Social Icons

Pages

Tuesday, January 31, 2012

பதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி!

 கதிரவனுக்கும் காற்றுக்கும் விளம்பரம் தேவை இல்லை. செறிவான வார்த்தைகளில் சிந்தை கவரும் விதத்தில் பல இடுகைகளை இட்டுவரும் திரு அப்பாதுரை அவர்கள் தனது வலைப்பூக்களில் தனி முத்திரை பதித்து வருவதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

 திரு அப்பாதுரை அவர்கள்    தனது வலைப்பூவில்    புத்தாண்டில் பத்து என்ற தலைப்பில் தான் ரசித்த பத்து வலைப்பூக்களை பாராட்டி  எழுதி இருப்பதில் என் வலைப்பூவினையும் சேர்த்துள்ளார்.அதற்கு அவருக்கு மனம் கனிந்த நன்றி. அங்கேயும் முன்பே அவருக்கு நன்றி கூறிவிட்டேன்.

 ஆயினும்  ஒருவர்  மற்றவரை அதுவும் பத்துபேர்களை புத்தாண்டின் சிறப்புப்பதிவில்  வாழ்த்தி அவர்களை பெருமைப்படுத்துவது என்பது சாதாரண செயல் அல்ல.வார்த்தைகளை  வருடும் சிறகுகளாய் மாற்ற எல்லோராலும் முடியாது.

வார்த்தைகள் என்பது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்றும் ஒளியாக இருக்கவேண்டும் மனத்தை அறுக்கும்  வாளாக  இருக்ககூடாது,

மனிதனுக்கு வாழ்வே வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகள் நமது வாகனங்கள். அவைகளைக்கொண்டுதான் நமது வாழ்க்கைப்பயணம் கடக்கப்படுகிறது. வானுயரத்திற்கு நம்மை எழுந்து நிற்கவைக்கவும் தரையில் போட்டு தள்ளிவிடவும் வார்த்தைகளால் முடியும். அடுத்தவர் மீதான பிரியம் மட்டுமல்ல  அவர்கள் மீதான குரோதம் கசப்பு பொறாமை என்பதெல்லாம் கூட வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும்.

நாம் உதிர்க்கும் வார்த்தைகளினால் எத்தனைபேரைக்காயப்படுத்தி இருக்கிறோம் எத்தனை நட்பை இழந்திருக்கிறோம் எவ்வளவு இதயங்களை தொலைவில் தள்ளிவிட்டிருக்கிறோம் என்பதை அசைபோடும்போதே பதறிப்போகும் மனம்.

நாம் கவசம் போட்டுக்கொள்ளாமல் பழகினால் உலகமும் நம்மிடம் உண்மையாகப்பழகும் என்பார்கள்.

.ஆனால் மாறிவரும் காலநிலையைக்கண்டு,”நம் எல்லோருக்கும் கவசம் வேண்டும் நம்மைச்சூழ்ந்துள்ள எந்தப்புள்ளியிலிருந்தும் கல் எறியப்படலாம் தாய் தந்தை மனைவி நண்பன் என திசைபேதமின்றி எவரும் வீசலாம் எதிர்பாராமல் எறியப்படும் கல்கூட நம்மை  வந்தடைவதற்குள் கூரம்பாய் மாறும்  ஆம் நம் எல்லோருக்கும்
கவசம் வேண்டும் ”என்கிறார் கவிஞர் ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.

,
வார்த்தைகளைவிடவா மரணம் வலிக்கும் என்கிறார் கவிஞர் சே ப்ருந்தா.

கலீல் ஜிப்ரான் சொல்கிறார்...” அழகிய உண்மைகளை சின்னஞ்சிறிய சொற்களில் சொல்லுங்கள் ஆனால் அசிங்கமான உண்மைகளை எந்தச்சொற்களாலும் சொல்லாதீர்கள் கதிர் ஒளிபட்டு கூந்தல் மின்ன நிற்கும் பெண்ணிடம் நீ காலைப்பொழுதின் மகள் என்று சொல்லுங்கள் ஆனால் கண்பார்வைதெரியாதவனிடம் நீ இரவாக இருக்கிறாய் என்று சொல்லாதீர்கள்.”

