அன்னை பராசக்தி
சின்னக்கனலெனவே
என்னுள்ளே உறைந்திருக்க
பின்னும் நான் பித்தாகி
மின்னுவதற்கெல்லாம்மயங்கி
எத்தனையோ ஏற்றங்களை
மொத்தமாய்த்தொலைத்துவிட்டேன்
அன்னையவள் பிள்ளையினை
அடையாளம் காட்டியென்னை
அன்புடனேப்பழகிஅறிவுதனைவளர்த்து
முன்னைவினைதீர்த்துக்கொள்ள
முன்னேற்பாடாய் அனுப்பியதை
கண்ணதனின் ஒளி இழந்த
பின்னேதான் உணர்வேனோ?
காட்சியது விரிந்திருக்க
கானல்நீர்தேடி அலைகின்றேன்
மாட்சிமைபொருந்தியவர்களை
அலட்சியத்தில் தவறவிட்டேன்
ஆட்சிஎன்றெனக்குத் தேவையானதெல்லாம்
நிர்தாட்சிண்யமாய் பெற்றுக்கொண்டேன்
மீட்சி தேடி நான் வந்தால் மன
சாட்சி மெல்ல நகைக்கிறதே?தாயே
மீனாட்சி,எனை ஆட்டுவதும் நீயேதான்
வாட்டிவதைப்பதுவும் நீயேதான்!
காட்டி மிகமகழ்ச்சியினில்
வீழ்த்துவதும் நீயேதான்.
கூட்டுமடியார்களிடம் எனை
சேர்த்துவைத்து ,புத்திதனை
வார்த்தசிலைபோலாக்கிடுவாய்
வளர்நகரத்திருமங்கைவடிவான இளநங்கை
மதுரைமீனாட்சிதாயே
Tweet | ||||
பாடல் அருமை.
ReplyDeleteபுது டெம்ப்ளேட் அழகு.
மிகவும் உருக்கமான இக் கவிதை....
ReplyDeleteஉள்மனதிலே உமையவளை
இருத்தியே வடித்த
வண்ணமாமாலை இக் கவிதை..
திண்ணமாய் நான் உரைப்பேன்
அன்போடு அழைப்பதினால்
அன்னை அவள் ஆதரிப்பாள்
அள்ளி அனைத்தே
ஆசைமுத்தம் இட்டே
அவள் மடியில் இருத்திடுவாள்
இத்தூய அன்போடு என்றும்
பணிந்துடுவோம்!...
உள்ளுணர்வுப் பூர்வமான அருமையானக் கவிதை.
நன்றிகள் சகோதிரி..