Social Icons

Pages

Friday, January 13, 2012

பனி மூடும் மார்கழியின் பின்னே....

பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்

பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!

இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு

ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!



பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு

பகலவனை சேவிக்கும் பலதலைகள்!

இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்

உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!



வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!

தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்!

திருவெனவே திகழும் மாதருடன் பலரும்

பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!



மங்கலத்தமிழர்கள் மனம் மகிழ்ந்திடவே

எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே

பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்!

தங்கிடும் பொலிவுடன் நாம் வாழ்ந்திடுவோம்!

36 comments:

  1. பொங்குகின்ற பொங்கலைப் போல்
    பொங்கட்டும் மன மகிழ்வு!
    தங்கட்டும் மன நிறைவு!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. மகேந்திரன் said...
    பொங்குகின்ற பொங்கலைப் போல்
    பொங்கட்டும் மன மகிழ்வு!
    தங்கட்டும் மன நிறைவு!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
    <,, நன்றி மகேந்திரன் அமைதியாய் உஙக்ள் பணியை செய்திருக்கிறீர்கள். திரட்டிகளில் இணைத்துவிட்டீர்கள் நன்றி மிக.. எங்க இந்த கணேஷ் ?:)

    ReplyDelete
  3. தோ வந்துட்டேன்க்கா... பத்து நிமிஷம் லேட். மகேன் முந்திட்டார். (நம்மாளு தானே... பரவால்ல) மனநிறைவுடன் பொங்கல் திருநாளை இனிதே தாங்கள் கொண்டாடிட என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!

    தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்!

    திருவெனவே திகழும் மாதருடன் பலரும்

    பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!

    மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. // எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே
    பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்!//

    பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா.

    உங்க வீட்டுல பானைல தான் பொங்கல் வைப்பீங்களா!

    ReplyDelete
  7. பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!

    மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கணேஷ் said...
    தோ வந்துட்டேன்க்கா... பத்து நிமிஷம் லேட். மகேன் முந்திட்டார். (நம்மாளு தானே... பரவால்ல) மனநிறைவுடன் பொங்கல் திருநாளை இனிதே தாங்கள் கொண்டாடிட என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

    2:52 PM
    <<<<

    வாங்க கணேஷ் கூப்பிட்டதும் வந்துட்டீங்க நன்றி நன்றி.

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...
    வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!

    தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்!

    திருவெனவே திகழும் மாதருடன் பலரும்

    பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!

    மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    3:36 PM

    ,,,பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் இராஜேஸ்வரி

    ReplyDelete
  10. அமைதிச்சாரல் said...
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    <<<,உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. ,,ரசிகன் said...
    // எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே
    பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்!//

    பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா.

    உங்க வீட்டுல பானைல தான் பொங்கல் வைப்பீங்களா
    ,,,..//


    வாழ்த்துக்கு நன்றி ரசிகன் பொங்கலை வெண்கலப்பானைல வைப்போம் மண்பானையில் இல்லை!

    ReplyDelete
  12. கோபாலகிருஷ்ணன் said...
    பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!

    மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    <<<<<<>> மிக்க நன்றி வைகோ ஸார்!

    ReplyDelete
  13. அழகான கவிதையில் பொங்கல் திருநாளை வரவேற்றுள்ளீர்கள்.அருமை.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. RAMVI said...
    அழகான கவிதையில் பொங்கல் திருநாளை வரவேற்றுள்ளீர்கள்.அருமை.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    3:58 PM

    <<<<<<நன்றி ராம்வி உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. பொங்கல் பரிசாக வரும் தைப்பெண்ணை வரவேற்கும் வரிகள் அழகு. அருமை.

    இனிய பொங்கல் வாழ்த்துகள் ஷைலஜா!

    ReplyDelete
  16. பொங்கல் சிறப்புக் கவிதை மிக மிக அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    த.ம 3

    ReplyDelete
  17. பொங்கட்டும் புதுப்பானை பொங்கல்!
    பூத்திடும் மகிழ்ச்சியே நெஞ்சில்
    தங்கட்டும் இன்றுபோல் என்றும்
    தழைக்கட்டும் மேனமேலே நன்றும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வணக்கம்!
    பனி மூடும் மார்கழியின் பின்னே மனதிற்கு இனிமையான பொங்கல் கவிதை! ஒரு பக்க கவிதையின் எளிமையான இனிய வடிவம் உடன் படிக்கத் தூண்டும். பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. இன்பம் பொங்கும் கவிதை
    இனிதாய் வாழ்த்தும் கூறியதே!...

