Social Icons

Pages

Monday, October 24, 2011

சார் என்கிற சாரங்கன்!(சவால் போட்டி 2011)

"எதுக்கு ..எதுக்கு என்னை இங்க கொண்டுவந்து கட்டிப்போட்டு வச்சிருக்கேள், யாரு நீங்கள்ளாம்? என்னைவிடுங்கோ நான்போகணும் அப்பாக்கு கோயில் கைங்கர்யத்துக்கு நான் இல்லேன்னா திண்டாடிப்போயிடுவார் தயவுபண்ணி என் கைக்கட்டுகளை அவிழ்த்துவிடுங்கோ...”


கண்ணில் நீர் தளும்ப முகுந்தன் இப்படிக்கதறுவதை வேடிக்கைபார்த்த குமரவேல்,”டேய் முகுந்தா...உன்னை ஒருமுக்கியமான விஷயத்துக்குத்தான் தூக்கிவந்திருக்கோம்..உன் ஊர் அனந்தரங்கபுரத்து அரங்கநாதப்பெருமாளுக்கு வைரத்திருவடி சேவைன்னு வருஷா வருஷம் நடப்பது நாளைக்கு நடக்கப்போவுதே, அந்த கைப்பிடி அளவுமட்டுமே ஆனால்முழுக்கமுழுக்க வைரக்கல்லுகள் பதிச்ச திருவடியைப்பத்திப்பேசத்தான் இங்க உன்னை கூட்டி வந்திருக்கோம்..” என்று கிண்டலாய் சொல்லி சிரித்தான்.

அரைகுறை வெளிச்சம் பரவி இருந்த இடத்தில் அப்போதுதான் மயக்க நிலையிலிருந்து முற்றிலும் மீண்டிருந்த முகுந்தன் குரலுக்குரியவனை நிமிர்ந்து பார்த்தான். சட்டென முகம் வெளிறினான்.

”நீ நீங்க...ஒருவாரமும் ஊர்ல எங்காத்துலதங்கி கோயிலையும் ஊரையும் சுத்திப்பார்க்க வந்த கோவிந்தாச்சாரி மாமாதானே?” என்றான் வியப்புடன்.

குமரவேல் ஹஹ் என் சிரித்துவிட்டு,” அந்தப்பேரை வச்சிட்டு நெத்தில நாமம் போட்டுக்கிட்டு வந்ததால்தான் உங்கவீட்டுல என்னை உள்ள விட்டீங்க..” என்றான் இடக்காக.

“அப்படில்லாம் இல்ல...யாராயிருந்தாலும் உதவின்னு தேடிவந்தா இரக்கப்படணும்னு என் அப்பா சொல்லுவார் அதைத்தான் செய்வார். கரூர் பக்கத்துல அமராவதி நதி புரண்டோடற அனந்தரங்கபுரம் கிராமம் ரொம்ப அழகா இருக்கு கோயில் அழகா இருக்கு மடியா சந்தியாவந்தனம் ஆராதனை பண்ணிண்டு தங்க சத்திரம் சாவடி ஹோட்டல்வேண்டாம்.நல்லதா ஓரிடம் வேணும்ன்னு நீங்க கேட்டுண்டதும் என் அப்பாதான் உங்கள எங்காத்துலயே தங்கசொன்னார்..நீங்களும் தினம் மடியா குளிச்சி பூஜைபண்ணிண்டு பாசுரம் சொல்லிண்டு பாட்டிகூட பேசிண்டு சகஜமா இருந்தங்களே..இன்னிக்கு விடிகார்த்தால குளத்துலகுளிக்க ஆசைப்பட்டு என்னை எழுப்பி கூட வரச்சொன்னேள் நானும் கூட வந்தேன்..ஆனா இங்க நான் எப்படி வந்தேன்? நீங்க என்ன பாண்ட் போட்டுண்டு தலைமயிரை பின்னாடி ஹிப்பியாட்டம் பரப்பிண்டு வாய்ல சிகரெட்டும் கையுமா நிக்கறேள்? நம்பவே முடியலயே?” என்றான் வெகுளியாக.

“பாஸ்! பையனுக்கு இருபத்திஆறுவயசு, ஒரு கைகுழந்தையும் இருக்குதுன்னு நீங்க சொல்றீங்க... இவனே மொழுமொழுக்குனு ஆப்பிளுக்கு கைகால்முளைச்ச மாதிரி பால்வடியும் முகமா இருக்கான்?இவன்கிட்ட விஷயத்தை கறக்கமுடியுமா?”குமரவேலின்காதில் கதிர் கிசுகிசுத்தான்.

