புன்னகைக்குப்புதுமெருகாய்
சித்திரத்து எழில்முகத்தின்
முத்து மணிச்சரமாய்
உதட்டுக்கதவுக்குள்
உட்கார்ந்திருக்கின்றாய்!
செப்பும் மொழிக்கெல்லாம்
செம்மை அளிக்கின்றாய்
சோழிபோல் வடிவமதாய்
ஆழியெனும் எச்சிலிலே
அலையாமல் வீற்றிருக்கின்றாய்!
ரோஜாநிறத்தழகி
செந்நாப்பேரரசியை
ராஜாபோல் காக்கின்றாய்!
மண்ணுலகில் மக்களெல்லாம்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
உன்னுடையநற்கருணை
எந்நாளும்வேண்டி நிற்பர்.
இடையிடையே தோன்றினாலும்
இறுதிவரை தங்காமல்
நடுவினிலேமறைகின்றாய்
நாட்டியமும் ஆடுகின்றாய்!
உலகத்து உணவையெல்லாம்
சுலபமாய் உடைக்கின்றாய்
அசைகின்ற எந்திரங்கள்
ஆயிரமே இருந்தாலும்
கிறக்கின்றவிதமாகத்
திகழ்வது யார் நீதானே!
பலவாகத்திறமை
கொண்டதனால்தானோ
பல் என்று பெயர் கொண்டாய்
பல்போனால்சொல்போகும்
உள்ளேநீஇருந்தால்தான்
கொள்ளைஅழகுண்டாகும்!
பல் ஒன்றுபழுதானால்
பலநோய்கள் உடலுக்கே
ஆதலினால் பல்லுக்கு
பாதகங்கள் வாராமல்
காதலுடன் காத்திடுவோம்!
பத்திரமாய் பாதுகாப்போம்!
பின் குறிப்பு...(இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை:)
Tweet | ||||
பின் குறிப்பு...(இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை
ReplyDeletemmmm neega seira maisupak sapta pallu odanjidumnu sollama sollrega .pavamga unga vetta irkavanga avangala vettudunga .
hey me they ethanavathupa comment relest panuga
ReplyDelete\\இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை\\
ReplyDeleteஹா ஹா ஹா
உதட்டுக்கதவுக்குள்\\
ReplyDeleteஅழகாயிருக்கு ...
\\பல் ஒன்றுபழுதானால்
ReplyDeleteபலநோய்கள் உடலுக்கே
ஆதலினால் பல்லுக்கு
பாதகங்கள் வாராமல்
காதலுடன் காத்திடுவோம்!
பத்திரமாய் பாதுகாப்போம்!\\
சரி சரி புரியுது
ஏதோ ஞானோதையம் வந்திடிச்சி உங்களுக்கு
//பத்திரமாய் பாதுகாப்போம்!//
ReplyDeleteசரிங்க அப்படியே செய்யறோம்:))))))[பளிச்சென பல் தெரிய சிரிக்கிறேனாக்கும்]!!!
gayathri said...
ReplyDeleteபின் குறிப்பு...(இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை
mmmm neega seira maisupak sapta pallu odanjidumnu sollama sollrega .pavamga unga vetta irkavanga avangala vettudunga .
11:07 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாங்க காய3! ஜமால் பதிவுல வந்தவங்கதான நீங்க:) நல்வரவு!
மைசூர்பாக் இங்க வந்து சாப்பிட்டு அப்றோமா சொல்லுங்க காயத்ரீ!
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை\\
ஹா ஹா ஹா
11:08 AM
நட்புடன் ஜமால் said...
உதட்டுக்கதவுக்குள்\\
அழகாயிருக்கு ...
11:33 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>..வருகைக்கும் சிரிச்சதுக்கும் கருத்துகும் நன்றி ஜமால்.
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\பல் ஒன்றுபழுதானால்
பலநோய்கள் உடலுக்கே
ஆதலினால் பல்லுக்கு
பாதகங்கள் வாராமல்
காதலுடன் காத்திடுவோம்!
பத்திரமாய் பாதுகாப்போம்!\\
சரி சரி புரியுது
ஏதோ ஞானோதையம் வந்திடிச்சி உங்களுக்கு
11:35 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹஹ்ஹா..ஆமா ஒரு பல் டான்ஸ் ஆடுது:)
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//பத்திரமாய் பாதுகாப்போம்!//
சரிங்க அப்படியே செய்யறோம்:))))))[பளிச்சென பல் தெரிய சிரிக்கிறேனாக்கும்]!!!
11:37 AM
>>>>>>>>>>>>>>>>>
வாங்க ராமல்ஷ்மி! நீங்க புன்னகைஅரசியாச்சே நல்லா சிரிங்க!
சான்சே இல்ல...கலக்கல் கவிதைக்கா...;))
ReplyDeleteபல் சுளுக்கும் அளவு சிரிச்சேன்:-)))
ReplyDeleteஆனா உங்க மைபா தான் நியாபகம் வருது!
கவிதையின் சுவையை உணர முடிகிறது, மைசூர் பாக்கின் சுவையை உணர முடியவில்லையே!
ReplyDeleteஅதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்!? :):):)
கோபிநாத் said...
ReplyDeleteசான்சே இல்ல...கலக்கல் கவிதைக்கா
>>>>>>>>>>>>>>>>>>>>>>
் அப்படியா நன்றி கோபி.
அபி அப்பா said...
ReplyDeleteபல் சுளுக்கும் அளவு சிரிச்சேன்:-)))
ஆனா உங்க மைபா தான் நியாபகம் வருது!
5:34 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்ன அபிஅப்பா காணாத ஒன்று எப்படி நினைவுக்கு வருமாம்>?:):)
ஜோதிபாரதி said...
ReplyDeleteகவிதையின் சுவையை உணர முடிகிறது, மைசூர் பாக்கின் சுவையை உணர முடியவில்லையே!
அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்!? :):):)
6:29 PM
>>>>>>>>>>>>>>>>>>
ஜோதிபாரதி
வாங்க
மைசூர்பாக்கின் சுவையை உணரவேணுமா
ஓகே
எப்போ எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லுங்க உடனே செய்துதந்துடறேன்:):)