நல்லவே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!
---மகாகவி பாரதியார்--
(இப்படி ஒரு படம் வல்லமை தளத்திலிட்டு கவிதை கேட்டார்கள் அதற்கு நானெழுதிய கவிதை இது:)
பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி
பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள் பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில் பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!
நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில் நாளும் எழும் நற்றமிழின் அமுத தாரை அதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த ஆனந்தச்சிரிப்பிற்காய் அளிப்பார் பாரை!
-
வாங்க வல்லிமா நலமா? ஆனந்தச்சிரிப்பிற்கான காரணம் கேட்க எனக்கும் ஆசைதான் வாங்க போய் ரென்உபேருமாய் கேட்போம் ஆனா ஒண்ணு பெண்கள் சிரிக்கறமாதிரிபடம் மனசுக்கு ஒரு நிறைவு அழுமூஞ்சிப்படம் பார்த்தால் கஷ்டமா இருக்கு இல்லையா? நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.
பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில்
பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!
நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில்
நாளும் எழும் நற்றமிழின் அமுத தாரை
அதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த
ஆனந்தச்சிரிப்பிற்காய் அளிப்பார் பாரை!
-