Social Icons

Pages

Thursday, March 19, 2009

மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!













எல்லாரும் வாங்க வாங்க!

என்ன இன்னிக்கு ஸ்பெஷல்னு கேட்கறீங்களா?

வேறென்ன...நாலுகதைகவிதை கட்டுரை கிறுக்கினப்போ கிடைக்காத புகழெல்லாம் இன்னமும் பலரால் சுவைக்கபடாத ஆனால் கல்லடிகண்ணடிமட்டும் பட்டுட்டு இருக்கிற ஒரு இனிப்புவஸ்துவால் வலை கலை உலகில் நான்பெரிதும் அறியப்படுகிறேன் இல்லையா அந்த வஸ்து தான் இன்னிக்கு எல்லார்க்கும்!!

அதுவேஇன்றையஸ்பெஷல்மெனு!

அதைமுதல்ல தட்டுல வச்சிட்டேனே!

எல்லாரும் எடுத்திட்டீங்களா ! ஆயில்யன் இது நெய்யில்செய்யும் இனிப்பு பேரு மைபா என்னும் மைசூர்பாக்கு! 2கூடவே எடுத்துக்குங்க என்ன!

அம்பிக்கு கேசரி என்றால் இஷ்டம். என்ன இப்போ மைசூர்பாக்கையே கேசரியா செய்யறதும் ஈசிதான்.:)

ஆமாங்க மைசூர்பாக் மெத்தட் மட்டும் சரி இல்லேன்னு வச்சிக்குங்க அது கேசரியா குழையும் இல்லேன்னா பாயசமா நெகிழும் இல்லேன்னா கேக்கா ஷோக்கா வரும் கடசில அணுகுண்டாவும் மாறும்!


எல்லாம் பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டுமல்ல மனித மனசுக்கும் பதம் அவசியம் என்பதை மைச்சூர்பாக் செய்யக் கற்றுக்கொண்ட ஆரம்பநாட்களில் தெரிஞ்சிட்டேன்! (ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்)

அதை விடுங்க...

எல்லார்வீட்லயும் பொண்ணுபாக்கவந்தா கேசரிதான பண்ணுவாங்க இல்லையா?
எங்க வீட்ல மைசூர்பாக்பண்ணினாங்க,ஏன்னா முதநாள் வந்த மாப்பிள்ளையின் அக்கா "என் தம்பிக்கு கேசரிய விட மைசூர்பாக் ரொம்பப் பிடிக்கும் நல்ல உருக்கின பசு நெய்ல செய்துதந்தா அவ்ளோதான் உலகையே மறந்துடுவான்!" என்றுசொல்லிவிட்டுப்போகவும் என் அம்மாவும், பையன் உலகைமறந்த நேரமாப்பாத்து தன்பொண்ணை நைசா'பிடிச்சிருக்கு'ன்னு சொல்லவச்சிடலாம்னுதிட்டம்போட்டமாதிரி மைசூர்பாக்கை செய்ய ஆரம்பிச்சாங்க.

அம்மாதனக்கு தெரிஞ்சமாமிகிட்ட கேட்டுதான் செய்தாங்க.. 1:3:3 என்று மாமி அளவு சொன்னாங்க அதாவது கடலைமாவு ; சக்கரை ;நெய்யாம்!

அம்மா ஒண்ணு மூணு மூணு ன்னு முணுமுணுத்துட்டே இருக்கறப்போ யாரோ மணி
2ன்னு சொன்னதுகாதுல விழவும் ரண்டுமூணு மூணுன்னு சொல்லிட்டே செய்ததில் அது
பதம்சரியாகவராமல்போனது.கேசரிமாதிரி காட்சிஅளித்தது. அப்பா ' கேசூர்பாக் 'என்றார்கிண்டலாக

பதட்டமா மறுபடி செய்தாங்கபாருங்க அப்போ அது
பாயசமாபோயிட்டது தண்ணீ அதிகமாச்சாம்!

மறுபடி குலதெய்வத்துக்கு வேண்டிட்டு அம்மா செய்யநினச்சப்போ அத்தை வீடுவந்தாங்க

"என்ன நீ! 1;3;3 எதுக்கு வண்டி நெய் விடாதே..நல்லா கூடுகட்டினமாதிரி பொரபொரன்னு மைசூர்பாக்கு வரணும்னா ஒரு நெய்போதும். ஒன்றரை சக்கரைபோதும்..இல்லேன்னா பாயசம்தான் போ " என்று சொன்னாங்களா அம்மா பயந்துபோயி நெய்யைக்கம்மிபண்ணிட்டாங்க.


பொண்ணு பாக்க எல்லாரும் பட்டாளமா வந்தாங்க.. ஸ்ரீரங்கம் சித்திரைவீதியே வாசல்ல வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிது!

//ஒஸர்ரம்மா ஒல்லியா இருக்காரே அதான் பையனாம்!

எங்க வேலையாம்?

பெங்களூராம்

கேசரி பண்ணவேண்டாம்னு அக்காக்காரி ஆணையிட்டுட்டாளாமே ! பொண்னோட அம்மா மைசூர்பாக் வில்லை போட்டுருக்கா போல்ருக்கு அதிசியம்தான் போ!

காலம் மாறிடுத்து மாமி!///






என்னவோ பலவேலைகளுக்கு நடுவில பொண்ணு பாக்க வந்தவர் போல என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இருந்த வாட்சையே அடிக்கடிப் பாத்துட்டு இருந்தார்...


(என் உடன்பிறப்பிடம் "உங்க அக்காவும் கதை கவிதை எழுதுவாங்களா உங்க அப்பாமாதிரி?"ன்னு
சாக்லேட்கொடுத்து உளவு பார்த்தகதை பலநாள்கழிச்சி தெரியவந்தது):)


"என்தம்பி பெண்பாக்க வரப்போ, டில்லில்லேந்து அவனோட ரண்டு ஃப்ரண்ட்சும் வருவாங்க" அப்படீன்னு


முதநாள் வந்துபாத்த அக்கா சொல்லீ இருந்ததால் அந்த
டில்லிநண்பர்களைப் பார்க்க நாங்க (என் உடன்பிறப்புகள் மற்றும் உறவுக்காரக்கூட்டம்)ஆவலோடு காத்திருந்தோம்..(ஸ்ரீரங்கத்துக்காரங்களுக்கு அப்போல்லாம் டில்லின்னா அமெரிக்காமாதிரி!!)


வந்தாங்கப்பா டில்லிக்காரங்க!

வேஷ்டியும் லொட லொடன்னு சர்ட்டும் அணிந்து தலையை வழிச்சி வாரிட்டு நெற்றிநிறைய விபூதிப்பட்டைல அடக்க ஒடுக்கமா அம்பி பதிவின்(அம்மாஞ்சி) பெயர்ல ஒருத்தர் , இன்னொருத்தர் திருமண்தரிச்சி திருதிருன்னு முழிச்சிட்டு!


நொந்து நூலானோம் நாங்கள்ளாம்.. !

"இப்பத்தான் மண்ணச்சநல்லூர்லேந்து டில்லிக்குப்போனவங்களாம்.. " என்ற உபரிதகவலை சின்னதம்பி அவங்ககிட்ட பேசி தெரிஞ்சிவந்து சொன்னான்.

