Social Icons

Pages

Thursday, January 05, 2012

புண் நகை என்ன விலை?:)


ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை கதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில்  முக நூல் அக நூல் எஸ் எம் எஸ் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).

”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!


கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம்  முத முதல்ல டிவிக்கு நேரடி ஒளிபரப்புக்கு காம்பியரிங் செய்யப்போற விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்லஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி  ஒருவார்த்தைல வாழ்த்தி முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இதை முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.


ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.

நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சோ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)


. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்


ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும்  நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.வாய்ப்புண் வலி அதிகரித்தது.ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”ரெண்டும் பயங்கர  ருசியாய்  இருக்கவே தடவினதை  சாப்பிட்டுவிட்டேன்!”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..ஓ மை காட் அதுக்கு ஏது  நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.மணி 8 45வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க  வாய்ல புண் என்றாலும் மனசில் பெருமை பொங்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே  ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


 ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே அந்த குஷன் நாற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான் வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!

(இரண்டுவருஷம் முன்பு நடந்த அனுபவம்  வைகுண்ட ஏகாதசிக்கு  மீள் பதிவு...இதுபோல  பழைய காப்பி அல்லது புது ரிலீஸ் இன்று முழுக்க இன்றைய வைகுண்ட ஏகாதசி  ஸ்பெஷலாக வந்துகொண்டிருக்கும்...:))

29 comments:

 1. உண்மைதான் இது பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும் நிகழ்வு தான்...
  முதலில் சோதித்து அவனின் மேல் நீங்கள் கொண்ட பக்தியை மெச்சி சாதிக்க அருள் செய்திருக்கிறான்...
  நன்றி.

  ReplyDelete
 2. மீள்பதிவா. நான் இப்பத்தான் படிக்கிறேன்.அரங்கன் கேட்டிருப்பானே அது போதும்.

  ReplyDelete
 3. Anonymous11:48 AM

  சுவாரஸ்யமாக இருந்தது . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இதற்கு முன்பு படிக்கவில்லை
  படிக்காதவர்களுக்கு புதிய பதிவுதானே
  அதுவும் சரியாக இந்தத் தின நிகழ்ச்சி குறித்தே இருக்கையில்.
  ம்னம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொட்ர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. கரண்ட் இல்லாததால ரெண்டு மணி நேரம் லேட்டா வர்றேன். லேட்டஸ்டா திரட்டிகள்ல இணைச்சிட்டேன். மெலிதான நகைச்சுவையுடன் கொண்டு சென்று நெகிழ்ச்சியுடன் முடிக்கும் அற்புதக் கலையை பெங்களூரு வந்து டியுஷன் எடுத்துக்கலாம்னு இருக்கேன்க்கா..

  ReplyDelete
 6. அரங்கன் காப்பாற்றி விட்டான்.

  மீள் பதிவு என்று முதலில் தெரியாத்தால்,அதற்குள் பதிவு போட்டுவிட்டீர்களா எனறு பார்த்தேன்.

  உங்க கஷ்டத்தை சுவாரசியமாக விவரித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 7. அட ஷைலூ.........அரங்கன் இப்படி ஆட்டிவச்சுட்டானா:-)))))))))

  முந்தாநாள்தான் பகல்பத்து ராப்பத்து டிவிடி(தில்லக்கேணி பாசாதி கோவில்) வாங்கிவந்தோமேன்னு நினைவுக்கு வந்து தேடிப்பார்த்து (ரெண்டரை மணி நேரம் தேடுதல் மட்டும் கேட்டோ!) வழியில் ஆப்ட்ட சில வள்ளிகளையும் எடுத்து வச்சுக்கிட்டு ஒவ்வொன்னா பார்க்க / கேட்க ஆரம்பிச்சுருக்கேன்.

  மீள்பதிவு????? முந்தி வாசிச்ச நினைவு இல்லையேப்பா:(

  ReplyDelete
 8. //...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி ஒருவார்த்தைல வாழ்த்தி முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இதை முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.
  //

  :))))

  மீள் பதிவா! நான் இன்று லைவ் பார்க்கலாம் என்று முதலில் நினனத்தேன்....

  பெண் நகையோடு புன்னகையை மறைத்தீங்களா?! அங்கங்க உங்க ஹாஸ்யம் வழக்கம் போல் க்ளாஸ்

  ReplyDelete
 9. சத்தியத்துக்குன்னு ஒரு அழகு இருக்கு. அந்த அழகை எத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் பளீர்னுதான் இருக்கும். உங்க கட்டுரையும் அந்த ரகம்தான்.

  ReplyDelete
 10. துளசி கோபால் said...
  அட ஷைலூ.........அரங்கன் இப்படி ஆட்டிவச்சுட்டானா:-)))))))))


  nice:)

  ReplyDelete
 11. நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

  ReplyDelete
 12. படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.நேரில் கேட்க்காதது ஒரு குறை.

