் துப்பாக்கியின்மீது பட்டு ஆற்றலுடன் வெளிப்பட்ட ஒலியை மணியோசை போல இருப்பதாகக் கூறினார். அந்த ஒலி எந்தத் துப்பாக்கியிலிருந்து தோன்றுவது என்பதை நான் அவருக்குக்காண்பித்தேன் அவர் ஆச்சரியம் அடைந்தார்
அந்த இனியஒலி அருகிலிருந்து கேட்காமல் எங்கொ தொலைவிலிருந்து வருவது போல அவர் கூறியது முற்றிலும் உண்மை .ஏனென்றால் அந்த ஒலிஅப்படித்தான் கேட்டது.

இந்த சோதனையில் நான் அறிந்த உண்மை இதுதான்.

பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் காற்று உயரத்தில் இருக்கும்போது ஏதோ ஒருபொருளின் வழியாக ஊடுருவிச்செல்லும்போது அந்தப்பொருளை அதிரச்செய்கிறது. அப்போதுதான் இந்த விசித்திரமான ஒலிகேட்கிறது.

காற்றால் அதிரும் அந்தப்பொருள் குன்றின் உச்சியாகவோ பள்ளத்தாக்கை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் கூர்மையானமுனையாகவோ அல்லது தனது நிலையிலிருந்து சற்றே நெகிழ்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம் .அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.


மலைச்சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்களில் வண்டுகள் துளை ஏற்படுத்தி இருப்பது இயற்கை அந்ததுளைகளில் காற்று புகுந்து செல்லும்போது இனிய இசை ஏற்படும் என்று இலக்கியங்க்ள் கூறுகின்றன.


கில்பர்ட் என்பவர் நேச்சர் இதழுக்கு ஒருகடிதம் எழுதி உள்ளார்.

அந்தக்கடிதத்தில் தனது பண்ணைக்கும் சிறிது தொலைவில் உள்ள வீட்டுமுன்வாயிலுக்கும் உள்ள இடைபட்ட தொலைவில் பூச்சிகள் இறகடித்துப்பறப்பதால் உண்டாகும் ரீங்கார ஓசை கோடைக்கால மதியம் ம்ற்றும் மாலை வேளைக்ளில் தொடர்ந்து கேட்பதாகக்கூறுகிறார்.

'அந்த ஒலி உற்சாகத்தைஏற்படுத்தும் .ஆயிரக்கணக்கான தேனிகள் பறப்பது போல ஓசை உண்டானபோதிலும் ஒருபூச்சிகூட கண்ணுக்குத் தெரியாததுவியப்பு!'என்கிறார்.அவர்

சில ஓசைகள் எங்கிருந்துவருகின்றன என இதுநாள் வரையிலும் அறிய இயலவில்லை.
உலகத்தில் தோண்றும் எல்லா ஒலிகளுக்கும் ஏதேனும் ஒருஅடிப்படைக் காரணம் இருக்கும் .

காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.

17 comments:

  1. நிஜம் தான் ஷைலஜா அக்கா.
    இங்கு பாலைவனப் புழுதிப் புயல் படு பயங்கர வேகத்தோடு வீசும்(ஓமக்குச்சி சாரெல்லாம் வந்தா ரொக்கெட் மாதிரி பறப்பாங்க).
    அது வெளியே வீசுற சத்தம் வீட்டுக்குள்ள இருக்குற நமக்கு ஒரு அழகான இசையாக் கேட்கும்.
    Uzzzzzzzzz ..... னு நமக்கு ஏதோ சொல்ல வர்ற மாதிரி :)

    நம்மளைச் சுத்திப் பார்த்தோம்னா எல்லாத்துலயுமே இசை கலந்திருக்கிறத உணரலாம்.. :)

    ReplyDelete
  2. இயற்கையே அதிசியம் தானே!! பிடிபடும் வரை.

    ReplyDelete
  3. பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. சேதிகளை படித்துச் சுவைத்தேன்!
    //காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.//
    அடப்பாவமே!
    //"காற்றின் ஒலி இசையா?"//
    காற்றில் வரும் கீதமே

    கண்ணனை அறிவாயோ?

    ReplyDelete
  5. எம்.ரிஷான் ஷெரீப் said...
    நிஜம் தான் ஷைலஜா அக்கா.
    இங்கு பாலைவனப் புழுதிப் புயல் படு பயங்கர வேகத்தோடு வீசும்(ஓமக்குச்சி சாரெல்லாம் வந்தா ரொக்கெட் மாதிரி பறப்பாங்க).>>>

    அப்படியா? காற்று வெற்றிடத்தில் சுழலும் போலிருக்கு.