நல்ல வேளை பொண்ணு பாக்கவந்தவர் நேவிப்ளூ சூட்ல வந்தாரோ நான் ப்ருந்தாவன சாரங்கால ரங்கபுரவிஹாரா பாட சம்மதிச்சேனோ!!


"உனக்குபிடிக்கும்னு மைசூர்பாக்பண்ணி இருக்காடா"

அம்மையார்(மாப்பிளையின் அம்மா) பெருமையாய்முழங்கினார்.

நான் பணிவாய்(!) நீட்டிய தாம்பாளத்திலிருந்து படுவேகமா ஒருமைபா வில்லையை எடுத்துட்டாங்க அந்தம்மா." நன்னாருடிம்மா" என வாழ்த்தி வேகமா வாய்லபோட்டுட்டாங்க.

அடுத்த நிமிஷம் க்கட்டக் என ஒருசத்தம்.

"பின்னாடி தோட்டத்துல மாமரக்கிளை முறிஞ்சுட்டுதா பாருடா வெங்கட்"

என்று அப்பா தம்பியை ஏவினார்.


பையனின் அம்மா கடவாய்ப்பல் ஒன்று கழண்டுவிழ அதை கையில் வைத்துக்கொண்டு முழித்தார்.

அப்பா என் அம்மாவை சமையற்கட்டுக்குக்கடத்திட்டுப்போனார்.

"போச்சு ..எல்லாம் போச்சு! நீ செஞ்சமைசூர்பாக்குல பையனின் அம்மா பல்லே பெயர்ந்துபோச்சு! அவ்ளோதான் இந்த வரன் ஹோகயா. நல்ல பையன்.பெங்களூர்ல நல்லவேலை. எல்லாம் உன் பாழப்போற மைசூர்பாக்கால போச்சு... ஒழுங்கா செய்யவேண்டியதுதானே?"

"நான் எட்டூருக்கு ஜோரா செஞ்சிருப்பேனாக்கும்! உங்க ஒண்ணுவிட்ட அக்கா வந்து குழப்பிட்டா..."


அப்பா-அம்மா யுத்தம் அடுப்படியில் ஆரம்பமானது.


"சித்த இப்படி வாங்கோ"


பையனின் அம்மா அழைத்தார்.

அப்பா வந்தார் பயந்தபடியே.


கையில் ஒரு பல்லை வைத்துக்கொண்டு
இருக்கற மீதப்பற்களினூடே பளிச் புன்னகைபுரிந்த பையனின் அம்மா,

"பல் எடுக்க டாக்டர்கிட்ட போகபயந்துட்டே இருந்தேன்.. ஏன்னா என்னோட ஏழு(அம்மாடியோவ்)டெலிவரிக்குக்கூட நான் ஆஸ்பித்ரிக்கு போனதே இல்ல ..அவ்ளோபயம் எனக்கு இப்போ செலவில்லாம பயமில்லாம ஏகமா ஆடித்தொல்லை கொடுத்துட்டிருந்த பல்லை விழவச்சபெருமையும்,மகிமையும் உங்க மைசூர்பாக்குக்கே சேரும். இதுக்காகவே உங்க பொண்ணை என்பையனுக்கு..."

மேலே இனி சொல்லத்தேவை இல்லைன்னு நினைக்கிறேன்!

பெங்களூர்வந்து புதுவீடு குடிவந்ததும்

" என்னங்க இன்னிக்கு மைசூர்பாக் பண்ணட்டுமா?"ன்னு நான் கேட்ட்போது

ஜானகிதேவி ராமனைத்தேடி இருவிழிவாசல்..... பாட்டு ரேடியோல கேட்கவும் சரியாக இருந்தது.

அன்னிக்கு முழிச்ச என் மறுபாதி(Better half))நான் மைசூர்பாக் செய்தால் மட்டும் வாயை மூடிக்கறார்!!!!(அடிக்கடி நான் மைபா செய்ய இதுவே காரணம்:)

மைபா மகிமை இத்தோடு முடிகிறது!


சரி பொறந்த நாளும் அதுவுமா ஒரு தன்னம்பிக்கைப்பாட்டுபாடலாம்னு தோணிச்சி..

இந்தமாதிரி ரிஸ்க் எடுக்கறது எனக்கு எப்பவுமேபிடிச்ச விஷயம் !பலரோட வலைத்தளங்களில் போய் படுத்தியும் இருக்கேன் !இங்கயும் இருக்கு உங்களுக்கு ட்ரீட்டா இந்தப்பாட்டு!!( கல்கில்லு விழுந்தா ஆயில்யன் காட்ச் பிடிக்கறதா (அ)சத்தியம் செஞ்சிருக்கார்!!

(என்னவோ தெரில்ல பாட்டு இங்க அப்லோட் ஆகல..எல்லாரும் தப்பிச்சீங்க ! வழிகிடச்சா மறுபடி இணைச்சிடறேன்:)

121 comments:

  1. மீ த பர்ஸ்ட்

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

    ReplyDelete
  2. பிறந்த தின வாழ்த்துகள் அக்கா...
    மதியம் விருந்து உண்டு தானே :))

    இனி பதிவைப் படிச்சுட்டு வர்றேன்.. :)

    ReplyDelete
  3. அக்க்க்க்க்கா.. அட்டகாசம் சிரிப்பு தாங்கல...

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    மிஸ் பண்ணாம சொல்லிட்டோம்!

    மை பா வால அடிக்க வராதீங்க!

    ReplyDelete
  6. ஒரு சந்தேகம்!

    எண்ணியவுடன் கூந்தலை முடிந்து விடுவீர்களா?

    ReplyDelete
  7. முதல் படம்!

    ஏன் எங்களை இப்படி பயமுறுத்துறீங்க?

    ReplyDelete
  8. தேர்தல் நேரத்துல ஆயுதங்களை ஷோ கேஷ் பண்ணுறது நல்லதல்ல!

    ReplyDelete
  9. //ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

    ஹஹா ஒரு சின்ன திருத்தம். ஷைலஜானந்தமயி. :))

    ReplyDelete
  10. மைசூர் பாக் வச்சு ஒரு சுவையான சம்பவம். மைசூர் பாக் நல்லா வரா விட்டாலும பதிவு நல்லா வந்திருக்கு.

    அந்த காலத்தில் மைசூர் பாக் வச்சு நிறைய ஜோக் ஆ.விகடனில் வரும்.

    கஸ்டமர்:மைசூர் பாக்கோட அது என்ன
    சுத்தியல்(hammer).

    சர்வர்: உடைப்பதற்க்கு

    கஸ்டமர்:??????????????

    (இப்போதய ஜோக்குகளில் இது “கஸ்டமர்:??????????????” முழிப்பது
    வருவதில்லை)

    நீங்களும் ஒரு சுத்தியல் வைத்திருக்கலாம்.

    கிருஷ்ண பவன் சுவுட்ஸில் இது பெயர்
    மைசூர் பா.