எத்தனை எதார்த்தமாய் சொல்கிறார் பாருங்கள்!

பேச்சு நாகரீகம் என்பது இதுதானே? நம்முடைய எண்ணங்களை சிந்தனைகளை உலகியல்பார்வைகளை திறந்தமனத்தோடு பகிர்வதும் குத்தல் வார்த்தைகள் இன்றி நமது கருத்து நிலைப்பாட்டை சொல்வதும் நல்ல உரையாடலுக்கு அழகு.

மரங்கள் கூட சாதகமற்ற சூழ்நிலையில் இலைகளைக்கிளைகளை தள்ளிவிடுகின்றன வேர்களை அல்ல என்கிறார் கவிஞர் மு சிபிக்குமரன்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய்கவர்ந்தற்று என்கிறாரே வள்ளுவர்பெருமான்?

மனிதன் பிறரைக்காயப்படுத்தாத இகழாத இன்சொற்களால் அறியப்படுவான் என்பதுதான் எத்தனை உண்மை!

வார்த்தைச்சிறகுகள் மனதை வருடுவதைவிட வேறென்ன சுகம் உலகிலே?



யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரை தானே!

 என்பது திருமூலர்  வாக்கு.



(வாயுறை..வாயருகு(புல்)


31 comments:

  1. அருமைப் பதிவு ஷை. மனமார்ந்த நன்றி அவருக்கு இங்கும் தெரிவிப்பதோடு, உங்கள் பதிவுடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. இதை தொடர்பதிவா நானும் எழுத முயல்கிறேன்.

    ReplyDelete
  3. பத்தில் ஒரு முத்தாக மின்னுவதற்கு வாழ்த்துகள்! கோர்த்தளித்த அப்பாத்துரை அவர்களுக்கு நன்றி.

    ஆம், ஊக்கம் தரும் சொற்களே ஒருவருக்கு உற்சாகம் தந்து உயரத்தில் ஏற்றும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதை அழகுறச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  4. பத்தில் முத்தே.. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. மனம் திறந்து நன்றி நவில்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. வார்த்தைகளைப் பயன்படுவதைப் பற்றி நீங்கள் எழுதியது மிக அருமை. மொத்தத்தில் இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியும் எனக்கு ஏற்புடையதே. அருமைக்கா!

    ReplyDelete
  6. நன்றி சொல்வது மிகவும் சிறப்பான விடயம் பாராட்டுக்கள் அக்கா

    ReplyDelete
  7. Anonymous8:00 PM

    மிகவும் அருமையான பதிவு. எல்லாமே வார்த்தைகள்தான். ஆனால் அதை பிரயோக படுத்தும் இடத்திலும், விதத்திலும்தான் அதன் தன்மை மாறுபடுகிறது.
    பதிவின் பல வரிகள் மனதை அப்படியே கட்டி போட்டு விட்டது.
    //வார்த்தைகளைவிடவா மரணம் வலிக்கும் என்கிறார் கவிஞர் சே ப்ருந்தா.// உண்மைதான். அருமையாக கூறி இருக்கிறார் ப்ருந்தா.
    //மனிதனுக்கு வாழ்வே வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகள் நமது வாகனங்கள். அவைகளைக்கொண்டுதான் நமது வாழ்க்கைப்பயணம் கடக்கப்படுகிறது. வானுயரத்திற்கு நம்மை எழுந்து நிற்கவைக்கவும் தரையில் போட்டு தள்ளிவிடவும் வார்த்தைகளால் முடியும். அடுத்தவர் மீதான பிரியம் மட்டுமல்ல அவர்கள் மீதான குரோதம் கசப்பு பொறாமை என்பதெல்லாம் கூட வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும்.//
    Fantastic!

