Social Icons

Pages

Tuesday, March 18, 2008

மாலை ஒண்ணு கட்டிவச்சேன்.

மனசுக்குள்ள நீதான்னு
மஞ்ச சிறகடிச்சி
வண்ணத்துப்பூச்சி ஒண்ணு
என்காதோரம் சொல்லியதே.

கொஞ்சம் போல குங்குமத்த
நெஞ்சுமேல சரியும்படி
நெத்தியிலே இட்டுக்கிட்டு
மஞ்சணத்திப்பூ எடுத்து
மாலையொண்னு கட்டி வச்சேன்.


சாணத்தைத்தட்டிக்கிட்டே
நாணத்தை உன்கிட்ட
ரகசியமா அனுப்பி வச்சேன்.


உன் நெனப்பில் நான் தவிச்சி
ஊனுருகக் கிடந்ததெல்லாம்
சோலையிலே உலாவரும்
காத்துக்குத் தெரிஞ்சிடுச்சி
கருக்கல்லில் குளிக்கையிலே
காவிரிக்கும் புரிஞ்சிபோச்சி.


ஆசைமுகம் மறந்துடாம
அத்தைமகன் நீ வரணும்
ரோசாப்பூமாலைபோட்டு
ஜோராக தழுவிக்கணும்.


உன்மேல கொண்ட காதல்
உயிர்சுமக்கும் கர்ப்பமய்யா
ஊருக்குத் தெரியுமுன்னே தாலிக்
கயிறோடு வரவேணுமய்யா

8 comments:

  1. நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீர்கள்,
    இலங்கை வானொலியில் பிரபல்யமான சில் வரிகளை ஞாபகம் ஊட்டியிருக்கிறிர்கள்

    "அத்தானே அத்தானே
    எந்தன் ஆசை அத்தானே
    கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே!"

    என்று போகிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்ன சொல்ல...

    இங்க இருக்கிற ஒரு பிலிபைன்ஸ் நண்பன் என்டா ஒரே புன்னகைன்னு கேட்டான். இந்த கவிதை படிச்சேன் அதான் டான்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலிபீசுல அவனுக்கு உங்க கவிதையை சொன்னேன்.

    இப்போ என் முகத்தில் இருக்கும் புன்னகை அவன் முகத்தில் வெட்கத்துடன் ;))

    கலக்கிட்டிங்க அக்கா :))

    ReplyDelete
  3. ஷைலஜா,

    என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறதே ! நன்றாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரோ?

    ReplyDelete
  4. எண்ணிய முடிதல் வேண்டும்.

    ReplyDelete
  5. காரூரன் said...
    நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீர்கள்,
    இலங்கை வானொலியில் பிரபல்யமான சில் வரிகளை ஞாபகம் ஊட்டியிருக்கிறிர்கள்
    //
    அப்படியா? மகிழ்ச்சி காரூரன்.

    பகிர்ந்துகொண்டதற்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. கோபிநாத் said...
    என்ன சொல்ல...

    இங்க இருக்கிற ஒரு பிலிபைன்ஸ் நண்பன் என்டா ஒரே புன்னகைன்னு கேட்டான். இந்த கவிதை படிச்சேன் அதான் டான்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலிபீசுல அவனுக்கு உங்க கவிதையை சொன்னேன். //
    என் பாடல் கடல்கடந்தவர்களையெல்லாம் இழுக்குதா?:)

    இப்போ என் முகத்தில் இருக்கும் புன்னகை அவன் முகத்தில் வெட்கத்துடன் ;))>>>
    அட்ட்டா நண்பர் முகத்தை நான் பார்த்திருக்கணுமே? ஏன் அவங்க நினைவு வந்திடிச்சாமா?:)

    கலக்கிட்டிங்க அக்கா :))>>
    நன்றி கோபி.

    ReplyDelete
  7. vijay said...

    என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறதே ! நன்றாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரோ?//
    காதல் கவிதைன்னா அந்த உணர்வு வழியணுமே அதான் சேதி விஜய்!!
    எனக்குப்பிடிச்ச கவிஞர் பாரதிதான் முதல்ல,
    நன்றி வருகை+கருத்துக்கும்

    ReplyDelete
  8. பிரகாஷ் said...
    எண்ணிய முடிதல் வேண்டும்.//


    சொல்லிட்றேன் கவிதைநாயகியிடம்:) நன்றி ப்ரகாஷ்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.