நமதுகலாச்சாரம் என்னும் தலைப்பில் எழுத்தாளர்தமிழ்ச்செல்வன் மற்றும்பலர்
அருமையாய் பேசினதாக சொன்னார்கள்.
தொடர்ந்து மாலை குழந்தைகள் நடனமும் நடைபெற்றிருக்கிறது அவைகளை நாங்கள்
பார்க்கமுடியவில்லை. அடுத்து வரும் நிகழ்ச்சிகளையாவது கண்டுகளிக்க நினைத்து
பயணக்களைப்பைத் துறந்து அனைவரும் கிளம்பினோம்.
மண்டபம்வாசலில்கார் நிற்கும்போது ,"வாங்க வாங்க" என்று வரவேற்றார் விழியனின்
தந்தைசெந்தமிழ்செல்வன் அவர்கள்.பெயரிலும் பேச்சிலும் பெருமைமிகு நமது
கலாசாரத்திலும் அவரிடம் தமிழ் மேலொங்கி இருந்தது.
விழியனின் அன்புத்தங்கைதிவ்யா மலர்தூவி இனிப்புதந்து வரவேற்றதை ரசித்தபடி உள்ளே
நுழைந்தோம்.
வீடியோ பளிச்பளிச் என்று எதிர்கொண்டன. மண்டபத்தில் வந்தவர்கள் ஆயிரத்திற்கும்
மேல்! யெப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்!
உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!
உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!
(எள் போட்டா எள் விழாத கூட்டம்னு சொல்லகூடாது. கம்பரே மிதிலையில் சீதையின்
திருமணதிற்குவந்த கூட்டம்கண்டு உளுந்தைத்தான் உதாரணம் சொல்வார்.
*உழுந்திட இடமில்லை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம்பாயினான்
எழுந்திலன் எழுந்திடைபடரும் சேனையின்
கொழுந்துபோய் கொடிமதில் மிதிலை கூடிற்றே!*
* *
அதே கம்பர் ராவணன் இறந்தபோது எள்ளை உதாரணம் சொல்வார்.
ராவணனின் மனைவி போர்க்களத்தில் இறந்து கிடக்கும் கணவனின் உடலைத்தடவி
கதறி,"*எள்ளிருக்கும்
இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ*?' என்பதாக எழுதி இருப்பார்.
. (கடுகு அதைவிட சிறிது அதை சொல்லக்கூடாதா என்றால் அது வெடிக்கும்.
சுபநிகழ்ச்சிகளுக்கு அவற்றை உதாரணங்கள் சொல்வது சரி இல்லை என்கிறார்கள்
சான்றோர்கள்)
சரி விஷயத்துக்குவருவோம்..
கூட்டத்துல தயங்கிதயங்கி மேடை ஏறினால்; அங்கே தமிழ்க்காவலர்கள் பலர்
வீற்றிருக்க இசைக்கவிரமணன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்
.'வணக்கம் 'சொல்லிவிட்டு ரமணனை ஏறிட்டால் அவர் தெய்வீகப்புன்னகையை
சிந்திவிட்டு ஒலிபெருக்கிஅருகே சென்றார்.
என்னையும் அழைத்து அவரருகே நிற்க சொன்னார்கள்
விழியனின் புகைப்படங்கள் போஸ்டர்களாய் கீழே சிறந்த வாசகங்கள்
எழுதப்பட்டு,அவைகள் விளக்கங்களுடன் திரு ரமணனினால் பேசப்பட்டு ,அவைகள் என்
கரத்தில் அளிக்கபட்டு, பிறகு மணமக்கள்
கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. (திருமணம் அல்லவா ஆகவே *பட்டு* அதிகம்
வந்துவிட்டது ஏதோ மனதில்பட்டதை சொல்லி இருக்கிறேன் என்ன?:))
நல்லவேளை என்னை மேடையில்எதுவும் பேசவற்புறுத்தவில்லை..எல்லார்க்கும்
தெரிந்திருக்கிறது மேடையில் நான்பேசினால் கூட்டம் சிதறி
விடும் என்று!
இசைக்கவிரமணன் கவிதை எழுதிகிறார்! மேடையில்பேசுகிறார் !பாடுகிறார்.!சந்தனமும்
மல்லிகையும் மணக்கும் என்பதுபோலத்தான் ரமணனின் இந்த சாதனைகளை நாம் பேசுவது.
ஆம் அவர்பேசினால் நம் சிரம் அசைகிறது பாடினால் மனம் துள்ளுகிறது! இது இறைவன்
இசைகவிக்கு தந்துள்ள பெரும் வரம்!
