பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது?
இலக்கியத்தைவிடுங்கள்..
பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு சின்னதடுப்பு சுவர் வைத்துவிட்டதில் அர்த்தம் அனர்த்தமாகிப் போய்விட்டது.
அவனாவது மாணவன் அறியாப்பிள்ளை. ஒருபிரபல தமிழ்பேச்சாளர் என்ன செய்தார் தெரியுமா?
ஒரு சமூக சேவகியைப் பாராட்டுகையில்'இவர் ஒரு சிறந்த பொதுமகள்'என்று சொல்லிவிட அந்தப்பெண்மணிக்கு சங்கடமாகிவிட்டது.
நீதி நெறிவிளக்கத்தில் ஒரு பாட்டு" பொன்மலர் நாற்றமுடைத்து' என்று முடிகிறது
பொன்மலர் நாறுமா?இப்படி தமிழ் அறிந்தவர்கள் கேட்கமாட்டர்கள் ,காரணம் நாற்றமெனில் வாசனைஎனப்பொருள இருப்பது அவர்களுக்குத் தெரியும் !வாசனைக்குநேர்பொருள் எதிர்பொருள் எல்லாமே அதுதான் தமிழில்!
உண்ணல் ,தின்னல் ...இவைகளுக்குள் என்ன வேறுபாடு பார்க்கலாமா?
பசியடங்க வயிற்றை நிரப்புதலுக்கு உண்ணல் என்றும் சிறிய அளவு உட்கொள்ளுதலை தின்னல் என்றும் சொல்லவேண்டுமாம்.
அதாவது சோறு உண்டான், விருந்து உண்டான்... முறுக்குதின்றான்அல்லது மைசூர்பாக் தின்றான்.புரிகிறதா இப்போது? என்ன பசி எடுத்துவிட்டதா?:)
உண்ணவா தின்னவா என்ன செய்யபோகிறீர்கள்?:)
சரி... ஈந்தான், யாசித்தான், தந்தான்.
இதற்கும் வேறுவேறு பொருளாம்!
ஈந்தான் ---யாசித்தவனுக்குத் தந்தான்.
தந்தான்--சமநிலையில் அளிப்பவனுக்கு அளித்தான்.
கொடுத்தான்.--தாழ்நிலையில் உள்ளவனுக்கு உயர்நிலையில் உள்ளவன் அளிப்பது
இந்த 'க்' 'ச் ' போன்ற சந்தி எழுத்துக்கள் தமிழில்பண்ணுகிற அட்டகாசம் சொல்லிமாளாது போங்கள்!
அலைகடல் ,அலைக்கடல் !
இரண்டும் ஒன்று என நாம் நினைப்போம்.
ஆனால் அலைகடல் என்றால் அலைகின்ற கடலாம் .
அலைக்கடல் என்றால் அலையை உடைய கடலாம்!
ஒரு க் வந்து நம்மை திக்குமுக்காட வைக்கிறது பாருங்க!
வார்த்தைப் பஞ்சமே இலலாத மொழி தமிழ்.
அரி என்ற சொல்லுக்கு மட்டும் 109 பொருளாம்!
சரி, பூவின் பருவங்கள் நமக்குத்தெரியும் .
அரும்பு என்போம் ;பின்னர் மலர் என்றுகூறிவிடுவோம்.
ஆனால் இடையில் எவ்வளவு விட்டுப்போயிருக்கிறது தெரியுமா?
அரும்பு--மொட்டு
போது---மலரும் நிலையிலுள்ளது(உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது..என்கின்றார் அபிராமி அந்தாதியில் அன்னையை...)
மல்ர்=விரிந்தபூ
அலர் நன்றாகமலர்ந்தது-(அலர்மேல் மங்கை -திருமகள்.)
வீ- நன்றாகமலர்ந்து விழுந்தது...
'வீல் 'எனக்கத்தலாம் போல இருக்கிறதா?:)
பாத்துக் கத்துங்க.. இன்ன சந்தர்ப்பத்தில் இப்படித்தான் கத்த வேண்டுமென வரையறையும் தமிழில் இருக்கிறது!!!
Tweet | ||||
ஒரு வணக்கம் மட்டும் வச்சுட்டு ஜூட். :)
ReplyDeleteஉண்மை தான் தமிழில் சின்னத்தவறுகள் பெரும் தவறுகளாய் முடிந்த சம்பவங்கள் பல உண்டு. அரசியல்வாதி ஒருவர் 'முன்னால் அமர்ந்திருக்கும் எளியமக்களே..' என்று விளித்தது பெரும் கலகத்தில் முடிந்ததாம். சுவாரசியமாகச் சொல்லியிருந்தீர்கள் சைலஜா. நன்றி.
