கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர்வந்து காணீரோ!//
பெரியாழ்வாரின் பாடலோடு உடுப்பிக்குள் செல்வோம்!
ஒருத்தி (தேவகி)மகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்தி(யசோதை) மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை என்னும் வருத்தம் தேவகிக்கு இருந்தது. ஒரு முறை கிருஷ்ணரிடம் இதை தெரிவித்ததும் கிருஷ்ணரும் தனது பாலலீலைகளை தாய்க்கு நடத்திக்காட்டினாராம். தேவகியோடு ருக்மணியும் இதைக்கண்டு களித்தாள்.
உடனே ருக்மணீதேவி க்ருஷ்ணரிடம் பின்வருமாறுவேண்டினாள்.
‘ஹேப்ரபோ! தங்களின் குழ்ந்தைவடிவமும் லீலைகளும் எனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டன அந்த பாலக்ருஷ்ணர் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு அந்த வடிவம் விக்கிரஹமாக வேண்டும். விக்கிரஹத்தை எனது பூஜை அறையில் வைத்துக் கொள்ளவிரும்புகிறேன் அதை தாங்கள் உருவாக்கித் தரவேண்டும் ”
க்ருஷ்ணன் உடனே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார் ஸாளக்ராம் சிலைவடிவம் அமைத்துத்தரச்சொன்னார் .அவர் வடித்த ஸாள்க்ராம சிலையை-விக்ரஹத்தை ருக்மணிதேவி தினமும்பூஜித்து வந்தாள் அந்த தெய்வீக சிறப்புவாய்ந்த விக்ரஹம் உடுப்பிக்கு எழுந்தருளியது மிகவும ஆச்சர்யமானதும் நமக்கு பக்திப்பரவசமூட்டும் நிகழ்வுமாகும்!
.
க்ருஷ்ணர் தனது இறுதிக்காலம்வரை த்வாரகையில் வசித்து வந்தார் அதாவது பழையத்வாரகை(த்ற்சமயம் குஜராத்திலுள்ள துவாரகா)
க்ருஷ்ணரின் சங்கல்பத்தால் பழைய த்வாரகை நீரில் மூழ்கியபோது ருக்மணி பூஜைசெய்து வந்த க்ருஷ்ணவிக்ரஹமும் மூழ்கிப் போய்விட்டது .கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் அதுமுழுவதும் மூடப்பட்டு காலப் போக்கில் பாறைபோல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கியது.
பலநூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப்பாறை கண்ணில்பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை உபயோகப்படுத்தி வந்தான்,
ஒருமுறை அவனது கப்பல் தென்னிந்தியாவை நோக்கிப் பயணம் செய்தபோது அரபிக்கடலில் உடுப்பிக்கு அருகில் உள்ள பண்டேஸ்வரா(மேற்குக்கடற்கரை) பகக்ம் கடும்புயலில் சிக்கியது மால்பார் என்னும் இடத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தது.
அப்போது தனது நித்ய அனுஷ்டானங்களை செய்வதற்காக வட பந்தேஸ்வரர் என்ற கடற்கரையைச் சென்றடைந்த மத்வாச்சாரியார் கடலில் ஒரு கப்பல் தடுமாறுவதைப்பார்த்தார். அந்தக்கடும்புயலைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தனை செய்தபடி தனது மேல் அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கப்பல் இருக்கும் திசை மீதுவீசினார்.
என்ன ஆச்சர்யம் !வேகமாக விசீக் கொண்டிருந்த அந்தப்புயல் வெள்ளை அங்கவஸ்திரத்தைக்கண்டதும் சட்டென ஓய்ந்துஅடங்கியது புயலில் மூழ்க இருந்த அந்தக்கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது.
அந்தக் கப்பலோட்டி கரைக்கு ஒடி வந்து மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான்.
“ஐயா! உங்களுக்கு நான் எப்படி நன்றி உரைப்பேன்? பெரும் ஆபத்திலிருந்து கப்பலைக்காப்பாறிவிட்டீர்கள். ஐயா இதற்கு அன்பளிப்பாக இந்தக் கபலிலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
மத்வர் புன்னகை தவழ தன் மறுப்பைத்தெரிவித்தார். ஆனால் அந்தக்கணம் கப்பலில் இருந்த அந்தகோபிப்பாறையை நோக்கினார் .ஞானத்ருஷ்டியில் அவருக்கு அதில் ஒளி(ர்)ந்திருந்த க்ருஷ்ணர் தெரியவும் கப்பலோட்டியிடம் அதைமட்டும் கேட்டுப் பெற்றுகொண்டார் அதனை பக்தியுடன் சிரசில் சுமந்துகொண்டு நாராயண ஸ்மரணத்துடன் உடுப்பி நோக்கி நடந்துவந்தார்(அந்தநேரம் அவர் பக்திபரவசத்தில் பாடிய பாடல்களை த்வாத்சஸ ஸ்தோத்திரம் என்றுவழங்கப்படுகிறது)
கப்பலோட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த அந்த வெள்ளைமண்பாறையை திருக்குளத்தில் நீராட்டியபோது க்ருஷ்ணரின் சாள்க்ராம சிலை வெளிப்பட மத்வர் பரவசத்துடன் விழுந்து வணங்கினார். அந்ததிருக்குளம் மத்வசரோவர் என்று பிரசித்தி அடைந்தது, அந்தக்குளத்தின் தீர்த்தம் தான் க்ருஷ்ண பகவானின் ஆராதனைக்கும் அபிஷேகத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
சிலைக்கு நீராட்டியதும் அதுமேலும் ஸாந்நித்யம் பெற்று பிரகாசித்தது. உடனே முறைப்படி க்ருஷ்ணமடத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் உடுப்பி க்ருஷ்ணன்கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது.