கூட்டத்தின் மகிழ்ச்சிகலந்த ஆரவாரங்களுக்கிடையே நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது.
மேடையினின்று நான் கிழே வந்ததும் மலர்ந்தமுகம் ஒன்று என்னை எதிர்கொண்டது !
ஆ!மாலா மஞ்சூர்ராசாவாம்! அறிமுகப்படுத்திக்கொண்டதுமே பலநாள்பழகியது போலஅரட்டை
ஆரம்பமானது! இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் நிலாரசிகன் வந்துவிட்டார்.
மேடையில் நான் அதிசயமாய் பவ்யமாய் நின்றதை கிண்டலடித்த
நிலா அருகில் நின்ற
நம்பிக்கைபாண்டியன் ஜேகே ப்ரேம்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் .
பண்புடனில் கும்மி அடிக்கும் ப்ரேம் ரொம்பப்ப்பணிவாய் தனுஷ் உடம்பில்
சிக்கனசிரிப்பில் தெரிந்தார்.
ஜேகேக்கு எப்போதும் புன்னகையான முகம். என்ன இன்னும் கொஞ்சம் நல்ல சாப்ட்டு
உடம்பை தேத்திக்கணும்!
சிஃபிஆசிரியர் அண்ணா கண்ணன்(பார்க்க தம்பிகண்ணனாட்டம்தான் இருப்பார்):
சித்தார்த் வெங்கடேஷ்! அசப்பில் நடிகர்ப்ரபுஜூனியர்!
எல்லாரும் சாப்பிட அம்ர்ந்தோம்.. விருந்தோம்பலிலும் தான் தமிழன் என்பதை விழியன்
குடும்பம் நிரூபித்தது. சுவையான சாப்பாடு.அருகில்வந்து கவனித்துகவனித்துகேட்ட விழியனின் உடன்பிறப்பு. தம்பி உடையான் மட்டுமா தங்கை உடையானும் எதற்கும்
அஞ்சவேண்டாம்!
சாப்பிட்டதும் எல்லாரும் அரட்டை அடிக்க வேகமாய் ஹோட்டலுக்குப்பறந்தோம்.
ரமணனின் அறையில் அடைந்தோம். அப்போதுதான் அங்கு வந்த லக்ஸ், சிவிஆர்,ஆதி,பிவி
என சில வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தினார்.
எல்லாரும் துறுதுறுப்பான இளைஞர்கள்!
நிலாரசிகன் தொலைக்காட்சியில் கிரிக்கட் ஆட்டம்பார்த்தபடியே எங்கள்பேச்சிலும்
கலந்துகொண்டார். ரமணன் அவர்களின் 'ஒருநாள் உன்கூந்தலிலே மலராக வேண்டும்
என்றபாடலும் இன்னொன்று என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே' என்ற பாடலும்
எல்லாரையுமே கட்டிப்போட்டது, மேலும் கண்ணதாசனின் பலபாடல்களை
அனுபவித்துப்பாடினார்.
பிறகு நாங்களும் எல்லாரும் ஏதோ கத்தினோம்.
திருமதிமாலா மஞ்சூர்ராசாவின் சமூகப்பணி யும் நாடக அனுபமும் இதில்
சிறப்புச்செய்திகள்.
.. ப்ரேம் அமைதியே வடிவாய் அமர்ந்திருந்தார். ஜேகே பாடாமல் எஸ்கேப்
அடிக்கபார்த்தார் விடவில்லை நாங்கள்:
12மணிக்கு தூங்கலாம் என கலைக்கபட்ட சபை மறுபடி நிலாவின் அறையில் இரண்டுமணிவரை தொடர்ந்துவிட்டது.
விபாகை குழுக்களில் ஆக்கபூர்வமான மடல்கள் வரவேண்டும் என்று கூறினார்.
நிலாரசிகன்தனது புது கவிதைதொகுப்பை அளித்தார். அவரது அலுவலகத்தில்பணிபுரியும்
விழியனின் ரசிகை ப்ரியா எனும் பெண்ணும் எங்களோடு தங்கி பேச்சில்கலந்துகொண்டாள்
.சித்தார்த்தின் குறுந்தொகை பதிவுபற்றியும் கொஞ்சமாய் கம்பனின் பாடல்களை
அலசினோம்.
தூக்கம் கண்களைதழுவிமிரட்டியது...
பெண்கள் நாங்கள் மூவரும் எங்கள் அறைக்குள் வந்து படுத்தோம்.
காலை எழுந்ததும் ரமணனிடம் காபி ராகம்பாடினேன்.