ReplyDeleteநன்றி!
ReplyDeleteதின்னல்க்கு உதாராணம் சூப்பர் ;))))
//அதாவது சோறு உண்டான், விருந்து உண்டான்... முறுக்குதின்றான்அல்லது மைசூர்பாக் தின்றான்.புரிகிறதா இப்போது? என்ன பசி எடுத்துவிட்டதா?:)//
ReplyDeleteஉண்மையைச் சொல்லிவிட்டீர்கள் ஷைலஜா அக்கா.
நீங்கள் செய்யும் மை.பா வை கொஞ்சம் தின்றவன் உண்பதற்கு இருப்பானா என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது. :P
ஷைலஜா அக்கா பக்கமிருந்து எதற்காக இப்பொழுது 'வீல்' என்று ஒரு சத்தம்? :P
மதுரையம்பதி said...
ReplyDeleteஒரு வணக்கம் மட்டும் வச்சுட்டு ஜூட்
>>>வணக்கம் சொன்னவருக்கு ஒரு வெல்கம் மட்டும் சொல்லிட்டு நானும் ஜூட்:)::)
.கோகுலன் said...
ReplyDeleteஉண்மை தான் தமிழில் சின்னத்தவறுகள் பெரும் தவறுகளாய் முடிந்த சம்பவங்கள் பல உண்டு. அரசியல்வாதி ஒருவர் 'முன்னால் அமர்ந்திருக்கும் எளியமக்களே..' என்று விளித்தது பெரும் கலகத்தில் முடிந்ததாம். சுவாரசியமாகச் சொல்லியிருந்தீர்கள் சைலஜா. நன்றி.
>>வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோகுலன்
கோபிநாத் said...
ReplyDeleteநன்றி!
தின்னல்க்கு உதாராணம் சூப்பர் ;))))
>>>>வாங்க கோபிநாத்....தின்னலுக்கு உதாரணமா 2 சொன்னேனே அதுல எது சூப்பர் மைபாதானே?:):)
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDelete//அதாவது சோறு உண்டான், விருந்து உண்டான்... முறுக்குதின்றான்அல்லது மைசூர்பாக் தின்றான்.புரிகிறதா இப்போது? என்ன பசி எடுத்துவிட்டதா?:)//
உண்மையைச் சொல்லிவிட்டீர்கள் ஷைலஜா அக்கா.
நீங்கள் செய்யும் மை.பா வை கொஞ்சம் தின்றவன் உண்பதற்கு இருப்பானா என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது. :P>>>
என்ன என்ன?:) ரிஷான்!!! என்னப்ப்ப்பா இப்படி என் மனசை உடைச்சிட்டீங்க தம்பி?காதால்கேட்பதும்பொய்!கண்டபடிசிலர் சொல்வதும் பொய்..நேரில்வந்து தின்றுபார்த்து அறிதலே மெய்(மை)பா!
ஷைலஜா அக்கா பக்கமிருந்து எதற்காக இப்பொழுது 'வீல்' என்று ஒரு சத்தம்? :
>>> ஆ நானாவது சத்தம் போடறதாவது? உங்க அக்கா எப்போவும் ஸ்மைல்லஜாதான்:) சம்ஜே?:)
நன்றி வருகைக்கு ரிஷான்...
தமிழ்ழொன்றும் படுத்தவில்லை ஷைலஜா.
ReplyDeleteஅதைப் படுத்துபவர்களால் தான் குழப்பமே!
:))
எப்படியோ மை.பா. வை நுழைச்சிட்டீங்க!:)))
hmmm.. nalla utharanangal...
ReplyDeletemypa spl shyla -nu ingayum niroopichitteengale :-)
தமிழ்மட்டுமல்ல எல்லா மொழிகளுக்கும் இதுபோன்ற சிறப்புத்(?) தன்மைகள் இருந்து பாடாய் படுத்துகின்றது.