பாலக்ருஷ்ணன் வடிவில் வலதுகையில்மத்தும் இடதுகையில் கோலும் ஏந்திக்கொண்டு உடுப்பியில் க்ருஷ்ணன் பார்ப்போரை பரவசம் அடையச்செய்கிறான்!
இந்தக்கிருஷ்ணரை பூஜை செய்யும் உரிமை ஸ்ரீமத்வாச்சாரியாரின் பரம்பரையில் வந்த அவரது சிஷ்யர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே தீஷை பெற்று சந்நியாசம் மேற்கொண்ட அவர்கள் பாலஸந்நியாசபட்டர்கள் என்று விளங்குகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் மத்வாச்சாரியாரால் ஏற்றப்பட்ட ஒரு நெய் தீபம் (பிரதிஷ்டைதினம்) இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.இங்கு பூஜைக்கு உபயோகப்படும் மணி காஷ்ட(மரம்) பீடம் வெள்ளி அஷயபாத்திரம் மேலும் தீபங்கள் முதலியன மத்வாச்சாரியார் காலத்தவை அவரது கரங்களால் புனிதமடைந்தவை.
தென்னகத்து மதுரா எனப்படும் உடுப்பி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர்
கிருஷ்ணபக்தர் கனகதாசர்.
கனகதாசரின் காலம் 15ம் நூற்றாண்டு (1506 - 1609). என்கிறார்கள். , செல்வச் செழிப்புடன் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
கனகதாசர் குருபர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்தார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், ராமதான்யசரித்ரே , நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவையாகும்.
. கனகதாசர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். அதனை சில பிராமண பூசாரிகள் தடுத்தனர். கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் பிளவு உண்டானது. அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியது. அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்தது!. .
பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. கன்னட நந்தனார் என்று இவரைக்கூறினாலும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் அந்த நாளில் மிகவும் ஆளுமையாக இருந்திருக்கின்றன என்று இதனால் தெரியவருகிறது.
இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருக்கிறது நாமும் கனகதாசர் வழிபட்ட அந்த ஜன்னல்துவாரத்தின் வழியேதான் கிருஷ்ணரைக்காணவேண்டும்.ஆண்டிற்கு ஒருமுறை விஜயதசமி உற்சவத்தின்போது கிழக்குநுழைவாயில் திறக்கப்படும்.அப்படிக் கதவுதிறந்ததும் முதலில் புதிதாக விளைந்த நெல் போன்ற தானியங்கள் இந்த வாயில்வழியாக சந்நிதிக்கு உள்ளே செல்லப்படுகிறது
.
கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவவை.
.
உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. ,ஆண்டுதோறும் நவம்பர் 24ம்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள் “கனகதாஸ ஜயந்தி” என்று கொண்டாடுகிறார்கள்.. கனகதாசரின் பிறந்தநாள் மட்டுமல்ல பசவண்ணா எனும் கன்னடப்புலவரின் பிறந்தநாளுக்கும் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அளிக்கிறது. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதர் தான். பசவண்ணர்
அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்களின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது.
ஆலயவளாகத்தில் ஐம்பத்திற்கும் மேல் கறவைமாடுகள் கட்டப்பட்டுள்ளன.
உடுப்பியில் எட்டுமடங்கள் உள்ளன. பல உன்னத ஆசாரியார்களின் சிஷ்யபரம்பரையினர் அவைகளை இன்னமும் சிரத்தையுடன் பாதுகாத்துவருகின்றனர். இந்த எட்டுமடங்களைத்தவிரவும் மேலும் பலமடங்கள் தினந்தோறும் அன்னதானம் செய்துவருகின்றன. உடுப்பி சென்றால் நாம் மடங்களில் தங்கிக்கொள்ளலாம். பரந்துவிரிந்த விசாலமான அறைகளும் நடுமுற்றமும் அதில் சிறுகோவில்மண்டபமும் அத்துடன் பழையகாலபாணியில் கட்டப்பட்ட மரத்தூண்களும் நிலைகளுமாய் ஒவ்வொரு மடமும் நம்மை பரவசப்படுத்தும். அரண்மனைவளாகம்போல காணப்படும். ரதத்தெரு(தேரடிவீதி) சென்று காலாறநடக்க்லாம்..ஊரெங்கும் கிருஷ்ணவாசனையை நுகரலாம்!