“முடியணும்...என் கனவு அந்த வைரத்திருவடி.சாமியோட காலுல மாட்டற அந்த சின்ன ஒருஜோடி செருப்புகள்,பலகோடி பெறுமான வைரக்கல்லுகள் இருக்குது. சிலைக்கடத்தல் இளம்பெண்களைக்கடத்தல் போதை மருந்து கடத்தல் எல்லாம் அலுத்துடிச்சி...வருஷம் ஒருவாட்டி கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்னிக்குத்தான் கோயில் பாதாள ரூம்லேவச்சதை எடுத்து சாமிக்கு அணிவிச்சி மறுநாள் திருப்ப வச்சிடறாங்கன்னு கேள்விப்பட்ட நாலுவருஷமா பக்கா ப்ளான் போட்டுக்கிட்டுவரேன்.. இந்தக்குமரவேல், கோவிந்தாச்சாரியாய் ஒருவாரமும் அனந்தரங்கபுரம் கிராமத்துல இவன் வீட்டுல தங்கினதுக்குக்காரணம் இதான். எஸ்பி கோகுலுக்கு வாக்கரிசியா லம்ப்ப்சம் தரேன்னதும் அவனும் இதுக்கு ஒத்துழைக்கிறதா சொன்னதும்தான் திட்டம் நிறைவேறிடும்னு நம்பிக்கையே வந்திச்சி. நான் சொன்னபடி காலைல நீ காரோட குளம்பக்கம்வரவும்,இவனையும் கடத்த முடிஞ்சிச்சி..”

“என்ன.. குளத்துத்துல குளிக்கப்போலாம்னு சொல்லி என்னைக்கடத்திருக்கீங்களா? இதுவிஷயம் அப்பாக்குதெரியுமா அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னேளா?”

“ஆமா உன் அப்பா அம்மா பொண்டாட்டி கைப்புள்ள ஏன் உன்வீட்லகிடக்கே ஒரு தொண்டுக்கிளம் அதுகிட்டயும் சொல்லிட்டுக்கடத்தியாந்தோம்... போடாஆஆங்... ” என்றுகுமரவேல் சீறிவிட்டு ”ஆனாலும் முகுந்தா உன்பாட்டி யதுகிரிகிளவிகிட்ட பாசுரம் அதுஇதுன்னு நான் கஷ்டப்பட்டு நெட்ரு செஞ்சதை பாடிக்காட்டினதுல கிளவிக்கு என்பேர்ல பாசம் பொத்திக்கிச்சி.
“கோவிந்து ! காச்சல்ல செத்துப்போன என் மூணாம்பிள்ளை திருமலையாட்டம் இருக்கடா’ன்னு நெத்திமுகந்து நெருங்கிவர ஆரம்பிச்சிதுல இந்த வைரத்திருவடிபத்தி சின்ன ஹிண்ட் கொடுத்திச்சி ...அதை கோயில் பாதாள அறைல வச்சிருக்குது அதை எடுக்க நீயும் உன் அப்பனும் ஒரு காவலதிகாரியும் மட்டும் நெய்ப்பந்தம் எடுத்திட்டுப்ப்போவிங்கன்னு சொல்ல ஆரம்பிச்சதும் இப்படி பேச்சு கொடுத்தேனே....”

************************************************************8

பாட்டி அந்த வைரத்திருவடியை எங்கே பத்திரப்படுத்துவா?

லாக்கர் மாதிரிடா கோவிந்து், அதுலதான் வைப்பா.. அதுக்கென்னவோ கோட்வர்டு கீட்வார்டுன்னு இருக்குமாமே என்னவொ போ நான் என்ன கண்டேன்? முகுந்தன் தாத்தா, வரது இதப்பத்தி விவரம் சொல்லமாட்டா..கோயில் சொத்தோல்லியோ பரமரகசியமா இருக்கணும், அதான்...பரம்பரையா கோயிலுக்கு முறை எங்க குடும்பம் தான் செய்றது எங்காத்துக்காரர் போனதும் மூத்தவன் வரது கோயில்ல முறைக்குப்போறான்... முகுந்த்து கூட படிச்சிட்டு வெளியூர் வெளிநாடுனு வேலைக்கெல்லாம் போகாம அப்பாக்கு உதவியா கோயில் கைங்கர்ய வேலையே போதும்னு இருக்கான்.