ReplyDeleteஇனிக்க இனிக்க தமிழ் பத்தி எழுதிட்டு கூடவே மை.பா.வையும் சேர்த்து இனியதுன்னு சொல்லிட்டீங்களே ஷைலஜாக்கா... இங்க மை.பா.க்கு தடை எதும் இல்லையே!! :P
ReplyDeleteசரியா சொன்னீங்க. பாருங்க, கேசரினா ரவா கேசரினு தான் டக்குனு சொல்வோம், சரி, சொல்வேன். :)
ReplyDeleteஆனா, கேசரின்னா சிங்கம்னு கூட ஒரு அர்த்தம் இருக்காமே! மராத்திய கேசரினு சிவாஜிய சொல்வாங்க.
அதுக்காக சீத்தாராம் கேசரிய எல்லாம் உவமைக்கு சொல்ல முடியாது இல்லையா? :p
நீங்க நைசா மைசூர் பாகை பதிவுல நுழைக்கும் போது, பின்னூட்டத்தில் கேசரியை நான் நுழைக்க கூடாதா? :p
என்ன (கே)சரி தானே? :))
VSK said...
ReplyDeleteதமிழ்ழொன்றும் படுத்தவில்லை ஷைலஜா.>>
ஆமா டாக்டர்வீஎஸ்கே...தமிழ் நம்மை இன்பப்படுத்துகிறது அதைத்தான் சொல்லவந்தேன்
அதைப் படுத்துபவர்களால் தான் குழப்பமே!>>>
ஆமா அப்படி தமிழைப்படுத்துகிறார்கள் என்றால் கோபிச்சிக்கிறாங்க அதனால தமிழ் நம்மைப்படுத்தறதா தலைப்பிட்டேன் கண்டிப்பா தமிழ் என்னிடம் கோபிக்காது எனும் தைரியம் தமிழ் என் காதலன் ஆச்சே!:)
:))
எப்படியோ மை.பா. வை நுழைச்சிட்டீங்க!:)))>>>
வேற யாராவது நுழைக்குமுன் ஒரு மாறுதலுக்கு நான் முந்திகொண்டேன் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
7:09 AM
புகழன் said...
ReplyDeleteதமிழ்மட்டுமல்ல எல்லா மொழிகளுக்கும் இதுபோன்ற சிறப்புத்(?) தன்மைகள் இருந்து பாடாய் படுத்துகின்றது.
ஆமா புகழன்(அழகானபேரு) ஆனா எனக்கு ஒழுங்கா தெரிந்த ஒரே மொழிதமிழ்தான் அதனல்தான் கொஞ்சம் அதுபற்றி சொல்லவந்தேன் நன்றி உங்க க்ருத்துக்கு.
சகாராதென்றல் said...
ReplyDeleteஇனிக்க இனிக்க தமிழ் பத்தி எழுதிட்டு கூடவே மை.பா.வையும் சேர்த்து இனியதுன்னு சொல்லிட்டீங்களே ஷைலஜாக்கா... இங்க மை.பா.க்கு தடை எதும் இல்லையே!! :P
>>>>வா சஹாரா நலமாதங்கையே?
இனிப்பு என்றால் தமிழ்...இப்போதெல்லாம் மைபாவும் சேர்கிறதே என்ன செய்வதம்மா?:)
மைபாக்கு தடை இல்லை அது தான் மற்றவர்கள் பல்லை உடைப்பதாய் தின்னாதவர்கள்(கவனிக்க உண்ணாதவர்கள் இல்ல:)) சொல்கிறார்கள்,நன்றி சஹாரா வருகைக்கும் கருத்துக்கும்
ambi said...
ReplyDeleteசரியா சொன்னீங்க. பாருங்க, கேசரினா ரவா கேசரினு தான் டக்குனு சொல்வோம், சரி, சொல்வேன். :>>>
ஒ!கே,சரி அம்பி!!)
ஆனா, கேசரின்னா சிங்கம்னு கூட ஒரு அர்த்தம் இருக்காமே! மராத்திய கேசரினு சிவாஜிய சொல்வாங்க.>>>
கவிதார்க்கிக கேசரின்னு நிகமாந்த மஹாதேசிகரையும் சொல்வாங்க கவிச்சிங்கமாம்!
அதுக்காக சீத்தாராம் கேசரிய எல்லாம் உவமைக்கு சொல்ல முடியாது இல்லையா? :p>>>
முடியவே முடியாது அதானே?:)
நீங்க நைசா மைசூர் பாகை பதிவுல நுழைக்கும் போது, பின்னூட்டத்தில் கேசரியை நான் நுழைக்க கூடாதா? :p
என்ன (கே)சரி தானே? :))>>>
அம்பிக்கு கண்டிப்பா கேசரி உண்டு..தம்பி பத்தவச்சிட்டாரோ கேசரி பத்தி?:) ஆமா எங்க அவரு? ரொம்ப ரொம்ப விஜாரிச்சதா சொல்லுங்க அம்பி.
