Social Icons

Pages

Sunday, February 22, 2015

ஆனந்தச்சிரிப்பு!!!

(இப்படி  ஒரு படம் வல்லமை தளத்திலிட்டு கவிதை கேட்டார்கள் அதற்கு நானெழுதிய கவிதை இது:) பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள் பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில் பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்! நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில் நாளும் எழும் நற்றமிழின்  அமுத தாரை அதிமதுர அழகு நிறை மங்கையரின்...
மேலும் படிக்க... "ஆனந்தச்சிரிப்பு!!!"

Saturday, February 21, 2015

அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்!

அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம் இன் முகம் திருவருள் விலகிடும் பேரிருள் உண்மையின் உறைவிடம் உன்னத இருப்பிடம் கண்களில் தாய்மை கனிவது இனிமை! அரவிந்த வழியில் பணி ஆற்றிய பேரொளி கரமது குவிகையில் தெரியும்  நல் ஒளி பொய்மையை அறுக்கும் பொன் மகள் பாதம் புன்மையை விரட்டும்  அன்னையின்  அருள் பதம்! https://www.youtube.com/watch?v=Cw0lDr16iZA  ...
மேலும் படிக்க... "அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்!"

Tuesday, February 17, 2015

நமசிவாய!

அஞ்செழுத்து என்பது ‘நமசிவாய’ என்னும் சொல்லைக்குறிப்பதாகும்.. திருஞான சம்பந்தர் , எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்கு ஏதுவாகிய மூலமந்திரம் சிவபெருமானது திருவைந்தெழுத்தே என்கிறார். பதினோரு பாடல்கள்  கொண்ட பஞ்சாக்கரத்திருபதிகத்தைப்பாடி அருளியவர் சம்பந்தப்பெருமான். இந்தப்பதிகத்தின் முதல் பாடலாகிய’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்திலும்’ என்னும் பாடலில்  கூறப்பட்டுள்ள  கருத்து அழகானது அர்த்தம் மிக்கது. எடுத்த எடுப்பிலேயே...
மேலும் படிக்க... "நமசிவாய!"

Friday, February 13, 2015

நின்னையே ரதியென்று....

காதல் புதிதா  , பழசா? நமது  கலை இலக்கியங்களில்  ரதியும் மன்மதனும் காதலுக்கான கடவுளர்களாக  உள்ளனர். நமது  கோவில்களில் பலவற்றில் ரதி-மன்மதன் சிலைகளை  பார்க்கலாம். ரோமானியர்களுக்கும் காதல் புதிதல்ல.அங்கு ஆண் காதல்கடவுளுக்குப்பெயர் குபிட் (cupid)பெண் காதல் கடவுள் வீனஸ்! பொன் நிற சிறகுகளுடன்...
மேலும் படிக்க... "நின்னையே ரதியென்று...."

Thursday, February 12, 2015

காற்றாகக் கடக்கின்றாய்!

உன் நட்பு வேண்டித்தான்என் இருகரங்களை நீட்டுகிறேன்.எதிர்பார்ப்பு இல்லாத அன்புஎப்படி சாத்தியம்?; வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்வாராது நழுவுகிறாய்கையணைப்பில் அடங்க மறுக்கும்காற்றாகக் கடக்கின்றாய்! மணல் பிரதேசங்களை மூழ்கடித்துநுரை சுழித்தோடும் வெள்ளமெனபிரவாகமெடுக்கிறது என் ஆவல் பனி படர்ந்த சோலைகளுக்குள்படர்ந்து விரிகிறதுபூக்களுக்கான...
மேலும் படிக்க... "காற்றாகக் கடக்கின்றாய்!"

Friday, February 06, 2015

கனவுகள்!

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம் கனவில் வந்தே கரையும் மறையும் கனவுகள் காணா மனிதன் இல்லை கனவு கண்டே காலம் கடத்தலாம்--  கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும் காத தூரம் அழைத்துச்செல்லும் கந்தர்வலோகம் காதல் கன்னியர் அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு கனவுகள் மாயக்கண்ணாடிகள் நிஜத்தைக்காட்டா போலிகள் கண்டபடித்திரியும் இருட்டுக்குதிரைகள் உறங்கும்...
மேலும் படிக்க... "கனவுகள்!"

Tuesday, February 03, 2015

தைப்பூசத்திருநாளிலே...!

பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.    ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். தைப்பூசம்........தைப்பூசமென்பது...
மேலும் படிக்க... "தைப்பூசத்திருநாளிலே...!"

Sunday, February 01, 2015

கவிதையும் கற்பனையும்!

கவிதைப்பொருளாம் தாமரையை கண்டு களிக்கும் கதிரவனே! உவகைப்பொருளாய் தாமரையும் உன்னைப்பார்க்கத் துடிக்கின்றாள்! நாளும் பொழுது மலர்கையிலே நாதன் உன்னை வரவேற்க வாளின் விழியாள் முகம் மலர்ந்து வானம் நோக்கிச்சிரிக்கின்றாள்! சிரித்த வனப்பில் மனம் மயங்கிச் சிவந்த கதிரைப்பலகூட்டி கரத்தை நீட்டி நீ அணைக்கக் கமலப்பெண்ணும் களிக்கின்றாள்! எனினும்...
மேலும் படிக்க... "கவிதையும் கற்பனையும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.