Social Icons

Pages

Thursday, March 01, 2012

எண்பதைக் கடந்த எளியவர்!

நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்களை சற்று புத்திசாலிகள் என்பார்கள். நகைச்சுவையாகவே எழுதுபவர்கள்  கண்டிப்பாக அதிபுத்திசாலிகள் என்றால் அது மிகை இல்லை.
நாலுபேரை சிரிக்க வைப்பது சாமான்ய செயல் இல்லை. அழ அழ பெரிய கவிதை எழுதுவது எளிது சிரிக்க சிரிக்க  சின்ன கட்டுரைகூட எழுதுவது கடினம். நன்றாக வாய்விட்டுச்சிரித்தால் உடல் எடை கணிசமாய் குறையுமாம்! இதை அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாட்டில் சக்கரையின் அளவுகூட அதிகமாய் கூடாதாம்! சிரிப்பே சிறந்த மருந்து என்று சும்மாவா சொன்னார்கள்?!

யாமறிந்த  நகைச்சுவைகளிலே தமிழரின் நகைச்சுவைபோல் எங்கும் காணேன் என்று  தைரியமாக சொல்லலாம்!

நகைச்சுவையில் நம் தமிழ்மக்களை  மிஞ்சமுடியாதுதான்.. பழைய எழுத்தாளர் நாடோடியிலிருந்து பலர் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்கள். ஏன் தி ஜா  கூட தன் சிறுகதைகளில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வர்ணிக்கும்போதே சிரிப்பு வந்துவிடும். ராஜேந்திரகுமார் ஙே என்று முழிக்க வைத்தே சிரிக்கவைப்பார். பல பிரபல எழுத்தாளர்கள் நகைச்சுவையை முயன்றிருக்கிறார்கள்.
சுஜாதா மட்டும் என்ன அவரது பல சிறுகதைகளை ஊன்றிப்படித்தால் நைசாக சிரிக்கும்படி சில வாக்கியங்கள் இருக்கும். அதை அவரிடமே நாங்கள்  குடும்ப நண்பர்கள் என்பதால் உரிமையுடன் சந்திக்கும் போது கூறி அவரிடம் வெட்கப்புன்னகை வரவழைத்துவிடுவோம்! அதிலும் என் உடன்பிறப்புகள் இருக்கிறார்களே அவர்கள் மூவரும் அவரிடம்,”அதென்ன சார் ஸ்ரீரங்கத்தில் அந்த லேடீஸ் சைக்கிளில் போகும் அந்த '.......' மாமா யார் ஸார், அதற்கு அந்தரங்கக்காரணம் இருக்கிறது என்று வேற எழுதி இருக்கீங்க?’ என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்த அவரென்னிடம்”என்னம்மா  உன் தம்பிகள் இப்படி வாலாய் இருக்கிறாங்க?” என்று சிரித்தபடி கேட்பார்.

(நான் கேக்கமுடியாது ஆதான் அவங்கள அனுப்பினேன் என்றால் நீ பெரியவாலா இருக்கியேன்னு சொல்லிடுவார்!:0

சோவின் சடையரில் மெலிதான நகைச்சுவையை பெரிதும் ரசிக்க முடியும். பாக்கியம் ராமஸ்வாமியின் சீதாப்பாட்டி அப்புசாமியை  தேவனின் துப்பறியும் சாம்புவை  யாரால் மறக்கமுடியும்?க்ரேசிமோகன் ஜிகே  என்று பலர் நாடக உலகிலும் திரை உலகிலும் !

சித்ராலயா கோபுவின்  திரை வசனங்களைப்பற்றி  சொன்னால் சூரியனுக்கு ஒளிவிளம்பரம் கொடுக்கிறமாதிரி இருக்கும்!
ஜேஎஸ் ராகவன் என்னும் நகைச்சுவை எழுத்தாளர் வாழைப்பழத்தில் ஊசியாய் நகைச்சுவையை எழுத்திதள்ளுவார் அனாயாசமாக!

இணைய உலகில் காமெடி மன்னர்களாய்   அம்மாஞ்சி, திரு.அப்பாதுரை,தக்குடுபோல பலர் இருக்கிறார்கள்.