வைரத்திருவடி!வைரப்பாதுகைதானே! இதுக்கு ஒருநாள் திருவிழா.. அதுக்கு இந்த சின்னகிராமத்துக்கு லட்சம்லட்சமா ஜனம் வராபோல்ருக்கே

ஆமாண்டா கோவிந்து..மத்தநாள்ள எண்ணி ஏழுபேர் வர கோயிலுக்கு வைரத்திருவடிசேவை அன்னிக்கு கொள்ளைஜனம் வந்துடும்.மந்திரிகள் வருவா சினிமாக்காரா வருவா டிவிக்காரா வருவா போன விச என்ன பேட்டி கண்டு குலம்தரும் பாசுரம் பாடசொல்லி சங்கரா டிவிலகூட போட்டாளே நீ பாத்தியோ? ஊரெல்லாம் அன்னதானம் நடக்கும் எங்காத்துல படிப்படியா சாதம் பண்ணிண்டே இருப்போம் வரவாளுக்கு போட்டுண்டே இருப்போம்...

சரி பாட்டி அந்த லாக்கரைத் திறக்கஉங்கபிள்ளை வரது, முகுந்தன் ரெண்டுபேரும் எஸ்பி கூட போவாளாஅவாளுக்கு லாக்கர்திறக்கிற விஷயம்லாம் தெரியும் இல்லையா பாட்டி?

பேஷா தெரியும்.. ஆனா போலீசுக்கு தெரியாது கூடப்போற எஸ்பி செத்த தள்ளிதான் நிப்பானாம் நடுல படுதாவேற போட்டுடுவா..முகுந்து லாக்கரைத்திறந்து பெருமாள் திருவடிகளை பட்டுத்துணியை கைல சுத்திண்டு கண்ணாலபாக்காம உத்தேசமா கைல எடுப்பான்.அதை கண்ணைக்கட்டிண்டு தலைல வரது வச்சிண்ட்ருக்கிற ஒருதங்கத்தாம்பாளத்துல் சேர்ப்பான். வரது அப்படியே நடந்து வந்து திருவடிகளை ஆழ்வார் சந்நிதிகளில் வச்சிட்டு சேவிப்பா. அப்புறம்தான் பெருமாள் திருவடிகளில் பூட்டுவா... எல்லாம் வரது ஒருநாள் பிரியாகிட்ட அவ ஆசையாகேட்டப்போ தயங்கிதயங்கி சொன்னதை நானும் கேட்டதுல பாதி காதுல விழுந்தது மீதி கேக்கல வயசாயித்தே..

லாக்கர் ஓபன் செய்றதெல்லாம் எப்படீன்னு சொல்லலையாக்கும்?

அதெல்லாம் சொல்லப்படாது.வரதுக்கும் முகுந்துக்கும் மட்டும் தெரியணும்..தெரிஞ்சிதான் நாம

என்னபண்ணப்போறோம் சொல்லு?காடுவாவாங்கறது வீடு போபோங்கறது..

்************************************************


“அம்பி.. இவ்வளோ விவரம் நானும் உன்பாட்டியும் பேசிட்டோம்..”

குமரவேல் எகத்தாளமாய் இப்படிச்சொல்லவும் முகுந்த்,கலவரத்துடன்,
.”ஐயோ இவ்ளோவிவரம் பாட்டிகிட்டேருந்து வாங்கிட்டேளா?” என்று அலறினான்.


”அதுமட்டும்போதும்னா உன்னை ஏன் இங்க கடத்திவந்திருக்கேன் ?பாட்டி சொல்லாததையும் சொல்லு..அந்த வைரதிருவடி வச்சிருக்கிற லாக்கரைத்திறக்க அங்க என்ன செய்யணும்? கோட்வேர்டு என்ன?”

குமரவேல் மிரட்டலாய் கேட்டான்.

”தெரியாது”

”உன்பொண்டாட்டி கைகுழந்தையை கொன்னுடுவேன் சொல்லலேன்னா..”

”பரவால்ல”

”உன் ஆத்தா அந்தக்கிளவியை க்ளோஸ் பண்ணிடுவேன்”

“பண்ணிக்கோ”

“உன் அப்பாவை கண்டதுண்டமா வெட்டி உங்க ஊர் கோயில்குளத்துலயே வீசிடுவேன்”

ஐயோ அப்பாவைஒண்ணும்செய்யாதீங்கோ.. சொல்லிடறேன்..சொல்லிடறேன்..

”பார்ரா கதிரு ... தசரதபுத்திரனாயிருக்கான்! சொல்லு சொல்லு..”

