Social Icons

Pages

Saturday, March 07, 2009

வட்டத்துக்குள் பெண்.











விரைந்து வெளியே வா பெண்ணே!
விதிமீது பழிபோட்டு
வீட்டுக்குள் அடைந்துகிடந்ததுபோதும்
வெளியேவா பெண்ணே
உலகம் உனக்காகக் காத்திருக்கிறது!

அடிமையாய் வாழ்ந்ததுபோதும் பெண்ணே!
அணு உலைகளை ஆராய்ச்சி செய்து கொடு
அரிசிச்சோற்றை ஆக்கமட்டுமா உன் கரங்கள்
ஆகாயம்வரை உனது கரம் நீளட்டும்!
குழந்த சுமக்கமட்டுமா நமக்கு கருவறை
குவலயம் படைக்கும் திருமறையும் நாம் தானடி!

சடங்குகளுடன் சரிந்துபோகாமல்
சரித்திரம் படைக்கவும் சாதனைகள் புரியவும்
சட்டென்று எழுந்து வாராயடி!

நம் கண்களின் ஒளியில்தான்
சூரியக் கதிர்களுக்குக் கனல்
கிடைக்கவேண்டும்
நம் கால்களின் பாதையில்தான்
கானக முட்களுக்கு
கண் தெரியவேண்டும்
நம் கைகளின் எழுத்துக்களில்தான்
உலகமே உன்னதப்பட வேண்டும்

அதற்கு..
பதுங்கியும் ஒதுங்கியும்போகாமல்
புதுமைப்பெண்ணாய்
நிமிர்ந்து வா பெண்ணே!

பின்குறிப்பு!

(நேற்று இந்தக்கோலத்தை வாசலில்போடும்போது பெண்ணுருவத்தைமட்டும் முதலில் போட்டுவண்ணப்பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்துவிடுவார்களோ என பெண்ணைச்சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகாபோல! இந்தக்கோடு அதாவது பெண்வட்டம்பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்.)

அவர்கள்..

ஒண்ணுமில்லசும்மா என்று சொல்லி வலைப்பூவினை அதிரவைக்கும் அப்துல்லா

தமிழினை அழகுறத்திகழவைக்கும் திகழ்மிளிர்

ஆன்மீகக்கட்டுரைகளில் அசத்தும் கண்ணபிரான் ரவிசங்கர் எனும் கேஆர் எஸ்!


மூவரும் இந்தப்பொறுப்பினை வேறுமூவருக்குக்கொடுத்துப்பார்க்கலாம்.பெண்பற்றிய சிந்தனையை உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

ஒரே நிபந்தனை இந்தக்கவிதைச்சங்கிலி ஆண்களுக்குமட்டுமே ! ஆமாம் இந்தப்பெண்கள்தினத்தில் நாங்கள் உங்களை மதிக்கிறோம் அதற்காகவே இந்த சலுகை உங்களுக்கு!

23 comments:

  1. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் கோலத்துப் பெண்ணே! :)

    மகளிர் தின வாழ்த்துக்கள் ஷைல்ஸ் அக்கா! :)

    ReplyDelete
  2. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் கோலத்துப் பெண்ணே! :)

    மகளிர் தின வாழ்த்துக்கள் ஷைல்ஸ் அக்கா! :)

    11:25 AM
    >>>>>நன்றி ஆன்மீகச்செம்மலே!
    பெண்வட்டம் கவிதைக்கு ரெடியா!!

    ReplyDelete
  3. கவிதை அருமை.கோலம் அருமை. கோலத்துக்குள் மூன்று பேரை மாட்டி விட்டது ரொம்பப் புதுமை:)! ரொம்ப ரொம்ப அருமை:))!

    ReplyDelete
  4. யக்கா....

    http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post.html

    ReplyDelete
  5. உங்கள் ஆணையைச் சிரமேற் கொண்டு, வட்டம் போட்டாச்சுக்கா! :))

    மகளிர் வட்டம்: இலட்சுமணனுக்குப் போடுவோம் சீதா ரேகா!
    http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post.html

    ReplyDelete
  6. என்னக்கா இது??? கவிதை எழுதுனோமா, கம்முனு இருந்தோமான்னு இல்லாம நம்பளயும் மாட்டி விடுறீங்களே!!!!

    கொஞ்சம் டைம் குடுங்க, எழுதிடுறேன்.

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...
    கவிதை அருமை.கோலம் அருமை. கோலத்துக்குள் மூன்று பேரை மாட்டி விட்டது ரொம்பப் புதுமை:)! ரொம்ப ரொம்ப அருமை:))!

    11:42 PM

    >>.வாங்க ராமலஷ்மி இனிய மகளிர்தின வாழ்த்துகள்
    எப்டி அன்புசகோதரர்களைமாட்டிவிட்டுட்டேன் பாத்தீங்களா நம்ம வட்டத்துல சிக்கிட்டாங்க இல்ல அவ்ளோதான் மாட்டிகிட்டாங்க:):) நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  8. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    யக்கா....

    http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post.html

    6:57 AM
    >>.ஆஹா இதோ வர்ரேன் சூடா காபிகுடிக்கபோயிட்டேனா அதான் இந்தமடல்பாக்க லேட் ஆகிட்டது நன்றி ரவி ச்சமத்த்து!!!!

    ReplyDelete
  9. எம்.எம்.அப்துல்லா said...
    என்னக்கா இது??? கவிதை எழுதுனோமா, கம்முனு இருந்தோமான்னு இல்லாம நம்பளயும் மாட்டி விடுறீங்களே!!!!

    கொஞ்சம் டைம் குடுங்க, எழுதிடுறேன்.