வரவழைத்துத்தந்தார்.
காலைஏழுமணிக்கு எல்லாரும் மண்டபம்விரைந்தோம்."முதல்ல சாப்பிடுங்க" விழியனின்
தங்கையின் அன்புக்கட்டளை.
நேராய் சாப்பாட்டுக் கூடம்தான். இட்லிவடை பொங்கல் சாம்பார்சட்னி ஏதோ
இனிப்பு(மைபா இல்லாமல் கல்யாணம்?:))
வயிறார உண்டு மண்டபம் வந்து உப்பரிகைக்குபோய்விட்டோ ம்!கீழே கூட்டம் என்பதாலும்
மேலே நாம் மட்டும் சென்றுதனியாக கூட்டம்போட்டுப் பேசலாம் என்றும்
இப்படிசெய்தோம்! சிவிஆர் லக்ஸ்(லட்சுமண ராஜா) மற்றும் அவரது நண்பர்களுக்கு
காமிராவே காதலிகள்! க்ளீக்கிக் கொண்டே இருந்தார்கள்!
அய்யனாரை அங்கே கண்டோ ம்.இன்னமும் புதுமாப்பிள்ளைகளை கலையாமல் சிரித்தமுகமாய்
தெரிந்தார்.
ரசிகவ் தூரத்தில் தனியாய் அமர்ந்திருக்க அலைபேசியில் அவரை வரவழைத்து அருகில்
உட்காரவைத்தோம்.லாவண்யா பஸ்ஸில் புறப்பட்டு
சென்னையிலிருந்துவந்த்குகொண்டிருப்பதாய் தகவல் வந்தது.
மேடையில் மண நிகழ்ச்சி ஆரம்பமானது. எந்தவித ஆடம்பரமுமின்றி எளிமையாக
தொடங்கியது.
மணமகன் கதராடையில் மணமகள் நூல்சேலையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு வலப்புறம்
திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கவந்தவர்களை அமரவைத்து இடப்புறம்
இருவரின்பெற்றோகள் நெருங்கிய உறவினர்களை அமரவைத்திருந்தார்கள்.
வித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!
விழிகள் மலர நாங்கள் மேடையைப்பார்த்திருந்தோம்.
தொடரும்
Tweet | ||||
/
ReplyDeleteஉளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!
/
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
/
ReplyDeleteஜேகேக்கு எப்போதும் புன்னகையான முகம். என்ன இன்னும் கொஞ்சம் நல்ல சாப்ட்டு
உடம்பை தேத்திக்கணும்!
/
குசும்பன் கல்யாணத்தப்பவே பயந்தேன் ஜேகே எங்க பேன் காத்துல பறந்திட போறாரோன்னு!!!
:))))
Wow... Kamba ramayana uvamai arumai.... Nan Kanda pulavarile Kambanai pol, valluvan pol, ilangovai pol -nu bharathi sonnathuku artham ippo puriyuthu... oru chinna ulundhu, ellu vishayam... itha endha edathula, epdi ubayoga paduthirukkanga sonnathukku romba nandri.
ReplyDelete/
ReplyDeleteதிருமதிமாலா மஞ்சூர்ராசாவின் சமூகப்பணி யும் நாடக அனுபமும் இதில்
சிறப்புச்செய்திகள்.
/
ஆஹா அண்ணி வந்திருந்தாங்களா!?!?
வந்திருந்தா பாத்திருக்கலாமே!!
மிஸ் பண்ணீட்டேன்.
/
ReplyDeleteஅய்யனாரை அங்கே கண்டோ ம்.இன்னமும் புதுமாப்பிள்ளைகளை கலையாமல் சிரித்தமுகமாய்
தெரிந்தார்.
/
அய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பிடிய்யா இருக்க நலமா???
/
ReplyDeleteவித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!
/
மகிழ்ச்சி
போட்டோ போடுங்க ஷைலஜா அக்கா
பதிவும் அதன் தலைப்பும் மிக அழகு.
ReplyDeleteஅற்புதமான அந்த திருமணத்தையும் , நம் சந்திப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்
அடடா!!
ReplyDeleteநேத்து கல்யாணம் முடிஞ்சு அதுக்குள்ள இரண்டு பாகங்களா???
சூப்பரு!! :-D
மங்களூர் சிவா said...
ReplyDelete/
ஜேகேக்கு எப்போதும் புன்னகையான முகம். என்ன இன்னும் கொஞ்சம் நல்ல சாப்ட்டு
உடம்பை தேத்திக்கணும்!
