நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.
அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.
எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.
அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!
"சுவாமி!"
அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.
"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.
"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்
சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது.
"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்
"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"
"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."
"நீ என்ன சொல்கிறாய்?"
"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."
"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."
"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."
அமுதனார் மெல்லச்சிரித்தார்.
"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"
சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.
கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.
காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.
ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.
மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரை தப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?
அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.
ஆயிற்று! இனிபயமில்லை.
இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது
"யார் அங்கே?"
குரல் கணீரென்றுவந்தது.
அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.
"அமுதனார் சுவாமிகளா?"
குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .
வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.
"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.
"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.
அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.
"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"
"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."
"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"
"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"
"நல்லது.சொல்கிறேன்சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.
அமுதனார் பதைபதைத்தார் .
"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"
"ஆமாம்."
"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே."
"ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"
"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"
"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"
சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.
" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"என்றார் படபடப்புடன்.
அவள் சிரித்தாள்.
"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"
இப்போது அமுதனார் சிரித்தார்
"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்
"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.
அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.
"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"
"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்தமற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்
பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...
"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.
"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.
அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.
அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.
உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.
"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"என்றுகேட்டபடி தளபதி வந்தான்.அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .
'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப் போயிருக்கலாம்..ஹ்ம்ம்...'
அவளைமானசீகமாக சபித்தார்.
"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.
வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.
தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.
அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.
உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!
"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான்.
சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.
இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் . அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.
அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.
"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி
"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்.
"ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்! ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .
அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'
அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,
"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.
வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.
தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!
"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!
வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீமறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.
அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்ம்
அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.
'எப்படியாவதுநகைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'
மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .
அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.
கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது
ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!
அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.
அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .
இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!
கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?
வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!
ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!
பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.
'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.
விழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.
தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.
உருண்டுதலைசிதறி
கீழே
கீழே
கீழே
அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.
ஐயோ!
அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.
வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!
மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.
ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.
வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.
அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.
அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன.
அமளிதுமளியானது ஊர்.
சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம்
"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.
அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.
"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"
அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.
கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.
தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!
ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !
இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு,
அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.
******************************************************************
சில பின் குறிப்புகள்!
( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி சிலர் அறிந்திருக்கவில்லை என்றதால் மீள் பதிவாக இட்டிருக்கிறேன்.
வெள்ளையம்மாளின் அரங்க தியாகத்துக்கும் பக்திக்கும் மெச்சி கோபுரம் "வெள்ளை" கோபுரம் ஆனது மட்டுமில்லை! கணிகையர் யாரேனும் தவறி விட்டால், அவர்களுக்கு வாய்க்கரிசியும், நெருப்பும் அரங்கன் மடைப்பள்ளியில் இருந்து தான் போகும்! இதுவும் வெள்ளையம்மாவின் தன்னலமில்லாப் பக்திக்குத் தந்த பரிசே ஆகும்)
வெள்ளை கோபுர வரலாற்றினை எனக்கு சொல்லிய என் அன்புத் தந்தைக்கு நன்றி.
அநேகமாக பலரும் ராஜகோபுரத்தை அண்ணாந்துபார்த்து பிரமித்து படங்கள் எடுப்பார்கள் நான் ஸ்ரீரங்கம்போனால் வெள்ளைகோபுரத்தை மனதில் மானசீகப்படம் எடுப்பது வழக்கம்! நேற்று அரங்கன் கோயில் சென்றபோது வெள்ளையம்மாள் மீண்டும் என் மனதை ஆக்கிரமிக்கவும் இன்று இதை மீள்பதிவாக இட்டுவிட்டேன்!
Tweet | ||||
அன்பு சகோதரி,
ReplyDeleteஅனைத்திலும் இணைத்துவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து வருகிறேன் கருத்திட.....
வெள்ளைக் கோபுரம் -- கேள்விப் பட்டு இருக்கேன்..