பெயரில் கடுகு அகஸ்தியன் என்றெல்லாம் வைத்துக்கொண்டு
எழுத்தால் உயர்ந்த மனிதரானவர் இவர். சமீபத்தில்  எண்பதுவயதைக்கடந்துள்ள திரு பிஎஸ் ரங்கநாதன் அவர்களின் நகைச்சுவை கதைகளைப்படித்திருக்கிறீர்களா? ஒருமுறை ரயிலில் நான் அவருடைய   சிறுகதையை தீபாவளிமலரில் படித்தபடி  சிரித்துக்கொண்டே  இருக்கவும் அருகில் அமர்ந்திருந்த பலர் என்னை  லூசுப்பெண்ணோ என பார்த்தது நிஜம்!

இந்த நகைச்சுவை ஜாம்பவான்களை எல்லாம் ஒரே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும்?

கடுகுசாரின் எண்பதாம் பிறந்த நாள் வைபவத்தில் பார்த்துவிட்டேன்!  கடுகு சார்  மிக எளிமையாகப்பழகுகிறார்! உன்னதங்கள் அனைத்துமே ஆர்ப்பாட்டமில்லாதவை தான்.

 ((மேடையில் துக்ளக் சத்யா அவர்கள்,ராணி மைந்தன்சித்ராலயா கோபு ஜே எஸ் ராகவன் பாகியம் ராமஸ்வாமி(ஜராசு) காத்தாடிராமமூர்த்தி கல்கி ஆசிரியராயிருந்த ராஜேந்திரன்)

கீழே எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை இயக்குநர் சிவி ராஜேந்திரன்சுரேஷ்பாலாவின் குடும்பம் இன்னும் சில சின்ன பெரியதிரை நடிகர்கள் இயக்குநர்கள்  வந்திருந்த அந்த நிகழ்ச்சி  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தது.

சித்ராலயா கோபு அவர்கள் இயக்குநர் ஸ்ரீதருடன் தான் பணிபுரிந்த நினைவுகளை அசைபோட்டார். எழுத்திலும் வயதிலும் முதிர்ந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை மேடையில் கேட்பது நமக்கு புது அனுபவமாக இருந்தது.




க்ரேசிமோகன் கடைசிநேரத்தில் வெளியூர்போக நேர்ந்ததால் வரவில்லை அவர் எழுதி அனுப்பிய வெண்பா வாழ்த்துக்கவிதைகளை ராணிமைந்தன்  வாசித்தார். க்ரேசியின்  வெண்பாக்கள் பல நான் வாசித்ததுண்டு நீங்களும் கண்டிப்பாக  வாசிங்க அற்புதமாய் இருக்கும்!
செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த உணவு அளித்து புறப்படும்போது நல்ல  அழகானபிரயாணப் பை ஒன்றில் நான்கு புத்தகங்கள்(நானூறு ரூபாய்க்குமேல்  இருக்கலாம்)
 போட்டு கொடுத்தார்கள்.

க்ளிக்ரவி எனும் பிரபல புகைப்படக்காரர் நல்ல எழுத்தாளரும் கூட. அவரது கைவண்ணம் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பிரசித்தம்.



மேடையில்  நகைச்சுவை  நடிகர் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று ஆண்கள்தான் அமர்ந்திருந்தனர். ’பெண்கள் யாரும் அந்தத்துறையில் பிரபலமாகலைபோல்ருக்கு  ஒரு எழுத்தாளர்கூட இல்லையே?” என்றார் ஒரு பெண்மணி -என்அருகில் அமர்ந்திருந்தவர்.

‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும்    என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால்  ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும்  என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)


கடைசியாய்இந்த இடுகையில் ஒருத்தருக்கு  நன்றி சொல்லணும் அவருக்குப்பிடிக்காதுன்னாலும்!!ஆமாம்  நன்றி  மின்னல்வரிகள் வலைப்பூவின் அதிபர்  கணேஷுக்கு..அவர்தான்  இந்த நிகழ்ச்சிக்கு நான் வர ஏற்பாடு செய்து என்னை  அந்த இடத்திற்கும் அழைத்துச்சென்ற அன்புச்சகோதரர்.. இருவரும் ஹாலில்  நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம்  தெரிஞ்சிருக்குமே?:)))

25 comments:

  1. ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின் சிரிப்பு இன்னும் அடங்கலைக்கா... நான் எழுதினதை விட மிக அருமையா எழுதியிருக்கீங்க. (திரட்டிகள்ல இணைக்கப் போறேன்) ஸீ யு!

    ReplyDelete
  2. Anonymous9:23 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. http://kadugu-agasthian.blogspot.com/

    இது தானே கடுகு ஐயாவோட பதிவு?

    ReplyDelete
  4. ‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும் என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால் ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும் என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:) //////// உண்மையிலேயே நீங்க நகைச்சுவை எழுத்தாளர்தான் அக்கா.

