Social Icons

Pages

Sunday, April 05, 2009

தேடிப்பற!

தேடித்தேடி
அலைந்த என்னை
கும்பல்சேர்ந்து
கேள்விகேட்டது.

'தேடும்பொருளின்
பெயர்தான் என்ன?'

என்றே என்னிடம்
கேட்பவர்களிடத்தில்
நானும்,

'தேடும்பொருளின்
பெயரை அறியேன்'

என்றதும்
பார்வையாலே
என்னை பரிகசித்துப்
'பைத்தியம்' என்று
பட்டமும் சூட்டி
பரபரவென்று
கலைந்ததுகும்பல்!

பெயருள்ளபொருளையே
தேடும் உலகில்
பெயரற்ற பொருளைத்
தேடுபவர்களுக்கு
கிடைக்கும் பெயர்தான்
பைத்தியம்போலும்!

16 comments:

  1. நல்ல தேடல்

    தேடல் நல்லது

    தெரியாவிட்டாலும் தான்.

    (எள்ளி நகையாடுபவர்களை புறந்தள்ளி)

    ReplyDelete
  2. பெயரற்ற பொருளைத் தேடித்தான் ஞானம் பெற்றனர் பலரும். நல்ல கவிதை ஷைலஜா.

    ReplyDelete
  3. பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்!

    அந்த பைத்தியத்தில் ஒன்றுதான் தாமஸ் ஆல்வா எடிசன்!
    நல்ல கரு!

    ReplyDelete
  4. //பெயருள்ளபொருளையே
    தேடும் உலகில்
    பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்///

    அருமையான வரிகள் !

    ReplyDelete
  5. நன்றாக சொல்லியிருக்கிங்க...;)

    ReplyDelete
  6. அருமையான வரிகள் தோழி!
    பரிகசிப்பவர்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர்கள்;

    அன்புடன்
    சுவாதி

    ReplyDelete
  7. //பெயருள்ளபொருளையே
    தேடும் உலகில்
    பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்!//

    அருமை ஷைலஜா!


    பெயற்ற பொருளையே தானும் தேடுகிறோம்
    எனத் புரியாதவர்கள்; அவர்கள் தெரியாதவர்கள்

    பெயரற்ற அந்திமத் தேடலின்
    பெயரேந்திய ஆரம்பங்களில்
    சிக்கி சிதைந்து போகிறவர்கள்.
    அவர்கள் புத்தி தெளியாதவர்கள்.

    ReplyDelete
  8. நட்புடன் ஜமால் said...
    நல்ல தேடல்

    தேடல் நல்லது

    தெரியாவிட்டாலும் தான்.

    (எள்ளி நகையாடுபவர்களை புறந்தள்ளி)

    7:09 AM
    >>>>>>>>>>>>>..ஆமாம் ஜமால்...தேடலின் அர்த்தம் உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள் நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி said...
    பெயரற்ற பொருளைத் தேடித்தான் ஞானம் பெற்றனர் பலரும். நல்ல கவிதை ஷைலஜா.

    7:20
    >>>>>>>>>>>>>>>>>>

    நன்றி ராமலஷ்மி..மகான்கள் தேடியது இதைதானே!

    ReplyDelete
  10. ஜோதிபாரதி said...
    பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்!

    அந்த பைத்தியத்தில் ஒன்றுதான் தாமஸ் ஆல்வா எடிசன்!
    நல்ல கரு!

    7:47 AM
    >>>நன்றாக சொன்ன்னீர்கள் ஜோதிபாரதி!

    ReplyDelete
  11. ஆயில்யன் said...
    //பெயருள்ளபொருளையே
    தேடும் உலகில்
    பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்///

    அருமையான வரிகள் !

    8:33 AM


    கோபிநாத் said...
    நன்றாக சொல்லியிருக்கிங்க...;)

    2:08 PM
    >>>>>>.....நன்றி ஆயில்யன் மற்றும் கோபி!

    ReplyDelete
  12. திகழ்மிளிர் said...
    அருமை
    <<<<<<,,,,நன்றி திகழ்

    ReplyDelete
  13. சுவாதி சுவாமி. said...
    அருமையான வரிகள் தோழி!
    பரிகசிப்பவர்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர்கள்;

    அன்புடன்
    சுவாதி
    <<>>.வாங்க தோழி .

    கருத்து நெத்தியடி! ஆனா அருமை! நன்றி சுவாதி.

    ReplyDelete
  14. Shakthiprabha said...
    //பெயருள்ளபொருளையே
    தேடும் உலகில்
    பெயரற்ற பொருளைத்
    தேடுபவர்களுக்கு
    கிடைக்கும் பெயர்தான்
    பைத்தியம்போலும்!//

    அருமை ஷைலஜா!


    பெயற்ற பொருளையே தானும் தேடுகிறோம்
    எனத் புரியாதவர்கள்; அவர்கள் தெரியாதவர்கள்

    பெயரற்ற அந்திமத் தேடலின்
    பெயரேந்திய ஆரம்பங்களில்
    சிக்கி சிதைந்து போகிறவர்கள்.
    அவர்கள் புத்தி தெளியாதவர்கள்.

    5:02 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    கடையாக நீ சொன்னது மிகவும் தெளிவு ஷக்தி.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  15. அருமையான வரிகள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.