    ஷைலஜா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமாதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. உண்மைதான் வார்த்தைகளுக்குத் தான் எத்தனை சக்திகள்
    கனிந்த மனத்தால் கசிந்துருகி வார்த்தைகளில் அர்ச்சிக்கும்
    போது அவைகள் நம்மைக் கடவுளிடமே அழைத்துச் செல்கின்றனவாம்...
    அப்படி இருக்க அவைகள் எதிர்மறையாக பயனாகும் போது சொல்லவும் வேண்டாம்...
    "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

    பாராட்டுவது என்பதே சிலருக்கு இயலாத அவ்வளவானக் காரியம்...
    இன்னும் சிலரோ இறுக்கம் அப்படியொரு இறுக்கம்...
    இவர்கள் கூடப் பரவாயில்லை இன்னும் சிலரோ
    வாய் திறந்தாலே போதும் எப்பேர்ப் பட்டவனும் ஒடிந்துப் போவான்
    யாவரும் அறிந்ததே... உங்கள் பதிவால் விளைந்த கருத்து...

    பாராட்டுவது மிகவும்நன்று அதனினும் நன்று
    பாராட்டிற்கு நன்றி நவில்வது.

    நல்லதொரு பதிவு... நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  10. Anonymous9:05 PM

    பதிவுக்கு மிகவும் பொருத்தமாய் திருமூலர் வாக்கு மிகவும் நன்று.

    ReplyDelete
  11. தங்கள் திறமைக்கு, தகுந்த திறமைசாலியான ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ள, மிகச்சிறப்பான அங்கீகாரம் தான் இது.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    மனமார்ந்த நன்றிகள்
    உங்களின் இந்தப்பதிவுக்கும்
    இந்தப்பதிவுக்குக் காரணமான திரு. அப்பாதுரை ஐயா அவர்களுக்கும்.

    ReplyDelete
  12. பத்தில் ஒன்றாக பதிவர் அப்பாதுரை அவர்களால் தேர்ந்தெடுக்கபட்டிருப்பது பற்றி பாராட்டுகள்.
    உங்கள் எழுத்தை பற்றி சொல்ல தேவையில்லை.நல்ல பதிவு

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்... நானும் அவரோட பதிவுகள் வாசிச்சுருக்கேன்...

    ReplyDelete
  14. பத்திலொரு முத்தாக பரிமளித்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. என்னங்க இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உங்க பதிவை ரசிச்சதினாலும் மதிச்சதினாலும் என்னோட விருப்பத்தை எழுதினேன், அவ்வளவு தான். தலையில் வைத்துக் கொண்டாடியதுக்கு (:-) ரொம்ப நன்றி.

    "வார்த்தைகளைவிடவா மரணம் வலிக்கும்" - சுத்தி சுத்தி வருதுங்க. poignant, profound..!

    ReplyDelete
  16. திரு அப்பாதுரை அவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் அருமை. இப்படி அருமையாக வார்த்தைகளை கையாளுவதால் தான் அவர் தனது வலைப்பூவில் உங்களை பாராட்டி எழுதி இருக்கிறார்.

    உங்கள் வார்த்தைகள் பாராட்டுகின்றன. அதனாலேயே பாராட்டப் படுகின்றன.

    வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  17. Shakthiprabha said...
    அருமைப் பதிவு ஷை. மனமார்ந்த நன்றி அவருக்கு இங்கும் தெரிவிப்பதோடு, உங்கள் பதிவுடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன்.

    3:29 PM

    >>>.நன்றி ஷக்தி

    ReplyDelete
  18. Jeeves said...
    அருமையான பதிவு. இதை தொடர்பதிவா நானும் எழுத முயல்கிறேன்.

    5:19



    எழுது ஜீவ்சு உனக்கு நல்லா எழுதவருமே

    ReplyDelete
  19. ராமலக்ஷ்மி said...
    பத்தில் ஒரு முத்தாக மின்னுவதற்கு வாழ்த்துகள்! கோர்த்தளித்த அப்பாத்துரை அவர்களுக்கு நன்றி.

