Social Icons

Pages

Monday, November 21, 2011

அகமும் புறமும்.












ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'நீ நடந்தால் நடை
அழகு’ என்கிறது.பழையபாட்டுதான் ஆனால் அழகென்ற சொல் பலமுறைவருவதால் எனக்கு இந்தப்பாட்டுப்பிடிக்கிறது.  அழகின் ரசிகன் நான்!

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே.

 ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில்  ஃப்ளாட்டின் எதிர் மரத்தடியிலிருந்து அந்த தொழுநோயாளி ஓடிவந்துகார் கதவின் ஜன்னல் அருகே வந்து  என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை.  அசிங்கம் பிடித்த அந்த தொழுநோய்க்காரனைப்பார்க்கவே பிடிக்கவில்லை.எனக்கு எல்லாமே  என்னைப்போல் சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"


"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"


விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.


அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும்  சிலமணிநேரங்கள் தங்கிவருவதற்காக போனபோது அவளை வீட்டுவாசலில் திண்ணையில் பார்த்தேன். .குமட்டிக்கொண்டு வந்தது.

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். அப்பா பார்க்கவும் அழகாயிருப்பார். பலர் என் அண்ணன் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிடம் பேச ஆரம்பிப்பார்கள்! நேர்மை நாணயம்  அன்பு  இரக்கம்  போன்ற குணங்களால் ஒரு மனிதனின் முகம் பொலிவாக இருக்கும் என்றால் அதற்கு என் அப்பாவையும்  உதாரணமாய் சொல்லலாம்!என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் உடம்புக்கு முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டுவிட்டு   அதிரடியாய் வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,

"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் .நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட்டான ஜனங்க வசிக்கறஇடம் .இங்க  அந்த தீஞ்சிபோன அசிங்க முகத்துக்காரப் பொம்பளை எதுக்கு வந்திருக்கா?”

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைச்சிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை.”

"ரவி! விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”

”என்ன உளற்றீங்க ?"


"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..

இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு.நானும் அனாதை உறவுன்னு யாருமில்ல.. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை  நாம் எல்லாருமே சத்திய வாக்கா  நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவே இருந்தா...

 ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ கார்த்திகை தீபம் அன்னிக்கு விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக  உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோடநைலக்ஸ் சேலைல நெருப்பு பிடிச்சி வேகமா பரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் உடம்புதோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது. ஆனா ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனவாரம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்.”மன்னிச்சிடுங்க அண்ணா...இந்தமுகத்தோட உங்கவீட்ல இருக்கக்கூடாது குழந்தை பயப்படுவான்னுதான் சொல்லாம ஓடிப்போனேன்”ன்னா...வற்புறுத்தி கிராமத்துவீட்டுக்குஅழைச்சிட்டு்ப்போனேன்.’உன் பேரனுக்குப்பிறந்தநாள்வரப்போகுதும்மா.. பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும்-அதாவது-உன் அம்மாவும்  வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்..   என்னைப்பெத்த  தா... தாயா அவங்க? ஐயோ கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோது  அந்த அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை  தான் பிரதிபலிக்கிறது..

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.வீட்டில் எங்குமே இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன்   வேறுபக்கமாய் நகர்கிறான்.

நான் , அவனைத் தொடர்கிறேன்.

****************************************************************









41 comments:

  1. ரொம்பவே மனசு சங்கடமாகிடுச்சு....

    ReplyDelete
  2. தாய்மை உயர்வானது. அழகு என்பது அகம் சார்ந்தது... புறம் சார்ந்ததல்ல என்பதை ஆணித்தரமாய் எடுத்துரைத்தது சிறுகதை. மனதில் சட்டென ஒட்டிக் கொண்டது. எக்ஸலண்ட்க்கா...