கிருஷ்ணனின் திருவிடத்திற்கு அருகில் ஏறக்குறைய ஐந்துகிலோமீட்டர் அருகே அரபிக்கடலின் அழகிய மால்பே கடற்கரை அமைந்துள்ளது. கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவு இருக்கிறது.கையில் பணம் அதிகமிருந்தால் அங்கே போய் ஓர் இரவு இளைப்பாறலாம்!
உடுப்பி ஸ்பெஷல் பல உண்டு அதில் பத்ர அடை என்பது அங்கேதான் அதிகம் கிடைக்கும்!. சேப்ப இலையைசுருட்டி தயாரிக்கும் சிற்றுண்டி இது,சுவையறிந்தால் விடமுடியாது!
ஆனாலும் உடுப்பிகோயிலின் சின்னக்கண்ணனின் மந்திரதொனி அழைப்பும், அந்தக்கள்ளச்சிரிப்பும் ஊரைவிட்டு நகர்ந்தபின்னும் நம் உள்ளத்திலேயே நின்றுகொண்டிருக்கும்!
த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின ஹாடி
கடெகண்ணிலே நன்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)
எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்
(புரந்தரதாசர்)
Tweet | ||||
அரங்கப்பிரியாவின் ஆராவமுதுத் தமிழில் கன்னட கனகதாசரின் உள்ளம் கொள்ளை கொண்ட உடுப்பி கிருஷ்ணன் சம்பந்தமான தகவல்கள் அருமை! :))
ReplyDeleteஅழகான கட்டுரை...அளித்தமைக்கு நன்றிகள் :)
ReplyDeleteஉண்மையில் இது பேரதிசயமா! இல்லை கிறிஷ்ணனின் லீலையா என்றுத் தெரியவில்லை....
ReplyDeleteநேற்று தான் இவனைப் பற்றி எனது தூர தேசத்தில் இருக்கும் சகோதிரி(தோழியிடம்) பேசினேன்.
இன்று அவர் தொடர்பான பதிவைப் படித்ததோடு அல்லாமல் பல விசயங்களையும் தெரிந்து பரவசம் அடைகிறேன்.
நான் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பாக அங்கே அந்த குட்டிக் கிருஷ்ணனை தரிசிக்க அழைத்திருந்தான்...
அப்போது, சென்று தரிசித்த பொழு பெற்ற பரவசம்.... இன்னமும் நெஞ்சில் அமுதமாக இருக்கிறது..
குருவாயூருக்கு பல முறை சென்றிருக்கிறேன்.. அங்கே ஒரு சுகந்தம் இருக்கும்...
ஆனால், உடுப்பியில் எனது உணர்வு அனுபவம் வித்தியாசமாக இருந்தது...
சத்தியமாக கூறுவேன்.. கிருஷ்ணனின் சிரிப்பை என்னால் அங்கே காண முடிந்தது..
இன்னமும் கிருஷ்ணன் என்றால் உடுப்பி பாலகன் தான் என் புத்திக்கு வருவான்...
எனக்குள் இருந்த சந்தேகங்களும் தெளிந்தது....
ஸாளக்ராம் கற்களைப் பற்றிக் கேலி படுகிறேன்...
திருவனந்தபுர பத்மநாப சுவாமி கூட நேபாளத்தில்
இருந்து கொண்டு வரப்பட்ட இவ்வகை கற்களால்
செய்யப்பட்டதாக அறிகிறோம்.
உடுப்பியும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களைப் பற்றிய செய்தி அருமை.
பதிவுக்கு நன்றிகள்.
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்
ReplyDeleteதக்குடு said...
ReplyDeleteஅரங்கப்பிரியாவின் ஆராவமுதுத் தமிழில் கன்னட கனகதாசரின் உள்ளம் கொள்ளை கொண்ட உடுப்பி கிருஷ்ணன் ...'.//
வா தக்குடு நலமா? அதென்ன ஆராவமுதுத்தமிழ்?:) ஆராவமுது உன் கல்லிடை நண்பனா?:0 ச்சும்மா கிட்டிங்... நன்றி உன் பிசியான ஷெட்யூல்ல இங்க வந்ததுக்கு!!
// மதுரையம்பதி said...
ReplyDeleteஅழகான கட்டுரை...அளித்தமைக்கு நன்றிகள் :)
9:48 PM
// வாங்க மௌலி....ஊருக்குவந்து நேர்ல பேசறேன் வெளிநாடு விட்டு இப்போ வெளியூர் வாசமாய் இருக்கு
தமிழ் விரும்பி said...
ReplyDeleteஉண்மையில் இது பேரதிசயமா! இல்லை கிறிஷ்ணனின் லீலையா என்றுத் தெரியவில்லை....
நேற்று தான் இவனைப் பற்றி எனது தூர தேசத்தில் இருக்கும் சகோதிரி(தோழியிடம்) பேசினேன்.
இன்று அவர் தொடர்பான பதிவைப் படித்ததோடு அல்லாமல் பல விசயங்களையும் ,,,,//
தமிழ்ப்ரியனுக்கு மிக்க நன்றி.....உணர்ந்து படித்திருக்கிறீர்கள் மிக்க சந்தோஷம் அதில்.
// இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅருமையான பகிர்வு. பாராட்டுக்கள்
////
நன்றி இராஜேஸ்வரி