கதிரவனுக்கும் காற்றுக்கும் விளம்பரம் தேவை இல்லை. செறிவான வார்த்தைகளில் சிந்தை கவரும் விதத்தில் பல இடுகைகளை இட்டுவரும் திரு அப்பாதுரை அவர்கள் தனது வலைப்பூக்களில் தனி முத்திரை பதித்து வருவதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
திரு அப்பாதுரை அவர்கள் தனது வலைப்பூவில் புத்தாண்டில் பத்து என்ற தலைப்பில் தான் ரசித்த பத்து வலைப்பூக்களை பாராட்டி எழுதி இருப்பதில் என் வலைப்பூவினையும்...
Tuesday, January 31, 2012
பதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி!
மேலும் படிக்க... "பதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி!"
Monday, January 23, 2012
தேசத்தை நேசித்த நேதாஜி!

பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்..
அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.
இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.
மெட்ரிகுலேஷன்...
Friday, January 20, 2012
வெள்ளை கோபுரம்!

நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.
அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.
எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின்...
Monday, January 16, 2012
அன்புச்சகோதரர்களுக்கு.....

ஒரே சொல்தான் இந்த மாதத்திற்கு ஆனால் ஆயிரம் காலப்பயிருக்கு வித்திடுவது இந்த மாதம்தான். அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள்! தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்கிற பழையபாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
திங்களையும், மழையையும், ஞாயிற்றையும் போற்றி வாழ்த்திச் சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குகிறது....
Friday, January 13, 2012
பனி மூடும் மார்கழியின் பின்னே....

பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!
இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு
ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!
பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு
பகலவனை சேவிக்கும் பலதலைகள்!
இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்
உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!
வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!
தரும்...
Sunday, January 08, 2012
தேனே அமுதே கரும்பின் தெளிவே!

’அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’
என்பார் திருமூலர்.
அன்பான அண்ணல் இனியனும் கூட.எப்படி என்றால் நமக்கு பிறப்பை வாய்ப்பாகத்தருகிறான், முக்தியை வெகுமதியாகத்தருகிறான் இடைப்படும் தடைகளை களைந்தருளுகிறான். சிவம் என்றாலே சுபம். சிவம் என்றாலே...
Thursday, January 05, 2012
நல்லதோர் தாமரைப்பொய்கை.

உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர்.
பிறந்து பின் புகுந்த வீடு போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.
உலகியல் விடுத்து இறை அடியே தேவை என்று புகுந்தவீடு போனவள் ஆண்டாள்.
அப்படியொரு பரம சந்தோஷமும், பரிதவிக்கும் துக்கமும் கலந்து பறிகொடுத்தவர் பெரியாழ்வார்.செங்கண்மால்தான்...
புண் நகை என்ன விலை?:)

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை கதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து...
Wednesday, January 04, 2012
அந்த-ரங்கம்!
அந்த ரங்கம் ஆனந்த ரங்கம் அதுவே ஸ்ரீரங்கம்!
வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத்தோன்றும். ஆம் அதற்குவிடையாக அரங்கனே நமக்கு நடித்துக்காட்டுகிறான்.
நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறான்.
பரமபத வாசல்
இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக...
Monday, January 02, 2012
தென்றல் தந்த பரிசுக்கதை.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ்
தென்றல் நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையை இங்கே பதிவிடுகிறேன்.
தென்றல் பத்திரிகைக்கு நன்றி. இந்தச்சுட்டியில் கதையைப்படிக்கலாம்..குரல்பதிவில் கூட இட்டிருக்கிறார்கள்.
http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=134&cid=13&aid=7635
சென்றமாதம் இப்படி விவரம் இட்டிருந்தார்கள்.இடமின்மை காரணமாய் என் கதையை இந்த ஜனவரி இதழில்...
Subscribe to:
Posts (Atom)