/
குசும்பன் கல்யாணத்தப்பவே பயந்தேன் ஜேகே எங்க பேன் காத்துல பறந்திட போறாரோன்னு!!!
>>>ஆமா சிவா..ஆனா சுறுசுறுப்பா இருககாரு!
ezhilanbu said...
ReplyDeleteWow... Kamba ramayana uvamai arumai.... Nan Kanda pulavarile Kambanai pol, valluvan pol, ilangovai pol -nu bharathi sonnathuku artham ippo puriyuthu... oru chinna ulundhu, ellu vishayam... itha endha edathula, epdi ubayoga paduthirukkanga sonnathukku romba nandri.
1>>நன்றி ப்ரியா. அதனால்தான் கம்பர் புலவர் ஆனார்.
மங்களூர் சிவா said...
ReplyDelete/
திருமதிமாலா மஞ்சூர்ராசாவின் சமூகப்பணி யும் நாடக அனுபமும் இதில்
சிறப்புச்செய்திகள்.
/
ஆஹா அண்ணி வந்திருந்தாங்களா!?!?
வந்திருந்தா பாத்திருக்கலாமே!!
மிஸ் பண்ணீட்டேன்.
>>இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் சிவா அப்போது மறுபடி எல்லாரையும் சந்திக்கலாம்.
மங்களூர் சிவா said...
ReplyDelete/
அய்யனாரை அங்கே கண்டோ ம்.இன்னமும் புதுமாப்பிள்ளைகளை கலையாமல் சிரித்தமுகமாய்
தெரிந்தார்.
/
அய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பிடிய்யா இருக்க நலமா???
>>>>.நாங்கபார்த்தவரை நலம்தான்.
வேலூர் சிவன்கோயிலுக்கு எங்ககூட வந்தாரே!
மங்களூர் சிவா said...
ReplyDelete/
வித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!
/
மகிழ்ச்சி
போட்டோ போடுங்க ஷைலஜா அக்கா
>>>>போட்டோ எடுத்த லக்ஸ் கிட்ட சிவிஆர்கிட்ட சொல்லி போடவைக்கிறேன் சிவா.
பிரேம்குமார் said...
ReplyDeleteபதிவும் அதன் தலைப்பும் மிக அழகு.
அற்புதமான அந்த திருமணத்தையும் , நம் சந்திப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்
>>>ஆமா ப்ரேம் எல்லார் நினைவிலும் இருக்கும்!
CVR said...
ReplyDeleteஅடடா!!
நேத்து கல்யாணம் முடிஞ்சு அதுக்குள்ள இரண்டு பாகங்களா???>>
இன்னும் ஒருபாகம் இருக்கு!
சூப்பரு!! :->>
நன்றி சிவிஆர்! உங்க ஐடி வேணுமே? போட்டோக்கள் அனுப்புங்க எனக்காவது ப்ளீஸ்! நன்றி வருகைக்கு.
2:16 AM
/
ReplyDeleteஷைலஜா said...
மங்களூர் சிவா said...
/
வித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!
/
மகிழ்ச்சி
போட்டோ போடுங்க ஷைலஜா அக்கா
>>>>போட்டோ எடுத்த லக்ஸ் கிட்ட சிவிஆர்கிட்ட சொல்லி போடவைக்கிறேன் சிவா.
/
லக்ஸ்னா லக்ஷ்மண்ராஜா-வா???
Shyla akka .. ithu enna ipdi solleeteenga... போட்டோக்கள் அனுப்புங்க எனக்காவது ப்ளீஸ்!
ReplyDeletecvr... ellarukkum anuppunga pls... :-)
ezhilanbu said...
ReplyDeleteShyla akka .. ithu enna ipdi solleeteenga... போட்டோக்கள் அனுப்புங்க எனக்காவது ப்ளீஸ்!
cvr... ellarukkum anuppunga pls... :-)
>>.என் அன்புத்தம்பிங்க மனசு வச்சா நடக்கும்..இன்னிக்கு எல்லாரும் ஆபீஸ்ல பிசியாம் வீட்டுக்குபோயி அனுப்புவாங்க நான் உனக்கும் அனுப்பசொல்றேன் இல்லேன்னா நானே அனுப்பிறேன் ப்ரியா என்ன? அழக்கூடாது செல்லம்:0
oh.. enna ithu athisayama ellarum vela seyarangala ??????? :-)
ReplyDeleteEzhilanbu said...
ReplyDeleteoh.. enna ithu athisayama ellarum vela seyarangala ??????? :-)
>>போட்டோ வந்தாச்சி இங்க போடவா ப்ரியா?