Social Icons

Pages

Wednesday, May 07, 2008

மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மாங்கா சீசன் ஆரம்பிச்சாச்சு..பீச்ல ரோட்ல எல்லாம் மாங்காயை சீப்பின் பற்களா நறுக்கி வச்சி உச்சில சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!!

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலாம்!

மாம்பழம்கூட மெதுவா எட்டிப்பார்க்குது.

ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும் இருக்கு.பருவம் வந்தால்தான் மாம்பழம்கூட கனன்ம் உருண்டு சின்னதா சிவந்து இருக்குமோ?:)


மாங்கா சீசனல் முதல்ல வரது மாவடுதான்.அதாவது வடுமாங்காய். தயிர்சாதம்க்கு நல்ல காம்பினேஷன் வடுமாங்காய்!


அதென்ன வடுமாங்காய்? வடு சம்ஸ்க்ருத சொல்லோ?
ஆமா.வடுன்னா பிரம்மச்சாரியாம்.

ஆனா அழகு தமிழ்ல வடுன்னா மாம்பிஞ்சு....மாங்காய் சீசன் வரப்போ எல்லா வகைமாங்காயிலும் ஒரு ஹார்லிக்ஸ்பாட்டில் அளவாவது எல்லா வகை ஊறுகாய்களும் போடறது எங்க காலனிப்பெண்களின் பொழுதுபோக்குஅல்லது வழக்கம்..ஒரு இடத்துல சேர்ந்து ஊறுகாய் போடும்போது எண்ணை உப்பு மிளகாய்ப்பொடி அள்ந்து போடறோமோ இல்லயோ ஊர் உலக வம்புகளை நல்லாவே அளப்போமே!இந்த மாங்காய் சகலகலாவல்லி. ஒன்றாய் அரும்பிப்பலவாய் உதவும் சமையலறை சிநேகிதி!எல்லாமாங்காயிலும் துண்டமாங்கா ஊறுகாய் என்று சட்டுனு இன்ஸ்டண்ட் ஊறுகாய் போட்டுடலாம்.

கட் செய்து உப்பு மிளகாப்பொடிபோட்டு கொஞ்சம் எண்ணைல கடுகு வெடுக்கவிட்டு சேர்த்துட்டா டூ மினிட்ஸ்ல நூடுல்ஸ் மட்டுமா ஊறுகாயும் ரெட்டரெடி!

கொஞ்சம் பச்சமிள்காய் உப்பு மிக்சில போட்டு கரகரன்னு அரைச்சி அதை துண்டம்போட்ட மாங்காய்ல பிசறி கடுகு தாளிங்க. பச்சைகலர்ல இந்த ஊறுகா கண் நாக்கு மனம் எல்லாத்தயும் கவ்ரும்

மாங்காய் தொக்கு! ஆஹா இதுக்கு சொக்காதவங்க மனுஷங்களா என்ன?:) இன்னும் பலவிதம் இருக்கு.
ஊறுகாய் மட்டுமா மாங்காய்ல என்னெனவோ செய்யலாம்

கிளிமூக்கு மாங்காய் (திருச்சில இதை கல்லாமணி மாங்கான்னு சொல்வாங்க பெங்களூர்ல கோத்தாப்புரி அல்லது பெங்களூரு மாவின்கா) அப்படியே துருவிவதக்கி எலுமிச்சை சாதம் போல மாங்காசாதம் அசத்தலா இருக்கும்.

மாங்கா பயற்றம்பருப்பு தேங்கா துருவிசேர்த்து கோசுமல்லி பண்லாம்

மாங்கா இனிப்புபச்சடி வருஷப்பிறப்புஅன்னிக்குமட்டுமா வெறும் நாளிலும் செய்யலாமே?

புளிப்பில்லாத மாங்காய்களை சின்னதுண்டம்செய்து முருங்கைகாய்கூட சாம்பார்ல போடுங்க..அப்போ புளி கொஞ்சம் கம்மியா இருக்கணும் குழம்புக்கு ஏன்னா மாங்கால புளிப்பு இருக்கில்லையா அதான்.

மாங்காய் பருப்புன்னு ஒண்ணு..ஜோரா இருக்கும் சப்பாத்தி இட்லிக்கு சைட் டிஷ்!


இபடி மாங்காய் தசாவதாரம் என்ன சாலீஸ் அவ்தார்கூட செய்ய்யும்.

இப்போ மாவடு பத்தி..

அதுக்குமுன்னாடி ஒரு மா(ங்கா)பழமொழி!!!

மாப்பிள்ளைல கிழவனும் மாங்காய்ல அழுகலும் உதவாது!

மதுரைல மாவடு கோலிகுண்டுசைஸ்ல இருக்கும் கடிச்சா வெடுக்குனு இருகற வடுதான் நல்லதரமானது ஊறுகாய்க்கு ஜோரானது. ...குண்டான வடுமாங்கா சீக்கிரம் அழுகிடுமாம். மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெருசு சின்னதுக்குதான்.