    //அது வெளியே வீசுற சத்தம் வீட்டுக்குள்ள இருக்குற நமக்கு ஒரு அழகான இசையாக் கேட்கும்.
    Uzzzzzzzzz ..... னு நமக்கு ஏதோ சொல்ல வர்ற மாதிரி :)//

    ஆமா...காற்றுவாக்கில செய்தின்னு இததான் சொல்றாங்களோ?:)

    //நம்மளைச் சுத்திப் பார்த்தோம்னா எல்லாத்துலயுமே இசை கலந்திருக்கிறத உணரலாம்.. :)//

    அழகியவரி! உண்மை ரிஷான். இசைந்து நாம் வாழ்வும் அது காரணமாய் இருக்கலாம் நன்றி கருத்துக்கு.

    6:27 AM

    ReplyDelete
  6. வடுவூர் குமார் said...
    இயற்கையே அதிசியம் தானே!! பிடிபடும் வரை.

    >>வாங்க வடுவூர்குமார்
    இயற்கை அதிசியமே,பிடிபடும்வரை என்கிறீர்கள் ஆமாஉண்மைதான்...
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. கானா பிரபா said...
    பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இருக்கிறது.

    >>வாங்க கானாப்ரபா
    எங்கோ சிலர் பேசி விவாதித்ததை பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான் நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  8. ஜீவா (Jeeva Venkataraman) said...
    சேதிகளை படித்துச் சுவைத்தேன்!
    //காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.//
    அடப்பாவமே!
    //"காற்றின் ஒலி இசையா?"//
    காற்றில் வரும் கீதமே

    கண்ணனை அறிவாயோ?

    >>அறிவேனே:) ஆனாலும் அந்த இசையின் பரிமாணங்களை லேசா சொல்லவந்தேன் ஜீவா சார்
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  9. ஷைலஜா,

    மிக வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.

    //காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.//

    அந்தக்காலப் புகைப்படங்கள் தானே நமது பழம்பெரும் இலக்கியங்கள். என்ன ஒரு காட்சி விளக்கம். அருமை. அருமை.

    ReplyDelete
  10. சதங்கா (Sathanga) said...
    ஷைலஜா,

    மிக வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.
    >>

    நன்றி சதங்கா வருகைக்கும் வாழ்த்தியதற்கும்


    //அந்தக்காலப் புகைப்படங்கள் தானே நமது பழம்பெரும் இலக்கியங்கள். என்ன ஒரு காட்சி விளக்கம். அருமை. அருமை.//

    ஆமாம்....இலக்கியவிளக்கமே புகைப்படமாய் கண்முன்காட்சியாய்...
    நன்றி ரசித்தமைக்கு

    ReplyDelete
  11. அருவியின் அருகில், கடலலி வந்து மோதுபோது, இரவு ஊர் அமைதியில் நடந்து வரும்போது பலவிதமான ஒலிகள்
    ஆனல் பாலைவன் ஒலிகள் ஆராய்ச்சி செய்யப் பாடுகின்றன என்பது எனக்குப் புதிய செய்தி.
    அத்தனை ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்றும் கலந்து அந்த சதோஷம்,துக்கம் எல்லாமே காற்றீல் மிதக்குமோ!!!
    நன்றிம்மா.

    ReplyDelete
  12. //அறிவேனே:)//
    ஆகா, காற்றே கண்ணன் எங்கிருக்கிறான் என எனக்கும் சொல்வாயோ?.
    மணம் தரும் மல்லிக்கொடியிடம் கேட்டேன் -
    மணம் சுமந்த காற்றிடம் கேட்கச் சொன்னது;
    மணிவண்ணனின் குழலோசையைக் கேட்டேன்;
    அதைச் சுமந்த காற்றிடம் கேட்கச் சொன்னது;
    அதனால் காற்றிடம் கேட்டேன்;
    காற்றின் ஒலியில் - இசையில் இருக்கும்
    கண்ணன் கண்முன் இருந்து எங்கேயோ
    மறைந்து கொண்டே இருக்கிறான்;
    அவனை
    சிறைப்படித்து இங்கேயே
    வைக்க வழியேதும் அறியேனே.