    ReplyDelete
  11. இந்த பதிவை படிச்சுட்டு ஆபிஸ்ல சிரிச்சுகிட்டே இருக்கேன். மானேஜர் வேற முறைக்கறாரு. நல்லா மாட்டி விட்டீங்க என்னை. :))

    ReplyDelete
  12. இனிமே உங்க வீட்ல மை பா சாப்டுவேன்? யப்பா, ஆள விடுங்க சாமி. :))

    ReplyDelete
  13. கேசரியை மை பா கூட ஒப்பிட்டமைக்கு என் கண்டனங்கள். கர்ர்ர்ர்ர். :))

    ReplyDelete
  14. நம்ம பெங்களூர் சந்திப்பிலெ அருமையான மைசூர் பாகு கொண்டு வந்துக்கொடுத்தீங்களே! அது நீங்க செஞ்சது இல்லையா!

    அப்பவே விழியன் சந்தேகப்பட்டான்.

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

    ReplyDelete
  15. கடைசில இத சொல்ல மறந்தாச்சு!

    இன்னும் பல நூற்றாண்டு புகழோடும், உடல் நலத்தோடும் இரும்!

    (என வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் அக்கா) :))

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    மைபாவின் இனிப்பாய் என்றும் நகைச்சுவையிழையோட மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)

    ReplyDelete
  18. மைபா என்றாலெ அது மைதிலி செய்வது தான் என ஒரு நாள் உங்க ஆத்துக்காரர் சொல்லி சப்புக்கொட்டி சாப்பிடத்தான் போறார்.
    கவலையை விடுங்க

    ReplyDelete
  19. அன்பின் சகோதரியாருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. //மைபா என்றாலெ அது மைதிலி செய்வது தான் //

    ஹி ஹி அப்போ அது மைசூர் பா இல்லை மைதிலி பாக்கு :)

    ReplyDelete
  21. // ambi said...
    பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)//

    இந்தக் கேள்வியை மாப்பிள்ளை கிட்ட கேட்டு அவர் சரியா பதில் சொல்லிட்டா வாழ்நாள் முழுவதும் அக்கா மைசூர்பாக்கு பண்ண மாட்டேன்னு சபதம் செய்யப் போறாங்களாம். :)

    ReplyDelete
  22. ஹாய் ஷைலஜாக்கா,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(சரி இது எத்தனையாவது பிறந்த நாள் னு சொல்லவேயில்லையே.. 16 ஆ அல்லது 17 ஆ)

    //தேர்தல் நேரத்துல ஆயுதங்களை ஷோ கேஷ் பண்ணுறது நல்லதல்ல!//

    //மைசூர் பாக் நல்லா வரா விட்டாலும பதிவு நல்லா வந்திருக்கு.//

    //நம்ம பெங்களூர் சந்திப்பிலெ அருமையான மைசூர் பாகு கொண்டு வந்துக்கொடுத்தீங்களே! அது நீங்க செஞ்சது இல்லையா!// ரிப்பீட்டேய்ய்ய்ய்

    அதானே ஏமாத்திபுட்டாங்கப்பா....

    @அம்பி,
    //பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)//

    அது சரி அம்பி, அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க?

    ReplyDelete
  23. பதிவே மைசூர்பாகு மாதிரி இனிச்சுக் கிடக்கு. சிரிப்பு இன்னும் அடங்கலை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  24. முதல்ல இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அப்புறம் இத்தனை நாளா count-down கொடுத்தது ஏன் என்று இப்போதான் புரிந்தது :-)

    ReplyDelete
  25. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஆயில்யன் said...
    மீ த பர்ஸ்ட்

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

    11:22 AM
    <<<<<<<<<<<<<<<<<

    வருக ஆயில்! நன்றி மிக!

    ReplyDelete
  27. Raghav said...
    பிறந்த தின வாழ்த்துகள் அக்கா...
    மதியம் விருந்து உண்டு தானே :))

    இனி பதிவைப் படிச்சுட்டு வர்றேன்.. :)

    11:32 AM
    <<<>>>>

    விருந்து இன்னிக்கு வெளில!!!! வருகைக்கு நன்றி ராகவ்.

    ReplyDelete
  28. Raghav said...
    அக்க்க்க்க்கா.. அட்டகாசம் சிரிப்பு தாங்கல...

    11:38 AM
    >>>>>>
    :):)

    ReplyDelete
  29. நாமக்கல் சிபி said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    <<<<<<<<<<<<<<<<<<

    நன்றி நன்றி!

    ReplyDelete
  30. நாமக்கல் சிபி said...
    ஒரு சந்தேகம்!

    எண்ணியவுடன் கூந்தலை முடிந்து விடுவீர்களா?

    11:52 AM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஹலோ அது மனசுல எண்ணறது!:)வம்புதான இது?:)

    ReplyDelete
  31. நாமக்கல் சிபி said...
    முதல் படம்!

    ஏன் எங்களை இப்படி பயமுறுத்துறீங்க?

    11:52 AM


    நாமக்கல் சிபி said...
    தேர்தல் நேரத்துல ஆயுதங்களை ஷோ கேஷ் பண்ணுறது நல்லதல்ல!

    11:53 AM
    >>>>>>>>>>>>>>>>>....

    ஹ்ஹஹ்ஹா!!! போனாப்பொகுதுன்ன்னு இன்னிக்கு உங்கள விட்டுவைக்கிறேன்!

    ReplyDelete
  32. ambi said...
    //ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

    ஹஹா ஒரு சின்ன திருத்தம். ஷைலஜானந்தமயி. :))

    11:54 AM
    <<<>>>.சரிங்க அம்மாஞ்சி!!!!

    ReplyDelete
  33. கே.ரவிஷங்கர் said...
    மைசூர் பாக் வச்சு ஒரு சுவையான சம்பவம். மைசூர் பாக் நல்லா வரா விட்டாலும பதிவு நல்லா வந்திருக்கு.>>>>>

    நன்றி ரவிசங்கர் மைசூர்பாக் நல்லாவே செய்வேன் இப்போ!!

    //அந்த காலத்தில் மைசூர் பாக் வச்சு நிறைய ஜோக் ஆ.விகடனில் வரும்.

    கஸ்டமர்:மைசூர் பாக்கோட அது என்ன
    சுத்தியல்(hammer).

    சர்வர்: உடைப்பதற்க்கு

    கஸ்டமர்:??????????????

    (இப்போதய ஜோக்குகளில் இது “கஸ்டமர்:??????????????” முழிப்பது
    வருவதில்லை)

    நீங்களும் ஒரு சுத்தியல் வைத்திருக்கலாம்.

    கிருஷ்ண பவன் சுவுட்ஸில் இது பெயர்
    மைசூர் பா.//

    ஆமாம்..நன்றி பின்னூட்டமிட்டதற்கும் வாழ்த்துக்கும்

    11:54 AM

    ReplyDelete
  34. பதிவை படிச்சுட்டு ஆபிஸ்ல சிரிச்சுகிட்டே இருக்கேன். மானேஜர் வேற முறைக்கறாரு. நல்லா மாட்டி விட்டீங்க என்னை. :))

    11:55 AM
    <<>>>>
    இப்டித்தான உங்க பதிவப்படிச்சி நான் கெக்கெபிகேன்னு சிரிக்க என்னை வீட்ல லூஸ் னு நினச்சாங்க தெரியுமா?:)

    ReplyDelete
  35. ambi said...
    இனிமே உங்க வீட்ல மை பா சாப்டுவேன்? யப்பா, ஆள விடுங்க சாமி. :))

    11:56 AM
    >>>>>>>>>>>>>>
    அம்பி அம்பி
    அப்படிச் சொல்லக்கூடாது அக்கா மனசு டப்க்னு உடைஞ்சிபோயிடுமோல்லியோ?:)

    ReplyDelete
  36. ambi said...
    கேசரியை மை பா கூட ஒப்பிட்டமைக்கு என் கண்டனங்கள். கர்ர்ர்ர்ர். :))

    11:58 AM
    >>>>>>>............
    கேசரிதாஸ்! கோபம் வேண்டாம்..நல்ல கேசரீயும் செய்துதரப்படும்!!!

