அஞ்செழுத்து என்பது ‘நமசிவாய’ என்னும் சொல்லைக்குறிப்பதாகும்.. திருஞான சம்பந்தர் , எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்கு ஏதுவாகிய மூலமந்திரம் சிவபெருமானது திருவைந்தெழுத்தே என்கிறார்.
பதினோரு பாடல்கள் கொண்ட பஞ்சாக்கரத்திருபதிகத்தைப்பாடி அருளியவர் சம்பந்தப்பெருமான்.
இந்தப்பதிகத்தின் முதல் பாடலாகிய’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்திலும்’ என்னும் பாடலில் கூறப்பட்டுள்ள கருத்து அழகானது அர்த்தம் மிக்கது.
எடுத்த எடுப்பிலேயே ‘உறங்கும் போதும்’ என ஆரம்பிக்கிறார். அதாவது தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் அஞ்செழுத்தை ஓத வேண்டுமாம்.
மார்க்கண்டேயரின் உயிரப்பறிக்க வருகிறான் யமன். அவனை உதைத்து வீழ்த்தியது நமசிவாய என்னும் அஞ்செழுத்து மந்திரம் என்கிறார். திருவைந்தெழுத்தை சொல்வோருக்கு யமபயம் இல்லை என்பதான அந்தப்பாடல் இதுதான்.
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
நமசிவாயபதிகத்தில் நாவுக்கரசர் பெருமான் தனக்கு சமணர்கள் இழைத்த கொடுமையின்போதும் நற்றுணையாவது நமசிவாயமே என இருந்த நிலையினை விளக்குகிறார், இந்தத்திருப்பதிகப்பாடல்கள் பத்தும் அஞ்செழுத்து மகிமையை சிறப்பாகப்போற்றுகிறது. சிவம் வருமுன்னே பக்தர்களை விரைந்துவந்து காப்பாற்றுவது நமசிவாய என்னும் அஞ்செழுத்தாம்!திருநாவுக்கரசர் பாடல்கள் எல்லாமே தேன் தான் அதிலிருந்து ஒரு துளியாக இப்பாடல்மட்டும்
இடுக்கண்பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரால்! என்று வினவுவோம்அல்லோம்;
அடுக்கல்கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
விடுக்கிற்பிரால்! என்று வினவுவோம்அல்லோம்;
அடுக்கல்கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
நமசிவாய என்னும் மந்திரத்தை ஓதுவோர் ஓயாமல் அதனை உருவேற்றினால் நாளடைவில் அவர்கள் நாவில் அவர்களை அறியாமலேயே அஞ்செழுத்து ஒலித்துக்கொண்டிருக்கும். ஆகவே அவர்கள் இறைவனை மறந்தாலும் அவர்கள் நாக்கு இந்த மந்திரத்தை ஒலிக்க மறக்காதாம். அவர்கள் நாவினில் நமசிவாய நாமம் நடமாடிக்கொண்டிருக்குமாம் உள்ளத்தை உருக்கும் பாடலை இயற்றியவர் சுந்தரர்.
சுந்தரர் இப்படி அருளும் இந்தப்பாடலின் அழகினை ஆழ்ந்த பொருளை அனுபவிப்போம்!
மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே.
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே.
(சிவராத்திரி தினமான இன்று சிவனை வேண்டி நமசிவாய என நாவினிக்க உரைத்து அருள்பெறுவோம்)
Tweet | ||||
உயர்ந்த சக்தியுள்ள இந்த சிவ மந்திரம் பற்றி மேற்கோள்களுடன் கூறிய விளக்கம் நன்றாக உள்ளது,
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிந்து கொண்டேன் தகவலை பகிர்வுக்கு நன்றி.
எனது பக்கம் கவிதையாக வாருங்கள் த.ம1
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான பாடல்கள்...
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நன்றி டிடி கேபி சார் திரு ரூபன்!
ReplyDeleteஓம் நமச்சிவாய....
ReplyDeleteஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமை சொல்லும் பகிர்வு நன்று.