Social Icons

Pages

Sunday, April 26, 2009

ஓரு குச்சிக்கு இரண்டுமுனையாமே!

ஜென் சூபி போன்ற மதங்களில் ஒரு சிறப்புஉண்டு அவை உவமை மற்றும் சிறு கவிதைகள்கூறி மனிதர்களை நீங்களே சிந்தியுங்கள் என்று சொல்லி விடும்.

அப்படி ஒரு சுவாரஸ்யமான கதையைப் பாக்கலாமா!



ஒருகுச்சின்னா அதுக்கு ரெண்டுமுனை இருக்கும்..

ஆமா..இது எங்களுக்குத்தெரியாதா என்று கேட்கிறீர்கள்! அதான் சிந்தியுங்கள்னு முதல்லயே சொல்லிட்டேனே!

சரி இப்ப ஒருகுச்சியை எடுத்துக்குங்க.

பாத்தீங்களா அதுக்கு ரெண்டுமுனை இருக்கு இப்ப அதை ரண்டா உடையுங்க
அப்போ ரெண்டுகுச்சி தனித்தனியா ரெண்டா பிரிஞ்சுருக்கா அதுல ஒருகுச்சியைகவனிங்க .

அட , அதுக்கும் ரெண்டுமுனை இருக்கும்! அதையும் உடையுங்க..
அட , மறுபடி அந்தக் குச்சிலயும் ரெண்டு முனைகள்!

அப்படியே நீங்க எவ்வளவு சின்ன துண்டாகக் குச்சியை உடைத்துக்கொண்டே போனாலும் ஒவ்வொருகுச்சிக்கும்ரெண்டு முனைகள் இருக்கும்.

பொறுமை இல்லாம ஓஓஓஒ ன்னு சத்தம்போடாமல் இப்போ மேல(ஐமீன் கீழ இனிமே நான் தட்டச்சப்போகிறதை )கவனிங்க:):)

அதாவது குச்சியை எவ்வளவு சின்னதா உடைச்சாலும் அதுக்கு ரெண்டுமுனைகள் உண்டு அல்லவா
இதான் நீங்க கத்துக்கவேண்டியது.

எப்படிக்குச்சிக்கு ரெண்டுமுனைகள் உள்ளதோ அதுபோல மனிதனுக்கும் இன்பம் துன்பம் என்று இரண்டுமுனைகள் உண்டு. சின்னவங்களோ பெரியவங்களோ அவங்களுக்கும் வாழ்க்கைல ரெண்டும்
உண்டு என்பதைத்தான் இந்தக்குச்சி உதாரணம் உணர்த்துகிறது.

இப்படி தத்துவம் பேசினதுக்காக என்னை யாராவது குச்சி எடுத்து அடிக்க வரதுக்கு முன்னாடி...............

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!:)

9 comments:

  1. குச்சித் தத்துவம் நல்லாருக்குன்னு சொல்ல வரும் முன்னேயே பிச்சுக்கிட்டு ஓடிட்டீங்களே:))!!

    ReplyDelete
  2. Anonymous2:46 PM

    //இப்படி தத்துவம் பேசினதுக்காக என்னை யாராவது குச்சி எடுத்து அடிக்க வரதுக்கு முன்னாடி...............//

    அந்த பயம் இருக்கட்டும் :)

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ராமலஷ்மி கோபி சின்ன அம்மிணி..

    ராமலஷ்மி அடிக்கவருவாஙக்ளோன்னுதான் பிச்சிட்டு ஓட்றேன்!!!


    என்ன சிரிப்பு கோபி:)::)


    சின்ன அம்மிணி!என்ன குச்சி இல்லாமலே அதட்றீங்க ப ..ப....பயமாருக்கு!!:):)

    ReplyDelete
  4. எப்படிங்க இப்படி எல்லாம் ?

    ReplyDelete
  5. //இப்படி தத்துவம் பேசினதுக்காக என்னை யாராவது குச்சி எடுத்து அடிக்க வரதுக்கு முன்னாடி...............

    //

    இஃகி இஃகி இஃகி

    :))

    ReplyDelete
  6. Anonymous12:43 AM

    Apart from Joke it conveys very strong message for life.. This leads to serious thought process about life philosophy..very strong useful and meanigful message and touching...!!!

    Edward

    ReplyDelete
  7. வலைச் சரத்துல ஒங்களைப் பத்தித் தனிப்பதிவு . பாருங்க.

    ReplyDelete
  8. மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.

    Very dense message. Deeper we think, more we deciper.

    lovely post.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.