    ReplyDelete
  37. மஞ்சூர் ராசா said...
    நம்ம பெங்களூர் சந்திப்பிலெ அருமையான மைசூர் பாகு கொண்டு வந்துக்கொடுத்தீங்களே! அது நீங்க செஞ்சது இல்லையா!

    அப்பவே விழியன் சந்தேகப்பட்டான்.

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

    11:59 AM

    >>>ஐயே ச்சும்மா நகச்சுவைக்காக ஏதோ இப்டி எழுதினேன் நெஜம்மாவே மைசூர்பாக்கை நல்லா செய்யும் குடும்பம் எங்களுது!அன்னிக்கு நல்லாதானே இருந்துச்சுதானே!

    ReplyDelete
  38. ambi said...
    கடைசில இத சொல்ல மறந்தாச்சு!

    இன்னும் பல நூற்றாண்டு புகழோடும், உடல் நலத்தோடும் இரும்!

    (என வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் அக்கா) :))

    12:00 PM
    >>>நன்றி குட்டி அம்பி!

    ReplyDelete
  39. மஞ்சூர் ராசா said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    மைபாவின் இனிப்பாய் என்றும் நகைச்சுவையிழையோட மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.

    12:01 PM
    >>>நன்றி மஞ்சூர்ராசா!

    ReplyDelete
  40. ambi said...
    பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)

    12:01 PM
    >>>>>>>>

    நமக்குப்பிடிச்ச ப்ளூகலர்ல பட்டுப்புடவை! (வம்புதும்பு கும்மிஇல்லாம பதிவா கலக்குங்க அம்பி:)

    ReplyDelete
  41. மஞ்சூர் ராசா said...
    மைபா என்றாலெ அது மைதிலி செய்வது தான் என ஒரு நாள் உங்க ஆத்துக்காரர் சொல்லி சப்புக்கொட்டி சாப்பிடத்தான் போறார்.
    கவலையை விடுங்க

    12:03 PM
    >>>>>>>>>>>:):) சரி

    ReplyDelete
  42. ஜோதிபாரதி said...
    அன்பின் சகோதரியாருக்கு வாழ்த்துகள்!//

    மிக்க நன்றிஜோதிபாரதி

    ReplyDelete
  43. ஆப்பி பத்தே துயு
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  44. Raghav said...
    //மைபா என்றாலெ அது மைதிலி செய்வது தான் //

    ஹி ஹி அப்போ அது மைசூர் பா இல்லை மைதிலி பாக்கு :)

    12:14 PM
    >>>>ஆரம்பிச்சிட்டாங்கப்பா:0

    ReplyDelete
  45. Raghav said...
    // ambi said...
    பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)//

    இந்தக் கேள்வியை மாப்பிள்ளை கிட்ட கேட்டு அவர் சரியா பதில் சொல்லிட்டா வாழ்நாள் முழுவதும் அக்கா மைசூர்பாக்கு பண்ண மாட்டேன்னு சபதம் செய்யப் போறாங்களாம். :)

    12:17 PM
    >>>ராகவ்
    கேசரிதாசரை வம்புக்கு இழுக்காத ஆமா சொல்லிட்டேன்:)

    ReplyDelete
  46. Sumathi. said...
    ஹாய் ஷைலஜாக்கா,


    >>>ஹாய் சுமதி!

    \\இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(சரி இது எத்தனையாவது பிறந்த நாள் னு சொல்லவேயில்லையே.. 16 ஆ அல்லது 17 ஆ)//

    >>>>15ம்மா பதினைஞ்சு!

    //நம்ம பெங்களூர் சந்திப்பிலெ அருமையான மைசூர் பாகு கொண்டு வந்துக்கொடுத்தீங்களே! அது நீங்க செஞ்சது இல்லையா!// ரிப்பீட்டேய்ய்ய்ய்'''\\\>>>>>>

    நானேதான் பின்ன என்ன மண்டபத்ல யாராவது செஞ்சிதந்தனுப்பினாங்களா:)

    ....

    @அம்பி,
    //பொண் பாக்க வரும் போது நீங்க என்ன புடவை கட்டி இருந்தீங்க, அத சொல்லலையே? (இவ்ளோ வம்பு உனக்கு ஆகாதுடா அம்பி!)//

    அது சரி அம்பி, அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க?''\\\

    குழந்தை ஏதோ ஒரு ஆர்வத்துல கேக்கறது திட்டாதீங்க சுமதி!!

    12:28 PM

    ReplyDelete
  47. ராமலக்ஷ்மி said...
    பதிவே மைசூர்பாகு மாதிரி இனிச்சுக் கிடக்கு. சிரிப்பு இன்னும் அடங்கலை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷைலஜா!

    12:28 PM
    >?>>>>>>>>
    நன்றி ராமலஷ்மி!

    ReplyDelete
  48. vijay said...
    முதல்ல இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அப்புறம் இத்தனை நாளா count-down கொடுத்தது ஏன் என்று இப்போதான் புரிந்தது :-)

    12:32 PM
    <<<<<<<<<<<<<<<

    !!!!!!!!!!நன்றி விஜய்.

    ReplyDelete
  49. T.V.Radhakrishnan said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    12:36 PM
    <<<<<<<<<<<<<<<<<<<<<

    நன்றி ராதாக்ருஷ்ணன்.

    ReplyDelete
  50. என்ன அநியாயம்! யாருமே அந்தப்பாட்டு எங்கேன்னு ஒரு வார்த்தை பின்னூட்டத்துல கேக்கவே இல்ல:):)

    ReplyDelete
  51. யக்கோவ்!

    கிளி யக்கோவ்! வாழ்த்துகள்

    ReplyDelete
  52. தப்பி தவறி அந்த பாட்ட பற்றி கேட்டா மின்மடலிடுவீங்களோன்னு பயந்து தான் யாரும் கேட்க்கல போல

    உங்க மை பா வே தேவலாம் என முடுவு செய்துட்டாங்களோ ...

    ReplyDelete
  53. ஹையோ! தெரியாம கேட்டுப்புட்டனே

    இப்ப என்ன பன்றது

    கிளிப்பாட்டு வந்திடுமோ ! ...

    ReplyDelete
  54. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

    மை.பா புராணம் சூப்பர்....இப்போல்லாம் நீங்க நல்லாத்தான் பண்ணுறீங்கக்கா...அதான் சாப்பிட்டேனே போன வருஷம்..மீட்டிங்ல.... :-)

    ReplyDelete
  55. கேட்டுட்டா, எங்க உங்க மறுபாதிக்குக் கொடுத்துட்டு மீதம் வைத்திருக்கிற மைப்பாவை, அதுதான் மைசூர் பாகு இந்த பிடி, சாப்பிடுன்னு கொடுத்திட்டா என்ன செய்யறது அப்படின்னு பயம் கலந்த மரியாதை தான்!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. வாழவந்தான் said...
    ஆப்பி பத்தே துயு
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    1:16 PM
    >>>நன்னி நன்னி வாயவந்தான் அங்கிள்:)

    ReplyDelete
  57. நட்புடன் ஜமால் said...
    யக்கோவ்!

