Social Icons

Pages

Friday, October 28, 2011

வைரத்தின் நிழல்கள்

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்தினார்கள் ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டிக்கு ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும் என்றும்சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்குவார் என்று அறிவித்திருந்தார்கள்.

பரிசுபெற்ற சில கவிதைகளில் என்னுடையதும் தேர்வாகிவிட்டது!


கவிதையை முன்பு வலையில் இட்டிருந்தேன் இங்கே மறுபடி அதே கவிதை நிழல்!

பூமியை வாழவிடு!
*********************************


புன்னகையை முற்றிலும்
இழக்குமுன்னமே
எனக்குப் புதை குழி
தோண்டுகிறீர்கள்.

புகையிலைப் படுக்கையை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டீர்கள்!

என் கொடையாய்
ஆறுகளைத்தந்தேன்
அழகுமிகு சோலைகளை
அவனியில் உருவாக்கினேன்
பூலோக சுவர்க்கமாய்
பூமியை மாற்றினேன்
கனிகளை காய்களை
பயிர்களை வளர்த்தேன்
வனங்களை அமைத்தேன்
விலங்குஇனங்களுக்கு
அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்
இங்குஎன் குழந்தைகளான
ஆறுகளின்ஆராவரசத்தம் இருந்தன
பறவைகள் ஓயாத ஓசையுடன்
இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.

வரப்பின் மீது அமர்ந்து
வாய்க்கு ருசியாய்
அயிரமீன்குழம்புடன்
வெங்காயம் சேர்த்த
வெறும்நீர்ச்சோறு உண்ட
வெள்ளந்திமக்களும்
வயலோடு உறவாடினர்

நாட்டுப்பற்றுகொண்ட
தியாகிகளையும்
தலைவர்களையும்
புலவர்களையும்
புரவலர்களையும்
நல்லோர்கள் பலரையும்
நயமுடன் கண்ட அன்னை நான்.

இன்று..

தர்மம் தலைகுனிகிறது
ஊழல் உற்சாக ஊற்றாய
ததும்பி வழிகிறது.
அஹிம்சை அழிந்து
அன்பும் மனிதநேயமும்
அற்பமாகிவிட்டது.
தீவிரவாதிகளுக்குப்
புகலிடமாய் இந்
பூமித்தாய் ஆகலாமா?.

என்னைக் கண்டபடி
கூறு போட்டு
அடுக்குமாடிக் கட்டிடங்களை
அண்ணாந்து பார்க்குமளவுக்குக்
கட்டிவிட்டீர்கள்.

என்கோபத்தை
சின்னக் குலுக்கலில்
சிறுபுருவ நெரிப்பில்
நியாயமாய் தெரிவித்தேன்
புரிந்து கொள்ளவில்லை நீங்கள்
அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றீரோ?
இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்
தேடுகிறீர்களா என்ன?
அதைத்தான்
கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி விட்டீர்களே!

தாயென்கிறீர்கள் என்னை
பேணிக்காக்கத்தான்
மறந்துவிட்டீர் மைந்தர்களே!


ஆறுகளை நீரற்ற சகதி
சேறுகளாக்கிவிட்டீர்,
விலங்கினங்களைத்துரத்தி
வனத்தினில்புகுந்து
வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப
மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.


விட்டுவிடுதலையாகிப்பறந்த
சிட்டுக்குருவிகள் எல்லாம்
விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்
கண்கட்டுவித்தைபோல
காணாமல்போய்விட்டனவே!


ஓசோன் ஓட்டை ஆனதனால்
உலகின் வெப்பமும் கூடியதே!
பருவத்தில்பெய்தமழையை
வருமோஇனி மழை
என ஏங்கி நின்று
வான்பார்த்து
வருத்தத்தில்
வாடி நிற்கிறீர்கள்!


மேனியெங்கும் பாளம்பாளமாய்
வெடிப்புவந்து வேதனையுற்று
மூச்சுவிடவும் முடியாமல்
முனகும் இந்த பூமித்தாயினை
தவிக்கவிடும் மானிடரே!

எந்தையும்தாயும்
மகிழ்ந்துகுலாவி
இருந்த நாடென்று இதனை
உமது சந்ததியினருக்குக்
கைகாட்டிடவும்
பொய்யாய்க்கனவாய்
பழங்கதையாய்
பூமித்தாயின் வரலாறு
போகாதிருக்கவும்
புரிந்துகொண்டு வாழுங்கள்.

வெறும் வேஷமிட்டுவாழும்
வாழ்க்கையினின்றும்
வெளியே வாருங்கள்!

வேருக்குத்தான் நீர் தேவை எனும்
விவேகச்சிந்தனைஉங்களுக்கு
விரைவில்தானே வந்துவிட்டால்
பூமித்தாயாம் நானும்தான்
’பூமியைவாழவிடு’ என்று
பூகம்பமுழக்கமிடமாட்டேன்
பூப்போலே பூமண்டலத்தை
புரிந்து என்றும் காத்திடுவேன்!
********************************************************************

20 comments:

 1. அருமையான படைப்பு
  மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தேன்
  தங்களால் பதிவுலகிற்கும் பெருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. // Ramani said...
  அருமையான படைப்பு
  மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தேன்
  தங்களால் பதிவுலகிற்கும் பெருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ///

  இடுகை இட்டதும் முதலில் மணியான கருத்துடன் ரமணி! ஆஹா நன்றி மிக.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்

  தங்களின் எழுத்துக்குக் கிடைத்த இன்னொரு
  தங்க மகுடம்

  ReplyDelete
 4. திகழ் said...
  வாழ்த்துகள்

  தங்களின் எழுத்துக்குக் கிடைத்த இன்னொரு
  தங்க மகுடம்

  8:06 PM

  ...நன்றி திகழ்....எவ்வளவு அழகாக மனம் திறந்துபாராட்டுகிறீர்கள்! இதைவிட தங்கமகுடம் ஒன்றும் பெரிதில்லை

  ReplyDelete
 5. மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி,
  ஒளிமிக்க வரிகளால்
  நிதர்சனத்தை யதார்த்தமாய்
  சொல்லியிருக்கிறீர்கள்.
  வைர வரிகளுக்கு
  கவிப்பேரரசு வைரமுத்துவால்
  அடையாளமிட்டது தகும்.