கிளிமூக்கு மாங்காய் (திருச்சில இதை கல்லாமணி மாங்கான்னு சொல்வாங்க பெங்களூர்ல கோத்தாப்புரி அல்லது பெங்களூரு மாவின்கா) அப்படியே துருவிவதக்கி எலுமிச்சை சாதம் போல மாங்காசாதம் அசத்தலா இருக்கும்.

மாங்கா பயற்றம்பருப்பு தேங்கா துருவிசேர்த்து கோசுமல்லி பண்லாம்

மாங்கா இனிப்புபச்சடி வருஷப்பிறப்புஅன்னிக்குமட்டுமா வெறும் நாளிலும் செய்யலாமே?

புளிப்பில்லாத மாங்காய்களை சின்னதுண்டம்செய்து முருங்கைகாய்கூட சாம்பார்ல போடுங்க..அப்போ புளி கொஞ்சம் கம்மியா இருக்கணும் குழம்புக்கு ஏன்னா மாங்கால புளிப்பு இருக்கில்லையா அதான்.

மாங்காய் பருப்புன்னு ஒண்ணு..ஜோரா இருக்கும் சப்பாத்தி இட்லிக்கு சைட் டிஷ்!


இபடி மாங்காய் தசாவதாரம் என்ன சாலீஸ் அவ்தார்கூட செய்ய்யும்.ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் கொள்ளிடக்கரைவழியாய் காலைல வரும்சுண்டைக்காய் சைஸ் மலை வடு வீதி முனைல வரப்போவே மணத்துக்கொட்டும்

பச்சை மாவடுவை விரல்கள் இடுக்கிலேயே நசுக்கிவாய்ல போட்டுக்கலாம், பல் வெட்கப்படும்(கூசும்) ஆனாலும் இந்த மாவடுக்களை மார்க்கெட்டில்பார்த்துவிட்டால் நம்ம சூப்பர் ப்ரெய்ன் உடனேயே கைகளை அள்ளு அள்ளுன்னு என்று ஆர்டர் இடும்.மாவடுவை ஊறுகாய்க்கு தயாரிக்கறது எப்படி?மாவடு - 1 கிலோன்னா அதுக்கு
கல் உப்பு - 1 கப் அளவு எடுங்க
காய்ந்த மிளகாய் - 1 கப் எடுத்து
கடுகு - 1/4 கப் சேர்த்துஅரைங்க


முதல்ல மாவடுவை நன்கு கழுவிடணும். ஒரு துணியில் பரத்தி காய வைக்கணும்.

(காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

கொஞ்சம்விளக்கெண்ணை(இது ப்ரிசெர்வேடிவ்) கொஞ்சம் மஞ்சள் பொடியைக் கலந்து வடுமாங்காயை பிசிறிக் கொள்ளவும்.

அரைச்சதை மாங்காய்ல கல்ந்துடுங்க.இது முதநாள் செய்யணும்.
இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும். அல்லது குலுக்கனும்ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும். ஸ்ரீர்ங்கம்ல கற்சட்டி பிரசித்தம். பொதுவா ஊறுகாய்க்கு(நமக்கும்தான்) வாய் கட்டுதல் அவசியம்!

வடுமாங்காய்க்கு விற்கிறவங்க அதன்
காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசில் அது அதிகம் இடத்தை அடைச்சிக்கும் ஆனா வேற வழி இல்ல அப்டித்தான் வாங்கணும் ஊறுகா போடறப்து கொஞ்சம் அதன் அதிகப்படி(காம்பு) வாலை நறுக்கிடலாம். அரை அங்குலவால் இல்லேன்னா வடுமாங்கா ருசிக்காது. நல்லெண்யும் விடலாம் கொஞ்ச்மா..அது நம் உடம்பு தோலை சுருங்க வைக்காம
பாதுகாக்கிறமாதிரி ஊறுகாயையும் மாங்காயின் கும்மென்ற உடம்பு அதிகம் சுருங்காமல் பாதுகாக்கும் அதே நேரம்வாசனையாக இருக்கும்.

மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாதுன்னும் சொல்றாங்க.

ஆவக்காய்மாங்காய் ஊறுகாய் ஆந்திரால பிரபலம்.
ஆவ்க்காய் ஊறுகாய் கதை ஒண்ணு சிலவருஷம்முன்பு குமுதத்துல வந்து பரவலாப்பேசப்பட்டதாம்.

சமீபத்துல மதுரை போனப்போ பழையபுக் கடைல அந்தகுமுதம்கிடைக்கவும் உடனே ஆர்வமா அதைவாங்கிப்படிச்சேன்...