    7:08 AM
    >>>...அப்துல்ஜீ டேக் யுவர் ஓன் டைம்ஜி நோப்ராப்லம்ஸ் ...சம்ஜே:)என்னநான் மாட்டிவிடறேனா ஹலோஎப்படிஉங்ககிட்ட எங்களப்பத்தி எழுதகேட்டுவாங்கறேன் பாத்தீங்களா:)

    ReplyDelete
  10. ஜோதிபாரதி said...
    அருமை! அருமை!!

    7:42 AM
    >> நன்றி ஜோதிபாரதி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  11. ஜோதிபாரதி said...
    அருமை! அருமை!!

    7:42 AM
    >> நன்றி ஜோதிபாரதி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  12. அருமையான வரிகள்

    மகளிர் தின வாழ்த்துகள்

    இரண்டு வாரமாக தடுமம்,
    நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக எழுதுகின்றேன்

    ReplyDelete
  13. திகழ்மிளிர் said...
    அருமையான வரிகள்

    மகளிர் தின வாழ்த்துகள்

    இரண்டு வாரமாக தடுமம்,
    நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக எழுதுகின்றேன்

    12:53 PM
    <<<<>>>>>>திகழ்மிளிர் மெதுவா எழுதுங்க பரவால்ல
    தடுமம் =என்ன அர்த்தம் தெரியலையே.

    ReplyDelete
  14. தடுமம் என்றால் நீர்க்கோர்வை, நீர் கொள்ளுதல் அல்லது வடமொழியில் ஜலதோஷம். திகழ்மிளிர் புதிய புதிய சொற்களை பயன் படுத்துவது மகிழ்ச்சி தருகிறது! நன்றி!!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  15. ஜோதிபாரதி said...
    தடுமம் என்றால் நீர்க்கோர்வை, நீர் கொள்ளுதல் அல்லது வடமொழியில் ஜலதோஷம். திகழ்மிளிர் புதிய புதிய சொற்களை பயன் படுத்துவது மகிழ்ச்சி தருகிறது! நன்றி!!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    6:52 AM
    ....>>>:>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    வாங்க ஜோதிபாரதி
    தடுமனுக்கு இதான் பொருளா ம்ம் இப்போ அறிந்தேன்...ஆமாம் திகழ்மிளிர் புதுப்புதுச்சொற்களை சொல்கிறார் நன்றாக இருக்கிறது நானும் நேற்று பெரியதிருமொழி படித்தபோது வீவில் என்றால் இடைவிடாது என்ற அர்த்தம் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

    பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர
    மேவி நின்றுநான்கண்ட தண்டமோ
    வீவிலைங்கணைவல்லி அம்பு கோத்து
    ஆவியே இலக்காத வெய்வதே

    இதான் பாட்டு

    தண்டமோ=அபராதமோ

    வீவில்=இடைவிடாது
    ஐங்கணைவில்லி=மன்மதன்

    (இன்னிக்கு ஹோலிக்கு ஏத்தமாதிரி மன்மதன் வந்துட்டார் பாருங்க)

    அதென்ன ஐங்கணை என்கிறீர்களா சொல்கிறேன்! நன்றி விளக்கத்துக்குஜோதிபாரதி!

    ReplyDelete
  16. மேடம்... அண்ணன் அப்துல்லா அழைத்து நானும் ஒரு கவிதை (?!!) படைச்சுட்டேன். நம்ம கடைக்கு வரவும்.

    ReplyDelete
  17. திகழ்மிளிர் பாவித்தது சரியே!

    தடுமம் taṭumam : (page 1729)
    1. Hindering, obstructing, resisting, prohibiting; தடுக் கை. தடுப்பருஞ் சாபம் (கம்பரா. அகலிகை. 75). 2. Check, hindrance, restraint; தடை.

    ReplyDelete
  18. // Mahesh said...
    மேடம்... அண்ணன் அப்துல்லா அழைத்து நானும் ஒரு கவிதை (?!!) படைச்சுட்டேன். நம்ம கடைக்கு வரவும்.
    //

    இஃகிஃகி! நானும்!!

    ReplyDelete
  19. Mahesh said...
    மேடம்... அண்ணன் அப்துல்லா அழைத்து நானும் ஒரு கவிதை (?!!) படைச்சுட்டேன். நம்ம கடைக்கு வரவும்.

    4:26 PM>>>>>>
    மகேஷ் பின்னுட்டம் அங்க இட்டுட்டேன் இல்லையா!


    \\\ பழமைபேசி said...
    திகழ்மிளிர் பாவித்தது சரியே!

    தடுமம் taṭumam : (page 1729)
    1. Hindering, obstructing, resisting, prohibiting; தடுக் கை. தடுப்பருஞ் சாபம் (கம்பரா. அகலிகை. 75). 2. Check, hindrance, restraint; தடை.\\



    >>>ம் சரி பழமைபேசி,,எனக்க்கும் இப்ப புரிஞ்சுது.

    10:15 PM


    \\\\பழமைபேசி said...
    // Mahesh said...
    மேடம்... அண்ணன் அப்துல்லா அழைத்து நானும் ஒரு கவிதை (?!!) படைச்சுட்டேன். நம்ம கடைக்கு வரவும்.
    //\\\


    >>>>வரேன் ஊர்ல இல்ல வாரக்கடைசில தான் தாமதம் படிகறேன் இருங்க

    ReplyDelete
  20. அக்கா அவர்களுக்கு,

    இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.
    மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. அப்பாவி முரு said...
    அக்கா அவர்களுக்கு,

    இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.
    மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    11:09 AM
    >>>>>>>>>>>>>>>
    இதோ வந்திட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்
    நன்றி முரு.

    ReplyDelete
  22. இப்பொழுது தான் இடுகை இட முடிந்தது , வேலையால்
    முடிய வில்லை. இங்கே பாருங்கள்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.