Social Icons

Pages

Wednesday, April 01, 2009

அன்றைக்கு ஏன் அந்த ஆனந்தமோ!:)

அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் (சுற்றுப்பயணம்) வந்திருக்கிறேன்.வந்த
இடத்தில் எனக்கு.....?


என்னஆயிற்று என்று கூறுமுன் ஊர்பற்றி சிறு அறிமுகம்..நகரத்தைப்
பார்த்துவிட்டவர்கள் கண் மூடிக்கலாம்.


கலிஃபோர்னியாவின் கனவுலகம் லாஸ் ஏஞ்சலஸ் என்றால் களிநகரம் லாஸ்வேகாஸ்
எனலாம்.

எனக்கு லாஸ்வேகாஸ், இன்று லக்'வேகாஸ்!

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?

ஆமாம்...இங்குவந்த இடத்தில் எனக்கு.. எனக்கு......

அவசரமில்லை பிறகு சொல்வேன்..

இருங்க அதற்குமுன் ஊர் உலா போகலாம்.

பாலைவனப்பிரதேசம்போல உள்ள லாஸ்வேகாசில் காசினோக்கள் தான் கவர்ச்சி
அம்சம் ,அழகான இளம் பெண்களுக்குப்பிறகு(முன்னேன்னும் சொல்லலாம்)..காசினோ
காம்ப்ளிங் தான் பிரபலம் இங்கே!

'ஹோட்டல் சர்க்கஸ்' என்ற ஹோட்டலில்தான் நாங்கள் தங்கினோம். அதற்குள்
சர்க்கஸில் இருப்பதைப்போலவே அமைப்பில் தரை சுவர் அறைகள் லாபி என
அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தள ஓரமாய் குட்டி சர்க்கஸ் மேடை. நிஜப்புலிக்குட்டிவேறு உர்
என்கிறது.

இளம்பெண்கள் அழகாய் சிக்கனமான உடையில் காசினோபார்களில், பார்வைக்கு
இதமாய் கையில் மதுக்கோப்பை(ஃப்ரீ இல்லை..
கொள்ளைவிலை என நம்ம ஊர் குடிமகன் ஒருவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது)
ஏந்தியபடி வருகிறார்கள்.

ஆணாயிருந்தால் இவர்களின் அநியாய அழகுக்குக் கவிதை எழுதிவிடுவார்கள்.
அட்லீஸ்ட் அவர்கள் உடையைப் போல ஒரு ஹைக்கூ
வாவது!
ஆனால் இன்று எனக்கு இந்த நாளே இனியநாள்!கவிதையான நாள்! என்ன அதுவா?
இருங்க கடைசில சொல்லிடுவேன்.

லாஸ்வேகாஸ் நைட்க்ளப்ஸ் பிரசித்தம்! கேளிக்கையும் உல்லாசமும் நிறைந்த
நகரம்! ஒரு நீளவீதியில் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! காசினோ.சூதாட்டம் !பகலில்
வெய்யில் கொளுத்துகிறது;இரவில் எங்கிருந்தோ குளூமை வந்துவிடுகிறது. ஜகத்
ஜோதியாய் திருவிழாபோல தெரு காட்சி அளிக்கிறது.

சூதாட்ட நகரினில் இம்சை செய்யாமல் ஒரு இந்திய ஹோட்டல் பெயர் காந்தி.

ரோம சாம்ராஜ்ய பாணியில்ஹோட்டல் சீசர்ஸ்பாலஸ்,
நியுயார்க்நியூயார்க், எம்ஜிஎம் க்ராண்ட், ட்ரஷர் ஐலண்ட், ஹோட்டல்
எக்ஸ்காலிபர்( இன்னும் நிறைய இருக்கு)..எல்லாம் பெயரோடு சம்பந்தப்பட்ட
அமைப்பில் உட்புறம் அமைக்கப்பட்டு இருக்கும்.நியூயார்க் நியூயார்க்
ஹோட்டலுக்குள் போனால் அசல் நியூயார்க் நகரத்தில் இருப்பதுபோல இருக்கும்.
மொத்தத்தில் இளமைக்கு லாஸ்வேகாஸ் நகரம், ஒரு சொர்க்கபூமி!