ReplyDeleteகதை தெரியாதது. தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
உணர்ச்சிப் பூரமான கதை...
பெரியவர்கள் அருளிய சரித்திரக் கதையை
ReplyDeleteஎங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல சகோதரி.
வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றிய வீரக்கதை எனக்கு ஒரே ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது...
வெள்ளையம்மாள் என்ற பெயர் சரித்திரத்தில் வீர மங்கைகளுக்கான பெயராக நிற்கிறது என்பது.
ஸ்ரீரங்கத்தின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள்! கதைகள்! வியக்கிறேன். உணர்ச்சி ததும்ப நீங்கள் விவரித்திருப்பது என்னையும் பற்றிக் கொண்டது. இனி ஸ்ரீரங்கம் சென்றால் கண்கள் தாமாக வெள்ளைக் கோபுரத்தின் பால் திரும்பும்; மனம் வணங்கும். அழகுறத் தந்தமைக்கு நன்றிக்கா!
ReplyDeleteஇதுவரை அறியாத அரிய தகவல்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
பதிவின் நடை என்னை அந்தக் காலத்திற்கே
அழைத்துச் சென்றது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
ஆஹா! உண்மையில் அருமையானப் பதிவு...
ReplyDeleteஅதற்கு நன்றிகள் சகோதிரி....
"செயற்கரிய செய்வார் பெரியர் - சிறியர்
செயற்கரிய செய்க லாதார்"
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவர்"
புதிய வரலாற்றுக் கதை அதை அருமையாக தொகுத்துத் தந்த தங்களுக்கும்
அதை தந்த தங்களின் தந்தையாருக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றிகள் சகோதிரி..
///"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"///
ReplyDeleteஇந்த இடத்திலே கண்கள் பனித்தன... அருமை.. அருமை..
ஆஹா! உண்மையில் அருமையானப் பதிவு...
ReplyDeleteஅதற்கு நன்றிகள் சகோதிரி....
"செயற்கரிய செய்வார் பெரியர் - சிறியர்
செயற்கரிய செய்க லாதார்"
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவர்"
புதிய வரலாற்றுக் கதை அதை அருமையாக தொகுத்துத் தந்த தங்களுக்கும்
அதை தந்த தங்களின் தந்தையாருக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றிகள் சகோதிரி.
வணக்கம்! ஸ்ரீரங்கம் கீழவாசல் கோபுர சம்பவத்தை உங்களுக்கே உரிய கற்பனை மெருகோடு சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! இன்னும் அந்த வெள்ளை கோபுரத்தோடு இணைந்த வைணவம் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் உண்டு. அவைகளையும் எழுதுங்கள்! நன்றி!
ReplyDeleteசகோதரி!
ReplyDeleteமீள் பதிவு என்றாலும் என்றும்
நெஞ்சை விட்டு மீளாத பதிவு!
சுவை படச் சொன்னீர்! கல்லில்
எழுத்துப் போல் கருத்தில் பதிந்தது!
புலவர் சா இராமாநுசம்
// நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.//
ReplyDeleteஆரம்ப வரியே அசத்தல். அந்த வரியை ஆரம்பத்தில் வைத்ததும் அசத்தல்.
கதை எழுதுவது உங்களுக்கு லாவகமாக கை வருகிறது. அந்த நாளுக்கே என்னை அழைத்து சென்றது.
இந்த கதையை / சம்பவத்தை இப்போது தான், உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்.
வெள்ளையம்மாள் நல்லவள் என அமுதனாரிடம் அவள் வாக்குவாதம் செய்யும் போதே மனதில் பட்டது. அமுதனார் போலவே அவளும் ரங்கதிரவியத்தை காக்க தன் வழியில் முயலுகிறாள் என மனது கூறியது. ஆனாலும் கோபுரத்திலிருந்து அவள் கீழே விழும் போது மனது அரற்றியது. கண்கள் கலங்கின.