    உங்களுக்கும் எங்களது
    இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அழகு கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. //ராமலக்ஷ்மி said...
    பொங்கல் பரிசாக வரும் தைப்பெண்ணை வரவேற்கும் வரிகள் அழகு. அருமை.

    இனிய பொங்கல் வாழ்த்துகள் ஷைலஜா!

    4:35 PM

    //, நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  23. Ramani said...
    பொங்கல் சிறப்புக் கவிதை மிக மிக அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    <<<<,தம ஓட்டுக்கும் சேர்த்து நன்றி ரமணி!

    ReplyDelete
  24. //புலவர் சா இராமாநுசம் said...
    பொங்கட்டும் புதுப்பானை பொங்கல்!
    பூத்திடும் மகிழ்ச்சியே நெஞ்சில்
    தங்கட்டும் இன்றுபோல் என்றும்
    தழைக்கட்டும் மேனமேலே நன்றும்!

    புலவர்
    ///

    நன்றி புலவர் ஐயா!

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ said...
    வணக்கம்!
    பனி மூடும் மார்கழியின் பின்னே மனதிற்கு இனிமையான பொங்கல் கவிதை! ஒரு பக்க கவிதையின் எளிமையான இனிய வடிவம் உடன் படிக்கத் தூண்டும். பொங்கல் வாழ்த்துக்கள்!

    5:34 PM

    <<<<

    ரசித்து படித்து இட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு இளங்கோ

    ReplyDelete
  26. தமிழ் விரும்பி said...
    இன்பம் பொங்கும் கவிதை
    இனிதாய் வாழ்த்தும் கூறியதே!...

    உங்களுக்கும் எங்களது
    இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    6:06 PM




    <<,கவிதையை பாராட்டியதற்கும் பொங்கல் வாழ்த்தினிற்கும் நன்றி மிக

    ReplyDelete
  27. KParthasarathi said...
    பொங்கல் வாழ்த்துக்கள்

    6:36 PM

    <<<<<தங்களுக்கும் அதே நன்றி பார்த்தசாரதி!

    ReplyDelete
  28. Rathnavel said...
    அழகு கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    7:34 PM

    <<<>>

    தஙக்ள் முக நூலில் பதித்தமைக்கும் பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. //பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
    பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!//
    நல்ல வரிகள்!

    ReplyDelete
  30. பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்! பொங்கல் வாழ்த்துக்கள் சகோ. பொங்குற பொங்கல்ல ஒரு கரண்டி பொங்கல் எனக்கு வந்தாகனும்

    ReplyDelete
  31. கவிதை இனிக்கிறது.

    //பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்//

    இந்த வரிகள்....செழுமை கிராமத்திற்கே இட்டு சென்றுவிட்டது

    ReplyDelete
  32. கே. பி. ஜனா... said...
    //பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
    பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!//
    நல்ல வரிகள்!

    9:01 PM

    <<<<
    நன்றி ஜனா.... பிரபலஎழுத்தாளராகிய நிங்கள் பாராட்டும்போது கூடுதல் மகிழ்ச்சி!

    ReplyDelete
  33. ராஜி said...
    பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்! பொங்கல் வாழ்த்துக்கள் சகோ. பொங்குற பொங்கல்ல ஒரு கரண்டி பொங்கல் எனக்கு வந்தாகனும்

    10:04 PM

    <<<<<<<<<>>

    அடடே தங்கைக்கு இல்லாத பொங்கலா? முழங்கைவழிவாரக்கூடி இருந்து குளீர்ந்து உண்போம் பொங்கலை சுடச்சுட! வாங்க ராஜி! வருகைக்கு மிக்க நன்றி வாழ்த்திற்கும்!

    ReplyDelete
  34. <<<<Shakthiprabha said...
    கவிதை இனிக்கிறது.

    //பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்//

    இந்த வரிகள்....செழுமை கிராமத்திற்கே இட்டு சென்றுவிட்டது

    10:22 PM

    <<<,வா ஷக்தி... உனக்குப்பிடித்தவரிகளாய் இவை அமைந்ததில் மகிழ்ச்சி!<<<<<<

    ReplyDelete
  35. Anonymous9:19 PM

    சிறப்புக் கவிதை அருமை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.