    //இசையின் பரிணாமங்கள்// பொருளின் அதிர்வுகளில் ஏற்படும் ஒலியின் அலைகளின் அதிர்வெண் வரிசைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காதுகளால் கேட்க இயலும். அப்படி கேட்கும் அந்த சமயங்களில் அவற்றை இனங்காண, இதுவென்ன இசையென்று கவனிக்கிறோம். ஆனால் நாம் காதுகளால் கேட்க இயலாத ஒலிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பிரபஞ்சமே எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது இழைக்கொள்கை. (Super string theory.) ஒரு வேளை, புலன்களை மூடிப்பின் அக அலைவரிசையை tune செய்தால், கேட்க இயலாத இசையெல்லாம் கேட்க இயலுமோ என்னவோ?
    பிகு:சொல்லுதல் யார்க்கும் எளிதாம் - என்பதுபோல் ஏதோ எழுதி விட்டேன் - பொருட்படுத்த வேண்டாம்!

    ReplyDelete
  13. சூப்பர் பதிவு...;)

    \\அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.
    \\

    இப்படி எல்லாம் வேற இருக்கா!!

    பாலைவனத்தின் ஓசையை கேட்டுயிருக்கிறேன் ;)

    ReplyDelete
  14. வல்லிசிம்ஹன் said...
    அருவியின் அருகில், கடலலி வந்து மோதுபோது, இரவு ஊர் அமைதியில் நடந்து வரும்போது பலவிதமான ஒலிகள் >>

    ஆமாம் வல்லிமா...அமைதியினூடே கேட்கும் ஒலி விசித்திரமா இருக்கும்.
    வயல்வெளியில் பயிர்களின் தலைவருடிப்போகும் காற்றின் ஒலியைக்கேட்டுருக்கீங்களா?

    //ஆனல் பாலைவன் ஒலிகள் ஆராய்ச்சி செய்யப் பாடுகின்றன என்பது எனக்குப் புதிய செய்தி.//

    ஆமாம் கேள்விப்பட்டதும் இதனை இங்கே எழுதவந்தேன்.

    //அத்தனை ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்றும் கலந்து அந்த சதோஷம்,துக்கம் எல்லாமே காற்றீல் மிதக்குமோ!!!//

    இருக்கும்...உருவமில்லாத காற்று உருவமில்லாத ஒலியை மிதக்கச்செய்வதால்தானே அதனைப்பிடித்து நாமும் சேமிக்கிறோம்?

    //நன்றிம்மா.//

    >>நன்றி வல்லிமாகருத்துக்கு.


    >>>>>

    ReplyDelete
  15. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //அறிவேனே:)//
    ஆகா, காற்றே கண்ணன் எங்கிருக்கிறான் என எனக்கும் சொல்வாயோ?.
    மணம் தரும் மல்லிக்கொடியிடம் கேட்டேன்

    அப்படி கேட்கும் அந்த சமயங்களில் அவற்றை இனங்காண, இதுவென்ன இசையென்று கவனிக்கிறோம். ஆனால் நாம் காதுகளால் கேட்க இயலாத ஒலிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பிரபஞ்சமே எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது இழைக்கொள்கை. (Super string theory.) ஒரு வேளை, புலன்களை மூடிப்பின் அக

    அலைவரிசையை tune செய்தால், கேட்க இயலாத இசையெல்லாம் கேட்க இயலுமோ என்னவோ?
    பிகு:சொல்லுதல் யார்க்கும் எளிதாம் - என்பதுபோல் ஏதோ எழுதி விட்டேன் - பொருட்படுத்த வேண்டாம்!//

    என்ன ஜீவாசார் அற்புதமான கருத்து சொல்லும்போது பொருட்படுத்தாமல் இருக்கலாமா? கருத்துச்சுதந்திரம் இங்கு உண்டு..சொல்லுங்க இன்னும் நன்றி
    ஷைலஜா

    8:33 AM

    ReplyDelete
  16. கோபிநாத் said...
    சூப்பர் பதிவு...;)

    \\அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.
    \\

    இப்படி எல்லாம் வேற இருக்கா!!

    பாலைவனத்தின் ஓசையை கேட்டுயிருக்கிறேன் ;)

    //
    வாங்க கோபிநாத்
    ஒசைகள் எங்கும் உள்ளன.ஆதை அமைதியான் இடத்தில் கேட்கும்போது வியக்கிறோம்.நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  17. படித்த உடனே 'காற்றே, நீ என் கீதம், காணாத கண்கள் தேடுதே' ங்கற பாட்டு ஞாபகம் வந்துச்சு...வித்தியாசமான பதிவு. நன்றி ஷைல்ஸ்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.