Social Icons

Pages

Sunday, October 16, 2011

உயிர்ப்பு.

"வாங்க கவிஞரே!”

ஆகாஷ் தெருமுனைக்கே ஓடிவந்து என்னை வரவேற்றான்

பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு அப்போதுதான் வெளியே இறங்கிய நான் புன்னகையுடன்,”என்னடா கவிஞரே கிவிஞரேன்னுட்டு? நான் என்னிக்கும் உன் நண்பன் அஞ்சனவண்ணன் தான்!” என்றேன்.

“ஆனாலும் சினிமாக்கெல்லாம் பாட்டெழுத ஆரம்பிச்சிட்டே...சமீபத்துலவந்த ‘தயக்கம் என்ன’படத்தின் பாட்டு உன்னை உலகத்துக்கே அடையாளம் காண்பிச்சிடிச்சே?போனமாசம் அமெரிக்காக்கு பிசினஸ் விஷயமா போன இடத்துல ஒரு தமிழ்க்குடும்பம் நடத்தின பார்ட்டில உன்னைப்பத்தித்தான் புகழ்ந்து பேசினாங்க...’இளம் வயசாயிருக்குதே இப்போவே இப்படி கலக்கறாரே?’ன்னு ஆச்சரியப்பட்டாங்க அவங்ககிட்ட நானும் பெருமையா நீ என் கல்லூரிநண்பன்னு சொல்லிக்கிட்டேனாக்கும்!”

“ஆஹா கோடீஸ்வரர்,பெரிய சாஃப்ட்வேர்கம்பெனி எம்டி ஆகாஷ் அவர்கள் இப்படி சொல்லறதைக்கேட்க ஆனந்தமா இருக்கே...அதிருக்கட்டும் ஏன் ஆகாஷ் இப்படி ஊருக்கு வெளிலபுறநகர்ப்பகுதில புதுவீட்டைக்கட்டி இருக்கிறே? சென்னையைத் தாண்டி ரொம்பதூரம் வந்த உணர்வாயிருக்கு.. அதான் செல்போன்ல உன்கிட்ட வழிகேட்டுட்டே வந்தேன் நீயும் சரியா என்னை தெருமுனைல வந்து பிடிச்சிட்டே...”

”ஆமா புதுசா வரவங்களுக்குக் கொஞ்சம் க‌ஷ்டமான இடம்தான் இது. என்ன செய்றதுடா அடிக்கடி வெளிநாடுபோய்வந்ததுல எனக்கு அந்த நாட்டுகட்டிடக்கலை பிடிச்சிபோச்சிடா. அதிலும் குறிப்பா அமெரிக்காவை சொல்லணும் நியூயார்க் வாஷிங்டன் தான் பெரும்பாலும் போவேன். அங்கே வீடுகளை பார்த்து வியந்துபோய் அதேபாணில இங்க கட்டணும்னு் பலநாள் ஆசை. இப்போ அதை நிறைவேத்திட்டேன் ....இன்னிக்கு க்ரஹப்ரவேசமும் முடிச்சிட்டா சீக்கிரமா குடிவந்துடுவோம். சரி சரி,, பூஜை ஹோமம்னு எல்லாம் நடக்கப்போகுது.. வாவா..வந்துவீட்டை நல்லா சுத்திப்பாரு. கவிஞன்கண்ணுக்குத்தான் கலை உணர்வு அதிகம்னு சொல்வாங்க...சரிடாஇனிமே உன்னோடு ரொம்ப நேரம் செலவழிக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.. ஆளுங்கவந்திடே இருப்பாங்க..ஆங்.. இப்போவே சொல்லிட்டேன் பூஜை எல்லாம்முடிச்சி இருந்து நிதானமா சாப்பிட்டுப்போகணும் என்ன?”
என்று சொல்லியபடியே என்னை புதுவீட்டுவாசலுக்குக்கொண்டுவிட்டான்.