வெள்ளையம்மாவை பார்க்கவாவது ஸ்ரீரங்கம் போகவேணும்.
மிக அற்புதமான வரலற்று நிகழ்வு.சிறப்பாக கொடுத்திருக்கீங்க.
ReplyDelete//"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"// இதைப்படிக்கும் பொழுது எனக்கு சிலிர்த்து விட்டது.
வணக்கம் அக்கா உங்கள் பதிவின் மூலம் புதிய ஒரு தகவல் அறிந்துகொண்டேன்.அருமையாக சொல்லியிருக்கீங்க
ReplyDeleteபடங்களும் அறிய பதிவும் அருமை
ReplyDeleteவெள்ளை கோபுரம் பற்றி ஓரளவு கேள்விப்பட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன். இவ்வளவு சிறப்பானதோர்
ReplyDeleteசரித்திரம் இதன் பின்னனியில் உள்ளதைத் தங்களின் இந்தப்பதிவின் மூலமே அறிந்தேன். மகிழ்ச்சி.
தகவல் கொடுத்து அழைத்ததற்கு நன்றி.
:_0_;>:"_)
ReplyDeletethanks:)
Great:)
ReplyDeleteஅரிய செய்திகள்.
ReplyDeleteமிக்க நன்றி.
இஷ்வாகு குலதனத்தைக் காக்க அன்று எத்தனை பேர் போராடினார்கள்.. இத்தகைய கதைகளை எத்தனை முறை மீள் பதிவிட்டாலும் தகும்..
ReplyDeleteஅற்புதமான சொல்லாற்றலுக்கும் படிக்கும்போதே சிலிர்த்துப் போக வைத்த எழுத்து நடைக்கும் ஒரு சபாஷ்.
அருமை ஷைலூ! மீள்பதிவா இது!!!!!!!!
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்!
ReplyDelete//ஷைலஜா said... எனது வெள்ளை கோபுரம் பதிவில் வைணவம்சார்ந்த நிகழ்வுகளை என்னை எழுதச்சொல்லி கேட்டிருந்தீர்கள்..கோபுரத்தில் அப்படிநடந்தது திருக்கோஷ்டியூரில் என நினைக்கிறேன் அல்லது தங்களுக்கு தெரிந்தால் அங்கே கூற முடியுமா நன்றி. 21 January 2012 12:09 //
வலைப் பதிவு எழுதத் தொடங்கியவுடன், திருவரங்கம் பற்றி எழுத எண்ணி வரலாற்றுச் செய்திகளை பார்க்கும்போது வெள்ளை கோபுரம் பற்றிய விவரங்களை சொல்லி இருந்தார்கள். வழக்கம் போல கூகிள் தேடலின் போதும் இருந்தது. அதில் ஸ்ரீரங்கம் கோயில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டி வெள்ளை கோபுரத்தில் ஏறி மூவர் உயிர் துறந்ததாக ஒரு வலைப் பதிவாளர் ( pillai-ula.blogspot.com) சொல்லியிருந்தார். மேலும் ஸ்ரீரங்கம் வரலாற்றினைப் பற்றிய “கோயில் ஒழுகு” என்ற நூலைப் பார்த்த பின்னர் எழுதலாம் என்று இருந்து விட்டேன். இந்த நூலை Sri Vaishanava Sri Srirangam ஏழு பாகங்களாக எளிய தமிழில் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. (அவர்கள் இணைய தளம் செல்லவும்)
அண்மையில் தங்கள் வெள்ளை கோபுரம் பற்றிய பதிவைப் படிக்கும் போது மேற்படி செய்தி ஞாபகம் வந்ததால் அவ்வாறு எழுதினேன். மேற்கொண்டு ஏதேனும் விவரம் தெரிய வந்தால் தெரியப் படுத்துகிறேன். நன்றி!
வெள்ளையம்மாளின் தியாகம் உண்மையிலேயே அளப்பரியதுதான். அருமையான வரலாற்றுக்குறிப்பை கதை வடிவில் பகிர்ந்ததற்காக நன்றி.
