கண்டு களிக்கும் கதிரவனே!
உவகைப்பொருளாய் தாமரையும்
உன்னைப்பார்க்கத் துடிக்கின்றாள்!
நாளும் பொழுது மலர்கையிலே
நாதன் உன்னை வரவேற்க
வாளின் விழியாள் முகம் மலர்ந்து
வானம் நோக்கிச்சிரிக்கின்றாள்!
சிரித்த வனப்பில் மனம் மயங்கிச்
சிவந்த கதிரைப்பலகூட்டி
கரத்தை நீட்டி நீ அணைக்கக்
கமலப்பெண்ணும் களிக்கின்றாள்!
எனினும் அந்தத்தாமரையின்
இதயம் புகுந்த வண்டினங்கள்
தினமும் தேனைப்பருகிவரும்
சேதி நீயும் அறியாயோ?
எட்டி இருந்தே அவள் அழகை
ஏத்தும் மக்களைச்சுடுகின்றாய்!
தொட்டுத்திரியும் வண்டுகளைத்
தட்டிகேட்க வருவாயா?
(நன்றி கவிதையை பிரசுரித்த துபாய் தமிழ் இதழ் தமிழ்த்தேர்!)
(நன்றி கவிதையை பிரசுரித்த துபாய் தமிழ் இதழ் தமிழ்த்தேர்!)
Tweet | ||||
அருமை..
ReplyDeleteநயமும் ரசனையும் கூடிய கவிதை.
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteசிறப்பாக கவிதை படைத்து எங்களுக்கும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete