Social Icons

Pages

Tuesday, May 13, 2008

கோடைக்காலம்!

பெய்யும் மழைக்குக்
கோடையில்ஓய்வுக்காலம் -ஆயினும்
தெய்வங்கள் தெருவெங்கும் பவனிவரும்
திருவிழாக்காலம் கோடை!

முதுவேனில் கோடை என்று
முன்னோர்கள் சொன்னார்கள்-இன்றோ
இளவேனில் அனல்தகிக்கும்
இயற்கையின் கோபக்காலம்!

தாகம் தணிக்கவென்று
தர்பூசனிப்பழங்களோடு
வேகமாய் விற்பனையாகும்
விதவிதமான குளிர்பானங்கள்
வாடையால் வாடி
வரவுக்கு யாருமின்றி
வருந்திக் காத்திருந்த
கோடைமலைதலங்களெல்லாம்
கொண்டாடும் பொற்காலம்!

வாழையடிவாழையென
வசதிகள்கொண்டவர்க்கு
கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
வாடையை வாங்க இயலும்,
ஆனால்..

ஏழைக்கு என்றைக்கும்
கோடைக்கு மோர்மட்டும்!

28 comments:

  1. //வாழையடிவாழையென
    வசதிகள்கொண்டவர்க்கு
    கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
    வாடையை வாங்க இயலும்,
    ஆனால்..

    ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்!
    //

    சூப்பர். அருமையா முடிச்சீங்க.

    ReplyDelete
  2. ambi said...
    //வாழையடிவாழையென
    வசதிகள்கொண்டவர்க்கு
    கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
    வாடையை வாங்க இயலும்,
    ஆனால்..

    ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்!
    //

    சூப்பர். அருமையா முடிச்சீங்க.

    4:08 AM
    >>>நன்றி அம்பி வருகைக்கும் கருத்துக்கும்!(உங்க தம்பி எனக்கு கேஆர் எஸ் வந்தப்போ அறிமுகமாயிட்டாரே!)

    ReplyDelete
  3. /வாழையடிவாழையென
    வசதிகள்கொண்டவர்க்கு
    கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
    வாடையை வாங்க இயலும்,
    ஆனால்..

    ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்!/

    உண்மை தான்
    இயல்பான கவிதை

    ReplyDelete
  4. //உங்க தம்பி எனக்கு கேஆர் எஸ் வந்தப்போ அறிமுகமாயிட்டாரே!)
    //

    ஆமா! எல்லா விவரமும் சொன்னான். அவனுக்கு மட்டும் நீங்க சுட சுட கேசரி செஞ்சு குடுத்ததையும் சொன்னான். (காதிலிருந்து புகை) :p

    உங்களை பொதிகைல சித்தர் தரிசனத்துல பாத்தேனே! :))

    ReplyDelete
  5. ambi said...
    //உங்க தம்பி எனக்கு கேஆர் எஸ் வந்தப்போ அறிமுகமாயிட்டாரே!)
    //

    ஆமா! எல்லா விவரமும் சொன்னான். அவனுக்கு மட்டும் நீங்க சுட சுட கேசரி செஞ்சு குடுத்ததையும் சொன்னான். (காதிலிருந்து புகை) :p


    >>> நீங்களும்வீட்டுக்கு வரப்போ கேசரி அதேமாதிரி செய்துடறேன் என்ன?:)

    உங்களை பொதிகைல சித்தர் தரிசனத்துல பாத்தேனே>>>

    :):) அப்படி சாதுவா இருக்கமாட்டேன் நேர்ல ..பொது இடம் என்பதால் அடக்கஒடுக்கம்!!!

    ReplyDelete
  6. மோர் நிறையக் கிடைக்கிறது ஷைலஜா. சாயீ ட்ர்ஸ்ட் உதவியில் மோர் வழங்குகிறார்கள்.

    அருமையான குளிர் கொடுக்கும் கவிதை.
    ஏன்பா பொதிகையில் தோன்றுவதற்கு முன்னால்ஒரு மெயில் போடுங்க. நான் பார்க்க வேண்டாமா.!!

    ReplyDelete
  7. வல்லிசிம்ஹன் said...
    மோர் நிறையக் கிடைக்கிறது ஷைலஜா. சாயீ ட்ர்ஸ்ட் உதவியில் மோர் வழங்குகிறார்கள்.

    >>>அப்படியா நல்ல சேவை!

    அருமையான குளிர் கொடுக்கும் கவிதை.>>
    நன்றி வல்லிமா

    ஏன்பா பொதிகையில் தோன்றுவதற்கு முன்னால்ஒரு மெயில் போடுங்க. நான் பார்க்க வேண்டாமா>>>

    அதுல என் பங்கு அதிகமில்ல வல்லிமா..கூச்சமா இருக்கு சொல்லிக்கவே...

    ReplyDelete
  8. // அப்படி சாதுவா இருக்கமாட்டேன் நேர்ல ..பொது இடம் என்பதால் அடக்கஒடுக்கம்!!!//

    அட ஆமாம் அம்பி, இதெல்லாம் முதல்ல நம்பு... :)

    //அதுல என் பங்கு அதிகமில்ல வல்லிமா..கூச்சமா இருக்கு சொல்லிக்கவே...//

    வல்லியம்மா ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுறாங்க...நம்பாதீங்க.
    அடுத்த எபிஸோட் எடுத்தாச்சு, விரைவில் சின்னத்திரையில் காணலாம்.

    நாராயண, நாராயண...

    ReplyDelete
  9. எல்லோருக்குமே கோடைக்கு மோர் ஏற்றது தான்.

    ReplyDelete
  10. மதுரையம்பதி said...
    // அப்படி சாதுவா இருக்கமாட்டேன் நேர்ல ..பொது இடம் என்பதால் அடக்கஒடுக்கம்!!!//

    அட ஆமாம் அம்பி, இதெல்லாம் முதல்ல நம்பு... :)>>>>

    இப்ப என்னங்கறீங்க மௌலி?:) நேர்லயும் சாது அடக்கமான பெண்மணி என்கிறீங்களா?:) கோடைல என்னப்பா இவ்ளோ ஜில்லுனு?:)

    //அதுல என் பங்கு அதிகமில்ல வல்லிமா..கூச்சமா இருக்கு சொல்லிக்கவே...//

    வல்லியம்மா ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுறாங்க...நம்பாதீங்க.
    அடுத்த எபிஸோட் எடுத்தாச்சு, விரைவில் சின்னத்திரையில் காணலாம்.

    நாராயண, நாராயண...>>>
    போட்டுக்கொடுத்தாச்சா?:) வந்த வேலை ஆச்சா?:) :)(கிட்டிங்தான்)

    6:28 AM

    ReplyDelete
  11. நிஜமா நல்லவன் said...
    எல்லோருக்குமே கோடைக்கு மோர் ஏற்றது தான்.

    6:31 >>> ஆமாம் நி ந.

    ஆமா அது உடலுக்கும் குளிர்ச்சி.நன்றி நிந. வருகைக்கு

    ReplyDelete
  12. //வல்லியம்மா ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுறாங்க...நம்பாதீங்க//

    அதென்ன நம்பாதீங்க-ன்னு சொல்றீங்க மெளலி அண்ணா?
    ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுவாங்க தான்!
    Shy+Lajja-ன்னு பேர்லயே இரண்டு வெட்கம் இருக்கல்லவோ? :-))

    ReplyDelete
  13. // அப்படி சாதுவா இருக்கமாட்டேன் நேர்ல ..பொது இடம் என்பதால் அடக்கஒடுக்கம்!!!//


    இது உங்க வீட்டு ரங்கமணி உங்களுக்கு குடுத்த சர்டிபிகேட்டா? :p

    ReplyDelete
  14. //கோடையை விரட்டிவீட்டில்-குளிர்
    வாடையை வாங்க இயலும்,
    ஆனால்..

    ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்//

    நச்!
    வாழையடி வாழையென
    வசதிகள் கொண்டவர்க்கு வீட்டில் மட்டுமே குளிர் வாங்க முடியும்!
    வீதிக்கு வந்தால் எங்க மோருக்குத் தான் என்றுமே பேரு!

    ReplyDelete
  15. டைமிங் கவிதை...கலக்கல் ;)

    ReplyDelete
  16. திகழ்மிளிர் said...
    //ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்!/

    உண்மை தான்
    இயல்பான கவிதை

    >>>>>நன்றி திகழ்மிளிர்!

    ReplyDelete
  17. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //வல்லியம்மா ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுறாங்க...நம்பாதீங்க//

    அதென்ன நம்பாதீங்க-ன்னு சொல்றீங்க மெளலி அண்ணா?
    ஷைல்ஸ் ரொம்பவே வெட்கப்படுவாங்க தான்!
    Shy+Lajja-ன்னு பேர்லயே இரண்டு வெட்கம் இருக்கல்லவோ? :-))

    >>>>ஆன்மீகச்செம்மல் அழகா ஆங்கில சிலேடையும் சொல்வாரோ?:):)

    ReplyDelete
  18. ambi said...
    // அப்படி சாதுவா இருக்கமாட்டேன் நேர்ல ..பொது இடம் என்பதால் அடக்கஒடுக்கம்!!!//


    இது உங்க வீட்டு ரங்கமணி உங்களுக்கு குடுத்த சர்டிபிகேட்டா? :p

    >>>>>>:):) கரெக்டா கண்டுபிடிச்சீங்க அம்பி!!