    கிளி யக்கோவ்! வாழ்த்துகள்
    \\\\
    1:45 PM>>>
    நன்றி ஜமால்.


    \\\ நட்புடன் ஜமால் said...
    தப்பி தவறி அந்த பாட்ட பற்றி கேட்டா மின்மடலிடுவீங்களோன்னு பயந்து தான் யாரும் கேட்க்கல போல

    உங்க மை பா வே தேவலாம் என முடுவு செய்துட்டாங்களோ ...

    1:46 PM
    >>>>>>>>>>>>\\\


    ச்சேச்சே என்னப்பா இப்படி சொல்லிட்டீங்ங்க பாட்டுமா மைபா போல இருக்கும் ஓ மைகாட்!

    ReplyDelete
  58. நட்புடன் ஜமால் said...
    ஹையோ! தெரியாம கேட்டுப்புட்டனே

    இப்ப என்ன பன்றது

    கிளிப்பாட்டு வந்திடுமோ ! ...

    1:47 PM

    >>>>>>>>>>>>>>>>>>>>..பின்ன சூடா இப்போவே அனுப்பிட்டுத்தான் மறுவேலை:)

    ReplyDelete
  59. PM


    மதுரையம்பதி said...
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

    மை.பா புராணம் சூப்பர்....இப்போல்லாம் நீங்க நல்லாத்தான் பண்ணுறீங்கக்கா...அதான் சாப்பிட்டேனே போன வருஷம்..மீட்டிங்ல.... :-)

    1:48 PM
    >>>>>மௌலி! என்னே உங்கள் பாசம்..உங்களமாதிரி இப்படி அடிச்சி யாருமே சொல்லல இதுக்கே உங்களுக்கு நெக்ஸ்ட் மீட்ல நாலுபீஸ் எக்ஸ்ட்ரா ரீ! நன்றி.

    ReplyDelete
  60. கிருஷ்ணமூர்த்தி said...
    கேட்டுட்டா, எங்க உங்க மறுபாதிக்குக் கொடுத்துட்டு மீதம் வைத்திருக்கிற மைப்பாவை, அதுதான் மைசூர் பாகு இந்த பிடி, சாப்பிடுன்னு கொடுத்திட்டா என்ன செய்யறது அப்படின்னு பயம் கலந்த மரியாதை தான்!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    2:17 PM

    <<<<<>.வாங்க க்ருஷ்ணமூர்த்தி....மைபா நல்லாத்தான் செய்யறேன் !!!!!அவ்ளோ மோசமால்லம் வராது!!!நன்றி வாழ்த்துக்கு!

    ReplyDelete
  61. முதல்ல பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  62. அடுத்து, காலையிலே வந்து ஆபீஸ்ல பதிவை படிச்சுட்டு சிரிச்சுகிட்டு இருக்கும் போது டேமேஜர் கிட்ட திட்டு வாங்க செஞ்சதுக்கு என் கண்டனங்கள்!

    ReplyDelete
  63. அடுத்து அம்பியும் என்னை மாதிரி திட்டு வாங்கியதை நினைத்து "ஹை ஜாலி"ன்னு ஒரு சந்தோஷம்!

    ReplyDelete
  64. அபி அப்பா said...
    முதல்ல பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!

    3:03 PM
    >>>>நன்றிகுமார்!

    ReplyDelete
  65. அபி அப்பா said...
    அடுத்து, காலையிலே வந்து ஆபீஸ்ல பதிவை படிச்சுட்டு சிரிச்சுகிட்டு இருக்கும் போது டேமேஜர் கிட்ட திட்டு வாங்க செஞ்சதுக்கு என் கண்டனங்கள்!

    3:05 PM
    <<><>>>>>>>

    :):) அட அப்படியா!! கேட்கவே சந்தோஷமா இருக்கே:)

    ReplyDelete
  66. ஷைலஜானந்தமயி என்கிற பட்டம் கொடுத்த அம்பிக்கு நான் அம்பியானந்தா பட்டம் பதிலுக்கு கொடுக்குறேன்!

    ReplyDelete
  67. \\ Sumathi. said...
    ஹாய் ஷைலஜாக்கா,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(சரி இது எத்தனையாவது பிறந்த நாள் னு சொல்லவேயில்லையே.. 16 ஆ அல்லது 17 ஆ)\\

    நல்ல கேள்வி! ஆன்சர் எங்கே?

    ReplyDelete
  68. அபி அப்பா said...
    அடுத்து அம்பியும் என்னை மாதிரி திட்டு வாங்கியதை நினைத்து "ஹை ஜாலி"ன்னு ஒரு சந்தோஷம்!

    3:06 PM
    >>>>



    அம்பிக்கு இது காபி பேஸ்ட் செய்யப்படுகிறது!!!!!!

    ReplyDelete
  69. அபி அப்பா said...
    ஷைலஜானந்தமயி என்கிற பட்டம் கொடுத்த அம்பிக்கு நான் அம்பியானந்தா பட்டம் பதிலுக்கு கொடுக்குறேன்!

    3:07 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>

    அம்பிக்கு நான் ஒரு பேர் சூட்டிருக்கேன் தெரியுமோ அபிஅப்பா:)

    ReplyDelete
  70. அபி அப்பா said...
    \\ Sumathi. said...
    ஹாய் ஷைலஜாக்கா,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(சரி இது எத்தனையாவது பிறந்த நாள் னு சொல்லவேயில்லையே.. 16 ஆ அல்லது 17 ஆ)\\

    நல்ல கேள்வி! ஆன்சர் எங்கே?

    3:08 PM
    >>>>>>15ன்னு சொல்லி இருகேன் அபிஅப்பா:) படிச்சி மறுபடி பின்னூட்டம் ஆமாம் நு போடுங்க:) சதமடிக்கவேண்டாமா இந்தப்பதிவு:):):)

    ReplyDelete
  71. @அபி அப்பா, என்னை முறைச்சுட்டு தான் போனாரு. திட்டலை. அவரு மொகமே அப்படித்தான்னு நான் கண்டுக்கலையாக்கும்.

    ReplyDelete
  72. //அம்பிக்கு நான் ஒரு பேர் சூட்டிருக்கேன் தெரியுமோ அபிஅப்பா//

    கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க.

    கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))

    ReplyDelete
  73. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  74. பதிவும் கலக்கல் நகைச்சுவை ;))

    ReplyDelete
  75. அருமையா இருக்கே மைசூர் பாகு பதிவு .
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்.

    ReplyDelete
  76. >>>நன்னி நன்னி வாயவந்தான் அங்கிள்:)
    அவ்வ்வ்வ் :-(
    அங்கிளாஆஆ....
    பாப்பா மழலை மாறாம வாழ்த்து சொன்னா, எக்ஸ்ட்ரா ஒரு மைபா கிடைக்கும்னு பார்த்தா, இப்படி இந்த அம்பிய அங்கிள்னு சொல்லி டாமேஜ் பண்ணிடீங்களே யக்கா...... அவ்வ்வ்வ்வ் :-(

    ReplyDelete
  77. ambi said...
    @அபி அப்பா, என்னை முறைச்சுட்டு தான் போனாரு. திட்டலை. அவரு மொகமே அப்படித்தான்னு நான் கண்டுக்கலையாக்கும்.