    ஆம், ஊக்கம் தரும் சொற்களே ஒருவருக்கு உற்சாகம் தந்து உயரத்தில் ஏற்றும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதை அழகுறச் சொல்லியுள்ளீர்கள்
    >>>

    நன்றி ராமல்ஷ்மி // ஊக்கம் தரும் சொற்கள் இலலவிட்டாலும் குற்றம் ஒன்றையே கண்டுபிடிக்கும் சொல் ஆயாசத்தை தருகிறது நமக்கு இல்லையா? திரு அப்பாதுரை அவர்களூக்கு நன்றி தெரிவிக்க இதை வாய்ப்பாய் எடுத்துக்கொண்டேன் உங்க கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. ரிஷபன் said...
    பத்தில் முத்தே.. வாழ்க வளமுடன்
    <<<<> எழுத்துலக ரத்தினமே நன்றி மிக!

    ReplyDelete
  21. கணேஷ் said...
    மனம் திறந்து நன்றி நவில்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. வார்த்தைகளைப் பயன்படுவதைப் பற்றி நீங்கள் எழுதியது மிக அருமை. மொத்தத்தில் இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியும் எனக்கு ஏற்புடையதே. அருமைக்கா
    <<<<<<<\\\ நன்றி கணேஷ் தமிழ்மணத்துல சேர்க்கமுடிஞ்சதா இப்பொ?

    ReplyDelete
  22. தமிழ் விரும்பி said...
    உண்மைதான் வார்த்தைகளுக்குத் தான் எத்தனை சக்திகள்
    கனிந்த மனத்தால் கசிந்துருகி வார்த்தைகளில் அர்ச்சிக்கும்
    போது அவைகள் நம்மைக் கடவுளிடமே அழைத்துச் செல்கின்றனவாம்...
    அப்படி இருக்க அவைகள் எதிர்மறையாக பயனாகும் போது சொல்லவும் வேண்டாம்...
    "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

    பாராட்டுவது என்பதே சிலருக்கு இயலாத அவ்வளவானக் காரியம்...
    இன்னும் சிலரோ இறுக்கம் அப்படியொரு இறுக்கம்...
    இவர்கள் கூடப் பரவாயில்லை இன்னும் சிலரோ
    வாய் திறந்தாலே போதும் எப்பேர்ப் பட்டவனும் ஒடிந்துப் போவான்
    யாவரும் அறிந்ததே... உங்கள் பதிவால் விளைந்த கருத்து...

    பாராட்டுவது மிகவும்நன்று அதனினும் நன்று
    பாராட்டிற்கு நன்றி நவில்வது.

    நல்லதொரு பதிவு... நன்றிகள்
    <<<<,ஆமாம் சகோதரரே நீங்கள் எப்போதும் பாராட்டித்தான் பின்னூட்டம் இடுகிறீர்கள். உங்களைப்போன்றவர்கலிடமிருந்துதான் நானும் கற்றுக்கொள்கிறேன் மிக்க நன்றி பின்னூட்டம் இட்டதற்கு

    ReplyDelete
  23. மீனாக்ஷி said...
    பதிவுக்கு மிகவும் பொருத்தமாய் திருமூலர் வாக்கு மிகவும் நன்று.

    9:05 PM

    <<<<<< நன்றி மீனாக்‌ஷி

    ReplyDelete
  24. .கோபாலகிருஷ்ணன் said...
    தங்கள் திறமைக்கு, தகுந்த திறமைசாலியான ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ள, மிகச்சிறப்பான அங்கீகாரம் தான் இது.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.