வீடு என்றா சொன்னேன் தவறு அரண்மனைபோல பெரிதாகத்தெரிந்தது.எப்போதோ மைசூர் அரண்மனையைத்தான் நேரில்பார்த்த நினைவு.

அரண்மனைக்குள் காலடி எடுத்துவைக்கிறேன். காலடியில் வித்தியாசமாக மரத்தரை வழுவழுத்தது.

“சுவர்லாமும் மரம்தான்! அமெரிக்கால இப்படித்தானாம் முழு வீடே மரத்தால் கட்டுவாங்களாமே ! நம்ம ஆகாஷ் அச்சுஅசலா அமெரிக்கா வீடுபோல மரத்தாலியே இழைச்சி இழைச்சி புதுமாதிரியாஅசததலா வீடுகட்டி இருக்கான் பாருங்க! “
ஆகாஷின் உறவினர்போலும் யாரோ ஒருமுதியவர் யாரிடமோ பிரமிப்புநிறைந்தகுரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.

.
ஜன்னல் கதவு உத்தரம் தரை சுவர் மேஜை நாற்காலி கட்டில் மேடை என்று எங்கும் மரம் செத்துக்கிடந்தது. ஆமாம் உயிரோடுள்ள மரத்தை வெட்டியதும் செத்தமரங்கள்தானே இதற்கெல்லாம் பயன்படுமாம்?

ஏற்கனவே நகரங்களை விரிவுபடுத்துவதாக சொல்லி காடுகளை அழித்துவருகிறோம் சாலைமரங்களை பாதை விரிவாக்க வெட்டிசாய்க்கிறோம்.அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இயற்கைவளம் அதிகம் மக்கள்தொகைகுறைவு.அந்த நாட்டு தட்பவெட்பத்திற்கு வீடுகள் அப்படி தேவையாய் இருக்கலாம்.நமது தேசம் அப்படிப்பட்டதில்லையே?

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.மரங்களைக்காக்கவேண்டிய நாம் அவைகளை அழித்து இப்படி வீட்டுக்குள் சிறைவைத்து
பூஜை செய்து ஹோமப் புகைமூட்டி கற்பூரதீபம் காட்டுவதும் என்ன நியாயமோ?

‘கலசநீர் இது கங்கை நீருக்கு சமம் ..முதலில் வீடு முழுக்க தெளிச்சிட்டுவரேன்” என்று பூஜை செய்யவந்த பூசாரி வெள்ளி சொம்பிலிருந்த நீரை மாவிலைகொண்டு மரச்சுவரில் மரத்தரையில் என்று எல்லா இடத்திலும் தெளிக்க ஆரம்பிக்கிறார்.

எனக்கு சிரிப்பாய் வருகிறது. உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று.

சில கணங்கள்தான் என்னால் அந்தவீட்டிற்குள் நிற்கவே முடியவில்லை.
மூச்சுமுட்டியது,வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

வெட்டவெளியில் நேற்று என்பது அழிந்துபோய் இன்று நின்று சிரிக்கிறது.காற்று துடைத்துவிட தினமும் தன்னைப்புதுப்பித்துக்கொள்ளும் புறவெளியில்தான் ஜீவன் உயிர்த்துக்கிடக்கிறது.

விறகுக்கட்டைகளை

ஏற்றிக்கொண்டு

விரைந்துவரும் வாகனத்தின்

வாசகம்....

’மரம் வளர்ப்போம்’

என்னைப்போல் ஒரு கவிஞன் எழுதிய கவிதையை வாசித்த நினைவு வருகிறது.

******************************************************************************************The United Nations General Assembly declared 2011 as the International Year of Forest

31 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. சர்வ தேச வன ஆண்டுக்கு ஏற்ற பகிர்வு.
  அருமை ஷைலஜா.

  ReplyDelete
 3. //ராமலக்ஷ்மி said...
  சர்வ தேச வன ஆண்டுக்கு ஏற்ற பகிர்வு.
  அருமை ஷைலஜா
  //

  thanks Ramalakshmi!

