தமிழ் இலக்கியங்களை,தமிழின் பழையபாடல்களை பண்டிகைகாலங்களில் சுபநேரங்களில் என்று மறக்காமல் நாம் உபயோகிப்பதால் தமிழ் நன்கு இன்னும் பல்லாண்டு வாழும்.
ஒருபுறம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சித்தொகுப்பாளர்களும் மேடையில் பேசுவதாய் தமிழ்க்கொலை செய்பவர்களும் இருந்தாலும் தமிழ் இன்னமும் நம்மிடையே மதிப்பாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.
தமிழ்மொழியின் தொன்மையைப்பற்றி விளங்கும் பாடலை அண்மையில் ஒரு தமிழ்ப்பாவலர் மூலமாய் தெரியவந்தது
வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினில்
கையினால் உரை காலம் இறந்திட
பைய நாவை அசைத்த பழந்தமிழ்....
சைகைமொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் மாறியதும் பயன்படுத்திய முதல்மொழி தமிழ்தானாம்!
அகத்தியர் வளர்த்த தமிழுக்கு ராமர்பெருமானே வணங்கியதாய் கம்ப்ராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு.
அகத்தியரை ராமன் வணங்கியதும் அவர் இப்படிக்கூறுவதாய் அமைந்தபாடல் இது.
நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்றவனும் அன்போடு தழீஇ அழுத கண்ணான்
நன்றுவர வென்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்.
கண்ணனின் சிறுவயது சேட்டைகளை பெரியாழ்வார் கூறும்போது,
எண்ணைக்குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழும்பிக்
கண்ணைப் புரட்டி விழித்து
கழகண்டு செய்யும்பிரானே!
விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார்.
அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க!
Tweet | ||||
wow.. shyla akka.. romba nalla pathivu.. ivlo azhagana vaarthaigal thamizhil irukkunu sonnatharku nandrikal pala. kazhakandu- indha vaarthai ucharikkum pothe romba nalla irukku... atha periyaazhvar ubayogapaduthirukrathum romba arumai...
ReplyDeleteEzhilanbu said...
ReplyDeletewow.. shyla akka.. romba nalla pathivu.. ivlo azhagana vaarthaigal thamizhil irukkunu sonnatharku nandrikal pala. kazhakandu- indha vaarthai ucharikkum pothe romba nalla irukku... atha periyaazhvar ubayogapaduthirukrathum romba arumai...
>>>ஆமாம் ப்ரியா.....தமிழில் மிகமிக அழகான வார்த்தைகள் உள்ளன.நேரம்கிடைக்கும் போது இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நன்றிப்ரியா பின்னூட்டம் இட்டதற்கு
சூப்பரு....யக்கா எனக்கும் இப்படியெல்லாம் எழுத சொல்லிக் கொடுங்க...
ReplyDelete//விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
ReplyDeleteபெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார். //
வழக்கொழிந்து போன அல்ல. வழக்கழித்து விட்ட என்று சொல்லுங்கள்.
இன்று நாம் பயன் படுத்தும் தமிழில் பல வடசொற்களே கோலோச்சுகிறது.
எ.காட்டு:-
தமிழ் -ஆரியச்சொல்
மடல் அஞ்சல் -கடிதம் தபால்
ஆண்டு -வருஷம்
சிக்கல் -பிரச்சினை
வணிகம் -வர்த்தகம்
பொருள் -அர்த்தம்
சாளரம் -சன்னல்
ஆய்தல் -யோசித்தல்
வண்ணம் -வர்ணம்
இயல்பு -எதார்த்தம்
இப்படி என்னால் நூற்றுக் கணக்கானச் சொற்களை மேற்கோள் காட்டமுடியும்
நீங்கள் எழுதியிருப்பதில் பிரயோகம் கூடத் தமிழில்லை
அகரம்.அமுதா said...
ReplyDelete//விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார். //
வழக்கொழிந்து போன அல்ல. வழக்கழித்து விட்ட என்று சொல்லுங்கள்.
இன்று நாம் பயன் படுத்தும் தமிழில் பல வடசொற்களே கோலோச்சுகிறது.
எ.காட்டு:-
தமிழ் -ஆரியச்சொல்
மடல் அஞ்சல் -கடிதம் தபால்
ஆண்டு -வருஷம்
சிக்கல் -பிரச்சினை
வணிகம் -வர்த்தகம்
பொருள் -அர்த்தம்
சாளரம் -சன்னல்
ஆய்தல் -யோசித்தல்
வண்ணம் -வர்ணம்
இயல்பு -எதார்த்தம்
இப்படி என்னால் நூற்றுக் கணக்கானச் சொற்களை மேற்கோள் காட்டமுடியும்
நீங்கள் எழுதியிருப்பதில் பிரயோகம் கூடத் தமிழில்லை//
>>நன்றி நல்ல தமிழ்ச்சொற்கள் அளித்தமைக்கு.. எனது தவறான தமிழ் வார்த்தையையும் எடுத்துக்கூறீயதற்கு.
அட ஆமாம் திருவரங்கபிரியா அக்கா. கழகண்டு செய்யும் பிரானைப் படித்திருக்கிறேன். விஷமம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அழகான இந்தத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியதைக் கவனிக்கவில்லை. :-) நன்கு சொன்னீர்கள்.
ReplyDelete