    ReplyDelete
  3. வாசித்து கருத்து கூறிய கணேஷ் மௌலி கந்தசுவாமி ஆகிய மூவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  4. அகத்தின் அழகே அழகு. சிறப்பான நடையில் அருமையான கதை ஷைலஜா.

    ReplyDelete
  5. மனம் கனத்துப் போனது சகோதரி!
    நன்றி!

    த ம ஓ 2

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. அழகிய நடை அருமையான கதை நெஞ்சைத் தொட்டது

    ReplyDelete
  7. சிறப்பான கதை.. நல்லா இருக்கு

    ReplyDelete
  8. ////இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை நாம் எல்லாருமே சத்திய வாக்கா நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா.////

    எவ்வளவு பெரிய விஷயத்தை
    என்ன ஒரு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்..
    திரைப்படங்களில் நடக்கும் இந்த ஒரு விஷயம்
    நிஜத்தில் நடப்பது மிகவும் கடினமான சாத்தியமே..

    தாய்மையின் உணர்வுகள் கதையில் வைரமாய் பளிச்சிடுகிறது
    சகோதரி...

    ReplyDelete
  9. கதை ரொம்ப அருமை....முடித்த விதம் மகுடம்...

    ரொம்பவும் மனசு கனத்து விட்டது. கடைசி வரி மனதை விட்டகலாது பிசைகிறது.

    ReplyDelete
  10. கதை நல்ல ஸ்பீடு.. முடிவு அருமை

    ReplyDelete
  11. கதை அருமை.

    நெஞ்சை நெகிழவைத்து விட்டது. தாயையும், சேயையும் சேர்த்து இருக்கலாம். மகன்
    தாயிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாம் கடைசி காலத்திலாவது அவள் தன் மகனுடன் இருந்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  12. எது அழகு என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அன்பு, இரக்கம் இவைகளால் பொலிந்த முகத்தை உடையவருக்கு, இப்படி ஒரு மகன். என்ன செய்ய, உலகம் வேகமாக சுழலுகிறது.

    நல்ல கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //ராமலக்ஷ்மி said...
    அகத்தின் அழகே அழகு. சிறப்பான நடையில் அருமையான கதை ஷைலஜா.

    7:20 AM//

    நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  14. //அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை தான் பிரதிபலிக்கிறது..//

    வாவ் போடவைத்த வரிகள்.

    அதென்ன மேடம்.. கடந்த ரெண்டு கதைகளிலும் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்..

    ReplyDelete
  15. //
    புலவர் சா இராமாநுசம் said...
    மனம் கனத்துப் போனது சகோதரி!
    நன்றி!

    த ம ஓ 2

    புலவர் சா இராமாநுசம்

    /////

    தம ஓ மற்றும் கருத்துக்கு நன்றி புலவர் ஐயா

    ReplyDelete
  16. //வியபதி said...
    அழகிய நடை அருமையான கதை நெஞ்சைத் தொட்டது

    9:32 AM

    ..
    நன்றி வியபதி

    ReplyDelete
  17. சிநேகிதி said...
    சிறப்பான கதை.. நல்லா இருக்கு

    9:58 AM





    நன்றி சிநேகிதி

    ReplyDelete
  18. மகேந்திரன் said...
    வாக்கா நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா.////

    எவ்வளவு பெரிய விஷயத்தை
    என்ன ஒரு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்..
    திரைப்படங்களில் நடக்கும் இந்த ஒரு விஷயம்
    நிஜத்தில் நடப்பது மிகவும் கடினமான சாத்தியமே..

    தாய்மையின் உணர்வுகள் கதையில் வைரமாய் பளிச்சிடுகிறது
    சகோதரி
    ///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  19. //Madhavan Srinivasagopalan said...
    //அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை தான் பிரதிபலிக்கிறது..//

    வாவ் போடவைத்த வரிகள்.

    அதென்ன மேடம்.. கடந்த ரெண்டு கதைகளிலும் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்..