வேறு வழியின்றி முகுந்தன்விவரமாக குறியீடுகளை சொல்லிவிட்டான்.அதைகுமரவேல் அப்படியே பேப்பரில் குறித்துவைத்துக்கொண்டான் .

பிறகு செல்போனில் ,”யாரு வரதாச்சாரியார் சுவாமிகளா? தேவரீர்கிட்ட சொல்லாம உங்கபுள்ளையாண்டானை அழைச்சிண்டுவரவேண்டியதாப்போச்சு காலம்பற கொளத்ல தீர்த்தமாடறப்போ எனக்கு சுளீர்னு ஹிருதயத்ல ஒரு வலி வந்து உடனே பக்கத்ல இருந்த முகுந்து தான் என்னை டவுன் ஆஸ்பித்ரிக்குக்கூட்டிண்டுவந்துருக்கான்..ஒண்ணுமில்ல பயப்பட ஏதுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். செக் அப் முடிச்சிண்டு சாயந்திரத்துக்குள்ள அங்க வந்துடுவோம்.முகுந்த் தங்கமான பையன்.. லைன்க்ளியரா இல்ல என்ன கேட்டீங்க? எந்த ஆஸ்பித்ரியா அது அது...
வ .. வந்து...அடட்டா ஒண்ணும் கேக்கல சரி வச்சிட்றேன் அதான் நேர்லவரப்போறேனே.”

என்று பேசிமுடித்துவிட்டு முகுந்திடம்,”டேய்...ஊர்வந்து வாயைதிறக்கக்கூடாது. நாளைராத்திரி பாதாள ரூம்போனதும் உன் அப்பன் கண் கட்டி இருக்கும் நீதான் வழக்கம்போல லாக்கரைத்திறந்து அந்ததிருவடியை எடுக்கப்போறேன்னு உங்கப்பா நினைச்சிட்டிருக்க நீ கைகட்டி நிக்கணும். கூடவர்ர எஸ்பிகோகுல்கிட்ட நான் நாளைக்காலையில் நான் கொடுக்கப்போகிற இந்த உன் குறியீடுகளை வச்சி அவன் திறந்து திருவடிகளை எடுத்துப்பைலபோட்டுக்குவான்..வெறும் தாம்பாளத்தோட வெளில வந்து ஐய்யெயோ யாரோ லாக்கரைத்திறந்துகடத்திட்டான்னு நீ ஒப்பாரிவைக்கணும் தெரிஞ்சுதா? ஏதாவது குயுக்தி பண்ணி வைரத்திருவடியை எஸ்பிகிட்ட சேரவிடாம சொதப்பினியான்னா உன் அப்பனை கோயிலுக்குள்ளயே காவு வாங்கிடுவேன் ஜாக்கிரத”

“ஐய்யெய்யோ மாட்டேன் நீங்க சொன்னபடி செய்றேன் அப்பாவை ஒண்ணும் பண்ணாதீங்கோ ப்ளீஸ்..”

அனந்தரங்கபுரத்தில் வரது தன் வீட்டில் அனைவரையும் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.”ஒண்ணுமில்ல வந்துடறாராம் கோவிந்தாச்சாரிக்கு சீரியசா இல்லையாம்..முகுந்த சரியான சமயத்ல அவரைகொண்டு சேர்த்ருக்கான் கொளத்துல கூட அவன் மட்டும் இல்லேன்னா என்னாறது?”

”அப்பனே அனந்த ரங்கநாதா! கோவிந்துக்காக உன் கோயில்ல வந்து விழுந்து அங்கப்ரதட்சணம் பண்றேன் ஆத்துக்குவந்தவா நல்லபடியா திரும்பிப்போகணும்” பாட்டி அழுதேவிட்டாள்.

வாசலில் சத்தம் கேட்டது.

”யாரு கோவிந்துவா பாருடி கனகா ?”

காரிலிருந்து ப்ரியாவின் அண்ணன் சாரங்கன் வந்திறங்கினான்.

"சாரங்கா.. வாடா வா எட்டுமைல்ல கரூர்லதான் இருக்கேன்னு பேரு ...உற்சவம்னாத்தான் அக்கா ஊருக்கு வரே நீ?இளைச்சிப்போயிட்டியேடாப்பா..கைல என்ன புது கெடிகாரமா? மூஞ்சில கல்யாணக்களைவந்துடுத்து...உனக்கென்ன சித்த கருப்பா இருந்தாலும் ராஜாமாதிரி இருக்கே...ஜோரா பொண்ணு கிடைப்பா..”

“போங்க பாட்டி உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்..சரி எங்கே மிஸஸ்முகுந்த?”