    3:36 PM
    >>>>>>>>ஓ அப்படியா

    இதுக்கு அபி அப்பா என்ன சொல்லப்போறீங்க:)

    ReplyDelete
  78. அங்கிள் எல்லாம் 'அப்பி பத்தே துயு' இப்படியா வாழ்த்துவாங்க?
    'சௌபாக்யவதீ பவ', 'தீர்க்க சுமங்கலியா இரு' அட்லீஸ்ட் 'நல்லா இரும்மா கோந்தே' இப்படீதான வாழ்த்துவாங்க.. அவ்வ்வ்வ்வ் :-(
    போ.. பத்தே பாப்பா கூட டூ

    ReplyDelete
  79. ambi said...
    //அம்பிக்கு நான் ஒரு பேர் சூட்டிருக்கேன் தெரியுமோ அபிஅப்பா//

    கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க.

    கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))

    3:38 PM
    <<<<<<<<<<<<<<<<

    கேசரி கேசரி கேசரி(முகந்துபாத்து டேமேஜர் கிட்ட வாங்கிக்கட்டிக்குங்க:):)

    ReplyDelete
  80. many many many many many happy returns of the day shy! unga manasu mathiri santhoshama, sirichukitte, veLLaiya, kaLLam illaama niraiya naaL vazhanam ! god bless u.

    I am indebted to have u as my friend.

    warm regards,
    Shakthi

    ReplyDelete
  81. Shakthiprabha said...
    many many many many many happy returns of the day shy! unga manasu mathiri santhoshama, sirichukitte, veLLaiya, kaLLam illaama niraiya naaL vazhanam ! god bless u.

    I am indebted to have u as my friend.

    warm regards,
    Shakthi

    4:07 PM
    >>>>>>>>>>>>>>


    ஆ சக்தியா எங்க இந்தப்பக்கம் !
    வாழ்த்துக்கு நன்றி! எனக்குத்தான் பெருமை உன்னாட்டம் நல்ல சிநேகிதி கிடச்சதுல!

    ReplyDelete
  82. அம்பி சொல்வது மாதிரியில்லாம் இல்ல நான் ஒரு இளிச்சவாயனாக்கும்!
    அட அதாங்க சிரிச்ச மூஞ்சு:-))

    ReplyDelete
  83. அபி அப்பா said...
    அம்பி சொல்வது மாதிரியில்லாம் இல்ல நான் ஒரு இளிச்சவாயனாக்கும்!
    அட அதாங்க சிரிச்ச மூஞ்சு:-))

    4:25 PM
    >>>>>.என்ன்னாட்டம்!!! அம்பிக்கும் சி மூ தான்!!

    ReplyDelete
  84. Shy,

    I was unaware u are updating ur blog :angry:

    I am supposedly following ur blog, but I get no intimation when ur posts are published :?

    Infact I was wondering, why did u obscond for months without a single post.

    btw,

    மைசூர்பாகு nostalgia கலக்கல். நிஜமாவே ஸ்வீட் சாப்பிட்டு, பல்லு போறது(போனது) இப்போ தான் கேள்வி படறேன்.

    ReplyDelete
  85. மிஸஸ்.டவுட் said...
    அருமையா இருக்கே மைசூர் பாகு பதிவு .
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்.

    3:46 PM <<<<<<

    வாங்க மிஸஸ் டவுட்

    நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  86. மிஸஸ்.டவுட் said...
    அருமையா இருக்கே மைசூர் பாகு பதிவு .
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்.

    3:46 PM <<<<<<

    வாங்க மிஸஸ் டவுட்

    நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  87. ஷைலஜானந்தாவுக்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  88. சூப்பர் பதிவு அக்கா! :) மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  89. Anonymous11:46 PM

    அக்கா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்க மைசூர் பாக் நல்லா இருக்கும்னா, அதுக்கு பெங்களூர் பாக் னு பேர் வெச்சிடலாம்.

    ReplyDelete
  90. Anonymous11:48 PM

    அக்கா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்க மைசூர் பாக் நல்லா இருக்கும்னா, அதுக்கு பெங்களூர் பாக் னு பேர் வெச்சிடலாம்.

    ReplyDelete
  91. அக்கா வாழ்க வளமுடன்!

    அப்புறம் சுகர் இன்னும் நம்ப அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகல. அதுனால கூட ரெண்டு மைசூர்பா எடுத்துக்குறேன்.

    :)

    ReplyDelete
  92. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    நேர்ல வர்ரதா சொல்லியிருந்தேன். ஆனா இங்க இருந்தாக வேண்டியிருந்துச்சு.

    Again best wishes!

    ReplyDelete
  93. இதென்ன பட்டம்குடுக்கிற வாரமா?

    ReplyDelete
  94. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஷைலஜானந்தாவுக்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

    8:01 PM

    <<<<>>>


    வாங்க முத்துலட்சுமி!! நேத்திக்கே இதற்கு பதில் இட்டுருக்கணும் பிறந்த நாளைமுன்னிட்டு நடந்த அல்சூர் ஏரிக்கரை மாநாட்டில் 18பட்டி ஜனங்களும் கூடி எனக்கு சால்வை போத்தி கைல வீர வாள் கொடுத்து
    வீடியோ எடுக்க அழைத்ததால்.......என்றெல்லாம் ரீல் விட ஆசைதான்!! அப்படி எதுவுமே நடக்காமல் ச்சும்ம்மா பக்கத்துல 3*ஹோட்டலுக்குச்சென்று
    சென்னாபடூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சாப்பிட்டு நாலு புடவைக்கடை ஏறி இறங்கி(அப்படியும் மறுபாதி இரங்கவில்லை:):)ஹிஹி முன்னாடியே பணம் செலவுக்கும் இதர செலவுக்க்கும்ன்னும் கேட்டு வாங்கிட்டதால்:))) வீடுவர நடுநிசியாகிட்டது
    வாழ்த்துக்கு நன்றி . ஷைலஜானந்தமயி தங்களுக்கு மங்களம் உண்டாக வாழ்த்துகிறார்!!!

    ReplyDelete
  95. கவிநயா said...
    சூப்பர் பதிவு அக்கா! :) மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    8:12 PM
    <>>>>..நன்றி கவிநயா

    பதில் ஏன் லேட்டுன்னு மு லட்சுமிக்கு நான் அளித்த பதிலில் அறிந்துகொள்க!

    ReplyDelete
  96. paravasthu said...
    அக்கா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்க மைசூர் பாக் நல்லா இருக்கும்னா, அதுக்கு பெங்களூர் பாக் னு பேர் வெச்சிடலாம்.

    11:46 PM


    paravasthu said...
    அக்கா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்க மைசூர் பாக் நல்லா இருக்கும்னா, அதுக்கு பெங்களூர் பாக் னு பேர் வெச்சிடலாம்.