    8:25 PM

    ////

    நன்றி மாதவன் அடுத்தகதை நீங்க சிரிக்கறாப்ல அளிக்கிறேனே:)

    ReplyDelete
  20. Shakthiprabha said...
    கதை ரொம்ப அருமை....முடித்த விதம் மகுடம்...

    ரொம்பவும் மனசு கனத்து விட்டது. கடைசி வரி மனதை விட்டகலாது பிசைகிறது.

    11:41 AM



    வா ஷக்தி.....உன் விமர்சனம் எனக்குப்பிடிக்கும் நன்றி

    ReplyDelete
  21. சி.பி.செந்தில்குமார் said...
    கதை நல்ல ஸ்பீடு.. முடிவு அருமை

    11:57 AM



    நன்றி செந்தில் ....நைசா சவால் வெற்றிக்கு ட்ரீட் கொடுக்காமயே தப்பிக்கிறீங்க ம்”_

    ReplyDelete
  22. கோமதி அரசு said...
    கதை அருமை.

    நெஞ்சை நெகிழவைத்து விட்டது. தாயையும், சேயையும் சேர்த்து இருக்கலாம். மகன்
    தாயிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாம் கடைசி காலத்திலாவது அவள் தன் மகனுடன் இருந்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

    1:24 PM



    <<<<<>.எதார்த்ததை மீறியது கதையாவதால் தாய் மறுபடி பிரிவதுபோல முடித்தேன் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. ரசிகன் said...
    எது அழகு என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அன்பு, இரக்கம் இவைகளால் பொலிந்த முகத்தை உடையவருக்கு, இப்படி ஒரு மகன். என்ன செய்ய, உலகம் வேகமாக சுழலுகிறது.

    நல்ல கதை. வாழ்த்துக்கள்.

    4:18 PM



    வாங்க ரசிகன் குயில் பதிவில் உங்கஎழுத்தை உங்க வலைல ரசிச்சேன்.. நன்றி இங்கே உங்க கருத்தை தெரிவித்தமைக்கு

    ReplyDelete
  24. உண்மையில் நான் இதை யூகித்தேன்.... அதைப் போலவே கதை சென்றாலும் கடைசி பத்தி என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது...
    மிகவும் அருமை...
    நன்றி..

    ReplyDelete
  25. ///ரசிகன் said...
    எது அழகு என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அன்பு, இரக்கம் இவைகளால் பொலிந்த முகத்தை உடையவருக்கு, இப்படி ஒரு மகன். என்ன செய்ய, உலகம் வேகமாக சுழலுகிறது///

    இந்த இடம் தான் என்னை கதையை யூகிக்கவும் செய்தது... காரணம் தனது தந்தையின் உயர்ந்த குணங்கள் என்று கூறும் மகனிடம் இவைகள் காணாமல் இருந்ததே என்று தான்...

    விஸ்வாமித்திரர் மௌனமாக இருந்த ஜனகனின் மெளனத்திற்கு பதிலையும் அப்போது தருவார்..
    தசரத மகன்... ஆனால் வசிஷ்டரின் மாணவன் என்பார்.
    தந்தையின் அத்தனை குணங்களும் மகனிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே கம்ப ராமாயணம் கூறுவது போல...

    ReplyDelete
  26. //தமிழ் விரும்பி said...
    உண்மையில் நான் இதை யூகித்தேன்.... அதைப் போலவே கதை சென்றாலும் கடைசி பத்தி என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது...
    மிகவும் அருமை...
    நன்றி..

    11:04 AM

    ///// வாங்க தமிழ்விரும்பி யூகிக்கமுடிந்த கதைதான் அருமை என்றதற்கு நன்றி

    ReplyDelete
  27. //தமிழ் விரும்பி said...
    ///ரசிகன் said...
    எது அழகு என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அன்பு, இரக்கம் இவைகளால் பொலிந்த முகத்தை உடையவருக்கு, இப்படி ஒரு மகன். என்ன செய்ய, உலகம் வேகமாக சுழலுகிறது///

    இந்த இடம் தான் என்னை கதையை யூகிக்கவும் செய்தது... காரணம் தனது தந்தையின் உயர்ந்த குணங்கள் என்று கூறும் மகனிடம் இவைகள் காணாமல் இருந்ததே என்று தான்...

