இனிப்பு புளிப்பு உப்பு காரம் கசப்பு துவர்ப்பு !
இப்படி அறுசுவை கலந்தது நம் உணவுவகைகள்!
வாழ்க்கைல எல்லாசுவையையும் ஏற்கப்பழகிக்கணும்னுதான்
இன்னிக்கு வெல்லம் போட்ட மாங்கா பச்சடில லேசா உப்பு போட்டுமாங்காயையும்
அதன் ஓட்டினை(துவர்ப்புக்காக) நீக்காமல் வெட்டிப்போட்டு கடைசில வேப்பம்பூவை
வதக்கி சேர்க்கிறது வழக்கம்!
ஆமா அதென்னாஆயுள் தண்டனைபோல ஆயுள் ரெசிப்பி என்கிறீர்களா?
அல்லது ஆயில்(எண்ணை) ரெசிப்பி என்பதை தப்பா தட்டச்சிடேனோன்னு
நினைக்கிறீங்களா:))ஏன்னா வேற யாரவது எழுதினா அடியேன் இப்படித்தான்
நினைப்பேன்!!! என் புத்தி அப்படித்தான்:):)
சரி எதுக்கு சஸ்பென்ஸ் சொல்லிடலாமே இப்போ!!
ஆனா நாம எல்லாரும் இதை கண்டிப்பா செய்யணும் அப்போதான்
மகிழ்ச்சி என்கிற சொர்க்கவாசலின் கதவு நமக்குத்திறக்கும்ன்னு இந்த
ரெசிப்பிய எனக்கு சொல்லித்தந்த பெரியவர் சொன்னார்.
சரிம்மா வளவளன்னு பேசாம ரெசிப்பிய சொல்லுங்கன்னு யாரோமுணுமுணுக்றீங்க!
ஓகே ஸ்டார்ட் ம்யூசிக்!(புத்தாண்டு இன்னிசை!)
முதல்ல 12மாசங்களையும் எடுங்க.
அதுல இருக்கற வெறுப்பு பொறாமை பகைமை போன்றவைகளை சுத்தமா கழுவிடுங்க.
29 ,30 , 31(தேதிகளை) என்று எல்லாத்தயும் பலவகையா துண்டுகள் போடுங்க..
இப்ப அதுல ஒவ்வொரு நாளும் ஒருதுளி நம்பிக்கை ஒரு துளி சகிப்புத்தன்மை ஒ்ரு துளி தைரியம் பலதுளி உழைப்பு போட்டுக் கலங்க.
இதுல தியானம் பக்தி என்கிற உபரிச்சுவைகளை சேருங்க.
மறக்காம நாலுகரண்டி சந்தோஷம் கலங்க, என்ன?
முக்கியமா அதிக நகைச்சுவை உணர்வை நல்லா அதுல மிக்ஸ் செஞ்சேஆகணும்!
இவை எல்லாத்தியும் அன்பு என்கிற பாத்திரத்துல பரப்புங்க.
ஒளிநிறைந்த உற்சாக நெருப்புல உணவை, பதமா சமைச்சிடுங்க!
இதைக்கடைசில புன்னகையால் நன்கு அலங்கரிச்சி தாராளமாய்ப் பரிமாறுங்க!
பிறகென்ன ஆயுள்முழுவதும் உங்களுக்கும் , உங்களால் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதானே?!
Tweet | ||||
\\
ReplyDeleteமுதல்ல 12மாசங்களையும் எடுங்க. \\
அதான் முடிஞ்சிடுமே ...
நல்ல பதிவு ;)
ReplyDeleteஅற்புத ரெசிப்பி!
ReplyDelete// தியானம் பக்தி என்கிற உபரிச்சுவைகளை சேருங்க.//
ReplyDeleteஅபாரம் ! அற்புதம் !! அனந்தம்.
அதிசயம் !! ஆனந்தம் !!!
சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
கருத்து சொன்ன ஜமால்
ReplyDeleteகோபி
ராமலஷ்மி
சூரி அனைவர்க்கும் மிக்க நன்றி