மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்
கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக்
கொண்டாடிவரும் வசந்தமுடன்
மஞ்சள்பலாவும் பலஇன் கனியும்
மக்கள் மகிழத் திருவிழாக்களும்
பஞ்சமின்றி பாரில் தந்திடவே
பாவை சித்திரை வருகின்றாள்.
உண்ணும் உணவிலும் வாழ்க்கையின்
உயர்ந்த தத்துவம் பல உண்டு
எண்ணிப் பார்க்கையிலே அதுவும்
எளிதில் நமக்கு புலனாகும்
அருமையான வாழ்க்கை என்றைக்கும்
இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்
விரும்பி வெல்லம்மாங்காய்சேர்ந்த
வேப்பம்பூபச்சடியதை உணர்த்திவிடும்
ஊழிக்கால ஓவியத்தேரை
ஒவ்வொருவருடமும் ஓட்டிவரும்
வாழி சித்திரை !வாழிய நீ!
வாழ்வில் வளமே தங்கும் இனி!
Tweet | ||||
அழகான துவக்கம்
ReplyDeleteசிவந்த மாங்கொழுந்து ...
அதுவும் மெல்ல
\\அருமையான வாழ்க்கை என்றைக்கும்
ReplyDeleteஇசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்
விரும்பி வெல்லம்மாங்காய்சேர்ந்த
வேப்பம்பூபச்சடியதை உணர்த்திவிடும்\\
அழகான உதாரணம்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))
ReplyDeleteவிரோதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா...
ReplyDeleteபுது வருட விருந்து உண்டு தானேக்கா..:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)
ReplyDeleteசித்திரைப் பெண் சொல்லியிருக்கும் சேதி தேன்.
ReplyDeleteசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
சித்திரை வசந்தமதை கண்களெதிரே
ReplyDeleteகாண வைத்துவிட்டீர்கள்.
வளமுடன் வாழ்க.
வாழ்வாங்கு வாழ்க.
சுப்பு ரத்தினம்.
Thanks to Jamal
ReplyDeleteGopi
Ramalakshmi
ragav
mauli
and sury!
Thank you so much.
shylaja
arumaiyana varigal!!!
ReplyDelete