Social Icons

Pages

Sunday, April 26, 2009

ஓரு குச்சிக்கு இரண்டுமுனையாமே!

ஜென் சூபி போன்ற மதங்களில் ஒரு சிறப்புஉண்டு அவை உவமை மற்றும் சிறு கவிதைகள்கூறி மனிதர்களை நீங்களே சிந்தியுங்கள் என்று சொல்லி விடும். அப்படி ஒரு சுவாரஸ்யமான கதையைப் பாக்கலாமா! ஒருகுச்சின்னா அதுக்கு ரெண்டுமுனை இருக்கும்.. ஆமா..இது எங்களுக்குத்தெரியாதா என்று கேட்கிறீர்கள்! அதான் சிந்தியுங்கள்னு முதல்லயே சொல்லிட்டேனே! சரி இப்ப ஒருகுச்சியை எடுத்துக்குங்க. பாத்தீங்களா அதுக்கு ரெண்டுமுனை இருக்கு இப்ப அதை ரண்டா உடையுங்கஅப்போ...
மேலும் படிக்க... "ஓரு குச்சிக்கு இரண்டுமுனையாமே!"

Saturday, April 25, 2009

நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே!

அறுபது ஆண்டுகளில் ஒருமுறை மிகச் சிறப்பான அட்சயத்ரிதீயை தினம் வருமாம்! மேஷமாசம் வைசாக சுக்ல த்ருதியை வெள்ளிக்கிழமை ரோஹிணிநட்சத்ரம் என எல்லாம் சேர்ந்துவரும் இந்தசுபதினத்தைவிட உயர்ந்தது வேறெதுவும் இல்லையாம்! யோகமான நாளாம் அது ! 27- 4 -09 வரும் அட்சயதிருதீயை அப்படி அமைந்திருக்கவேண்டும் ஆனால் ஒன்றுதப்பிவிட்டது அதுதான் கிழமை! ...
மேலும் படிக்க... "நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே!"

Saturday, April 18, 2009

மணக்கும் மரபுக்கவிதைகள்!

ஏப்ரல் 18ஆம் நாள், உலக மரபு தினமாகக் கொண்டாடப்படுகிறது! இதற்காக, பழைய நினைவுச் சின்னங்கள், புதையல்கள், பொக்கிஷங்கள் இவற்றைப் போல பெயரிலேயே மரபினைக் கொண்ட மரபுக் கவிதைகளையும் நாம் நினைத்துப் பார்க்கலாம். முன்பெல்லாம் அரங்க சீனிவாசன், திருலோக சீதாராம், சக்தி சரணன், மீ.ப.சோமு, மஹி, நா.சீ.வரதராஜன் போன்ற உயர்தர மரபுக் கவிஞர்கள் தமிழ்ப் பத்திரிகையுலகைத் தங்களின் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளால் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்....
மேலும் படிக்க... "மணக்கும் மரபுக்கவிதைகள்!"

Thursday, April 16, 2009

அக்காக்களும்,தம்பிகளும்!

அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்தம்பிகள் மட்டுமே!அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்தம்பிகளுக்கு மட்டுமேஅதிகம் தெரிந்திருக்கிறதுஅண்ணாக்களைப்போல அதிகாரம்செய்வதில்லை அக்காக்கள்என்பதாலேயே இழைந்துநேசிக்கும் தம்பிகளைஅக்காக்கள் ஒருபோதும்வெறுப்பதில்லைகல்லாமண்ணாரைட்டா தப்பாஒருகுடம் தண்ணி ஊத்திஒருபூ பூத்ததுதாயம், அஞ்சுகல்லு ஆட்டம்பல்லாங்குழிச்சோழிஊஞ்சல் ஓட்டம்உல்லாசக்கண்ணாமூச்சிஅக்காக்களின்...
மேலும் படிக்க... "அக்காக்களும்,தம்பிகளும்!"

Tuesday, April 14, 2009

புத்தாண்டுக்கு சிறப்பு ஆயுள் ரெசிப்பி!

தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்! இனிப்பு புளிப்பு உப்பு காரம் கசப்பு துவர்ப்பு ! இப்படி அறுசுவை கலந்தது நம் உணவுவகைகள்! வாழ்க்கைல எல்லாசுவையையும் ஏற்கப்பழகிக்கணும்னுதான் இன்னிக்கு வெல்லம் போட்ட மாங்கா பச்சடில லேசா உப்பு போட்டுமாங்காயையும் அதன் ஓட்டினை(துவர்ப்புக்காக) நீக்காமல் வெட்டிப்போட்டு கடைசில வேப்பம்பூவை வதக்கி சேர்க்கிறது வழக்கம்! ஆமா அதென்னாஆயுள் தண்டனைபோல ஆயுள் ரெசிப்பி என்கிறீர்களா? அல்லது ஆயில்(எண்ணை) ரெசிப்பி...
மேலும் படிக்க... "புத்தாண்டுக்கு சிறப்பு ஆயுள் ரெசிப்பி!"

Monday, April 13, 2009

சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!

மெல்லசிவந்த மாங்கொழுந்தும் மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக் கொண்டாடிவரும் வசந்தமுடன்மஞ்சள்பலாவும் பலஇன் கனியும் மக்கள் மகிழத் திருவிழாக்களும்பஞ்சமின்றி பாரில் தந்திடவே பாவை சித்திரை வருகின்றாள்.உண்ணும் உணவிலும் வாழ்க்கையின் உயர்ந்த தத்துவம் பல உண்டுஎண்ணிப் பார்க்கையிலே அதுவும் எளிதில் நமக்கு புலனாகும்அருமையான வாழ்க்கை என்றைக்கும் இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்விரும்பி வெல்லம்மாங்காய்சேர்ந்த ...
மேலும் படிக்க... "சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!"

Sunday, April 05, 2009

தேடிப்பற!

தேடித்தேடிஅலைந்த என்னைகும்பல்சேர்ந்துகேள்விகேட்டது. 'தேடும்பொருளின்பெயர்தான் என்ன?' என்றே என்னிடம்கேட்பவர்களிடத்தில்நானும், 'தேடும்பொருளின் பெயரை அறியேன்' என்றதும்பார்வையாலே என்னை பரிகசித்துப்'பைத்தியம்' என்றுபட்டமும் சூட்டிபரபரவென்று கலைந்ததுகும்பல்! பெயருள்ளபொருளையே தேடும் உலகில்பெயரற்ற பொருளைத்தேடுபவர்களுக்குகிடைக்கும் பெயர்தான்பைத்தியம்போலு...
மேலும் படிக்க... "தேடிப்பற!"

Thursday, April 02, 2009

அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்!

ஜனகமகாராஜனின் அரசவை.ராம,லஷமணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது! எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து, 'உறுவலி யானையை ஒத்த மேனியர் செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்....
மேலும் படிக்க... "அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்!"

Wednesday, April 01, 2009

அன்றைக்கு ஏன் அந்த ஆனந்தமோ!:)

அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் (சுற்றுப்பயணம்) வந்திருக்கிறேன்.வந்த இடத்தில் எனக்கு.....? என்னஆயிற்று என்று கூறுமுன் ஊர்பற்றி சிறு அறிமுகம்..நகரத்தைப் பார்த்துவிட்டவர்கள் கண் மூடிக்கலாம். கலிஃபோர்னியாவின் கனவுலகம் லாஸ் ஏஞ்சலஸ் என்றால் களிநகரம் லாஸ்வேகாஸ் எனலாம். எனக்கு லாஸ்வேகாஸ், இன்று லக்'வேகாஸ்! இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? ஆமாம்...இங்குவந்த இடத்தில் எனக்கு.. எனக்கு...... அவசரமில்லை பிறகு சொல்வேன்.. இருங்க அதற்குமுன் ஊர் உலா...
மேலும் படிக்க... "அன்றைக்கு ஏன் அந்த ஆனந்தமோ!:)"

ஒபாமாவிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு!

ஒபாமாவிடமிருந்து நேற்றுஎனக்கு போனில் அழைப்பு வந்தது ஏப்ரல்முதல்தேதி என்பதால் ஏதோநான் ஏமாத்தறதா யாரும்நினைக்க வேண்டாம் நிஜமாத்தான். 2வருஷம்முன்பு அமெரிக்காபோனபோது வாஷிங்டன்ல செர்ரிப்ளாசம் பூக்களைப்பார்த்து வந்து பூலோகம் பற்றி அப்போது குழுவிலும் அதையே ஆங்கிலத்தில் FLOWERS OF THE WORLD என்றும் எழுதி வாஷிங்டன்போஸ்ட்...
மேலும் படிக்க... "ஒபாமாவிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.