ஒரு ஹோட்டலைச் சுற்றீப் பார்க்கவே அரைநாளாகிறது .தீம்பார்க்,
3நீச்சல்குளங்கள், இதர விளையாட்டு அரங்கங்கள் என நம் ஊரில்
பொருட்காட்சிசாலை பார்த்த உணர்வு. நிறைய ஹோட்டல்களில் குறைந்த பட்சம்
1000அறைகள் உள்ளன.அமெரிக்காவில் எல்லாமே
பிரும்மாண்டம்தான்!

காந்தி ஹோட்டலில் மட்டும் நோ காசினோ!

கஜல் காதில் ஒலிக்க கண்ணுக்கு நிறைவாய் ராஜஸ்தானி ஓவியம் தெரிய
வயிற்றுக்கு இதமாய் வெஜிடபிள் புலாவ் கிடைத்தது.

ஒருவர்," இங்கதான் நம்ம சாப்பாடு நல்லாருக்கு"என்றார்
செந்தமிழில்.,அடுத்த மேஜையில்.

தேன் வந்து காதில் பாய" ஹலோ நீங்கதமிழரா?' எனக்கேட்க விரைந்த என்னை கசின்
அடக்கிவிட்டாள்.

"அரட்டை அடிக்க ஆரம்பிக்காதே.. காசினோல போயி விளையாடலாம்..
50செண்ட் போட்டு அள்ளாலாம் ஆயிரம் டாலர்!" என்றாள்.

அதிர்ஷ்டம் என்னைப்பார்த்துக்கண் அடிப்பதை நான் உணரவேஇல்லை அப்போது

.என்ன அதிர்ஷ்டமா என யாரோ கேக்கறீங்க..ஆமாம்
விவரம் கடைசில.
தொடர்ந்து படிங்க..


என்ன 50ல்1000ஆ? "என்று கேட்டேன் அதிர்ச்சியோடு.

'லட்சம் கூட வரும்..வா வா"

ஆஹா!

மகிழ்ந்து குலாவி அவளுடன் காசினோவிற்குள் பி.டி உஷாவாய் ஓடிப்புகுந்தேன்.

ஆயிரக்கணக்கான மெஷின்கள்! ஆயிரக்கணக்கான மனிதர்கள்! நிதானத்தில் சிலர்!
போதையில் பலர்!

எல்லார்கண்களிலும் அதிர்ஷ்டதேவதையின் வரவிற்குக்காத்திருக்கும் ஆர்வ ஒளி!

டடட்ங் என மெஷின்களில் டாலர்நாணயங்கள்கொட்ட மனசை உலுக்கியது அந்த ஒலி!

நானும் அங்கே இங்கே பார்த்து அமர்ந்தேன் ஒரு மெஷினில்.

மெய்மறந்து கேட்டால் ஓம்ம் என்பதுபோல அந்த இயந்திரங்கள் ஒலிக்கும்.
எல்லாம் மாயை!

என் அருகில் இருந்த சிற்றிடை கொரியன் பெண்ணுக்கும் எதிரிலிருந்த பருத்த
பப்பாளிப்பழ ஜெர்மானிய மனிதருக்கும் நாணயம்
கொட்டியது.அள்ளினார்கள்.

நான் 50டாலர்வரை பரிட்சித்து
ஏமாந்தேன்..

சுத்தம்.

போட்டதெல்லாம் அசுரப்பசியோடு விழுங்கிய
இயந்திரத்தைப்பார்த்து முறைத்தேன். கசினுக்கு 10டாலர் லாபம். சே
எனக்குத்தான்..

ஆனால் அதிர்ஷ்ட தேவதை அருகில் வருவதை அப்போதாவது உணர்ந்தேனா?

அதிர்ஷ்டமா நிஜமாவா என மறுபடி ஒரு அமானுஷ்யக்குரல் கேட்கிறது.இனியும்
மறைக்கலாமா? மேலே படிங்க.

ஆசைஆசை பேராசை! அனைத்தும்தொலைத்து எழுந்து நிற்கையில் கசின் கடைசி
பத்து டாலர்(காசினோ நாணயங்கள்) கொடுத்து விளையாடு என ஊக்கப்படுத்தினாள்

.
ஒருடாலர் நாணயத்தை எடுத்து கோபமாய் மெஷின் வாயில் செலுத்தி பட்டனை
விருட்டென எரிச்சலுடன் அமுக்கினேன்.உனக்காச்சு எனக்காச்சு..