    11:48 PM
    <<<>>.நன்றி பரவஸ்து சுந்தர்.
    2தடவை உங்க வாழ்த்து வந்ததற்கு நாந்தான் பின்னூட்ட எண்ணிக்கையைக்கூட்டினதா யாரும் சந்தேகப்படப்போறாங்க:) (பாக்லாம் லக் இருந்தா இந்த என் பதிலும் 2 வாட்டி விழும்:)))

    ReplyDelete
  97. கோபிநாத் said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

    3:43 PM


    கோபிநாத் said...
    பதிவும் கலக்கல் நகைச்சுவை ;))

    3:43 PM
    >>
    நன்றி கோபி
    சிரிச்சீங்களா இல்லையா!

    ReplyDelete
  98. வாழவந்தான் said...
    >>>நன்னி நன்னி வாயவந்தான் அங்கிள்:)
    அவ்வ்வ்வ் :-(
    அங்கிளாஆஆ....
    பாப்பா மழலை மாறாம வாழ்த்து சொன்னா, எக்ஸ்ட்ரா ஒரு மைபா கிடைக்கும்னு பார்த்தா, இப்படி இந்த அம்பிய அங்கிள்னு சொல்லி டாமேஜ் பண்ணிடீங்களே யக்கா...... அவ்வ்வ்வ்வ் :-(

    3:52 PM
    <<<<<<<<<<<<<<<<
    ச்ச்சும்மா வெள்யாட்டூ வாழ்வந்தான்!!!! அம்பின்னு ஒருத்தர்தான் அவர் கேசரிதாஸ் என்னும் பெங்களூர் அம்பி..நீங்க குழந்தை போதுமா:)

    ReplyDelete
  99. லதானந்த் said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    நேர்ல வர்ரதா சொல்லியிருந்தேன். ஆனா இங்க இருந்தாக வேண்டியிருந்துச்சு.

    Again best wishes
    <<<<<<<<<<<<<<<<<

    வாங்க காட்டு இலாகா அதிகாரியே!
    வந்து 2யானை பரிசு தந்திருக்கலாம் இல்லேன்னா அட்லீஸ்ட் தந்தமாவது ஹ்ம் போங்க...அதுக்காக கோவிச்சிக்கல அடுத்தவருஷம் 4யானை ஞாபகம் வச்சிக்குங்க...நன்றி வாழ்த்துக்கு!

    ReplyDelete
  100. எம்.எம்.அப்துல்லா said...
    அக்கா வாழ்க வளமுடன்!

    அப்புறம் சுகர் இன்னும் நம்ப அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகல. அதுனால கூட ரெண்டு மைசூர்பா எடுத்துக்குறேன்.

    :)

    12:11 AM
    <<<<<<<<<<<<<<<<,,,,,100 ஆயுசு அப்துல்லா! பின்னூட்டமும் உங்களால் சதம் அடிக்கறது.
    மைபாரெண்டென்ன நாலு எடுத்துக்குங்க எனக்கும் சுகர் பேச்சுலதான்(அடங்கு ஷைலஜா:)))!!
    நன்றி வாழ்த்துக்கு!!

    ReplyDelete
  101. லதானந்த் said...
    இதென்ன பட்டம்குடுக்கிற வாரமா?

    7:57 AM
    >>>>>>>
    என்ன பெருசா எனக்குப்பட்டம் கொடுத்தீங்க் நீங்க பொறந்த நாளுக்கு...பெரிய அதிகாரியாம் பேச்ச்சுதான் போங்க:):)

    ReplyDelete
  102. அப்துல்லா!
    இன்னொரு மடல் பார்த்தேன்...முத்துலட்சுமிக்கு அளித்த பின்னூட்டம் படிச்சா காரணம் புரியும்! மடலில்கூறியதை கவனிக்கறேன் நீங்க அதற்குள் என் கவிதை விகடன்ல (மின்விகடன்)படிங்க:)(( எல்லாம் ஒரு விளம்பரம்தான்:)

    ReplyDelete
  103. அம்பிக்கும் சி மூ தான்!!//

    என்ன அம்பி சிடுமூஞ்சியா சொல்லவே இல்ல கீதாம்மா கூட!

    ReplyDelete
  104. தாமதமா வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க அக்கா. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பல்லு ஆடாம இருந்தா மை.பா. ஒடைக்காதுல்ல? சத்தியம் பண்ணி சொன்னீங்கன்னா உங்க வீட்டுக்கு வர்றேன் மை.பா. சாப்புட. :-)

    ReplyDelete
  105. அபி அப்பா said...
    அம்பிக்கும் சி மூ தான்!!//

    என்ன அம்பி சிடுமூஞ்சியா சொல்லவே இல்ல கீதாம்மா கூட!

    1:27 PM
    >>>>>>>>>>>>>>

    அபிஅப்பா


    அம்பிய ரொம்ப வம்பு பண்றீங்க ஆமா :):):)

    ReplyDelete
  106. குமரன் (Kumaran) said...
    தாமதமா வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க அக்கா. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பல்லு ஆடாம இருந்தா மை.பா. ஒடைக்காதுல்ல? சத்தியம் பண்ணி சொன்னீங்கன்னா உங்க வீட்டுக்கு வர்றேன் மை.பா. சாப்புட. :-)

    8:31 AM
    <<<<<<<<<<<<<<<<

    தாமதம் இல்ல குமரன்.நன்றி வாழ்த்துக்கு
    மைபா சாஃப்டாதான் இருக்கும் குமரன் !!!!ச்சும்மா நானே அதை விளையாட்டுக்கு அப்படி இங்க சொல்றேன் வாங்க சாப்பிடலாம்

    ReplyDelete
  107. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-க்கா!

    Belated Birthday Wishes தான்! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நீங்க பண்ணிப்பீங்க-ன்னு தெரியும்! :)

    ரியோ-ன்னு பிரேசில் பக்கம் போயி, இன்னிக்கி காலையில் தான் ஊரு வந்து சேர்ந்தேன்! மை.பா பக்கம் வரலாம்-ன்னா...பயமா இருக்கு! :))

    ReplyDelete
  108. //பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டுமல்ல மனித மனசுக்கும் பதம் அவசியம் என்பதை//

    பதத்தைப் பார்த்து பத பதைச்சி போயிட்டேன்! :)

    //ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

    ஷைலஜானந்தி-ன்னு சொல்லுங்க! (நந்தி இல்ல! னந்தி! ஆ-னந்தி:)

    ReplyDelete
  109. அம்பியும் அபி அப்பாவும் பிறந்த நாள் அதுவுமா சரியாவே கும்மி அடிக்கல! அதுக்கு மை.பா எறிந்து என் கனமான கண்டனங்கள்! :)

    ReplyDelete
  110. //கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க//

    :)
    இல்லை! கேசரிதாசன் தான் சரி! :)

    //கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))//

    பேப்பரை முகர்ந்து பார்த்துட்டு சாப்பிடுவீங்களே! சும்மா கூச்சப்படாம சொல்லுங்க! அதான் நீங்க ஏற்கனவே பென் பார்க்கும் படலம் எல்லாம் முடிச்சாச்சே! :)

    ReplyDelete
  111. //பாயசமாபோயிட்டது.. தண்ணீ அதிகமாச்சாம்!//

    தண்ணி அதிகமானா என்ன? அதெல்லாம் நாமக்கல் (மாநக்கல்) சிபி அண்ணே பாத்துப்பாரு! :)

    ReplyDelete
  112. //என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இருந்த வாட்சையே அடிக்கடிப் பாத்துட்டு இருந்தார்..//

    ஹா ஹா ஹா
    இப்படி ஒரு ஏக்கமா?