”என்ன அ்திசியமா உன் தங்கயோட முழுப்பேரையும் சொல்லாம இப்படிக் கேக்கறே?பிரியா இருந்தா இத்தன்னாழி உன்னை வாசலுக்கே வரவேற்க வந்திருப்பாளே ..ரத்ததானமுகாம் ஒண்ணு உற்சவ டைம் ஏற்பாடு பண்ணூவாளோல்லியோ அதுசம்பந்தமா டவுனுக்குப்போய்ருக்கா.. சரி உன்னை திண்ணைலயே நிக்கவச்சி பேசறேன் உள்ளபோய் கனகா கையால்கள்ளிச்சொட்டா காபி வாங்கி சாப்பிடு..பிரயாணக்களைப்புபோய்டும்”

சாரங்கன் உள்ளேபோனவன் சுற்றுமுற்றும்பார்த்துவிட்டு ப்ரியாவின் அறைக்குள் நுழைந்தான்.
கதவை உள்ளே தாளிட்டுக்கொண்டான்.அங்கிருந்த மரமேஜைமீதிருந்த அந்த இரண்டு தாள்களையும் நோட்டமிட்டான். ஒன்றில்
"Mr.கோகுல்,
S W H2 6F இது தான் குறியீடு.. கவனம்
-விஷ்ணு"
'
என்றும்
இன்னொன்றில்
“"sir, கோகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..கவலை வேண்டாம்-
-விஷ்ணு"
என்றும் இருந்தன.அப்போது அவனது செல்போன் பாக்கெட்டில் அதிர்வலைகளை அனுப்ப எடுத்துக்கையில் வைத்துக்கொண்டான்.திரையில் விஷ்ணு இன்ஃபார்மர் என்று தெரிந்தது.
சட்டென் ஆர்வமுடன்,”சொல்லு,விஷ்ணுப்ரியா! நான் சார்(ரங்கன்) தான்! இங்க தனியா உன் ரூம்ல இருக்கேன்.. நீ போன்ல விவரம் சொன்னபடி அந்த ரண்டு ப்ரிண்ட் அவுட் பேப்பரையும் உன் ரூம்ல பார்த்துட்டேன்.ஆமா , அந்தகோவிந்தாச்சாரி பத்தி நீ எப்படி கோகுல்கிட்ட விஷயத்தை கறந்தே ?”

” உன் தங்கை உன்னோட ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சீஸ் ல இன்ஃபார்மரா சேர்ந்ததுக்கு இப்படி வீட்டிலேயே உளவு பார்த்து துப்புதுலக்குவேன்னு கனவிலும் நினைக்கல...ஆமா சார்(ரங்கா)...அந்த கோவிந்தாச்சாரி முதல்ல ஆத்துல நுழையறப்போவே எனக்கு லேசா டவுட்தான்...ஒருநாள் அந்தாளு குளத்துப்படிக்கட்டுல எஸ்பிகோகுல்கூட கிசுகிசுன்னு பேசிட்டு நின்னதையும் தற்செயலாபார்த்தேன்..அப்போ எஸ்பி மேலயும் டவுட் வந்தது. ஆனா பாட்டியும் என்மாமனாரும் அவரைப் பு்கழ்ந்துதள்ளினாங்க..நானும் கரூர்ல உன் ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சீஸல இப்படி இன்ஃபார்மரா பார்ட் டைம்ல ஒர்க்பண்றதை முகுந்த் தவிர யார்கிட்டயும் சொல்லல...இன்னிக்குக்கார்த்தால குளத்துக்குப்போன முகுந்த் வரவே இல்லன்னதும் கொஞ்சம் திகிலானது,, ஆனா நெஞ்சுவலின்னு அந்த ஆளே போன்லபேசினதும் கட் செய்ததும் நாங்க அந்த நம்பர்லபேச ட்ரை செய்தப்போ கிடைக்காமல்போனதும் என் டவுட்டை அதிகப்படுத்தினது. கோவிந்தாச்சாரி எதுக்காக நம் ஊருக்கு உற்சவ நேரமா வந்திருக்கான்னும் என்னால் யூகிக்கமுடிஞ்சது. அதான் உன்கிட்ட மட்டும் எஸ்பிகோகுலைப்பார்த்து லாக்கர் குறியீடைக்கொடுத்திட்டு முகுந்தைக்காப்பாத்தப்போறேன்னு அவசரமா மெயில் செய்தேன்.நீ நிஜமாவே நான் அப்படிநான் கொடுத்திடப்போறேன்னு நினைப்பாயோன்னுதான் உன்னை வீட்டுக்கும் வரச்சொல்லியிருந்தேன்.கோகுல்கிட்ட கொடுக்கப்போற ப்ரிண்ட் அவுட் தாளில் ஒண்ணு உனக்கும் வைச்சேன்.
டவுன்போயி எஸ்பியை வீட்டில் பார்த்தேன்.