ஐய்யே! இனிமே நாங்க காலனிப்பெண்கள் சேர்ந்து ஊறுகாய் போடமுடியாதபடி ' ஒருமாதிரி'யான கதையா இருக்கு:):)

(யாருங்க அங்க பழையபுத்தக்ககடை தேடி ஓடறது?:)

11 comments:

 1. ஆவக்காய் மத்தின குமுதம் கதை எனக்கு தெரியுமே....யக்கா, வேணாம், காலனி பெண்கள்ன்னு எல்லாரையும் சேர்க்க வேண்டாம் இதுக்கெல்லாம் :)

  ReplyDelete
 2. வடுமாங்கா எப்படி இருக்கணும் தெரியுமா?, ஒரு கொத்தாக, சிறு-சிறு வடுக்கள் காம்புடன் இருக்கவேண்டும். மலைவடுன்னு சொல்வாங்க....சிகப்பு காம்புடன்....கடித்தால் மாம்பால், வாயில் புண்ணை உருவாக்கும் அளவு காரம் இருக்கும்.

  ஒருகாலத்தில் என் அம்மா காலை 4 மணிக்கு எழுந்து யானைக்கல் மார்கெட் போய் 10-15 படின்னு வாங்கி ஊறுகாய் போட்டு ஊர்-உலகம் இருந்த சொந்த-பந்தங்களுக்கு அனுப்புவாங்க...

  இப்ப 1 படி வடுவுக்கு யார் மதுரை போறாங்கன்னு நான் பார்த்துக்கிட்டிருக்கேன் ?, இந்த லட்சணத்துல, சாப்பட்டு நேரத்துல இத சொல்லி..யக்கா!!!! :)

  ReplyDelete
 3. Anonymous1:57 PM

  \\சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!!
  \\

  வயத்தில என்னமோபண்ணற மாதிரி இருக்கே

  ReplyDelete
 4. Anonymous1:59 PM

  \\ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும் இருக்கு//

  வேறொண்ணும் இல்லை கொஞ்சம் வயத்தெரிச்சல் தான் :):)
  இங்கே வடுமாங்காய் எல்லாம் பிரியா ஊறுகாய் பாட்டில்தான். அவ்வளவு ருசி இல்லியே

  ReplyDelete
 5. இவ்ளோ ஊறுகாயா சாப்பிடறீங்க!?!?

  உங்க பி.பி எவ்வளவு????

  ReplyDelete
 6. மதுரையம்பதி said...
  ஆவக்காய் மத்தின குமுதம் கதை எனக்கு தெரியுமே....யக்கா, வேணாம், காலனி பெண்கள்ன்னு எல்லாரையும் சேர்க்க வேண்டாம் இதுக்கெல்லாம் :)

  >>>>>ஓ தெரியுமா?:) அப்ப சரி.
  காலனிப்பெண்கள்னா எங்க ரோடுல இருக்கறவங்கப்பா..:):).ச்சும்மா அதட்டாதீங்க ஆமா:):):)

  ReplyDelete
 7. மதுரையம்பதி said...
  வடுமாங்கா எப்படி இருக்கணும் தெரியுமா
  ஒரு கொத்தாக, சிறு-சிறு வடுக்கள் காம்புடன் இருக்கவேண்டும். மலைவடுன்னு சொல்வாங்க....சிகப்பு காம்புடன்....கடித்தால் மாம்பால், வாயில் புண்ணை உருவாக்கும் அளவு காரம் இருக்கும். >>>

  வடுகையம்பதி போலும்:)

  //ஒருகாலத்தில் என் அம்மா காலை 4 மணிக்கு எழுந்து யானைக்கல் மார்கெட் போய் 10-15 படின்னு வாங்கி ஊறுகாய் போட்டு ஊர்-உலகம் இருந்த சொந்த-பந்தங்களுக்கு அனுப்புவாங்க...//
  நல்ல அம்மா உங்களுக்கு!

  //இப்ப 1 படி வடுவுக்கு யார் மதுரை போறாங்கன்னு நான் பார்த்துக்கிட்டிருக்கேன் ?, இந்த லட்சணத்துல, சாப்பட்டு நேரத்துல இத சொல்லி..யக்கா!!!! :)//

  நான் போனா வாங்கியாரேன் என்ன?:)

  12:27 AM

  ReplyDelete
 8. சின்ன அம்மிணி said...
  \\சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!!
  \\

  வயத்தில என்னமோபண்ணற மாதிரி இருக்கே

  >>>:):) நலல்வேளை நான் படம் போடல:)

  ReplyDelete
 9. நாக்கில் எச்சில் ஊற வைக்கும் எழுத்துக்கள்.
  மாம்பழம் பற்றிய பதிவை அடுத்து எதிர்பார்க்கிறேன்.
  ஏனெனில் எனக்கு என்னமோ மாங்காயை விட மாம்பழம்தான் பிடிக்கும்.

  ReplyDelete
 10. மாங்காய் புராணமும் மாவடு ஊறுகாயும் நன்றாக இருக்கிறது திருவரங்கப்ரியா அக்கா. :-)

  ReplyDelete
 11. யப்பா...ஏதோ ஊறுகாய் மேட்டர்ன்னு நினைச்ச...மெயின் மேட்டரை விட பெரிய மேட்டராக இருக்கே!!!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.