    இதுக்காகவே கல்யாணத்துக்கு அப்புறம் அவரைப் பழி வாங்கி இருப்பீங்களே! அவர் கிட்ட எத்தனை தங்கப் பட்டை போட்ட வாட்ச் வாங்கி இருப்பீங்க இது வரைக்கும்? :)

    ஆனா அவரு வாட்ச்சை பார்த்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு! ராகவ்- என்னான்னு சொல்லுப்பா! உனக்காகவே, அடுத்த அனுபவத்துக்காக, அக்கா இந்தப் போஸ்ட் போட்டிருக்காங்க! :)

    ReplyDelete
  113. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-க்கா!

    Belated Birthday Wishes தான்! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நீங்க பண்ணிப்பீங்க-ன்னு தெரியும்! :)

    ரியோ-ன்னு பிரேசில் பக்கம் போயி, இன்னிக்கி காலையில் தான் ஊரு வந்து சேர்ந்தேன்! மை.பா பக்கம் வரலாம்-ன்னா...பயமா இருக்கு! :))

    5:23 AM

    >>>>>>>>>>>>>>>>

    வாங்க கேஆரெஸ் அவர்களே வருக!

    உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்க ம்ம்ம்ம்..என் ஜாய்!! அதான் எங்கடா நம்மை விஷ் பண்ண செல்லத்தம்பி வரல்யேன்னு என்னைவிட மற்ற உங்க ரசிகர் கள் ஆவலா கேட்டாங்களா நானும் எதிர்பார்த்திட்டே இருந்தேன்...என்ன மைபான்னா பயமா..அன்ன்னிக்கு லால்பாக்கில் சர்டிஃபிகேட் கொடுத்தீங்களேப்பா அதெல்லாம் பொய்யா:) சப் ஜூட் ஹை க்யா:):):)

    ReplyDelete
  114. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

    ஷைலஜானந்தி-ன்னு சொல்லுங்க! (நந்தி இல்ல! னந்தி! ஆ-னந்தி:)\\\\\\




    >>>>>>>>>>>>>>.. ஏதும் உ.கு இதுல இல்லையே:)

    5:24 AM

    ReplyDelete
  115. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அம்பியும் அபி அப்பாவும் பிறந்த நாள் அதுவுமா சரியாவே கும்மி அடிக்கல! அதுக்கு மை.பா எறிந்து என் கனமான கண்டனங்கள்! :)

    5:28 AM

    >>>>>>>>>>>>>>>>>>>....

    அவங்க கும்மிஜோரா அடிச்சாங்க நீங்கதான் உலகம் சுத்தபோயிட்டீங்க:) அதுக்கு மைபா எறியப்படும்:)

    ReplyDelete
  116. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க//

    :)
    இல்லை! கேசரிதாசன் தான் சரி! :)

    //கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))//

    பேப்பரை முகர்ந்து பார்த்துட்டு சாப்பிடுவீங்களே! சும்மா கூச்சப்படாம சொல்லுங்க! அதான் நீங்க ஏற்கனவே பென் பார்க்கும் படலம் எல்லாம் முடிச்சாச்சே! :)

    5:33 AM
    >>>>>>>>>>>>>>>>>>

    இத அம்பிக்குப்போட்டுகொடுத்தாச்சி
    வந்து அவரு உங்கள கவனிச்சிப்பார்!!

    ReplyDelete
  117. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இதுக்காகவே கல்யாணத்துக்கு அப்புறம் அவரைப் பழி வாங்கி இருப்பீங்களே! அவர் கிட்ட எத்தனை தங்கப் பட்டை போட்ட வாட்ச் வாங்கி இருப்பீங்க இது வரைக்கும்? :)\\\



    :):) என்ன ஒரு நாலஞ்சி இருக்கும்!! தங்கமில்ல.....ஆனா புடவைக்கலருக்கு மேட்சா:)

    \\ஆனா அவரு வாட்ச்சை பார்த்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு! ராகவ்- என்னான்னு சொல்லுப்பா! உனக்காகவே, அடுத்த அனுபவத்துக்காக, அக்கா இந்தப் போஸ்ட் போட்டிருக்காங்க! :)\\


    இத ராகவ்க்கு அனுப்பிடறேன்:):) நன்றி ரவி கருத்துக்க்கும் பிசி டைம்ல வந்து பின்னூட்டமிட்டதுக்கும்:)

    5:39 AM

    ReplyDelete
  118. துப்பாக்கி முனையில் கடத்தி வருவது கேள்விப்பட்டிருக்கிறேன். இங்க என்னடாவெண்டால் மைபா முனையில் மாமா கடத்தப்பட்டிருக்கிறார். ம்ம்ம் ..

    ஷைலஜா ! மைசூர் என்பது முன்னொரு காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாமே? எருமையூர் மருவி மையூராகி இப்ப மைசூராகிவிட்டதாமே...? அப்படியானால் மைசூர்பாக் (a) மைபா எருமைப் பாவா (a) எபா வா?? :):)

    ReplyDelete
  119. ஆயில்யன் said...

    மீ த பர்ஸ்ட்

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

    என்ன ஷைலஜா அவராமே ஃபெர்ஸ்ட்?? :(:( இது அடுக்குமா?

    ReplyDelete
  120. சுவாதி சுவாமி. said...
    துப்பாக்கி முனையில் கடத்தி வருவது கேள்விப்பட்டிருக்கிறேன். இங்க என்னடாவெண்டால் மைபா முனையில் மாமா கடத்தப்பட்டிருக்கிறார். ம்ம்ம் ..

    ஷைலஜா ! மைசூர் என்பது முன்னொரு காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாமே? எருமையூர் மருவி மையூராகி இப்ப மைசூராகிவிட்டதாமே...? அப்படியானால் மைசூர்பாக் (a) மைபா எருமைப் பாவா (a) எபா வா?? :):)

    9:01 AM
    >>>>>
    வாங்க சுவாதி மைபான்னா முதல்ல வரவேணாமோ:)
    மாமாவை மைபாமுனைல கடத்தினேனா ஹஹ்ஹா:) எல்லாத்தியும் நம்பிடறதாக்கும்:)

    மைசூர்க்குப்பேர்காரணம் மகிஷனூர் அதாவது எருமைத்தலையனான மகிஷனின் இடம்.அவனை தேவி சம்ஹாரம் பண்ணிட்டுத்தான் சாமுண்டியா மலைல போய் உக்காந்துட்டாங்க.ஆக்வே மகிஷனூர் மருவி மைசூர் ஆகி இருக்கு.அதனால மைபா மகிஷ்பான்னு இருந்திருக்கும் முதல்ல:)

    ReplyDelete
  121. சுவாதி சுவாமி. said...
    ஆயில்யன் said...

    மீ த பர்ஸ்ட்

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

    என்ன ஷைலஜா அவராமே ஃபெர்ஸ்ட்?? :(:( இது அடுக்குமா?

    9:03 AM
    <<<<<<<<<<<<,,ஆமா சுவாதி ஆயில்யன் தான் நெய்யிட்ட மைபா பதிவுக்கு முதல் வருகைதந்தவர்! பாருங்க இங்க:)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.