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteஅன்பு சகோதரி,
அனைத்திலும் இணைத்துவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து வருகிறேன் கருத்திட
<<<<இதுக்கு சிறப்பு நன்றி சகோதரரே!
//Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteவெள்ளைக் கோபுரம் -- கேள்விப் பட்டு இருக்கேன்..
கதை தெரியாதது. தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
உணர்ச்சிப் பூரமான கதை...
10:26 PM
///
அந்த ஊரில் இருந்ததால் கொஞ்சம் தெரிஞ்சிருக்கு மாதவன் வருகைக்கு நன்றி
///மகேந்திரன் said...
ReplyDeleteபெரியவர்கள் அருளிய சரித்திரக் கதையை
எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல சகோதரி.
வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றிய வீரக்கதை எனக்கு ஒரே ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது...
வெள்ளையம்மாள் என்ற பெயர் சரித்திரத்தில் வீர மங்கைகளுக்கான பெயராக நிற்கிறது என்பது.
11:06 PM
////
ஆ,மாம் அவள் பெயர் என்றும் நிலத்து நிற்கும் அப்பேர்ப்பட்ட தியாகம் செய்தவள் கருத்துக்கு நன்றி
கணேஷ் said...
ReplyDeleteஸ்ரீரங்கத்தின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள்! கதைகள்! வியக்கிறேன். உணர்ச்சி ததும்ப நீங்கள் விவரித்திருப்பது என்னையும் பற்றிக் கொண்டது. இனி ஸ்ரீரங்கம் சென்றால் கண்கள் தாமாக வெள்ளைக் கோபுரத்தின் பால் திரும்பும்; மனம் வணங்கும். அழகுறத் தந்தமைக்கு நன்றிக்கா
>>>>>>
நன்றி கணேஷ்
ஸ்ரீரங்கம்போனால் கிழக்குவாசலில் நிற்கும் இந்தகோபுரத்தையும் கண்டுவாருங்கள்.
..Ramani said...
ReplyDeleteஇதுவரை அறியாத அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
பதிவின் நடை என்னை அந்தக் காலத்திற்கே
அழைத்துச் சென்றது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
<<<<
நன்றி ரமணி என் அப்பா சொல்லியபடி வரலாறை அறிந்து எழுதினேன்
தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆஹா! உண்மையில் அருமையானப் பதிவு...
அதற்கு நன்றிகள் சகோதிரி....
"செயற்கரிய செய்வார் பெரியர் - சிறியர்
செயற்கரிய செய்க லாதார்"
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவர்"
புதிய வரலாற்றுக் கதை அதை அருமையாக தொகுத்துத் தந்த தங்களுக்கும்
அதை தந்த தங்களின் தந்தையாருக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றிகள் சகோதிரி
<<<<<<
ஆமாம் சகோதரஏ தந்தை கூறியதை மனதில் வாங்கி மேலும் விவரம் சேகரித்து எழுதினேன் நன்றி மிக மனம் திறந்த கருத்திற்கு
தமிழ் விரும்பி said...
ReplyDelete///"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"///
இந்த இடத்திலே கண்கள் பனித்தன... அருமை.. அருமை..
8:25 AM
...எழுதும்போது என் கண்களும்தான் ஆயிரம் முறை பார்த்தாலும் வெள்ளைகோபுரம் என் உள்லத்தில் கோபுரமாய் உயர்ந்தே நிற்கிறது
.. தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteவணக்கம்! ஸ்ரீரங்கம் கீழவாசல் கோபுர சம்பவத்தை உங்களுக்கே உரிய கற்பனை மெருகோடு சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! இன்னும் அந்த வெள்ளை கோபுரத்தோடு இணைந்த வைணவம் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் உண்டு. அவைகளையும் எழுதுங்கள்! நன்றி!
9:46 AM
நன்றி திரு இளங்கோ கோயிலொழுகு படிச்சி மேலும் எழுத முயல்கிறேன் நன்றி கருத்துக்கு
சா இராமாநுசம் said...