ஆஆஆஅ !!!


என்ன சத்தம் இந்தநேரம்!

ஓயாமல்விடாமல் 7.02நிமிடங்களுக்கு!!

கனகதாரமழை!

ொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்!

எண்ணீ எண்ணி(கவனிங்க இது வேற எண்ணி) மகிழ்ந்தேன்.

ஆமாம் அடித்தது அதிர்ஷ்டம்!

அட் எ டைம் 10000டாலர்கள் எனக்கு !(ஒருடாலர்
இந்தியகணக்கில்47ரூபாய் பக்கமா அமெரிக்க
நண்பர்களே?)

கங்க்ராட்ஸ்மேடம்!

ஆர் யு ஃப்ரம் இண்டியா? வாவ்!"

கைத்தட்டல்!பாராட்டு!

எனக்கு நம்பவேமுடியவில்லை இன்னமும்.

என்ன நீங்களாவது நம்பறீங்களா:)

*********************************************************


(2007 ஏப்ரல்1 முத்தமிழ் குழுல இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ என்ற தலைப்பில் இட்ட கட்டுரை இந்த நாளுக்காக மறுபடி:):)

21 comments:

 1. \இளம்பெண்கள் அழகாய் சிக்கனமான உடையில் காசினோபார்களில், பார்வைக்கு
  இதமாய் கையில் மதுக்கோப்பை\\

  நாங்க இரசிக்கிர மாதிரி

  நீங்க ...

  ReplyDelete
 2. நிச்சயமா நம்பறோம்:)! ஆமா அந்தப் பணத்தை என்னா பண்ணீங்கன்னு சொல்லலையே:)?

  ReplyDelete
 3. ஹைய்ய்ய் மீ த மூன் :)))))

  ReplyDelete
 4. ஆஹா அக்கா!!!
  என்னா டெரரா போஸ்ட்டு மேல போஸ்ட்றீங்க
  :))))

  ReplyDelete
 5. //2007 ஏப்ரல்1 முத்தமிழ் குழுல //

  Grrrrrrrrr.

  என்ன ஒரு வில்லத்தனம்? நம்பிட்டேனே, இதுக்கு தான் மெயிலுல கூப்ட்டு வெச்சு கும்மியா? :))

  ReplyDelete
 6. விவரனை எல்லாம் டாப் டக்கர். :))

  ReplyDelete
 7. சூப்பர்க்கோவ்.. அன்றைக்கு பட்ட ஆனந்தத்தை இப்ப தான் சொல்ல நேரம் கிடைத்ததா..

  நானெல்லாம் கேசினோஸ் பக்கம் பாத்து வியந்ததோட சரி ஒரு பைசா கூட விளையாடத் தோணலை..

  உண்மையில நீங்க விளையாடிருக்கீங்களா ?

  ReplyDelete
 8. நட்புடன் ஜமால் said...
  \இளம்பெண்கள் அழகாய் சிக்கனமான உடையில் காசினோபார்களில், பார்வைக்கு
  இதமாய் கையில் மதுக்கோப்பை\\

  நாங்க இரசிக்கிர மாதிரி

  நீங்க ...
  <<>>>>>நாங்க ஏன் ரசிக்கறோம்(உள்ளூறப்பொறாமைதான் எப்பெடி இப்படி ஒரு ஃபிகர் உடம்புக்குன்னு:):)

  ReplyDelete
 9. ராமலக்ஷ்மி said...
  நிச்சயமா நம்பறோம்:)! ஆமா அந்தப் பணத்தை என்னா பண்ணீங்கன்னு சொல்லலையே:)?

  3:34 PM

  >>.அதயேன் கேக்கறீங்க ராமலஷ்மி
  இந்தியா வந்து சென்னை பெங்களூர்ல ஆட்டோக்கு கொடுத்தே எல்லாம் ஹோகயா:)

  ReplyDelete
 10. ஆயில்யன் said...
  ஹைய்ய்ய் மீ த மூன் :)))))

  3:41 PM


  ஆயில்யன் said...
  ஆஹா அக்கா!!!
  என்னா டெரரா போஸ்ட்டு மேல போஸ்ட்றீங்க
  :))))

  3:48 PM
  >>>>>>வாங்க ஆயில்
  மூணாவதா வந்த மூனே வருக:)

  ReplyDelete
 11. ambi said...
  //2007 ஏப்ரல்1 முத்தமிழ் குழுல //

  Grrrrrrrrr.