முதல்ல எஸ்பிகோகுல் போலீஸ் அதிகாரியாய் பந்தாவாய் என்னை வீட்டுக்கெல்லாம் வந்ததுக்கு அதட்டினான்.அப்புறமா கோவிந்தாச்சாரி அனுப்பினதா சொல்லி ப்ரிண்ட் அவுட் செய்த அந்த தகவல் தாளைக்கையில்கொடுத்ததும் கொஞ்சம் அடங்கினான்.நம்பினான். நானும் திட்டமிட்டபடி நடிக்க ஆரம்பிச்சேன்.

” கோவிந்தாச்சாரி போனில்,’ஏய்ப்ரியா உன் புருஷன் என்ன அடிச்சாலும் அந்த லாக்கர் கோட்வர்ட்பத்தி வாயத்திறக்கல ...உனக்கு உன் மாமனார் எல்லாம் சொல்லி இருப்பதா ஒருநா பாட்டி என்கிட்ட சொல்லிட்டா..மரியாதையா அதை நீ கோகுல்கிட்ட தெரிவிக்கணும் அதை அடுத்த அரைமணில உன்கிட்ட நான் கன்ஃபார்ம் செஞ்சிக்குவேன்..சிம்கார்டு மாத்திக்கிட்டே இருப்பேன் அதனால நீ பேச முயற்சிக்கவேண்டாம்..என்னைபோலீஸ்ல காட்டிக்கொடுக்க நினைக்காதே.மீறினால் உன் புருஷனை இங்கயே கொன்னு புதைச்சிடுவேன்‘னார்..எனக்கு கோயில் சொத்து எப்படியோ போகட்டும் என் புருஷன் தான்முக்கியம்”னு கதறி அந்த தாளைக்கொடுத்தேன்பாரு அந்த எஸ்பி மூஞ்சில ஆயிரம்வாட்ஸ்பல்புதான்!”

“ஓ அப்புறம் என்னாச்சு?”

“ அப்புறன் என்ன..’வெரிகுட்..நல்லவேளை செல்போன்ல நீ இதைப்பேசாமல் வீடுதேடிவந்தியே...ஆமா இதென்ன விஷ்ணுன்னு எழுதி இருக்கே?” அப்படீன்னான் கோகுல்.

“என்முழுப்பேரு விஷ்ணுப்ரியா..டவுட்டுன்னா பாருங்க ஐடி கார்டு”

“ஒகே சரிம்மா விஷ்ணு ப்ரியா..தட்ஸ்குட்..நானும் அந்த குமரவேலும் தவறிப்போய்க்கூட எதையும் போனில் பேசிக்கமாட்டோம்..ஏன்னா இப்போல்லாம் ஈசியா மாட்டவைக்கிறதே போன் உரையாடல்கள்தான்..நீ போம்மா...முகுந்த் உயிருக்கு நான் க்யாரண்டி”ன்னான் .

’முதல்ல உன் உயிரைக்காப்பாத்திக்கோடா முட்டாள்.உன் வண்டவாளத்தை டிஜிபி கிட்ட தண்டவாளத்துல ஏத்திட்டுதான் இங்க வந்திருக்கேன் .....’ன்னு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டேன் ..

அந்த குமரவேல்,கண்டிப்பா முகுந்தை பயமுறுத்தி லாக்கர் திறக்கும் கோட்வேர்ட்ஸ்களை சொல்லவச்சிருக்கலாம். அதனால்தான் அவன் முகுந்தோட வீட்டுக்குவரதா தைரியமா சொல்றான். ஆனா அவனுக்குத்தெரியாது கோயில் உற்சவத்துக்கு வந்திருக்கிறகூட்டம் மாதிரி வீட்டில் டிஜிபி செல்வநாதன் அனுப்பின ஸ்பெஷல்போலீஸ் மஃப்டில கொஞ்சநேரத்துல அங்க வந்துடும்,.அவனை வீட்டில் நுழைஞ்சதும் சுத்திவளைச்சிப்பிடிச்சிடும்னு.குமரவேல் நீண்டநாளா
பலகுற்றங்கள் செய்து சட்டத்தின் பிடிக்கு அகப்படாமல் தப்பிக்கிறவன் என்பதை டிஜிபி சொன்னதும் அவன் ஒருவாரமா வீட்டில் ஃப்ரீயா வளைய வந்ததை நினச்சி ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டேன் சார்! எனி வே..எல்லாம் முடிவுக்குவரப்போ்றது”

“க்ரேட் விஷ்ணு(ப்ரியா)!ரியலி ஐயாம் ப்ரவுட் ஆஃப் யூ!” என்று பேசிமுடித்த சாரங்கனை பாட்டி கூடத்திலிருந்து அழைத்தாள்.