ReplyDeleteசகோதரி!
மீள் பதிவு என்றாலும் என்றும்
நெஞ்சை விட்டு மீளாத பதிவு!
சுவை படச் சொன்னீர்! கல்லில்
எழுத்துப் போல் கருத்தில் பதிந்தது!
புலவர் சா இராமாநுசம்
<<<<<
மிகக் நன்றி புலவர் ஐயா
ரசிகன் said...
ReplyDelete// நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.//
ஆரம்ப வரியே அசத்தல். அந்த வரியை ஆரம்பத்தில் வைத்ததும் அசத்தல்.
கதை எழுதுவது உங்களுக்கு லாவகமாக கை வருகிறது. அந்த நாளுக்கே என்னை அழைத்து சென்றது.கோபுரத்திலிருந்து அவள் கீழே விழும் போது மனது அரற்றியது. கண்கள் கலங்கின.
\ <<<<
ஆமாம் அது நெகிழ்ச்சியான நிகழ்வு அல்லவா?
//வெள்ளையம்மாவை பார்க்கவாவது ஸ்ரீரங்கம் போகவேணும்>><<>>>
கண்டிப்பா போய் பார்த்துவாங்க ரசிகன்
அன்பான கருத்துக்கு நன்றி மிக.
RAMVI said...
ReplyDeleteமிக அற்புதமான வரலற்று நிகழ்வு.சிறப்பாக கொடுத்திருக்கீங்க.
இதைப்படிக்கும் பொழுது எனக்கு சிலிர்த்து விட்டது
>>.வாஙக் ராம்வி/ உண்மை நிகழ்வு அதான் சிலிர்ப்பாகிறது வாசிக்கையில் நன்றி கருத்துக்கு
// K.s.s.Rajh said...
ReplyDeleteவணக்கம் அக்கா உங்கள் பதிவின் மூலம் புதிய ஒரு தகவல் அறிந்துகொண்டேன்.அருமையாக சொல்லியிருக்கீங்க
1:59 PM
<< நன்றி ராஜா உஙக்ளை இளைய தலைமுறையினர் இதையெல்லாம் வாசிக்கிறீர்கள் என்பதே பெருமையாக இருக்கிறது
// sasikala said...
ReplyDeleteபடங்களும் அறிய பதிவும் அருமை
3:01 PM
நன்றி சசிகலா
.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவெள்ளை கோபுரம் பற்றி ஓரளவு கேள்விப்பட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன். இவ்வளவு சிறப்பானதோர்
சரித்திரம் இதன் பின்னனியில் உள்ளதைத் தங்களின் இந்தப்பதிவின் மூலமே அறிந்தேன். மகிழ்ச்சி.
தகவல் கொடுத்து அழைத்ததற்கு நன்றி.
3:47 PM
மிகக் நன்றி திரு வைகோ ஸார்!
நாடி நாடி நரசிங்கா! said...
ReplyDeleteGreat:)
தாங்க்யூ!
Rathnavel said...
ReplyDeleteஅரிய செய்திகள்.
மிக்க நன்றி
மிகக் நன்றி திரு ரத்னவேல்
//ரிஷபன் said...
ReplyDeleteஇஷ்வாகு குலதனத்தைக் காக்க அன்று எத்தனை பேர் போராடினார்கள்.. இத்தகைய கதைகளை எத்தனை முறை மீள் பதிவிட்டாலும் தகும்..
அற்புதமான சொல்லாற்றலுக்கும் படிக்கும்போதே சிலிர்த்துப் போக வைத்த எழுத்து நடைக்கும் ஒரு சபாஷ்.
9:48 AM
சரியாக சொன்னீர்கள் ரிஷபன் அந்த குலதனத்தைக்காப்பாற்ற அரங்கன் அடியார்கள் எத்தனைப்பேர் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள்! அவர்களை உலகம் அறிந்துகொள்ளஏதோ என்னாலான சிறுமுயற்சியாய் இப்பதிவு ..உஙக் பாராட்டு மகிழ்ச்சியாய் உள்ளது ரி!