    ReplyDelete
  5. எண்பதைக் கடந்த எளியவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    பகிர்வு அருமை ஷைலஜா.

    ReplyDelete
  6. இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!

    அருமையா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  7. நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவரிடமிருந்து இந்த பதிவு மிகப் பொருத்தமாய்..

    நன்றி...

    ReplyDelete
  8. கணேஷ் said...
    ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின் சிரிப்பு இன்னும் அடங்கலைக்கா... நான் எழுதினதை விட மிக அருமையா எழுதியிருக்கீங்க. (திரட்டிகள்ல இணைக்கப் போறேன்)
    <<<<<<<

    கடசிவரியப்படிச்சி கோவிச்சிக்கப்போறீங்கன்னு பாத்தா சிரிக்கறீங்க:0 நன்றி அதுக்கும் திரட்டிகளில் இணைச்சதுக்கும்:)

    ReplyDelete
  9. குமரன் (Kumaran) said...
    http://kadugu-agasthian.blogspot.com/

    இது தானே கடுகு ஐயாவோட பதிவு?

    9:39
    <<<<aஆமா இதான் குமரன்

    ReplyDelete
  10. ஜோசப் பி. கே said...
    ‘=சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:) //////// உண்மையிலேயே நீங்க நகைச்சுவை எழுத்தாளர்தான்



    <<<<<<தெரியும் தம்பி ஜோக்கு என் மேல அபிமானம் அதிகம்னு நன்றி:)

    ReplyDelete
  11. கோமதி அரசு said...
    எண்பதைக் கடந்த எளியவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    பகிர்வு அருமை ஷைலஜா.

    11:11 AM

    <<<<<<<மிக்க நன்றிங்க கோமதி அரசு

    ReplyDelete
  12. ரிஷபன் said...
    இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!

    அருமையா எழுதியிருக்கீங்க!

    1:03 PM

    <<<<<< வாங்க ரீ! ஏதோ சின்ன ஆறுதலா அதெல்லாம் இல்ல நீங்க சபை நிறைகிற அளவெல்லாம் இல்லைன்னு சொல்லக்கூடாதோ?:)
    எங்க ஊர்க்காரர் சப்போர்ட் செய்யவேண்டாமோ?:) ம்ம் பரவால்ல அருமையா எழுதினதா சொல்ல்லிட்டீங்க அதுக்கு நன்றி ரி!

    ReplyDelete
  13. Shakthiprabha said...
    நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவரிடமிருந்து இந்த பதிவு மிகப் பொருத்தமாய்..

    நன்றி...

    <<<<<ஆஹா ஷக்தி நீ என் அறுவை ஜோக்குக்கே சிரித்து எனக்கு ஆதரவு தருவாய் ....கடுகு சாருது படிச்சிருக்கியா இல்லேன்னா நான் உங்கவீடு வரப்போ கொண்டுவரேன் என்ன?

    ReplyDelete
  14. //இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம் தெரிஞ்சிருக்குமே?:)))//

    கடுகு அவர்களின் நகைச்சுவை இந்தப் பதிவிலும் காணமுடிகிறது. ;)

    ReplyDelete
  15. யக்கோவ்
    நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் நகைச்சுவையே தவிர நீங்க நகைச்சுவை எழுத்தாளரில்லை... :))))

    Just Kidding..
    வாழ்த்துக்கள்கா... என் மகளுக்கு இன்னும் ரெண்டு வாரங்களில் ஒரு வயது பூர்த்தியாக போகுது..

    குழந்தை பத்தி நாம கடைசியா போன்ல பேசினது ஞாபகம் இருக்கா?

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  16. கோபாலகிருஷ்ணன் said...
    //இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம் தெரிஞ்சிருக்குமே?:)))//

    கடுகு அவர்களின் நகைச்சுவை இந்தப் பதிவிலும் காணமுடிகிறது. ;)

    5:15 PM

    <<<<<<< நன்றி வைகோ ஸார் அவர் பேர்லதான் கடுகு எழுத்துல இமயம் நான் ச்சும்மா ஏதோ முயற்சிக்காக நகைச்சுவையை கொண்டுவரேன் அவ்ளோதான்!!