    ReplyDelete
  19. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோடையை விரட்டிவீட்டில்-குளிர்
    வாடையை வாங்க இயலும்,
    ஆனால்..

    ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்//

    நச்!
    வாழையடி வாழையென
    வசதிகள் கொண்டவர்க்கு வீட்டில் மட்டுமே குளிர் வாங்க முடியும்!
    வீதிக்கு வந்தால் எங்க மோருக்குத் தான் என்றுமே பேரு
    >>>>> மோர் நாங்களும் கேட்போம் ஒன்ஸ்மோர்!!!! நன்றி ரவி கருத்துக்கு.

    ReplyDelete
  20. கோபிநாத் said...
    டைமிங் கவிதை...கலக்கல் ;)

    >>>>>>>நன்றி கோபி

    ReplyDelete
  21. //>>>>ஆன்மீகச்செம்மல் அழகா ஆங்கில சிலேடையும் சொல்வாரோ?:):)//

    அதென்ன செம்மல், இருமல்லுன்னு...அந்தாள் பண்ற சேட்டையெல்லாம் எனக்குல்ல தெரியும் :)

    (எல்லாம் ஒரு பொறாமை தான் :)))

    ReplyDelete
  22. Anonymous8:19 AM

    Romba nalla irukku Shyla akka.. ithu vellore veyil-a oru nal suthinavudane thondriyatha ....

    ReplyDelete
  23. மதுரையம்பதி said...
    //>>>>ஆன்மீகச்செம்மல் அழகா ஆங்கில சிலேடையும் சொல்வாரோ?:):)//

    அதென்ன செம்மல், இருமல்லுன்னு...அந்தாள் பண்ற சேட்டையெல்லாம் எனக்குல்ல தெரியும் :)>>>

    கண்ணபிரான்(ரவி) அல்லவா சேட்டை பண்ணாம இருப்பாரா?:) ரசிச்சிட்டு போங்களேன் மதுரக்காரரே!!!

    //(எல்லாம் ஒரு பொறாமை தான் :)))//

    செம்மலை இருமவைக்கும்போதே நினச்சேன் இது பொறுமலா இருக்கும்னு!!! எல்லாம் விளையாட்டுப்பொறுமல்னும் அறிவாள் அரங்கப்ரியா:)

    6:40 PM

    ReplyDelete
  24. Ezhilanbu said...
    Romba nalla irukku Shyla akka.. ithu vellore veyil-a oru nal suthinavudane thondriyatha ....

    >>>>>இல்லை ப்ரியா....எங்க ஊர்லயே வெய்யில் போட்டு தாக்கறபோது தோணினது! நன்றி வருகை+கருத்துக்கு.

    ReplyDelete
  25. //கண்ணபிரான்(ரவி) அல்லவா சேட்டை பண்ணாம இருப்பாரா?:) ரசிச்சிட்டு போங்களேன் மதுரக்காரரே!!!//

    ஹல்லோ!, கண்ணபிரான் அப்படிங்கறது ரவியோட அப்பா பெயர்.. :)

    ReplyDelete
  26. மதுரையம்பதி said...
    //கண்ணபிரான்(ரவி) அல்லவா சேட்டை பண்ணாம இருப்பாரா?:) ரசிச்சிட்டு போங்களேன் மதுரக்காரரே!!!//

    ஹல்லோ!, கண்ணபிரான் அப்படிங்கறது ரவியோட அப்பா பெயர்.. :)

    >>>ஓ அப்டியா? சரி சின்னக்கண்ணபிரான்(அதாவது ஜூனியர் கண்ணபிரான்:) டீக் ஹை?:):) இந்த மதுரக்காரங்க கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுப்படிப்பாங்கபோலப்பா?:):)

    ReplyDelete
  27. பொதிகைல வரும்போது நான் அங்கு இல்லை. யாரையாவது கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும்:(

    ReplyDelete
  28. //ஏழைக்கு என்றைக்கும்
    கோடைக்கு மோர்மட்டும்!//

    உண்மை ஷைலஜா அவர்களே! வருமை பட்டவர்க்கு நீர்மோர் கிடைப்பதும் பெரும்பாடாய்த் தானிருக்கிறது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.