துளசி கோபால் said...
ReplyDeleteஅருமை ஷைலூ! மீள்பதிவா இது!!!!!!!!
<<<ஆமாதுள்சிமேடம்.உங்கபாராட்டுக்கு நன்றி
துரைடேனியல் said...
ReplyDeleteவெள்ளையம்மாளின் தியாகம் உண்மையிலேயே அளப்பரியதுதான். அருமையான வரலாற்றுக்குறிப்பை கதை வடிவில் பகிர்ந்ததற்காக
நன்றி//
வரலாறு சுவையானதுதானே அதைக்கதையாக எழுதும்போது சுவை சற்று கூடலாம் கருத்துக்கு நன்றி திரு துரை
சிலிர்த்துப் போனேன். திருவானைக்காவில் அத்தனை நாள் இருந்திருக்கிறேன் - இந்த விவரம் தெரியவே தெரியாது. இனி ஸ்ரீரங்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கதை நினைவுக்கு வரும்.
ReplyDeleteநன்றி.
இரண்டாவது படம் சமீபத்துப் படமா பழைய படமா?
ReplyDelete//அப்பாதுரை said...
ReplyDeleteசிலிர்த்துப் போனேன். திருவானைக்காவில் அத்தனை நாள் இருந்திருக்கிறேன் - இந்த விவரம் தெரியவே தெரியாது. இனி ஸ்ரீரங்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கதை நினைவுக்கு வரும்.
நன்றி.
6:46 AM
///
வாங்க அப்பாதுரை! ஸ்ரீரங்கத்தில் இருந்தபோதே கொஞ்சம் இதுபற்றி தெரிந்துகொண்டேன் ஆனால் ஊரைவிட்டுப்பிரிந்துவந்ததும் மேலும் விவரங்கள் தெரியவந்தன அதை பகிர்ந்துகொண்டேன் அவ்ளவுதான் ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அந்தபோட்டோக்கள் சமீபத்தில் எடுத்தவைகள்தான். அதாவது ஓரிருவருஷங்கள் முன்பு.
அருமை வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
ReplyDeletedhanasekaran .S said...
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
12:45 PM
>>மிக்க நன்றி தனசேகரன் நாலுமுறை வாழ்த்திவிட்டீர்களே!
மீள் பதிவு படித்திருக்கிறேன் ஷை.
ReplyDeleteஇந்தத் தமிழ் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு எனக்கு. உங்கள் சொல்லாட்சிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
அருமையானதொரு சரித்திர நிகழ்வை உங்கள் அழகுத்தமிழில் வாசிக்கும்போது இன்னும் நெகிழ்ச்சியா இருக்கு.
ReplyDeleteஅப்பாடி...வெள்ளைக்கோபுரம்போலவே உங்கள் எழுத்துத்திறமையும் உயர்ந்து நிற்கிறது.சொல்ல முடியாமல் திணறுகிறேன்.வாசிக்கையில் உண்மையில் சிலிர்த்துவிட்டேன்.
ReplyDeleteவாழ்த்துகள் !
சகோதரி ஷைலஜாவுக்கு நமஸ்காரம். வெள்ளைக் கோபுரம் பற்றிய தகவல்களைப் பெற நானும் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் சென்று, தாங்கள் அறிந்த வைஷ்ணவ பெரியவர் திரு.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களை சந்தித்து உரையாடி வந்தேன். கோயில் ஒழுகு புத்தகத்தை பல பாகங்களாக எழுதியவரும் அவரே! தாங்கள் சொன்ன வெள்ளையம்மாள் சரித்திரத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார், தாங்கள் சொன்னபடியே!
ReplyDeleteஎனக்கு இதில் ஒரு சந்தேகம்... தாங்கள் குறிப்பிடும் அமுதனார், தளபதி அடில்கான் பெயர்கள் சரிதானா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? இருந்தால்... தெரிவிக்க வேண்டுகிறேன்.