Social Icons

Pages

Wednesday, March 19, 2008

உங்களில் யாருக்காவது?:)

ஏகப்பட்ட போன் கால்ஸ்(அட நெஜமாத்தான்) எக்கச்சக்க
மெயில்ஸ்! ஏழெட்டு கொரியர் பார்சல்கள்(தம்பி உடையாள் பரிசுக்கு
அஞ்சாள்!) காலை( கனவுல தான்)ப்ருத்விராஜுடன் ப்ரேக்ஃபாஸ்ட்!
இயக்குநர்சங்கர்(என் அடுத்தபடத்துக்கு உங்களோட வானைத்தொடலாம் வா நாவலை
எனக்குத்தாங்க) தொடர்ந்து, ரெஹ்மானின் இசைஅமைப்பில்"சின்னமலைக்காட்டு
சிறுக்கியே,உன் சின்ன இடுப்பினில் நான்
வழுக்கியே..'பாட்டு ,ஸ்ரீனிவாசுடன் ,காதுல ஹெட்போன் மாட்டிக்கொண்டு..
(இதுவும் கனவே வேறெதுவே?:))

இந்த உற்சாகத்துல உணர்ச்சிவசப்பட்டோ என்னவோ வந்த விருந்தினருக்கு
ஃபில்டர் காபிகொடுக்க(கலக்கப்போவது நானே என்பதால்:)
குளிர்பதனப்பெட்டியை ஆவலுடன் திறந்தேன்.அதிலோ....


நேற்றைய வற்றல்குழம்பும் அடைமாவும் அட்டகாசமாய் சிரித்ததே தவிர
பால்பாக்கெட்டுகளைக் காணவில்லை.


அப்போதான் நினைவுக்குவந்தது காலையில்பால்பாயசத்துக்கு(கவனிங்க
பால்பாயசம்தான் மைபா இல்ல):) எல்லாபாலையும்
ஊற்றிகாலிசெய்துவிட்டதை..ஆனால் பத்துமணிக்கு ராஜ்ஷாப்பிலிருந்து
வழக்கம்போல பால்பாக்கெட் வந்திருக்கணுமே? பிறந்த நாள் குஷில
அதைநான் கவனிக்காம விட்டுவிட்டேன்.


இந்த விருந்தினர்கள் எல்லாம் பலநேரங்களில் நான் படைபலம் இல்லாமல் தனியாய்
நிராயுதபாணியாய்(அதென்ன நிராயுதபாணியோ? சக்கரபாணி தெரியும் சாரங்கபாணி
தெரியும் ,இதுக்கு என்ன சரியான அர்த்தம்?) வீட்டில் இருந்தேன்
வந்தவர்களை அமரவைத்துவிட்டு நான் கடைக்கு பையை எடுத்துட்டுப்போகலாமா
சொல்லுங்க?


வழில மாமிங்க நாலுபேரு கிடைப்பாங்க பேசியே ஆகணும் அன்புத்தொல்லை
அதிகமே(சரிசரி அடங்கு ஷைலஜாங்கறீங்களா ஓகே ஓகே:)


அதனால ஆபத் பாந்தவனான என் அலைபேசியை எடுத்தேன்.


ராஜ் என்றபேர்கண்டதும் எண்கள் ஓடோ டிவந்தன.


எதிர்முனை லைனுக்கு வந்ததும்,"ஹலோ? உடனே நாலுபாக்கெட்பால் அனுப்புங்க...
10மணிக்கெ வந்திருக்கணும் என்னாச்சு இன்னிக்கு?
நானும் பிசி கவனிக்கவே இல்ல... ப்ரெட்,
கோடம்பி(கன்னடதுலமுந்திரிப்பருப்பு) திராட்சை பச்சைக்கற்பூரம்
இதெல்லாமும் அனுப்புங்க என்ன?" என்றேன் வேக வேகமாக.விருந்தாளிகள் என்
சுறுசுறுப்பைப்பார்த்து வியக்கவேண்டாமா என்ன?


எதிர்முனை ஒருக்கணம் அமைதியாய் இருக்கவும்,"ஹலோ? கடைல பையன் இல்லியா
என்ன?' என்று கேட்டேன்.
"இது கடையே இல்ல"


என்றுபதில்வந்தது
"வாட்? ராஜ் ஷாப்தானே நம்பர்சரிதானே?"