9:18 AM
அருமையான கட்டுரை. முடிந்தால்
ReplyDeletewww.lathananthpakkam.blogspot.com
paarungkaLEn.
லதானந்த் said...
ReplyDeleteஅருமையான கட்டுரை. முடிந்தால்
www.lathananthpakkam.blogspot.com
paarungkaLEn.
>>நன்றிலதானந்த் உங்க வலைப்பூ சென்று பின்னூட்டமும் அளித்துவிட்டேன் அம்மிணி என்பதை கடைசில நம்பினீங்களா இல்லையா?:)
ஓஅரளவு
ReplyDeleteநல்ல சுவையான பதிவு. மை.பா.வை மட்டும் படித்துவிட்டுச் சொல்லவில்லை. :-)
ReplyDeleteஷைலஜா அக்கா. இந்த ஈதலின், கொடுத்தலின், தருதலின் என்ற சொற்களின் பொருள் வேறுபாட்டைப் பற்றி நானும் ஓரிடத்தில் படித்து சிறிது ஆராய்ச்சியும் இரவிசங்கர், இராகவன் இவர்கள் இருவருடன் மின்னஞ்சல் உரையாடலும் செய்து, நேரம் கிடைக்கும் போது இட வேண்டும் என்று வைத்திருக்கிறேன். நீங்களும் அதனையே எழுதியிருக்கிறீர்கள். நான் படித்த வரை ஈதல் என்பது கேட்டவருக்கு ஈதல் என்ற பொருளை உணர்த்தி கொடுப்பவரின் உயர்வைச் சொல்கிறதாம்; கொடுத்தல் என்பது அரசருக்குக் கொடுத்தல், ஆண்டவனுக்குக் கொடுத்தல் என்ற பொருளை உணர்த்தி கொடுப்பவரின் தாழ்வைக் குறிக்கிறதாம்; தருதல் என்பது ஒத்த நிலையில் இருப்பவருக்குத் தருதலைக் குறிக்கிறதாம். இந்தச் சொற்களை இலக்கியத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு தெளிவு இன்னும் கிட்டவில்லை.
சந்தி எழுத்துகளைப் பற்றிய உரையாடலும் முன்பு நடந்திருக்கிறது. வலைப்பதிவர் ஒருவர் முத்துகுமரன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். முத்துகுமரன் சரியா முத்துக்குமரன் சரியா என்றொரு உரையாடல் நடந்தது. :-)
திருப்பாவையிலும் தீக்குறளை சென்றோதோம் என்று ஆண்டாள் சொன்னது குறளை/கோள் சொல்ல மாட்டோம் என்ற பொருளில் தானே ஒழிய திருக்குறளை கற்கமாட்டோம் என்ற பொருளில் இல்லை என்றும் ஒரு விளக்கம் 'சொல் ஒரு சொல்' பதிவில் இட்டேன். தீக்குறளைச் சென்றோதோம் என்று இருந்திருந்தால் இரண்டாவது பொருள் வந்திருக்கும்.
குமரன் (Kumaran) said...
ReplyDeleteநான் படித்த வரை ஈதல் என்பது கேட்டவருக்கு ஈதல் என்ற பொருளை உணர்த்தி கொடுப்பவரின் உயர்வைச் சொல்கிறதாம்.//
ஆமாம் குமரன் ஈதல் என்பது கொடையாகும் என்றே எனக்குத்தோன்றுகிறது
//இந்தச் சொற்களை இலக்கியத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு தெளிவு இன்னும் கிட்டவில்லை.
//
ஆமாம் ஒவ்வொன்றில் ஒவ்வொருவிதமான அர்த்தங்கள் உள்ளன.
//திருப்பாவையிலும் தீக்குறளை சென்றோதோம் என்று ஆண்டாள் சொன்னது குறளை/கோள் சொல்ல மாட்டோம் என்ற பொருளில் தானே ஒழிய திருக்குறளை கற்கமாட்டோம் என்ற பொருளில் இல்லை என்றும் ஒரு விளக்கம் 'சொல் ஒரு சொல்' பதிவில் இட்டேன். தீக்குறளைச் சென்றோதோம் என்று இருந்திருந்தால் இரண்டாவது பொருள் வந்திருக்கும்//
ஆண்டாள் திருக்குறளைக்குறிப்பிடவே இல்லை குமரன்.
