உன் நட்பு வேண்டித்தான்
என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?;
என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?;
வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்!
மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்
பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு
சில்லென்ற காற்றில்
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை.
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை.
நில வெ(வொ)ளியில் திரிகிறது
என் காதல் நினைவுகள்
அறுசுவை என்பது உணவிற்கு
அழிவில்லா காதலுக்கு
அத்தனையும் சுவைதானே!
’இச்’சுவைதவிர இன்னும்
இனிதான சுவையும் உண்டோ!
அச்சுவை பெறினும் வேண்டேன்
அன்பினும் காதல் இனிதே!
Tweet | ||||
எதிர்ப்பார்ப்பு இருந்தால் அன்பும் கனவு தான்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாதல் இரசம் சொட்டும் கவிதை அருமையாக உள்ளது இரசித்தேன்..பகிர்வுக்கு நன்றி.
சிறுகதைப்போட்டி முடிவுகள் 2ம் மாத இறுதியில் வெளியாகும் என்பதை அறியத்தருகிறேன்
மீண்டும் காலம் நீடிக்கப்பட்டு 15.02.2015 காலம் கொடுக்கப்பட்டுள்ளது... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை அம்மா.
ReplyDeleteகருத்துகூறிய அனைவர்க்கும் நன்றி
ReplyDeleteதிரு ரூபன் அவர்களின் சிறுகதைப்போட்டி பற்றிய விவரத்திற்கு சிறப்பு நன்றி
ஆழ்வாரின் வரிகளையும் கொண்டு வந்துவிட்டீர்களா இந்த காதல் கவிதையில்!! அமர்க்களம் தான்.
ReplyDeleteஅருமை....
ReplyDeleteஅருமை. நன்றி.
ReplyDelete