    >>>>>>>>
    திறமைலாம் ஒன்றும் அதிகமில்லை வைகோ ஸார்.. கற்றது கை அளவுகூட இல்லை . ஆயினும் அப்பாதுரை சார் பாராட்டினதுல ஒரு சின்ன மகிழ்ச்சி அதற்குந்ன்றிதெரிவித்தேன் தாங்களும் பாராட்டுவதில் மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  25. .<<<<<< மீனாக்ஷி said...
    மிகவும் அருமையான பதிவு. எல்லாமே வார்த்தைகள்தான். ஆனால் அதை பிரயோக படுத்தும் இடத்திலும், விதத்திலும்தான் அதன் தன்மை மாறுபடுகிறது.
    பதிவின் பல வரிகள் மனதை அப்படியே கட்டி போட்டு விட்டது.
    //வார்த்தைகளைவிடவா மரணம் வலிக்கும் என்கிறார் கவிஞர் சே ப்ருந்தா.// உண்மைதான். அருமையாக கூறி இருக்கிறார் ப்ருந்தா.
    //மனிதனுக்கு வாழ்வே வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகள் நமது வாகனங்கள். அவைகளைக்கொண்டுதான் நமது வாழ்க்கைப்பயணம் கடக்கப்படுகிறது. வானுயரத்திற்கு நம்மை எழுந்து நிற்கவைக்கவும் தரையில் போட்டு தள்ளிவிடவும் வார்த்தைகளால் முடியும். அடுத்தவர் மீதான பிரியம் மட்டுமல்ல அவர்கள் மீதான குரோதம் கசப்பு பொறாமை என்பதெல்லாம் கூட வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும்.//
    Fantastic!

    ஷைலஜா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமாதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    8:00 PM

    மீனாக்‌ஷி இத்தனை அழகாய் படித்து அருமையாய் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்களே நாந்தான் அதற்கு நன்றி சொல்லணும்

    ReplyDelete
  26. sarathi said...
    பத்தில் ஒன்றாக பதிவர் அப்பாதுரை அவர்களால் தேர்ந்தெடுக்கபட்டிருப்பது பற்றி பாராட்டுகள்.
    உங்கள் எழுத்தை பற்றி சொல்ல தேவையில்லை.நல்ல பதிவு

    8:11 AM

    <<நன்றி பார்த்தசாரதி

    ReplyDelete
  27. அப்பாவி தங்கமணி said...
    வாழ்த்துக்கள்... நானும் அவரோட பதிவுகள் வாசிச்சுருக்கேன்...

    8:53 PM

    <<<<<ஆமாம் அப்பாதுரை ஸார் எழுத்துகக்ள் அபாரமானவை நன்றி தங்கமணி வருகைக்கு

    ReplyDelete
  28. கே. பி. ஜனா... said...
    பத்திலொரு முத்தாக பரிமளித்தமைக்கு வாழ்த்துக்கள்!

    10:32 PM

    <<<<<<<<\\வைர எழுத்துக்கு சொந்தக்காரர் பாராட்டுவதில் மகிழ்ச்சி நன்றி ஜனா

    ReplyDelete
  29. Rathnavel Natarajan said...
    வாழ்த்துகள்.

    11:


    நன்றி திரு ரத்னவேல்

    ReplyDelete
  30. அப்பாதுரை said...
    என்னங்க இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உங்க பதிவை ரசிச்சதினாலும் மதிச்சதினாலும் என்னோட விருப்பத்தை எழுதினேன், அவ்வளவு தான். தலையில் வைத்துக் கொண்டாடியதுக்கு (:-) ரொம்ப நன்றி.<<<<


    சின்ன விஷயத்துக்கெ நன்றி சொல்வது என்வழக்கம் எப்போதவாது எழுதும் என் வலைப்பூவினை சிலாகித்து நீஙக் எழுதினதுக்கு நன்றி சொல்லாம இருக்கலாமா?

    //
    1:11 AM

    ReplyDelete
  31. ரசிகன் said...
    திரு அப்பாதுரை அவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் அருமை. இப்படி அருமையாக வார்த்தைகளை கையாளுவதால் தான் அவர் தனது வலைப்பூவில் உங்களை பாராட்டி எழுதி இருக்கிறார்.

    உங்கள் வார்த்தைகள் பாராட்டுகின்றன. அதனாலேயே பாராட்டப் படுகின்றன.

    வாழ்த்துக்கள்
    <<<<<<<<
    ஆஹா அருமையான பின்னூட்டம் ரசிகன் நன்றி மிக.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.