  ReplyDelete
 4. உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று./

  உயிர்ப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. விறகுக்கட்டைகளை

  ஏற்றிக்கொண்டு

  விரைந்துவரும் வாகனத்தின்

  வாசகம்....

  ’மரம் வளர்ப்போம்’

  என்னைப்போல் ஒரு கவிஞன் எழுதிய கவிதையை வாசித்த நினைவு வருகிறது.


  முத்தாய்ப்பான வரிகள் அருமை.

  ReplyDelete
 6. உயிர்ப்பில் மரம் இருக்கையில்
  நாம் வெளிவிடும் நச்சு வாயுவை
  உள்நுகர்ந்து நமக்கு பிராண வாயுவை
  நன்கொடையாய் கொடுக்கிறது.
  நாம் அதற்கு செய்யும் பலன்.
  வெட்டி வீழ்த்துவது.

  என்ன ஒரு காரிய கைங்கர்யம்.

  பதிவு அருமை சகோதரி.

  ReplyDelete
 7. அருமை அருமை மிக அழகாக சொல்லிச் செல்லுகிறீர்கள்
  உய்ரற்ற உடல்களைக்கொண்டு கட்டிய மாளிகையில்
  உயிருள்ள உடல்மூச்சு திணறுதல் கொள்வது சகஜம்தான்
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமையான கரு, உங்களது வார்த்தைகளில் அழகாகச் சொல்லியிருக்கீங்க...ஏதும் போட்டிக்கான கதையா?...

  ReplyDelete
 9. இராஜராஜேஸ்வரி said...
  உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று./

  உயிர்ப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  9:41 PM

  >>>>>>>>>>>>>>>>>>>>>>

  நன்றி இராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 10. //மகேந்திரன் said...
  உயிர்ப்பில் மரம் இருக்கையில்
  நாம் வெளிவிடும் நச்சு வாயுவை
  உள்நுகர்ந்து நமக்கு பிராண வாயுவை
  நன்கொடையாய் கொடுக்கிறது.
  நாம் அதற்கு செய்யும் பலன்.
  வெட்டி வீழ்த்துவது.

  என்ன ஒரு காரிய கைங்கர்யம்.

  பதிவு அருமை சகோதரி.

  2:07 AM

  ////

  வாருங்கள் மகேந்திரன் நல்வரவு.
  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 11. Ramani said...
  அருமை அருமை மிக அழகாக சொல்லிச் செல்லுகிறீர்கள்
  உய்ரற்ற உடல்களைக்கொண்டு கட்டிய மாளிகையில்
  உயிருள்ள உடல்மூச்சு திணறுதல் கொள்வது சகஜம்தான்
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  7:40 AM

  >>>>>>>>>>>>>>>>>

  வாங்க திரு ரமணி///ஆமாம் மரங்களை நேசிக்கும் நம் மனத்தின் பிரதிபலிப்புதான் இது. பாராட்டிற்கு நன்றி

  ReplyDelete
 12. Ramani said...
  அருமை அருமை மிக அழகாக சொல்லிச் செல்லுகிறீர்கள்
  உய்ரற்ற உடல்களைக்கொண்டு கட்டிய மாளிகையில்
  உயிருள்ள உடல்மூச்சு திணறுதல் கொள்வது சகஜம்தான்
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  7:40 AM

  >>>>>>>>>>>>>>>>>

  வாங்க திரு ரமணி///ஆமாம் மரங்களை நேசிக்கும் நம் மனத்தின் பிரதிபலிப்புதான் இது. பாராட்டிற்கு நன்றி

  ReplyDelete
 13. மதுரையம்பதி said...
  அருமையான கரு, உங்களது வார்த்தைகளில் அழகாகச் சொல்லியிருக்கீங்க...ஏதும் போட்டிக்கான கதையா?...