” சாரங்கா..உற்சவத்துக்கு திடீர்னு பெரிய கூட்டமா முப்பதுநாப்பதுபேர் கூடத்துல வந்திருக்காடாப்பா ,, பெரிய மனுஷாளா இருப்பா போல்ருக்கு..இங்கிலீஷ்ல பேசிக்கிறா... எனக்கும்கனகாக்கும் என்ன இங்கிலீஷ் தெரியும்?பிரியாவும் இல்ல.. நீயாவதுவந்து அவாகூட பேசிண்டு இரேன் ..”
**************************************************************************************
.

35 comments:

 1. ஸ்ரீரங்கத்து வாசம் அப்படியே இருக்கு! நல்ல ட்விஸ்ட்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. asksukumar said...
  ஸ்ரீரங்கத்து வாசம் அப்படியே இருக்கு! நல்ல ட்விஸ்ட்! வாழ்த்துக்கள்

  10:52 PM>>>>>>


  வாங்க சுகுமார்... ஸ்ரீரங்க வாசமா இருக்கு? தெரியல என்னை அறியாம வந்திருக்கும். வாழ்த்துக்கும் முத்ல்ல வாசித்து பின்னூட்டம் இட்டதுக்க்கும் நன்றி.

  ReplyDelete
 3. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு ........

  ReplyDelete
 4. கதை அருமை. கதையில் இறுதிப் பகுதியில் சார்(ரங்கன்) மற்றும் விஷ்னு உரையாடல் மட்டும் சிறிது சுற்றி வளைத்த மாதிரி இருந்தது.

  ReplyDelete
 5. //அம்பாளடியாள் said...
  என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு ........

  11:52 PM

  ...நன்றி அம்பாளடியாள்(அழகான்பேர்)
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. //அமர பாரதி said...
  கதை அருமை. கதையில் இறுதிப் பகுதியில் சார்(ரங்கன்) மற்றும் விஷ்னு உரையாடல் மட்டும் சிறிது சுற்றி வளைத்த மாதிரி இருந்தது.

  12:01 AM

  .//
  வாருங்கள் அமரபாரதி...கதை அருமை
  என்றதற்குநன்றி..ஆமாம் சார்(ரங்கன்) விஷ்ணு உரையாடலை வேறுவழியில்லாமல் நீளவைக்கவேண்டியதாயிற்று. நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

  ReplyDelete
 7. அருமையாக கதை சொல்லிப் போகிறீர்கள்
  எழுத்து நடை அற்புதம்
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 8. Ramani said...
  அருமையாக கதை சொல்லிப் போகிறீர்கள்
  எழுத்து நடை அற்புதம்
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்
  த.ம 1

  5:25 AM

  >>>>>>>மிக்க நன்றி ரமணி தங்களின் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும்.

  ReplyDelete
 9. இயல்பான நடையில்
  அருமையா கதை
  சொல்லியிருகீங்க சகோதரி.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அசத்தலான நடையில் விறுவிறுப்பா போகுது கதை.

  வெற்றி பெற வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 11. நீங்கள் பிராமின் என்பதை எழுத்து நடை உணர்த்துகிறது..

  >>இவனே மொழுமொழுக்குனு ஆப்பிளுக்கு கைகால்முளைச்ச மாதிரி பால்வடியும் முகமா இருக்கான்

  ரசித்த வர்ணனை

  ReplyDelete
 12. பல இடங்களீல் கிளவி = கிழவி என வரனும்

  ReplyDelete
 13. 1500 வார்த்தைகளை தாண்டிடுச்சுன்னு நினைக்கறேன்.. க்ளைமாக்ஸ் கான்வெர்சேசனில் எடிட் பண்ணவும்..