  நன்று சகோதரி.

  ReplyDelete
 6. //மகேந்திரன் said...
  மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி,
  ஒளிமிக்க வரிகளால்
  நிதர்சனத்தை யதார்த்தமாய்
  சொல்லியிருக்கிறீர்கள்.
  வைர வரிகளுக்கு
  கவிப்பேரரசு வைரமுத்துவால்
  அடையாளமிட்டது தகும்.

  நன்று சகோதரி.

  9:42 PM

  ////<<<<<>>

  கவிதையை ரசித்த மகிக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. இயற்கையின் அவசியத்தையும் , மனிதகளின் அத்துமீறலையும் அழகாக விரிவாக சொல்லியிருகிறீர்கள்!சிறப்பு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மிக அருமை ஷைலஜா. மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  ReplyDelete
 9. பூமித்தாய் சேமித்து அளிக்கும் செல்வத்தை அழிக்கும் மனிதனை திருந்த அழைக்கும் அருமையான கவிதை!

  ReplyDelete
 10. அருமை.....சரியானதொரு தேர்வு செய்து தங்களை மேன்மைபடுத்தியது மிக்க மகிழ்ச்சி.

  அருமையான கவிதை என்பதைத் தாண்டி "தேவையான ஒரு தகவல்" தந்து மேலும் மிளிர்கிறது.

  ReplyDelete
 11. //நம்பிக்கைபாண்டியன் said...
  இயற்கையின் அவசியத்தையும் , மனிதகளின் அத்துமீறலையும் அழகாக விரிவாக சொல்லியிருகிறீர்கள்!சிறப்பு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  1:14 AM

  //

  நன்றி நம்பிக்கைபாண்டியன்

  ReplyDelete
 12. //ராமலக்ஷ்மி said...
  மிக அருமை ஷைலஜா. மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  8:24 AM

  //


  நன்றி ராமல்ஷ்மி

  ReplyDelete
 13. //கே. பி. ஜனா... said...
  பூமித்தாய் சேமித்து அளிக்கும் செல்வத்தை அழிக்கும் மனிதனை திருந்த அழைக்கும் அருமையான கவிதை!

  8:28 AM

  //

  வாவ் ஜனாவா! பெரிய எழுத்தாளரின் வரவுக்கு முதல்ல நன்றி பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஜனா.

  ReplyDelete
 14. //Shakthiprabha said...
  அருமை.....சரியானதொரு தேர்வு செய்து தங்களை மேன்மைபடுத்தியது மிக்க மகிழ்ச்சி.

  அருமையான கவிதை என்பதைத் தாண்டி "தேவையான ஒரு தகவல்" தந்து மேலும் மிளிர்கிறது.

  4:03 PM

  ///

  ஹலோ ஷக்தி நலமா? என்ன ரொம்ப ஃபார்மலா ஒரு பின்னூட்டம்?:) ஆனா நன்றி சொல்லாமல் இருக்கமாட்டேன் நன்றி ஷக்தி.

  ReplyDelete
 15. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
 16. அட.. சபாஷ்.

  ReplyDelete
 17. நன்றி மாதவன் மற்றும் ரிஷபன்!

  ReplyDelete
 18. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஷைலு!

  ஷைலுவிற்கு பரிசு கிடைக்காவிட்டால்த்தான் அதிசயப்படவேண்டும் :)

  ReplyDelete
 19. //meenamuthu said...
  மனம் நிறைந்த வாழ்த்துகள் ஷைலு!

  ஷைலுவிற்கு பரிசு கிடைக்காவிட்டால்த்தான் அதிசயப்படவேண்டும் :)

  8:28 PM

  //// அன்புக்கு மறு பெயர் மீனா! வாழ்த்துக்க்கு மனம் கனிந்த நன்றி மீனாஜி!

  ReplyDelete
 20. ஆஹா! அற்புதக் கவிதை...

  வயிரத்தின் நிழல்கள் அல்ல!
  வயிரம் பாய்ந்த வரங்களின்
  நிழல்களே இல்லாமல் போன
  நிஜத்தின் குமுறல்கள்...

  இல்லை இப்படியும் சொல்வேன்...

  வயிரத்தின் நிழல்கள் அல்ல...
  வைரத்தின் ஜொலிப்பாய்
  நிழல்களைத் தேடும் நிஜங்கள்
  நீங்கள்!.... வடித்தகவிதை...

  அனைத்து திசையும்
  ஜொலிக்கும் வைரம் தான்
  அதன் நிழலைக் காணுமோ?

  அதனாலே நிழலில்லா நிஜம்
  நினதுக் கவிதை...

  வைரமுத்தே பாராட்டிவிட்டார்
  அதனாலே அவரின்
  பாராட்டிற்கு பின்னால்
  ஒலிக்கும் கர ஒலியே
  எனதும்....

  நன்றி...

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.