  8:20 AM

  >>>>>>>

  வாங்க மௌலி போட்டிக்கதை இல்லை நம்ம் ஊர்ல சாலையைவிரிவுபடுத்தறதா சொல்லி எவ்வளோ மரத்தை வெட்டினாங்க? மெட்ரோக்காகவும் வெட்டினாங்களே அப்போ பார்த்து ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல முழுக்கமரத்தால் ஆனவீட்டுக்குபோனப்போஇப்படி சிந்திக்கதோணினது அதை இப்போ சிலவரிகளில் கதையாக்கமுடிஞ்சது அவ்ளோதான் கருத்துக்கு நன்றிமௌலி

  ReplyDelete
 14. //ஏற்கனவே நகரங்களை விரிவுபடுத்துவதாக சொல்லி காடுகளை அழித்துவருகிறோம் சாலைமரங்களை பாதை விரிவாக்க வெட்டிசாய்க்கிறோம்.அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இயற்கைவளம் அதிகம் மக்கள்தொகைகுறைவு.அந்த நாட்டு தட்பவெட்பத்திற்கு வீடுகள் அப்படி தேவையாய் இருக்கலாம்.நமது தேசம் அப்படிப்பட்டதில்லையே?

  பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.//

  பாதையில் உள்ள மரங்கள் அழிக்க படுவதை கண்டு பொறுக்க முடியாமல் நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

  காடுகளையும் அழித்து வருகிறார்கள்.
  வருத்தப்ப்ட வேண்டிய் விஷயம் தான்.

  நல்ல படிப்பினை தரும். கதை.
  மரங்களை வளர்த்து மழை பெறுவோம்.

  ReplyDelete
 15. கோமதி அரசு said...
  //பாதையில் உள்ள மரங்கள் அழிக்க படுவதை கண்டு பொறுக்க முடியாமல் நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

  காடுகளையும் அழித்து வருகிறார்கள்.
  வருத்தப்ப்ட வேண்டிய் விஷயம் தான்.

  நல்ல படிப்பினை தரும். கதை.
  ///

  வாங்க கோமதி அரசு.. ஆமாம் நம் எல்லோருக்கும் வருத்தமான விஷயம் காடுகள் அழிந்துபோவதுதான் அதன் வடிகாலாய் எனது இந்த முயற்சி. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. நல்ல படிப்பினை தரும் கதை.
  kavithai Romba arumai...

  ReplyDelete
 17. //சே.குமார் said...
  நல்ல படிப்பினை தரும் கதை.
  kavithai Romba arumai...

  3:53 PM

  ///


  நன்றி குமார்

  ReplyDelete
 18. ஒரு நல்ல கதையை எழுதிய உங்களைப் பாராட்டி ஏதாவது ஒரு பூமரம் தன்னுடைய பூக்களை உங்கள் மீது தூவட்டும்...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 19. //Amudhavan said...
  ஒரு நல்ல கதையை எழுதிய உங்களைப் பாராட்டி ஏதாவது ஒரு பூமரம் தன்னுடைய பூக்களை உங்கள் மீது தூவட்டும்...பாராட்டுக்கள்.

  8:17 PM

  ///

  அமுதவனின் வருகைக்கு முதலில் நன்றி. நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு பத்திரிகை எழுத்தாளரின் வருகை என்றால் மகிழ்ச்சிதானே? வந்ததும் பூவான வார்த்தையில் பாராட்டையும் தூவிவிட்டீர்கள் நன்றி மிக.

  ReplyDelete
 20. //விறகுக்கட்டைகளை
  ஏற்றிக்கொண்டு
  விரைந்துவரும் வாகனத்தின்
  வாசகம்....
  ’மரம் வளர்ப்போம்’//

  வேடிக்கையான வாசகம் தான்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  //விறகுக்கட்டைகளை
  ஏற்றிக்கொண்டு
  விரைந்துவரும் வாகனத்தின்
  வாசகம்....
  ’மரம் வளர்ப்போம்’//

  வேடிக்கையான வாசகம் தான்.
  பகிர்வுக்கு நன்றி.