    ReplyDelete
  17. ...
    யக்கோவ்
    நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் நகைச்சுவையே தவிர நீங்க நகைச்சுவை எழுத்தாளரில்லை... :)))) <<<<<<<<

    வாங்க சார் வாங்க நினைவிருக்கா இந்த அக்காவை?:) என்னது நான் எழுத்தாளர் என்பதே நகைச்சுவையா போச்சா பாஸ்டனுக்கு வரமாட்டேன்னு தைரியமா?:)

    Just Kidding..
    வாழ்த்துக்கள்கா...>>>

    கிட்டிங் நு சொல்லணுமா என் தம்பிகள் என்னை இப்படி வாருவதை நான் ஆதரிப்பதே வழக்கம்:)

    // என் மகளுக்கு இன்னும் ரெண்டு வாரங்களில் ஒரு வயது பூர்த்தியாக போகுது..//

    அப்படியா நாட்கள்தான் எப்படி ஓடுது?

    //குழந்தை பத்தி நாம கடைசியா போன்ல பேசினது ஞாபகம் இருக்கா?//


    மறப்பேனா ஸ்ரீ? தவப்புதல்விக்கு என் அன்பான ஆசிகள் இந்தியா வந்தா சொல்லுங்க அத்தை சீரோட குட்டிப்பாப்பாவைப்பாக்க வரென்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    >>>>

    ReplyDelete
  18. //கடுகு சாருது படிச்சிருக்கியா இல்லேன்னா நான் உங்கவீடு வரப்போ கொண்டுவரேன் என்ன?
    ///

    கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ...இரண்டு இனிப்புன்ன கசக்குதா!!!

    ஒண்ணு கடுகு அவர்கள் புத்தகம்
    இன்னொன்று ஷைலஜா விஜயம்

    ReplyDelete
  19. கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்தாக் கூட போதும்னு தோணுது.

    ReplyDelete
  20. அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்டுரையை சட்டயராக்கி அன்றைய தினமணிகதிரில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியிருந்தார் கடுகு சார். கோபுலுவின் படங்களுடன் வந்திருந்தது அந்தக்கட்டுரை. அதில் எருமை மாட்டுடன் நான் என்று கட்டுரை ஆசிரியரின் படம் போட்டிருக்கும். கீழே 'வலது பக்கத்தில் இருப்பது எருமை மாடு' என்ற குறிப்பு இருக்கும். இந்த நகைச்சுவையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
    கடுகு சாரின் சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்து அது பற்றிய நல்லதொரு பதிவையும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    எல்லாம் சரி ; நகைச்சுவை எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் பட்டியலில் கல்கியின் பெயரும் சாவியின் பெயரும் விடுபட்டுப்போயிருக்கின்றனவே.

    ReplyDelete
  21. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. அப்பாதுரை said...
    கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்தாக் கூட போதும்னு தோணுது.

    8:38 PM

    ,,,,,


    ஆமாம் அப்பாதுரை சார் ....அவ்ளோ மேதைகள் அங்க.

    ReplyDelete
  23. Amudhavan said...
    அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்டுரையை சட்டயராக்கி அன்றைய தினமணிகதிரில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியிருந்தார் கடுகு சார். கோபுலுவின் படங்களுடன் வந்திருந்தது அந்தக்கட்டுரை. அதில் எருமை மாட்டுடன் நான் என்று கட்டுரை ஆசிரியரின் படம் போட்டிருக்கும். கீழே 'வலது பக்கத்தில் இருப்பது எருமை மாடு' என்ற குறிப்பு இருக்கும். இந்த நகைச்சுவையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
    கடுகு சாரின் சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்து அது பற்றிய நல்லதொரு பதிவையும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    <<<<<< நன்றி அமுதவன். கதிர்கட்டுரை விவரம் புதுசு னக்கு ஆனா சுவைதான்!

    // எல்லாம் சரி ; நகைச்சுவை எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் பட்டியலில் கல்கியின் பெயரும் சாவியின் பெயரும் விடுபட்டுப்போயிருக்கின்றனவே
    //

    ஆமா மறந்தே போய்ட்டேன் மன்னிக்கவும் சாவி சாரின் வாஷிங்டனில் திருமணத்தை எப்படி மறந்தேன் கல்கி அவர்களீன் நகைச்சுவை பிரபலமாச்சே!

    ReplyDelete
  24. Rathnavel Natarajan said...
    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    7:03 AM

    >>>மிக்க நன்றி திரு ரத்னவேல்

    ReplyDelete
  25. //‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும் என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால் ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும் என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)//

    ஹா ஹா ஹா.... உங்களுக்கு காமெடி வராதா? அது சரி...

    நிறைய காமெடி சென்ஸ் ஷைலஜா மேடம்.... முழுமையான நகைச்சுவை கதை ஒண்ணு எழுதுங்கோளேன்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.