Social Icons

Pages

Saturday, December 31, 2011

புத்தாண்டே வருக!






வாடையும் பனியும் சூழ்ந்த


மார்கழித்திங்கள் நாளில்

நாடெல்லாம் புதுமை செய்ய

காடெல்லாம் விளைந்து செழிக்க

தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!

வீடெல்லாம் நிறைந்த தூசி

ஓடிடப் பெருக்கித்தள்ளி

பாடி நாம் பரவசமாய்

ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!





செந்தமிழ் நாட்டிற்கென்றே

சிறப்புற அமைந்தபொங்கல்

வந்ததும் விளைவுபொங்கத்

தருவதும் புத்தாண்டு!



இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழ

புத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!





"அறிவெனும் நீரைப்பாய்ச்சி

அன்பெனும் பயிரை நடுவோம்

நெறி எனும் வேலி போட்டு

நெஞ்செனும் நன்னிலத்தில்

வெறி என வளரப் பார்க்கும்

வேற்றுமை களைந்திட்டு

அறுவடை நாம் செய்வதெல்லாம்

அளவிலா மகிழ்ச்சி தானே?"





18 comments:

  1. அருமையான வரவேற்பு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஷைலஜா!

    ReplyDelete
  2. "அறிவெனும் நீரைப்பாய்ச்சி
    அன்பெனும் பயிரை நடுவோம்’’

    -என் மனம் எப்போதும் விழைவது அன்பெனும் பயிரை செழிப்பாக வளர்க்கத்தான். செறிவான புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கீங்கக்கா. மகிழ்ச்சி. உங்களுக்கும் இப் புது ஆண்டு எல்லா வளங்களும், நலங்களும் தரட்டும்னு வேண்டி வாழ்த்தறேன்.

    ReplyDelete
  3. புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமை
    தங்களுக்கும் எங்கள் மனம் கனிந்த
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம 2 வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. -அட்டாச்ட் இன் ஆல் திரட்டீஸ் அன்ட் வோட்டட் பை மீ அக்கா!

    ReplyDelete
  5. Anonymous10:14 PM

    கவிதையும் அதை ப்ரெசென்ட் செய்த விதமும் அருமை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //வாடையும் பனியும் சூழ்ந்த
    மார்கழித்திங்கள் நாளில்//

    ஆண்டாளின் மார்கழித் திங்கள் மயக்கத்திலேயே இருக்கும் தங்களுக்கு வணக்கம்!கட்டுரைகளுக்கு அதிகம் படங்கள் போடுவது போல ஒரு பக்க கவிதைக்கு போட வேண்டாம்!
    தங்களது கவித்துவத்தை அது மறைத்து விடும். கவிதை நூலகள், பத்திரிக்கை கவிதைகள் இவைகளை
    கவனித்தால் தெரியும்.எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்! எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  9. நல்ல கவிதையோடு புத்தாண்டை அழைத்திருக்கிறீர்கள் ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  10. அழகு கவிதை. அருமையாக இருக்கிறது. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதிரி...

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நாட்டுக்குத் தேவையான நற்கருத்துக்களை அழகாகக் கவிவடித்துள்ளீர்கள். பாராட்டுகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. // அறிவெனும் நீரைப்பாய்ச்சி

    அன்பெனும் பயிரை நடுவோம்

    நெறி எனும் வேலி போட்டு

    நெஞ்செனும் நன்னிலத்தில்

    வெறி என வளரப் பார்க்கும்

    வேற்றுமை களைந்திட்டு

    அறுவடை நாம் செய்வதெல்லாம்

    அளவிலா மகிழ்ச்சி தானே?"//

    புத்தாண்டில் சபதம் ஏற்க
    அருமையான கவிதை!
    நயமுடன் நெஞ்சில் விழுந்த
    நல்லதோர் விதை!
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துகள்


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Anonymous7:11 PM

    முகநூல் மூலம் இங்கு புகுந்தேன். (திரு இரத்தினவேல்) அருமையான வரிகளுடைய கவிதையாக உள்ளது சகோதரி. வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. தி.தமிழ் இளங்கோ said...
    //வாடையும் பனியும் சூழ்ந்த
    மார்கழித்திங்கள் நாளில்//

    ஆண்டாளின் மார்கழித் திங்கள் மயக்கத்திலேயே இருக்கும் தங்களுக்கு வணக்கம்!கட்டுரைகளுக்கு அதிகம் படங்கள் போடுவது போல ஒரு பக்க கவிதைக்கு போட வேண்டாம்!
    தங்களது கவித்துவத்தை அது மறைத்து விடும். கவிதை நூலகள், பத்திரிக்கை கவிதைகள் இவைகளை
    கவனித்தால் தெரியும்.எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்! எனது உளங்கனிந்த புத்தாண்டு
    வாழ்த்துகள்1>>>

    >>>>>ஆமாம் தாங்கள் கூறியதும் உணர்கிறேன் போட்டோகள் சில எடுத்துவிடுகிறேன் மிக்க நன்றி திரு தமிழ் இளங்கோ

    ReplyDelete
  17. கவிதைக்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் வாழ்த்துகூறியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. கலக்கல் கவிதையை பரிசளித்து இனிய புத்தாண்டை துவங்கியுள்ளீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.