  என்ன ஒரு வில்லத்தனம்? நம்பிட்டேனே, இதுக்கு தான் மெயிலுல கூப்ட்டு வெச்சு கும்மியா? :))

  4:31 PM
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>

  காமெடில அம்பிய என்னால மிஞ்சமுடியுமா ...:) நீங்க கும்மி அடிக்காம எப்டி அம்பி:)

  ReplyDelete
 12. ஷைலஜா, இவ்வளோ பணம் வந்திருக்கு, பதிவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  முட்(!)-தினம் ஏகி வேகாஸ் மீண்டும் வென்ற வீராங்கனையார் என்ற பட்டம் பெறுவீராக!

  ReplyDelete
 13. நான் நம்பிட்டேன். :)

  ReplyDelete
 14. ambi said...
  விவரனை எல்லாம் டாப் டக்கர். :))

  4:31
  <<<<<<<<<<<<<<<<<
  ஆனாலும் சிடி சென் ட்டரை நீங்க விவரிச்சவிதம் அதிலும் குறிப்பா கருப்பு சூடிதார் போல வருமா!
  நன்றி கருத்துக்கு அம்பி,

  ReplyDelete
 15. Raghav said...
  சூப்பர்க்கோவ்.. அன்றைக்கு பட்ட ஆனந்தத்தை இப்ப தான் சொல்ல நேரம் கிடைத்ததா..
  <<<<>>>


  அன்னிக்கே சொன்னேன்னே விடுவேனா என்ன இது மீள்பதிவு ராகவ்:)


  \\நானெல்லாம் கேசினோஸ் பக்கம் பாத்து வியந்ததோட சரி ஒரு பைசா கூட விளையாடத் தோணலை..

  உண்மையில நீங்க விளையாடிருக்கீங்களா ?\
  >>>>>>>>>>>

  காசினோ போனால் விளையாடாம வர்ரதே இல்ல..ஆனா ரொம்ப இழக்கமாட்டேன்...கவனமா இருப்பேன்(அதெல்லாம் சமத்துதான்:)))

  7:13 PM
  >>>>>>>>>

  ReplyDelete
 16. \\கெக்கே பிக்குணி said...
  ஷைலஜா, இவ்வளோ பணம் வந்திருக்கு, பதிவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  முட்(!)-தினம் ஏகி வேகாஸ் மீண்டும் வென்ற வீராங்கனையார் என்ற பட்டம் பெறுவீராக!

  8:35 PM
  \\\\\

  அள்ளி என்ன கிள்ளி வேணாலும் தரேன் எல்லாம் நிஜம்னு நீங்க நம்பினா:):)

  பட்டத்துக்கு நன்றி கெபி.:):)

  ReplyDelete
 17. Shakthiprabha said...
  நான் நம்பிட்டேன். :)

  9:19 PM
  <<<<<<<<<<<<<<<<


  சரிசரி நானும் இத நம்பிட்டேன் ஷக்தி:)

  ReplyDelete
 18. கோபிநாத் said...
  avvvvvvvvvvvvv :)

  1:41 AM
  >>>>>>>>>>>>>>>>

  ஹஹ்ஹ்ஹஹா:)

  ReplyDelete
 19. வெறும் பத்தாயிரம் டாலர் தானா? எனக்கு பத்து பில்லியன் டாலர் கிடைத்ததை யாரிடமும் யாரும் இன்னும் சொல்லவில்லை என்று நம்புகிறேன். நீங்களும் சொல்லாதீர்கள். :-)

  ReplyDelete
 20. குமரன் (Kumaran) said...
  வெறும் பத்தாயிரம் டாலர் தானா? எனக்கு பத்து பில்லியன் டாலர் கிடைத்ததை யாரிடமும் யாரும் இன்னும் சொல்லவில்லை என்று நம்புகிறேன். நீங்களும் சொல்லாதீர்கள். :-)

  1:13 AM

  >>>>>>>>>>>>>>>>>>...வாங்க குமரன்.... பத்து பில்லியன் டாலரா! வாவ்.க்ரேட்! அதுல பாதி எனக்குதர்துன்னா நான் யார்ட்டயும் சொல்லமாட்டேன்:):)

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.