  ReplyDelete
 13. இந்த தங்களின் படைப்பு வெகு அருமையாக நகைச்சுவையாக உள்ளது.

  ’புண்’ நகை க்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  அன்புடன்
  வை. கோபாலகிருஷ்ணன்.

  ReplyDelete
 14. பெண்லைன் :)
  வாய்ப்புண் வைத்தியத்துல நாலு கிலோ எடை கூடிடும் போலிருக்கே?

  ReplyDelete
 15. பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி.
  கணேஷு உங்க திகில் கதைல நகைச்சுவை வருதே என்கிட்ட ட்யூஷன் எடுக்கணுமா ரொம்ப ஓவரா இருக்கே இதெல்லாம்?:)
  அப்பாதுரை ஸார்... எடை இப்போகூடினதுக்கு நீங்க சொன்ன அதான் காரணமா இருக்குமோ?:):)
  துள்சி மீள்பதிவுதான் முன்னே எழுதினதைப்படிக்கலையா அப்பாடி நல்லதாபோச்சு:) இந்தமாதிரி நிறைய மீள்பதிவு போடலாம் போல்ருக்கே:) நிறையபேருக்கு செல்க்டிவ் அம்னீஷ்யான்னு நினைக்கிறேன்:) எனிவே தாங்க்யூ ஃப்ரண்ட்ஸ்!

  ReplyDelete
 16. யூ ட்யூப்ல இருக்கா அக்கா?

  ReplyDelete
 17. எல்லாம் இறைவன் அருள்.

  ReplyDelete
 18. // குமரன் (Kumaran) said...
  யூ ட்யூப்ல இருக்கா அக்கா?

  11:51 PM

  /////

  என்ன குமரன் இப்படிக்கேட்டுட்டீங்க?:) யு ட்யூப்ல இருந்தா இங்க போடாம டமாரம் அடிக்காம அடக்கமா இருப்பேனா நான்?:) எல்லாம் எதிர்பாராமல் நடந்துமுடிந்துவிட்டது!!!

  ReplyDelete
 19. // Rathnavel said...
  எல்லாம் இறைவன் அருள்.

  8:21 AM

  //


  ஆமாங்க...அந்த அருளின்றி ஏதுமில்லை.. நன்றி வருகைக்கு.

  ReplyDelete
 20. சமீபத்திய பங்கெடுப்பா இருந்தா யூடியூப்ல கேக்கலாமேன்னு வந்தேன். மீள்பதிவா??.. ரைட்டு.

  அரங்கன் சோதிச்சு பரிசு கொடுத்துருக்கான் :-)

  ReplyDelete
 21. // ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்//

  நீங்க வருந்தினது அவர் காதில் விழுந்திருக்கும். அதான் சரியாக்கிட்டார்.

  கடைசி வரை ராப்பத்து அப்படின்னா என்னன்னு சொல்லவே இல்லையே!

  ReplyDelete
 22. நான் தாமதமாக படிக்கிறேனா, அதனால் தலை கீழாக படிக்கிறேன். உங்கள் முந்தைய இடுகையில் பகல் பத்து, ராப்பத்து பற்றி விளக்கமாகவே சொல்லி இருக்கிறீர்கள். நன்று.

  ReplyDelete
 23. ரசிகன் said...
  நான் தாமதமாக படிக்கிறேனா, அதனால் தலை கீழாக படிக்கிறேன். உங்கள் முந்தைய இடுகையில் பகல் பத்து, ராப்பத்து பற்றி விளக்கமாகவே சொல்லி இருக்கிறீர்கள். நன்று
  <<<<<<

  ம்ம் அதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்

  ReplyDelete
 24. அமைதிச்சாரல் said...
  சமீபத்திய பங்கெடுப்பா இருந்தா யூடியூப்ல கேக்கலாமேன்னு வந்தேன். மீள்பதிவா??.. ரைட்டு.

  அரங்கன் சோதிச்சு பரிசு கொடுத்துருக்கான் :-)

  <<,ஆமாம் அமைதிச்சாரல் அவன் சோதனைல தான் மனசின் இருள் அகன்று ஜோதி வருகிறது.

  ReplyDelete
 25. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (01/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. நன்றி திருயாதவன் நம்பி வைகோ சார் வலைப்பூ சென்று நன்றி தெரிவித்துவிட்டேன் தகவல் சொல்லியதங்களுக்கு மிக்க நன்றி

   Delete
 26. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். புதுவைவேலு அந்த இனிய செய்தியைத் தெரிவித்ததறிந்து மகிழ்ச்சி. தங்களது தளம் கண்டேன். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி திருஜம்புலிங்கம்
   நானும் பார்த்து பதில் அளித்துவிட்டேன்

   Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.