Social Icons

Pages

Friday, October 21, 2011

சின்னவளை முகம் சிவந்தவளை!


ஐஸ்வர்யாரா்ய்க்கு வளைக்காப்பாம்!
ஆஹா உலக அழகின்னாலும் சில சம்பிரதாயங்களை விடறாங்களா பாருங்க!

ஆனாலும் இந்தவளை இருக்கே இது ரொம்பகாலமா வளையவருதுன்னு நினைக்கிறேன். தலைவன் நினைவில் மெலிந்த தலைவிக்கு வளையல் ஒட்டியாணம் ஆகிவிட்டதாம்! மோதிரம் வளையல் ஆகிடிச்சாம்,,,காதலின் மேன்மையை சொல்ல அந்த நாளில் புலவர்கள் கற்பனை கொடிகட்டிப்பறந்திருக்கு...

இருங்க வளைகாப்பை முடிச்சிட்டு இலக்கிய வளையத்துக்கு வருவோம்!

வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...ஆளுக்கு அரைடஜனுக்குக்கம்மி இல்ல. செல்வத்துள் செல்வம் மழலைச்செல்வம்தான்! என்னது எப்படித்தான் பெத்தீங்களோன்னு கேக்கறீயா அதுக்கென்னடிம்மா மரம்வச்சவன் தண்ணி ஊத்தாமலயா போவான்?அப்படியாப்பட்ட அனுபவசாலிகள் உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்ற பெருமிதமான துணிவைத்தரும் வார்த்தைகளும் வளைகாப்புப்பெண்ணுக்கு பிரசவ பயத்தைப்போக்க உதவியா இருக்கலாம்!




இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

முன்னெல்லாம் வளைகாப்புக்கு







வளையல்காரரே இப்படி பொட்டியோட ஆஜராகிடுவார்.அன்னிக்குக்கண்ணாடிவளையல்களுக்குத்தான் அமோக வரவேற்பு.

ஹைதராபாத்ல சார்மினார்பகுதில வளையல் கடைகள் கண்ணைக்கட்டுது.மதுரை மீனாட்சி கோயில் வாசல் கடைகளில் எத்தனைவிதமான வளையல்கள் ! உடைக்கு மேட்சிங்கா வளை போட்டா அதுவும் ஓர் அழகுதான்.

ஒரு சமையல்காரம்மாவை அவங்கவேலை பார்த்தவீட்ல தங்க வளை திருடினதா சந்தேகப்பட்டாங்க.அந்தம்மா கணவனை இழந்து மகனைப்படிக்கவைக்க கஷ்டப்பட்டு உழைக்கிற ஏழைவர்க்கம். அவங்க தான் எடுக்கலைன்னு சொல்லியும் போலீஸ் ஸ்டெஷன்ல இழுத்துட்டுப்போய்ட்டாங்க அன்னிக்கு மாலை காலேஜிலிருந்து பொண்ணுவந்து தான் காலேஜ்ல ஏதோ பாரம்பரிய விழா அதுக்கு வழக்கமா கைல ப்ரேஸ்லெட்போடறதுக்கு பதிலா அம்மாகிட்ட சொல்லாம அவங்க கழட்டிவச்சிருந்த ஆறு தங்கவளையலையும் மாட்டிட்டுப்போனதா சொல்லிட்டு சமையக்காரம்மாகிட்ட ஸாரி கேட்ருக்கா.

அந்தம்மா அந்த வீட்டு வேலையைவிட்டுவேற ஊரே போய் ரொம்ப க‌ஷ்டப்பட்டு தையல்கத்துக்கிட்டு தையல்மெஷின்ல எம்ப்ராய்டரிலாம் செய்து ரெடிமேட் ட்ரெஸ் விதவிதமா தைச்சி இன்னிக்கு பெங்களூர்ல பெரிய ரெடிமேட் ஆடையகம் வச்சிருக்காங்க அவங்களோட இடது்கைலமட்டும்வாட்ச் இருக்கும் வலதுகைவெறிச்சினே இருக்கும்.
கன்னட சமூக அமைப்பு ஒண்ணுக்கு விருந்தினரா வந்த அவங்கள எழுத்தாளரான என்னை அந்த அமைப்பு அறிமுகம் செய்துவைச்சாங்க.. அப்போ பேச்சுவாக்கில நான் தயக்கமாய் கேட்க அவங்க இந்த சோகக்கதையை சொல்லிட்டு,” ஆமாம் ஷைலஜா.அப்போ ரப்பர்வளைதான் போட்டிருந்தேன் அப்புறம் மகன் படிச்சி பெரிய ஆளாயிட்டான் நானும் பிரபல தொழிலதிபர் ஆகிட்டேன் வைரவளையே வாங்கிக்கலாம்தான்.ஆனாலும் அன்னிலேருந்து நான் வளைபோடறதையே விட்டுட்டே்ன்..”

ஆறாத வடு அவர் மனசில் இருப்பதை பேச்சில் தெரிஞ்சிக்கமுடிஞ்சிது.



சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன்..
‘தென்னிந்தியாவில் உள்ள பல ஜி.ஆர்.டி ஷோரூம்களிலும் வளையல் திருவிழா.

