கார்? பஸ் ? ரயில் ?-என்று சீட்டுக்குலுக்கிப் போட்டு இறுதியில்வென்றது புகைவண்டி.
ப்ருந்தாவனத்துக்கண்ணனைப்பார்க்கக்கூட அப்படி விரைந்திருக்கமாட்டோ ம் அன்றைய மதிய ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸுக்கு நாங்கள் அன்றுபி.டி. உஷாக்களாய் ஒட்டிச்சென்று இடம்பிடித்தோம்!
திருமால் முதலில் சென்று துண்டு போட்டு இரண்டு இடங்கள்போட்டு விட்டார்.
முதலாழ்வார்கள் மூன்றுபேர் கதை சுருக்கமாய் இங்க சொல்லக்காரணம் இருக்கு.. அது என்னன்னா..
ஒரு மரபொந்திற்குள் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் போலிருந்த அந்த சின்ன இடத்தில் மூன்று ஆழ்வார்களும் இறைவனை தியானம் செய்து கொண்டிருக்கையில் முடிவில் இறைவனே வந்து இடங்கேட்டு அருள் செய்ததாகக் கதை உண்டு.
அதுபோல கிடைத்த இரண்டு இருக்கைகளில் மாறிமாறி நாங்கள் இருவர் அமர்ந்து ஒருவர் நின்றுகொண்டு வித்தியாசமான திருமணத்தின் முதல் கட்டமாய் எங்களது வித்தியாசப் பயணம் ஆரம்பமானது. கொஞ்சம் உருளைக்கிழங்கு பொறியலும் 4இட்லியும் அவசரத்துக்கு யார்பசிக்காவது ஆகட்டும் என கொண்டுவந்ததை சாப்பிடாமல் வந்த விபாகைக்கு ஓரளவு பசியாற்ற உதவியது. எங்க மைபா என்று மறக்காமல் கேட்டார் விபாகை! குளிர்பானங்கள் கொறிக்க சில என வாங்கியபடி பயணம் தொடங்கியது.
அதென்னவோ ரிசர்வ் செய்யப்பட வசதியான தனிமைபயணத்தைவிட இப்படி
நண்பர்களுடன் அதுவும் குழு நண்பர்களுடன் பேசிக்கொண்டு கூட்டத்தோடுகூட்டமாய் பலதரப்பட மனிதர்களின் பலவகைப்பட்ட ரசனைகளோடு இரைச்சல்களுக்கு இடையே செய்யும் பிரயாணங்கள் அலுப்பதில்லைதான்.
குழுவில் அதிகம் தலைகாட்டாமல் பணியில் மும்முமுரமாயிருக்கும் நண்பர் ராஜலிங்கம் எனும் விபாகை பயணத்தில் நிறைய பேசிக்கொண்டே வந்தார். நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது இவருக்கு. திருமால் கல்லூரிமாணவர்போல இருப்பார் ஆனால் அமைதியான அமூல்பேபி முகம். தேடிச்சென்று நல்ல புத்தகங்களை வாங்கிப்படிக்கும் புத்தக ரசிகர். வேதாந்தரகசியம் போன்ற பழைய புத்தகங்களிலிருந்து அசோகமித்திரன் அகிலன் என ஆரம்பித்து இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்கள்வரை பேசி அலசுகிறார்.
முன்னமே விழியன் திருமண அழைப்பிதழ்கொண்டுகவந்தபோதே,"வேலூரில் வெய்யில் கொளுத்துமே அதுவும் அக்கினிநட்சத்திரசமயம்?" என்றபோது" நீங்க வாங்க அக்கா.. அன்னிக்கு கண்டிப்பா மழைவரும்" என்றார் அன்புத்தம்பி.
ஆகா அந்த வாக்கே திருவாக்கானதோ ?
மாலை ஆறேகாலூக்கு ரயில்நிலையம்போய் இறங்கிறோம் பாருங்க ஊரே குளிர்சாதனப்பெட்டில வச்சமாதிரி அப்படி ஒரு ஜிலுஜிலுப்பு!
விழியனின் ஆத்ம நண்பன் கேபி ரயிலடிக்கு வரவேற்க வந்துவிட்டார். அவரை 'நீங்க கேப்பிங்களா ?' என்றார் விபாகை .
"ஆமாம்" என்றார் அவரும்.
