Social Icons

Pages

Friday, April 11, 2008

சித்திரையே வருவாய்!

வசந்தமதை வரவழைத்து
வாசலிலே நிற்கவைத்து
வாசனை மலர்கள் அளித்து
வாழ்த்துகூற வந்தனையோ?


விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாயோ!

ஓய்வின்றி உழைப்பவரை
உலகில் வளர்ப்பாய்!
தாயாகி அன்புமழை
தரணிக்குத் தருவாய்!
தமிழ்நாட்டோ டு வையகமும்
தழைத்திடச் செய்வாய்!

4 comments:

  1. நல்லா இருக்கு கவிதை!

    ஒரு கேள்வி?

    சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டா?

    தை ஒன்று தமிழ்ப் புத்தாண்டா?

    இதில் எதாவது குழப்பம் இருக்கிறதா?
    யார் நம்மைக் குழப்பியது?

    இந்த சுட்டியைப் பாருங்கள்!

    http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_05.html

    அன்புடன்,
    அத்திவெட்டி ஜோதிபாரதி.

    ReplyDelete
  2. நல்லாருக்கு ;))

    ReplyDelete
  3. ஏனுங்க ஷைலஜா அக்கா.. சித்திரையில மழையா பெய்யும்? கத்திரி வெய்யில்ன்னு தானே சொல்லுவாங்க?
    என்னவோ போங்க.. எனக்குத்தான் தமிழ் மாசம்ல்லாம் மறந்து போகுதுன்னு நெனைக்கறேன்.

    கவிதை என்னோட அளவு இல்லாட்டாலும்(ஹிஹி..) நல்லாத்தான் இருக்கு:))

    ReplyDelete
  4. Anonymous7:07 PM

    ஓ வருஷப்பிறப்பினை வரவேற்கிறீர்களா...சரி,சரி.

    உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்....(அதுசரி நீங்க தை மாத வருடபிறப்பு கொண்டாடல்லையா:))

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.