  9:13 PM

  //

  வாருங்கள் திரு வைகோபாலக்ருஷ்ணன்
  கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 22. "தன்னை வெட்டுபவனுக்கும் கடைசி நொடிவரை நிழலை கொடுத்தபடியே வீழ்கிறது மரம்"

  என்று எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தன! நல்ல பதிவு.

  ReplyDelete
 23. //நம்பிக்கைபாண்டியன் said...
  "தன்னை வெட்டுபவனுக்கும் கடைசி நொடிவரை நிழலை கொடுத்தபடியே வீழ்கிறது மரம்"

  என்று எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தன! நல்ல பதிவு.

  4:22 AM

  ////
  ஆமாம் வெட்டவரும் கோடரியின் கைப்பிடிமரம்தான்!
  கருத்துக்கு நன்றி திரு நம்பிக்கைபாண்டியன்

  ReplyDelete
 24. அன்பரே!

  வசன கவிதை போன்ற
  உரைநடை வரிகள்!
  மரத்தின் மாண்புக்கு
  மகுடம் சூட்டியுள்ளீர்
  மி்கமிக அருமை!
  வாழ்க வளமுடன்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. //விறகுக்கட்டைகளை

  ஏற்றிக்கொண்டு

  விரைந்துவரும் வாகனத்தின்

  வாசகம்....

  ’மரம் வளர்ப்போம்’//

  அருமை.. கதையைப் போலவே.

  ReplyDelete
 26. ///எனக்கு சிரிப்பாய் வருகிறது. உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று.////

  மரத்திர்க்கான இந்த வரிகள் மனிதனுக்குமாகவே தெரிகிறது..

  அவசியமான சிந்தனையை கருவில் கொண்ட அருமையானக் கதை....

  பாராட்டுக்களும், நன்றிகளும் சகோதிரி..

  ReplyDelete
 27. //புலவர் சா இராமாநுசம் said...
  அன்பரே!

  வசன கவிதை போன்ற
  உரைநடை வரிகள்!
  மரத்தின் மாண்புக்கு
  மகுடம் சூட்டியுள்ளீர்
  மி்கமிக அருமை!
  வாழ்க வளமுடன்!

  புலவர் சா இராமாநுசம்

  ////
  புலவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இது யான்பெற்ற பேறு!

  ReplyDelete
 28. அமைதிச்சாரல் said...
  //விறகுக்கட்டைகளை

  ஏற்றிக்கொண்டு

  விரைந்துவரும் வாகனத்தின்

  வாசகம்....

  ’மரம் வளர்ப்போம்’//

  அருமை.. கதையைப் போலவே.

  8:11 AM


  <<>>>ஆமாம் அமைதிச்சாரல் கவிதை எழுதியவருக்குப்பாராட்டு. உங்க் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 29. //தமிழ் விரும்பி said...
  ///எனக்கு சிரிப்பாய் வருகிறது. உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று.////

  மரத்திர்க்கான இந்த வரிகள் மனிதனுக்குமாகவே தெரிகிறது..

  அவசியமான சிந்தனையை கருவில் கொண்ட அருமையானக் கதை....

  பாராட்டுக்களும், நன்றிகளும் சகோதிரி..

  9:03 AM

  //மனப்[ப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி தமிழ் விரும்பி....மரம் வளர்ப்போம்!

  ReplyDelete
 30. காத்திரமான விடயத்தை அருமையான கதை ஆக்கிப் பகிர்ந்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 31. //மாதேவி said...
  காத்திரமான விடயத்தை அருமையான கதை ஆக்கிப் பகிர்ந்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

  5:05 PM

  //நன்றி மாதேவி வருகை+கருத்துக்கு.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.