" நான் சொன்னா கேப்பீங்களா?" என்று சதாய்க்க ஆரம்பித்துவிட்டார் விபாகை.
அங்கேயே சிரிப்பலை ஆரம்பிக்க கேபி எற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி முதலில் ஹோட்டலுக்கு சென்றோம்.
அங்கே சென்றதும்," இப்போ ரொம்ப முக்கிய நிகழ்ச்சி .ஷைலஜாக்கா நீங்ககல்யாணமண்டபத்துல மேடைக்கு வரணுமாம் .".என்றார் கேப்பி.
நம்ம அரட்டை பேச்செல்லாம் மேடைக்கு கீழதான்னு யாருக்கும் தெரியாதா? இதென்ன மதுரைக்கு வந்த சோதனை என நான்
திகைக்கையிலே கேப்பி"பத்திநிமிஷத்துல மண்டபம்போக ரெடி ஆகுங்க" என அன்பு அதட்டல் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்!
(தொடரும்)
Tweet | ||||
mmm.அப்புறம் என்ன ஆச்சு??
ReplyDeleteமழை பெஞ்சுதா.
சாப்பாடு மெனு. அடுத்த பதிவு எப்போ. ஷைலஜா சீக்கிரம்.:)
அட, சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே!
ReplyDeleteஆமாம், இந்த திருமணத்துடன் தானே ஏர்காட் சுற்றுலாவும் ஏற்பாடாகியிருந்தது?..அன்பு அண்ணன் ஜீவ்ஸ் ஏற்பாடெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே?.
Shyalaja akka... enna ipdiye pathiyile vittuteenga... apram nadandhadha pathi seekram ezhuthunga... medaila vizhiyan -oda pictures release panninathu apram saptathu.. apram nalla rendu mani varaikkum arattai adichathu.... :-0
ReplyDeleteவல்லிசிம்ஹன் said...
ReplyDeletemmm.அப்புறம் என்ன ஆச்சு??
மழை பெஞ்சுதா.>>>
கொஞ்சம் பெஞ்சிது வல்லிமா!!!
சாப்பாடு மெனு. அடுத்த பதிவு எப்போ. ஷைலஜா சீக்கிரம்.:)>>
இதோ போட்டாச்சி பாருங்கோ! நன்றி வருகைக்கு வல்லிமா
மதுரையம்பதி said...
ReplyDeleteஅட, சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே!
>>அடுத்தது படிங்க!!
ஆமாம், இந்த திருமணத்துடன் தானே ஏர்காட் சுற்றுலாவும் ஏற்பாடாகியிருந்தது?..அன்பு அண்ணன் ஜீவ்ஸ் ஏற்பாடெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே?.>>
அது இனிதான் பொல்ருக்கு மதுரையம்பதி
9:33 PM
Ezhilanbu said...
ReplyDeleteShyalaja akka... enna ipdiye pathiyile vittuteenga... apram nadandhadha pathi seekram ezhuthunga... medaila vizhiyan -oda pictures release panninathu apram saptathu.. apram nalla rendu mani varaikkum arattai adichathu.... :-0
>>அளித்துவிட்டேன்..ஆமா நீங்க....? வந்தீங்களா கல்யாணத்துக்கு? உண்மைப்பெயர் என்ன நான் தான் மறந்துட்டேனா?!
akka nan than Priya :-)
ReplyDeleteezhilanbu said...
ReplyDeleteakka nan than Priya :-)
10:54 PM >>>
ஓ ப்ரியாவா?
நலமா?
இரண்டாம் பதிவு படிச்சியா நான் ஏதும் விட்ருந்தா நினைவுபடுத்தி சொல்லும்மா நன்றி
வாழ்த்துக்கள் விழியன்.
ReplyDeleteசில தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ள இயலவில்லை.
/
ReplyDeleteமாலை ஆறேகாலூக்கு ரயில்நிலையம்போய் இறங்கிறோம் பாருங்க ஊரே குளிர்சாதனப்பெட்டில வச்சமாதிரி அப்படி ஒரு ஜிலுஜிலுப்பு!
/
வேலூர்ல ஜிலுஜிலுப்பா காமெடி கீமெடி பண்ணலையே!?!?!
நல்ல வர்ணனை அக்கா. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - விழியன்
ReplyDelete