சந்திப்பிழைகள் தேவை இல்லாமல் மெய்யெழுத்துக்களை புகுத்துவது வார்த்தையின் -சொல்லின் - அழகை சிதைக்கும்.
வாழ்த்துகளை பலர் வாழ்த்துக்கள் என்கிறார்கள்! வாழ்த்து ஒருமை .வாழ்த்துகள் தானே பன்மை? கதவுக்கு கதவுக்கள் என்றா சொல்கிறோம் கதவுகள் தானே?
ஆயினும் பல இடிபாடுகளுக்கு இடையேயும் தமிழ் வாழ்ந்துகொண்டுதான் இருக்கு இல்லையா குமரன்? நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
தொடர்ந்து
ReplyDeletewww.lathananthpakkam.blogspot.com
படியுங்க அம்மிணி!
பிளாக் படிக்கிறீங்களா?
ReplyDeleteலதானந்த் said...
ReplyDeleteபிளாக் படிக்கிறீங்களா?
>>2நாளா படிக்கல ரசம் பதிவோட சரி. வரேன் சீக்கிரமா லதானந்த!
பிளாக்கைத் தொடர்ந்து படிக்கிறீங்களா?
ReplyDeleteலதானந்த் said...
ReplyDeleteபிளாக்கைத் தொடர்ந்து படிக்கிறீங்களா?
5:39 AM
படிக்கிறேனே லதானந்த்! வெண்பா பரிசுபத்திகூட கேட்ருந்தேனே? உங்க மெயில் ஐடி க்கு ஒரு மடலிட்டேன் அது சரியா போகலையே? காட்டுல மயில்தானா மெயில் கிடையாதா?:) ஆமா என்னோட இந்த ஒரேபதிவைத்தான் படிகறீங்களா மயிலப்பத்தி எழுதி இருகேனே சரியான்னு பாருங்களேன்:)
லதானந்த் said...
ReplyDeleteபிளாக்கைத் தொடர்ந்து படிக்கிறீங்களா?
5:39 AM
படிக்கிறேனே லதானந்த்! வெண்பா பரிசுபத்திகூட கேட்ருந்தேனே? உங்க மெயில் ஐடி க்கு ஒரு மடலிட்டேன் அது சரியா போகலையே? காட்டுல மயில்தானா மெயில் கிடையாதா?:) ஆமா என்னோட இந்த ஒரேபதிவைத்தான் படிகறீங்களா மயிலப்பத்தி எழுதி இருகேனே சரியான்னு பாருங்களேன்:)
என்னங்க அம்மிணி
ReplyDeleteஎன்ர பிளாக் பக்கமே காணோமே?
மலர் பத்திய விளக்கம் அருமை! 'போது' ரொம்பப் பிடிச்சிருக்கு. கொடை, தானம் பத்தி இப்பதான் குமரன் பதிவுல படிச்சேன்.
ReplyDelete'நகமும் சதையும் போல்' என்பதற்கு பதில் இனிமே "ஷைலஜாவும் மைபாவும் போல்" னு சொல்லிடாம்னு இருக்கேன்!
மலருக்கான ஒரு பருவத்தை விட்டுவிட்டீர்களே!
ReplyDeleteஅரும்பு மொட்டு முகை(போது) மலர் அலர் வீ இறுதியான நிலை செம்மல்!
கவிநயா said...
ReplyDeleteமலர் பத்திய விளக்கம் அருமை! 'போது' ரொம்பப் பிடிச்சிருக்கு. கொடை, தானம் பத்தி இப்பதான் குமரன் பதிவுல படிச்சேன்.
'நகமும் சதையும் போல்' என்பதற்கு பதில் இனிமே "ஷைலஜாவும் மைபாவும் போல்" னு சொல்லிடாம்னு இருக்கேன்!
>>>கவிநயாவிற்கு குறும்புப்பா:):)
அகரம்.அமுதா said...
ReplyDeleteமலருக்கான ஒரு பருவத்தை விட்டுவிட்டீர்களே!
அரும்பு மொட்டு முகை(போது) மலர் அலர் வீ இறுதியான நிலை செம்மல்!
>>>>
வாங்க அமுதா..எனக்கு அவ்வளவுதான் தெரிந்திருக்கவும் அப்படியே பதிவிலிட்டேன். இன்னும் இத்தனை இருப்பதை இங்கு சொல்லியதற்கு நன்றி.