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. அடடா! ஒரே சமயத்துல பெருமாளும் வரார்,யதுகிரி பாட்டியும் வரா இதுக்கு நடுல ஒரு த்ரில்லர் கதையும் வருது. கலல்லறேள் போங்கோ!! :)

  ReplyDelete
 15. சரியான சவால் தான்.
  நன்றாகக் கவர்ந்திழுக்கும் விதத்தில்
  எழுதி இருக்கிறீர்கள்.
  வெற்றீக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மகேந்திரன் said...
  இயல்பான நடையில்
  அருமையா கதை
  சொல்லியிருகீங்க சகோதரி.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  7:49 AM>>>>

  வாழ்த்துகளுக்கு நன்றி மகி.

  ReplyDelete
 17. //
  அமைதிச்சாரல் said...
  அசத்தலான நடையில் விறுவிறுப்பா போகுது கதை.

  வெற்றி பெற வாழ்த்துகள் :-)

  8:18 AM

  /// நன்றி அமைதிச்சாரல்...சும்மா ஒரு முயற்சியாய் எழுதறதுதான் வெற்றி தோல்வியைவிட சிந்திக்க ஒரு வாய்ப்பு ..நன்றி வாழ்த்துக்கு .

  ReplyDelete
 18. //சி.பி.செந்தில்குமார் said...
  நீங்கள் பிராமின் என்பதை எழுத்து நடை உணர்த்துகிறது..

  >>இவனே மொழுமொழுக்குனு ஆப்பிளுக்கு கைகால்முளைச்ச மாதிரி பால்வடியும் முகமா இருக்கான்

  ரசித்த வர்ணனை

  /////
  வாஙக் செந்தில்...பிராமின் நடை சில இடங்களுக்குத்தேவை என்பதால் சூழ்நிலை கதைக்கு அப்படி உள்ளதால் எழுதினேன்..நன்றி கருத்துக்கு

  ReplyDelete
 19. //சி.பி.செந்தில்குமார் said...
  1500 வார்த்தைகளை தாண்டிடுச்சுன்னு நினைக்கறேன்.. க்ளைமாக்ஸ் கான்வெர்சேசனில் எடிட் பண்ணவும்..

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  9:20 AM

  //<<<,சரி பண்ணிடறேன் நன்றி செந்தில்குமார்

  ReplyDelete
 20. சசிகுமார் said...
  Story superb

  9:24 AM

  >>>>>>அப்படியா சசி நன்றி மிக.

  ReplyDelete
 21. ////தக்குடு said...
  அடடா! ஒரே சமயத்துல பெருமாளும் வரார்,யதுகிரி பாட்டியும் வரா இதுக்கு நடுல ஒரு த்ரில்லர் கதையும் வருது. கலல்லறேள் போங்கோ!! :)

  11:15 AM

  /// வாப்பா தக்குடு சும்மா கிண்டல்தானே?:):)

  ReplyDelete
 22. //வல்லிசிம்ஹன் said...
  சரியான சவால் தான்.
  நன்றாகக் கவர்ந்திழுக்கும் விதத்தில்
  எழுதி இருக்கிறீர்கள்.
  வெற்றீக்கு வாழ்த்துக்கள்.

  3:29 PM

  ////வாழ்த்துக்கு நன்றி வல்லிமா.

  ReplyDelete
 23. Anonymous6:59 PM

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 25. சிறப்பான நடையும்,அழகான வர்ணணைகளும் சிற்ப்புச் சேர்க்கிறது. வெற்றி பெற் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. @ரெவரி, இராஜேஸ்வரி, சே.குமார்...மூவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. கதை நன்றாக இருக்கிறது
  விஷ்ணுபிரியா=விஷ்ணு புதிய சிந்தனை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. அருமையான கரு..நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  எனது கதை இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

  ReplyDelete
 29. //Madhavan Srinivasagopalan said...
  அருமையான கரு..நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  எனது கதை இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

  5:22 PM

  ////வரேன் மாதவன் உஙக் வருகைக்குநன்றி

  ReplyDelete
 30. கடைசி வரை செம விறுவிறுப்பு..
  பரிசு கிடச்சதும் பார்ட்டி உண்டில்ல..

  ReplyDelete
 31. கதை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

  http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

  ReplyDelete
 32. // ரிஷபன் said...
  கடைசி வரை செம விறுவிறுப்பு..
  பரிசு கிடச்சதும் பார்ட்டி உண்டில்ல..

  6:37 PM

  ///>>>>கண்டிப்பா உண்டு பரிசு கிடக்கலேன்னாலும்:) நன்றி ரி

  ReplyDelete
 33. வெண் புரவி said...
  கதை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

  http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

  10:05 PM

  >>>>..நன்றி வெண்புரவி இதோவரேன் அங்க

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.