Social Icons

Pages

Friday, February 13, 2015

நின்னையே ரதியென்று....






காதல் புதிதா  , பழசா?

நமது  கலை இலக்கியங்களில்  ரதியும் மன்மதனும் காதலுக்கான கடவுளர்களாக  உள்ளனர். நமது  கோவில்களில் பலவற்றில் ரதி-மன்மதன் சிலைகளை  பார்க்கலாம்.

ரோமானியர்களுக்கும் காதல் புதிதல்ல.அங்கு ஆண் காதல்கடவுளுக்குப்பெயர் குபிட் (cupid)பெண் காதல் கடவுள் வீனஸ்! பொன் நிற சிறகுகளுடன் குபிட்டும்  மன்மதனைப்போலவே கைகளில் மலர் அம்புடன் காட்சி தருகிறான்! 

அழகின் இலக்கணத்திற்கு ரதி-மன்மதன்  என உவமை  சொல்கிறோம்
ரதி மன்மதனுக்கு  கோவில் இருக்கிறதா? மதுரை-திருப்பரம்குன்றத்தில் உள்ள ரதி -மன்மதன் சிலையில் ரதியின்  நீண்ட கேசத்தின் அழகு  கண் கொள்ளாக்காட்சிதான்.  ஐந்துவாரத்திற்கு இந்த சிலைகளுக்கு மஞ்சளைப்பூசி.வந்தால் திருமண பந்தம் கிடைக்குமாம்!
சிலப்பதிகாரகாலத்திலேயே  மன்மதனுக்குத்தனிக்கோயில் இருந்திருக்கவேண்டும்.

கோவலன் தனியாக சென்றபின் பிரிந்துவாடும் கண்ணகிக்கு அவள் தோழி இப்படி சொல்கிறாள்.
“காம வேள் கோட்டத்தில் உறையும்  காமக்கடவுளைத்தொழு. அவரை வழிபட்ட மகளிர் ஒருபோதும் தம் கணவ்ரைப்பிரிவதில்லை.
ஆக மன்மதன் அன்றே காமற்கடவுளாய் கருதப்பட்டான்.
கர்னாடகத்தில் பலகோவில்களில் ரதி-மன்மதன் சிறபங்கள் உள்ளன.

ஜெய்ப்பூர் அருகேஅப்ஹனேரி என்று ஒரு சிற்றூரில்  ஹர்சத் மாதா கோயில் இருக்கிறது. இங்கு மன்மதன் ரதியை தரிசிக்கலாம்,இந்தகோவிலின் குளம் அமைக்கப்பட்டுள்ள விதம் ஆச்சர்யமானது.மிக ஆழமான  இந்தக்குளத்தில் படிக்கட்டுகளில் இறங்கி  தண்ணீரைத்தொட அமைக்கப்பட்டுள்ள முறை நம்மை வியக்கவைக்கிறது!

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமோகூர் மதுரை மீனாட்சிகோயில் திருமெய்யம் உத்திரமேரூர் என்று  பல இடங்களில் ரதி-மன்மதன் சிலைகளை நாம் தூண்களில்  காணலாம்!(ஸ்ரீரங்கத்தில் பார்த்த நினைவு இல்லை. ஒரு தூணில் ரதிபோல அழகான் பெண் கண்ணாடியைக்கயில் வைத்துப்பார்க்கும் சிற்பம் கொள்ளை அழகாய் இருக்கும்)

ரதி மன்மதனுக்கென்றே தனி கோயில் இருக்கிறதா?
எப்படியோ காதல்  தமிழருக்குப்புதிதல்ல  என்று தெரிகிறது!

அறிவுக்கு ஆயிரம் கண்கள் இதயத்திற்கோ ஒரே கண் அது காதல் கண்! இதை நான் சொல்லவில்லை இங்கர்சால் சொல்கிறார்!


நதிபோல காதல்  தன்னைத்தீண்டுவாரிடமெல்லாம் தன்னைப்புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. நதி பழசு  நீர் புதிதல்லவா?......(காதல் மொழி தானாக வருகிறது:)

எல்லா இடங்களிலும்  காதல் உணர்வில் கண்களின் மொழி  ஒன்றுதான்!

7 comments:

  1. வணக்கம்

    தெய்வங்களுடன் காதலை ஒப்பிட்டு சொன்ன விதம் நன்று சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்..பகிர்வுக்கு நன்றி த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நிறைய விஷயங்களை கூறி உள்ளீர்கள் படிக்க சுவையாக இருந்தது.

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html
    நன்றி

    ReplyDelete
  4. சிறப்பாகவும் முடித்தீர்கள்...

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு அம்மா..

    ReplyDelete
  6. சுவையான பகிர்வு.....

    திருவரங்கத்துச் சிலைகள் - எத்தனை எத்தனை சிற்பங்கள்... பார்க்க ஒரு நாள் போதாதே....

    ReplyDelete
  7. அருமை.
    நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.