Social Icons

Pages

Thursday, April 16, 2009

அக்காக்களும்,தம்பிகளும்!


அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!
அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி

ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி

அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!




கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு

பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்

தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை


அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்

அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!


மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்

9 comments:

  1. //அண்ணாக்களைப்போல அதிகாரம்
    செய்வதில்லை அக்காக்கள்//

    ஹிஹி செய்வார்கள் எனச் சொல்லியிருக்கிறேன் ரீசண்ட் பதிவில். ஆனால் அது ஒரு அன்பு மிரட்டல். மற்றபடி அத்தனை வரிகளும் கூட்டி வருகின்ற நினைவுகள் எல்லாம் நிஜம். அருமை ஷைலஜா.

    ReplyDelete
  2. அழகான கவிதை..காட்சிகள் கண்முன் விரிகின்றன! நானும் என் தம்பியும் மட்டும் போய் பார்த்த படம் முதல்வன்! :-)

    //மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
    முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
    மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
    வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
    வால்பையன்களோடுசேர்ந்து
    வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
    தாவணி அணிந்த முதல்நாளும்
    தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
    அக்காக்களின் அன்றாட வாழ்வில்
    அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்//

    மெத்தப் பிடித்தன் இவ்வரிகள் எனக்கு!

    ReplyDelete
  3. அட அட...எனக்கா திடிரென்னு தம்பி(கள்) ஞாபகம் ;)))

    பின்னிட்டிங்க ;))

    ReplyDelete
  4. அண்ணா தம்பி அக்கா தங்கை என யாருமற்று வளர்ந்தவள் நான்.

    ஆனாலும் என்றுமே நான் தம்பிக்கு ஏங்கியதே இல்லை. தம்பிகள் என்று நினைத்தாலே போர் ஷை. எனக்கு அண்ணாக்கள் தான் பிடிக்கும். அண்ணா இல்லையே என்று நிறைய ஏங்கியிருக்கிறேன். Therez something magical about aNNa and thangai :)

    கவிதை அழகு. அதன் கருத்துக்கு நான் ஒப்ப மாட்டேன் hehehe

    ReplyDelete
  5. ராமலக்ஷ்மி said...
    //அண்ணாக்களைப்போல அதிகாரம்
    செய்வதில்லை அக்காக்கள்//

    ஹிஹி செய்வார்கள் எனச் சொல்லியிருக்கிறேன் ரீசண்ட் பதிவில். ஆனால் அது ஒரு அன்பு மிரட்டல். மற்றபடி அத்தனை வரிகளும் கூட்டி வருகின்ற நினைவுகள் எல்லாம் நிஜம். அருமை ஷைலஜா.

    >>>>>>>>>>>>>>>>>

    ராமலஷ்மி நீங்க சொல்றதும் நிஜம்தான் அன்புமிரட்டல்!! வருகைக்கும்கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. சந்தனமுல்லை said...
    அழகான கவிதை..காட்சிகள் கண்முன் விரிகின்றன! நானும் என் தம்பியும் மட்டும் போய் பார்த்த படம் முதல்வன்! :-)

    //மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
    முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
    மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
    வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
    வால்பையன்களோடுசேர்ந்து
    வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
    தாவணி அணிந்த முதல்நாளும்
    தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
    அக்காக்களின் அன்றாட வாழ்வில்
    அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்//

    மெத்தப் பிடித்தன் இவ்வரிகள் எனக்கு!

    12:45 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>.நன்றி சந்தனமுல்லை அன்பான வருகைக்கும்
    அழுத்தமான கருத்துக்கும்

    ReplyDelete
  7. கோபிநாத் said...
    அட அட...எனக்கா திடிரென்னு தம்பி(கள்) ஞாபகம் ;)))

    பின்னிட்டிங்க ;))

    3:41 PM
    <<>>>>>>.ச்சும்மாதான் உங்கள எல்லாம் நினைச்சி ! நன்றி கோபி

    ReplyDelete
  8. Shakthiprabha said...
    அண்ணா தம்பி அக்கா தங்கை என யாருமற்று வளர்ந்தவள் நான்.

    ஆனாலும் என்றுமே நான் தம்பிக்கு ஏங்கியதே இல்லை. தம்பிகள் என்று நினைத்தாலே போர் ஷை. எனக்கு அண்ணாக்கள் தான் பிடிக்கும். அண்ணா இல்லையே என்று நிறைய ஏங்கியிருக்கிறேன். Therez something magical about aNNa and thangai :)

    கவிதை அழகு. அதன் கருத்துக்கு நான் ஒப்ப மாட்டேன் hehehe

    12:12 PM
    <<<<<<<<<<<<<<<<<<,,,வா ஷக்தி எங்க இப்போ பொ.வீடா இல்ல பு வீடா?:) எனக்கும் அண்ணா இல்ல அதனால நீ சொல்றத அக்சப்ட் பண்றேன் ஆனா தம்பிங்ககூட வீட்ல நான் நல்லா கொட்டம் அடிச்சிருக்கேன் அதனால அவங்கள மறக்கமுடியாதே என்னால:)

    ReplyDelete
  9. அழகுக் கவிதை..
    இந்த அன்புக்கவிதை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.