"ராஜ் வரை சரிதான்"


எதிர்முனை சிரித்தது .பிறகு," உங்க தோழி பவித்ராவின் ஹஸ்பண்ட் ராஜ்
நான்...ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்குல இருக்கேன் ...."என்று சொல்லி
சிரித்தார்., நல்லவேளையா!!


ஐய்யெயோ ஸாரி ஸாரி


நோப்ராப்ளம்


ராஜ் ஷாப், பவித்ராவின் கணவர் ராஜ் - இருவருக்கும் ராஜ் என்ற ஒரே
பெயரில் . என் செல்போனில்.பதித்துக்கொண்டுவிட்ட என் புத்திசாலித்தனத்தை
என்ன சொல்வது?:):)


என்முகம்போனபோக்கை விருந்தாளிகள் ஏறெடுத்துப் பார்ப்பதற்குள்
வேறுஅறைக்கு ஓட்டமெடுத்தேன்.
உங்களில் யாருக்காவது இப்படி மாட்டிக்கொண்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?


***************************************************************************

12 comments:

  1. சூப்பர்ங்க....எனக்கும் இந்தமாதிரி ஒரு முறை நடந்திருக்கு. :-)

    ReplyDelete
  2. ஹி...ஹி...
    கைப்பேசிக் குழப்பங்கள்

    காலாவதியாகாக் குழப்பங்கள் -
    ஆண்பெண் பேதமற
    அனைவரையும் வந்து தாக்கும் போல!
    அடித்த சாக்கில்

    வடித்த அசடு

    நிரம்பி வழிந்த
    நினைவு வருதே!

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவையான எழுத்து நடை . அருமை

    ReplyDelete
  4. சரி,சிறப்பு பிறந்த நாள் வழிசல்'னு வச்சுக்க வேண்டியதுதான் :-)

    ReplyDelete
  5. \\,"ஹலோ? கடைல பையன் இல்லியா
    என்ன?' என்று கேட்டேன்.
    "இது கடையே இல்ல" \\

    ;))))))))))))

    அய்யோ எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க என்னால சிரிப்பை அடக்க முடியல ;)

    ReplyDelete
  6. ஊர்ல இருந்து வீட்டுக்கு போறப்ப, நான் செல்போன் பேசிக்கிட்டே வீட்டைதாண்டி நடந்து போயிருக்கேன்!!!!

    ReplyDelete
  7. மதுரையம்பதி said...
    சூப்பர்ங்க....எனக்கும் இந்தமாதிரி ஒரு முறை நடந்திருக்கு. :-)
    //
    அப்படியா?:)

    ReplyDelete
  8. மதுரையம்பதி said...
    சூப்பர்ங்க....எனக்கும் இந்தமாதிரி ஒரு முறை நடந்திருக்கு. :-)
    //
    அப்படியா?:)

    ReplyDelete
  9. ஜீவா (Jeeva Venkataraman) said...
    ஹி...ஹி...
    கைப்பேசிக் குழப்பங்கள்

    காலாவதியாகாக் குழப்பங்கள் -
    ஆண்பெண் பேதமற
    அனைவரையும் வந்து தாக்கும் போல!
    அடித்த சாக்கில்

    வடித்த அசடு

    நிரம்பி வழிந்த
    நினைவு வருதே!//

    ஞாபகம் வருதா? சொல்லுங்களேன் எதையாவது? நான் மட்டும்தான்னு நினச்சா பலபேர் இப்படின்னு தெரிஞ்சதும்..ஆஹா...:):)

    ReplyDelete
  10. முரளி said...
    நல்ல நகைச்சுவையான எழுத்து நடை . அருமை//
    நன்றிமுரளி...நடந்த கதை ஆகவே இயல்பா வந்திருக்கலாம்!

    ReplyDelete
  11. அறிவன் /#11802717200764379909/ said...
    சரி,சிறப்பு பிறந்த நாள் வழிசல்'னு வச்சுக்க வேண்டியதுதான் :-)
    ///

    அதே அதே!!!

    ReplyDelete
  12. கோபிநாத் said...
    \\,"ஹலோ? கடைல பையன் இல்லியா
    என்ன?' என்று கேட்டேன்.
    "இது கடையே இல்ல" \\

    ;))))))))))))

    அய்யோ எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க என்னால சிரிப்பை அடக்க முடியல ;)//


    சிரிச்சீங்களா கோபி?:) அதானே வேணும்?:) நன்றிப்ரதர்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.