*******************
கல்யாணமேடையில் அரைக்கை கதர் சட்டை அணிந்துகொண்டு சின்னகாமராஜரைப்போல
அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை சிங்கம்! ஆடம்பர வாசனையே இல்லாத எளிமை அங்கு கண்ணைக்கவர்ந்தது.
நாங்கள் மாடியில் அமர்ந்து கை அசைத்தோம்..
ஒலிபெருக்கியில்இருவரது குடும்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
விழியனைப்பற்றி சிறப்பாகவும் பெருமையாகவும் சிலவார்த்தைகள் .
சொன்னார்கள்.
இருவரது குடும்பங்களையும் நன்கு அறிந்த சில தமிழ்பெருமக்கள் வாழ்த்தினர்.
பிறகு மணமகனும் மணமகளும் இல்லற வாழ்விற்கான உறுதி மொழியை ஒருவர்
ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல திரும்பி அதை சொன்னார்கள். செந்தமிழில் அந்த
மொழி கேட்கவே ஆனந்தமாய் இருந்தது.
அக்னி இல்லை அட்சதைகள் இல்லை ஆனாலும் அன்புமனங்கள் அங்கு அனைவரின் கைதட்டலில்
இணைந்தது. விழியன் வித்யாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
உப்பரிகை மக்கள் உற்சாகமாய் விசிலடித்தனர்!
ரமணன் அவர்கள் சிறப்புமணவாழ்த்துப்பாடலைப்பாடினார்.கூட்டம் அந்தநேரம் பார்த்து
மண்மக்களைவாழ்த்த பெருத்த சத்தமிட்டு மேடைக்கு
நகரவும் சிலர் ஒலிபெருக்கியில் அன்பாய் கடிந்துகொண்டார்கள்.
திருமண நிகழ்ச்சிகளை நமது குழுநண்பர்களும் வலைப்பதிவர்களும் புகைப்படம்
எடுத்துதள்ளிக்கொண்டிருந்தனர். அப்படியே எங்களையும்!
நாமெல்லாம் சேர்ந்து ஏதும் கவிதை எழுதி வாழ்த்தலாம் என்றேன் நான்.ரசிகவ் நிலா
இருவரும் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்தனர் .
..நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.
கவிதை எழுத சூழ்நிலை சரியாக இல்லை என்பதால் யாருக்குமே கவிதை சட்டென
வரவில்லை.கடைசியில் உரைநடைபாணியில் ஒருகவிதை எழுதி முதலில் ஜேகேயிடம்
காட்டினேன் அவர் முகம் போன போக்கே சரியாய் இல்லை:)
நிலா 'பரவால்லக்கா' என்றார் சோகமாய்.
ரசிகவ்,'இந்த நேரத்துக்கு பொருத்த்மாத்தான் இருக்கு போய் வாசிங்க மைக்குல"
என்றார்.
விபாகையும் சரியென்றதும் மாலாமஞ்சூர்ராசா வேறு,'போங்க ஷைலஜா' என்று அன்பாய்
சொல்லவும் நான் துணிந்து களம் இறங்கினேன்.
மணமக்களை வாழ்த்தி கவிதை வாசிக்கும்போது நம் மக்களை கைதட்டி விசிலடிக்க
முன்கூட்டியே ஏற்பாடு செய்துதான் போனதால் அப்படியே அவர்கள் செய்தார்கள்!
நான் கவிதைவாசித்ததும் மண்டபக்கூட்டம் மெல்லக்குறைந்தது.
அப்புறம் நாங்கள் எல்லாருமாய் கூடிக்குளிர்ந்து விழியனை நெருங்கி
கல்யாணப்பரிசினை அளித்து வாழ்த்தினோம்.
சுற்றி நின்று புகைப்படம் ஒளிப்படம் எடுத்துக்கொண்ட்டோ ம்.
மண்டபவாசலில் ஒரு வெள்ளைப்படுதா கட்டி இருந்தார்கள் அதில்
திருமணத்திற்குவந்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துகக்ளையும்
எழுதினோம்.