    விஸ்வாமித்திரர் மௌனமாக இருந்த ஜனகனின் மெளனத்திற்கு பதிலையும் அப்போது தருவார்..
    தசரத மகன்... ஆனால் வசிஷ்டரின் மாணவன் என்பார்.
    தந்தையின் அத்தனை குணங்களும் மகனிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே கம்ப ராமாயணம் கூறுவது போல...

    11:15 AM

    /////

    ஆஹா ராமாயணக்காட்சியோடு என் படைப்பை கண்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி த /வி...மிக்க நன்றியும்கூட

    ReplyDelete
  28. செமத்தியாய் ஒரு கதை கொடுத்திருக்கீங்க... (இது எந்தப் பத்திரிகையில் வெளியானது என்றறிய ஆவல்) பாராட்டுக்கள்!

    ReplyDelete
  29. கே. பி. ஜனா... said...
    செமத்தியாய் ஒரு கதை கொடுத்திருக்கீங்க... (இது எந்தப் பத்திரிகையில் வெளியானது என்றறிய ஆவல்) பாராட்டுக்கள்!

    10:43 PM

    //

    ஜனா வாங்க..மகிழ்ச்சி.
    இதை ஒரு குழுமப்போட்டிக்கு எழுதினேன் முன்பு அதனால் பத்திரிகைக்கு அனுப்பல ஆனா இப்போ அனுப்பிடப்போறேன்.உங்க பாராட்டுக்கு நன்றி ஜனா

    ReplyDelete
  30. தாய்மையின் சிறப்பை அழகாகக் கூறும் கதை.

    ReplyDelete
  31. //
    ஷர்மி said...
    தாய்மையின் சிறப்பை அழகாகக் கூறும் கதை.

    2:55 AM

    //

    நன்றி ஷர்மி

    ReplyDelete
  32. Anonymous5:34 PM

    தாய்மையின் சிறப்பை அழகாகக் கூறும் நெஞ்சைத் தொட்ட
    கதை...முடித்த விதம் அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. Anonymous5:34 PM

    Pl check your Spam Folder..

    ReplyDelete
  34. ரெவெரி said...
    தாய்மையின் சிறப்பை அழகாகக் கூறும் நெஞ்சைத் தொட்ட
    கதை...முடித்த விதம் அருமை...வாழ்த்துக்கள்...<<<<நன்றி ரெவர்ரி

    5:34 PM


    ரெவெரி said...
    Pl check your Spam Folder..

    5:34 PM

    will check thanks

    ReplyDelete
  35. கதை அருமை ... ஏதோ நேரடியாக நடப்பது போல இருக்கிறது உங்கள் நடை ... சூப்பர் ...

    ReplyDelete
  36. விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”


    உள்ளத்து அழகை ஒட்டுமொத்தமாக படம் பிடித்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  37. தேவிக்கு அனுப்புங்க.

    ReplyDelete
  38. ananthu said...
    கதை அருமை ... ஏதோ நேரடியாக நடப்பது போல இருக்கிறது உங்கள் நடை ... சூப்பர் ...

    5:47 PM

    ..நன்றி அனந்து.

    ReplyDelete
  39. //இராஜராஜேஸ்வரி said...
    விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”


    உள்ளத்து அழகை ஒட்டுமொத்தமாக படம் பிடித்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

    6:40 PM

    /////

    பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரி

    ReplyDelete
  40. ரிஷபன் said...
    தேவிக்கு அனுப்புங்க.

    6:51 PM

    ...ஆமா ரிஷபன் நானும் அதான் நினச்சேன் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.