Social Icons

Pages

Saturday, April 25, 2009

நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே!அறுபது ஆண்டுகளில் ஒருமுறை மிகச் சிறப்பான அட்சயத்ரிதீயை தினம் வருமாம்!

மேஷமாசம் வைசாக சுக்ல த்ருதியை வெள்ளிக்கிழமை ரோஹிணிநட்சத்ரம் என எல்லாம் சேர்ந்துவரும் இந்தசுபதினத்தைவிட உயர்ந்தது வேறெதுவும் இல்லையாம்!

யோகமான நாளாம் அது !

27- 4 -09 வரும் அட்சயதிருதீயை அப்படி அமைந்திருக்கவேண்டும் ஆனால் ஒன்றுதப்பிவிட்டது அதுதான் கிழமை! திங்கள்கிழமையாகி
விட்டது!

ஆனாலும் ஐந்தில் நாலுகொண்ட இந்த அட்சய்த்ருதியையும்அபூர்வமான சிறப்பான சுபமானநாள்தான் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தபெரியோர்கள்.

வருடாவருடம் வரும் அட்சயத்ருதீயை எனும் தினம் ஆண்டின் மங்களநாள்.பார்வதிதேவியின் பிறந்தநாளும் கல்யாணம் ஆனநாளும் அட்சயத்ரிதீயைநாளில்தான்.

பலராமனின் அவதாரதினம் அட்சய்த்ருதீயை சேர்ந்த ரோஹிணிநாளில்.

மங்கலமானதினம் அட்சயத்ரிதீயை என்று பெருமாளும்
தாயாரும் தேர்ந்தெடுத்து அவதரித்த நாள் இந்த பொன்னாள்!இன்னும் பற்பல சிறப்புகளைக்கொண்டநன்னாள் இது!

ஷய்ம் என்றால் குறை,

ஷயரோகம் என்கிறோம் அல்லவா

அட்சயம் என்றால் குறைவில்லாதது.

அன்று செய்யும் எந்த செயலும் குறைவில்லாதுப் பெருகும்!

பொன் வாங்க இந்தநாளை அதனால்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பொன்வாங்கலாம்தான் ஆனாலும் அதேநேரம் தானம் செய்யவும் இந்த நாளைத்தேர்ந்தெடுக்கலாம், கொஞ்சம் தானம் செய்தாலும் மேருமலைபோல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் இத்தினதினச் சிறப்பை அறிந்த சான்றோர்கள்.


குருவினிடத்தில் வித்யைகளைக் கற்றுக் கொள்ளவும் ஏற்றநாள்.இத்தினத்தில்குருவின் திருவடிகளில் வணங்கி எழுந்தால் கோடிநன்மைகள் கிடைக்கும்.

அட்சயத்ருதீயை தினம் செய்யும்தர்மங்கள் கொடுததவ்ர்க்கே திரும்பவும் பலமடங்காய்திரும்பிவிடும்.

கொடுத்துவைத்தவர்கள் எனச்சிலரை நாம் சொல்வதுஇதனால்தான் ! அவர்கள் இம்மாதிரி தானதர்மங்கள் கொடுத்திருப்பார்கள் அதனால்தான் இப்போது அதனைப் பெறுகிறார்கள்.

சித்திரைமாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில்வரும் இந்த அட்சயத்ரிதீயை , கலைகளை, மனமுவந்து நாம் செய்யும் தானதர்மங்களை மேலும்மேலும் வளர்க்கிறது.


அரிசிபருப்பு பானகம் நீர்மோர் விசிறி செருப்பு பால் என இயன்றவைகளைவாங்கி ஏழைகளூக்கு அளிக்கலாம்.

இந்த நாளில்வீட்டில் சிறிதேனும் அரிசி பருப்பு வெல்லம் முதலியன வாங்கிக்கொள்வதால் இல்லத்தில் வற்றாத நிலை இருக்கும் என ஞான நூல்கள்சொல்கின்றன.

காசி முழையூர் விளங்குளம் திருப்பரங்குன்றம் திருச்சோற்றுதுறை - இந்த ஐந்து திருத்தலங்கள் இறைவனின் திருவிளையாடல்கள் நிகழ்ந்ததால் இவை அட்சயத்ரிதியை திருத்தலங்கள் என அழைக்கபடுகின்றன .இந்தத்தலத்து தெய்வங்களை தரிசித்தல் புண்ணியம்
ஆகும்.

.
அனைத்திலும் மிக உயர்ந்தபுண்ணியம் ஏழை ஒருவருக்கேனும் வயிறார உணவிடுவதுதான்!

************************************************************************************

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13303&lang=ta&Itemid=73


இந்த சுட்டிலயும் இது இருக்கு!!!

6 comments:

 1. நல்ல விவரங்களுக்கு நன்றி ஷைலஜா!

  ReplyDelete
 2. அட்சயத்ரிதீயை ஸ்பெசல் என்னக்கா?? ;))

  ReplyDelete
 3. நன்னாச் சொன்னேள் போங்க.
  அந்த நன்னாளில் என்னுடைய பதிவைப் பாத்து நேக்குப் பின்னூட்டம் போடுங்கோளேன்

  ReplyDelete
 4. இது பற்றி இன்று போஸ்ட் போடலாம் என நினைத்தேன், மிகச் சிறப்பாக நீங்க எழுதிட்டீங்க...இதுக்கு மேல நான் என்ன பெரிசா சொல்லிடப் போறேன்....

  சரி, செளந்தர்ய லஹரில 2 ஸ்லோகம் போடறேன். :-)

  ReplyDelete
 5. ் நன்றி ராமலஷ்மி கோபி லதானந்த் மௌலி.


  கோபி அட்சய்த்ரிதியைக்கு சமைல்ல எக்ஸ்ட்ராவா ஒருபாயசம் !!!


  லதான்ந்த உங்க வலைப்பூக்கு வர டைமே கிடைக்கல வரேன் சீக்கிரமா

  மௌலி! லஹரிக்காவது நான்வந்து பின்னூட்டமிடணும் நிறைய ட்யூ இருக்கு ..வரேன் சீக்கிரமா

  ReplyDelete
 6. என்னங்க நீங்க. தானம், தவம், பானகம், அரிசி ன்னு நல்லது செய்யறது...அதெல்லாம் எங்கையோ போச்சு. காசு நிறைவா வந்தா வாழ்கையில் பாதி சுமை இறங்கிவிடுமே. அக்ஷைய திருதியைக்கு என்ன செய்யறோமோ இல்லையோ, முடியற அளவு கடன் வாங்கியானும் பொன் பொருள் வாங்கவேண்டும். உஸ்மான் ரோட்டில் யாருக்காக கடை வைத்து காத்திருக்கிறார்கள்!

  நமக்காகத் தான்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.