கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?
கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!
பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?
பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!
உத்திரத்திற்கு இன்று உன்னால்தானே மகிமை?
உன்புகழைப்பாடுவதே எங்களுக்கு பெருமை!
பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?
பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!
ஈசனுக்குபதேசம் செய்தவனும் நீயோ?
ஈன்றவளாய் காப்பதால் நீ எங்கள் தாயே!
வற்றாத நதிபோலும் பெருகுமோ உன் அருள்?
வந்து விடும் புதுஒளியில் மறையுமே எங்கள் இருள்!
பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?
(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!
Tweet | ||||
முருகா..முருகா ;)
ReplyDeleteபாடல் நன்றாக இருக்கு..;)
\\பங்குனி உத்திரத்தைமுன்னிட்டு இன்று இந்தப்பாடலை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.\\\
எனக்கு ஒரு டவுட்டு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.
பங்குனி உத்திரம் என்றால் என்ன? அது யாருக்கு உகந்த தினம்?
ஏன் ஏன்றால் வல்லிம்மா பதிவில் 4பேருக்கு கல்யாணம்ன்னு போட்டு இருக்காங்க. அதான் கன்பூயுசனாக இருக்கு ;)
பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?
ReplyDelete(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!//
ஷைலஜா, சூப்பர். எதுகை மோனையோடு முருகனுக்கு நல்லதொரு பாமாலை.
கோபிநாத் said...
ReplyDeleteமுருகா..முருகா ;)
பாடல் நன்றாக இருக்கு..;)
நன்றி கோபி.
\.\\\
எனக்கு ஒரு டவுட்டு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.
பங்குனி உத்திரம் என்றால் என்ன? அது யாருக்கு உகந்த தினம்?
ஏன் ஏன்றால் வல்லிம்மா பதிவில் 4பேருக்கு கல்யாணம்ன்னு போட்டு இருக்காங்க. அதான் கன்பூயுசனாக இருக்கு ;)//
ஆன்மீக சூரியன் ரவி இதுக்கு விளக்கமா கதையோட சொல்வார் வெயிட்டீஸ்! நன்றிகோபி வருகைக்கும் கருத்துக்கும்
வல்லிசிம்ஹன் said...
ReplyDelete//பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?
(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!//
ஷைலஜா, சூப்பர். எதுகை மோனையோடு முருகனுக்கு நல்லதொரு பாமாலை.//
வாங்கோ வல்லிம்மா
அவனருளல்லால் ஏதுமில்லை!
ஏதோ என்னால் இயன்ற சிறு மாலைஇது. கருத்துக்கு நன்றி.
\\ஆன்மீக சூரியன் ரவி இதுக்கு விளக்கமா கதையோட சொல்வார் வெயிட்டீஸ்! நன்றிகோபி வருகைக்கும் கருத்துக்கும்\\
ReplyDeleteஆகா..தலயோட பதிலுக்கு நானும் வெயிட்டிங் ;))