பிறகு
வாசலில்வந்து ஒரு பஸ்ஸில் 16பேரும் ஏறினோம். ஜல்கண்டேஸ்வரர் கோயில் சென்றோம்.
கோயிலில் தரிசனம் முடிந்ததும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில்மண்டபத்தில்
அரைமணிக்குமேல் இளைபபறும்போது பாட்டு பேச்சு என்று நேரம் போனது.
மதியம் ஆகிவிடவே பெங்களூர்மக்கள் விடைபெற்றுக்கொள்ள மற்றவர்கள் அகழி நீரினில்
பரிசல் சவாரிக்கு சென்றார்கள்.
மொத்தத்தில் மறக்கஇயலாத அந்த நன்னாள் வித்யா-விழியனுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும்தான்!
***************************************************************************
Tweet | ||||
ஆஹா, சூப்பரா தொகுத்துத் தந்துட்டீங்க ஷைலஜா. நேர்ல பாத்த மாதிரி இருந்தது. கதராடையும், நூல் சேலையும், செந்தமிழும், ரமணன் அண்ணா பாட்டும், உங்கள் வாழ்த்துக் கவிதையும் (அதை இங்கே போடுங்களேன்).. இதில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயங்கள். விழியனும் வித்யாவும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete/
ReplyDeleteநாமெல்லாம் சேர்ந்து ஏதும் கவிதை எழுதி வாழ்த்தலாம் என்றேன் நான்.ரசிகவ் நிலா
இருவரும் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்தனர் .
/
சூப்பர்
/
ReplyDeleteகவிதை வாசிக்கும்போது நம் மக்களை கைதட்டி விசிலடிக்க
முன்கூட்டியே ஏற்பாடு செய்துதான் போனதால் அப்படியே அவர்கள் செய்தார்கள்!
/
ஹாஹாஹா
கலக்கிட்டீங்க போங்க!!
/
ReplyDeleteநான் கவிதைவாசித்ததும் மண்டபக்கூட்டம் மெல்லக்குறைந்தது.
/
இது கவிதையின் பின் விளைவோ?????
:)))
aha... itha padikkum pothu apdiye innoru murai kalyanatha patha mathiri irukku.... ella nigazhchikalaiyum apdiye sollirukkeenga... super....:-)
ReplyDeleteகவிநயா said...
ReplyDeleteஆஹா, சூப்பரா தொகுத்துத் தந்துட்டீங்க ஷைலஜா. நேர்ல பாத்த மாதிரி இருந்தது. கதராடையும், நூல் சேலையும், செந்தமிழும், ரமணன் அண்ணா பாட்டும், உங்கள் வாழ்த்துக் கவிதையும் (அதை இங்கே போடுங்களேன்).. இதில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயங்கள். விழியனும் வித்யாவும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
>>>>>நன்றி கவிநயா வருகைக்கும் கருத்துக்கும்
மங்களூர் சிவா said...
ReplyDelete/
நாமெல்லாம் சேர்ந்து ஏதும் கவிதை எழுதி வாழ்த்தலாம் என்றேன் நான்.ரசிகவ் நிலா
இருவரும் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்தனர் .
/
சூப்பர்
>>>>>>>>சிவா! வருகைக்கு நன்றி
மங்களூர் சிவா said...
ReplyDelete/
கவிதை வாசிக்கும்போது நம் மக்களை கைதட்டி விசிலடிக்க
முன்கூட்டியே ஏற்பாடு செய்துதான் போனதால் அப்படியே அவர்கள் செய்தார்கள்!
/
ஹாஹாஹா
கலக்கிட்டீங்க போங்க!!
>>>>>:):) சொன்னபடி கைதட்டினாங்களே!!!
ezhilanbu said...
ReplyDeleteaha... itha padikkum pothu apdiye innoru murai kalyanatha patha mathiri irukku.... ella nigazhchikalaiyum apdiye sollirukkeenga... super....:-)
>>>>நீ வந்ததால் இதை மிகவும் ரசிக்க முடிகிறது அல்லவா ப்ரியா? நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்
:-)
ReplyDelete