விழாவின் ஒரு பகுதியாக, தினந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் உயரமாக வளையல் அடுக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இதில் அதிக எண்ணிக்கையில் வளையல்களை ஒன்றன் மீது ஒன்றாக வரிசையாக அதிக உயரத்துக்கு வளையலை அடுக்குபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு 6 கிராம் எடை கொண்ட தங்க வளையலை பரிசாக வென்றனர். இந்த 6 கிராம் எடை கொண்ட ரூ.16,500 மதிப்புடைய தங்க வளையலை 216 பேர் வென்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.(இவங்க வீட்டில பாத்திரம்பண்டத்தை அடுக்கிவச்சிருப்பாங்களா) வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த வளையல் திருவிழாவில் 216 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றே போட்டி யாளர்களுக்கு , தங்க வளையல் பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரியில் நடைபெற்றது.’

மக்களை எப்படில்லாம் வளைச்சிப்போடறாங்க பாருங்க!
ஆனாலும் தங்கவளை கையில் எவ்வளோ போட்டாலும் எவ்வளோ கையை மேடைலபேசறமாதிரி ஆட்டிப்பேசினாலும் அது சத்தமே போடாது.கவரிங்வளை நாலுபோட்டீங்கன்னா போதும் அவ்ளோதான் ஊருக்கே நம்ம வருகையை பராக் சொல்லிடும்.இதிலிருந்து என்ன தெரியுது உன்னதங்கள் அமைதியாய் அடக்கமாய் இருக்கும்னுதானே?!


வளை சங்கு என்ற பெயரிலும் பழைய இலக்கியத்தில் இருக்கிறது. வளை கழன்றுவிழுதலை இலக்கியங்கள் பல சுவையாக சொல்லி இருந்தாலும் இந்த ஆண்டாள் கொஞ்சம் அதிகாரமாகவே சொல்லிருக்கா பாருங்க..

‘அவர் தன் கையில் ஒரு சங்குவச்சிருக்கார் அதைமிகபத்திரமாக வச்சிருக்கார்.வேற யார்கிட்டயும் எந்த சந்தர்ப்பத்திலயும் கொடுப்பது கிடையாது என்னுடைய கையில் இருக்கும் சங்கும் எனக்குப்பிரமாதம்தான்.. அ்ப்படி இருக்க அவர்(அரங்கநாதர்) எப்படி என் சங்கை பறிச்சிக்கலாம்?”

தாம் உகக்கும் தன் கையில்
சங்கமே போலாவோ?
யாம் உகக்கும் எம் கையில்
சங்கமும் ஏந்திழையீர்?

என் சங்கு என்று சொல்லாமல் எம் சங்கு எண்ரு தோழிகளிடம் சொல்வது நாகரீகமாய் இருக்கிறது பாருங்க... ஆண்டாள் மட்டுமில்ல கவிதைகளில் பலபெண்கள் வளைகழன்றதை வளை பறித்ததாகவேதான் கூறுவார்கள். இன்னும் அழுத்தமாக என் கைப்பொருள்களைக்கவர்ந்துகொண்டான் என்பார்கள் கைப்பொருள்கள் என்பது சங்குவளையல்கள்தான்.


கைப்பொருள்கள் முன்னமே
கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள ஓடும்
திருவரங்கச்செல்வனார்
(செய்=வயல்_)

மாத்தத்தன் என்று ஒருவன் தெருவழியேபோனானான் அவனை எத்தனையோபெண்கள் பார்த்தார்களாம்(பொண்ணுங்களும் சைட் அடிச்சிருக்காங்க அந்த நாளில்(லும்) எல்லோருக்குமே அவன்மேல்மோகம் உண்டாகிவிட்டதாம் அவன் அடுத்ததெருவுக்குத் திரும்பும்போது எல்லாப் பெண்களின்வளையல்களையும் ஒருமிக்க பறித்துப்போய்விட்டானாம் இதைஒருபெண் சொல்கிறாள் ,,,

இருந்தவளை போனவளை
என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப்போனான்-பெருந்தவளை
பூத்தத்த தேன் சொரியும்
பொன்னிவளநாடன்
மாத்தத்தன் வீதியிலே
வந்து,,’

பெரிய தவளை(இங்கயும் வளை பாருங்க) பூக்கள்மீது தாவிக்குதிப்பதால் மலர்களில் உள்ள தேன் சிந்துகின்ற காவிரிபாயும் செழிப்பான சோழநாடாம்!
இது பிற்காலப்பாட்டுஎன்பார்கள்.




ஐங்குறு நூறுல இந்தப்பாட்டுல

வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறை கெழு கொண்க நீ தந்த
அறை புனல் வால்வளை நல்லவோ தாமே.


வலம்புரி – right-twisted conch-shells, உழுத – whorl, வார் மணல் – long sandy, அடைகரை – sand filles shores, இலங்கு கதிர் – shining rays, முத்தம் – pearls, இருள் கெட – removing darkness, இமைக்கும் – shining, துறை கெழு கொண்க – lord of the splendid seashore, நீ தந்த – what you gave, அறை – fast waves, புனல் – moving water, வால் வளை – white bangles, நல்லவோ தாமே – are they better

Lord of the sandy seaport
where right-twisted conch shells
whorl in the long sandy shores,
and where shining rays of pearls
remove darkness!
Are the white bangles from the moving waves
that you gave her
better than the ones you gave her before?

என்ன நடுல பீட்டர்விடறேனேன்னு பாக்கறீங்களா கான்வெண்ட் கண்மணிகளும் படிக்கிறாங்க இல்லே?!

இந்தப்பொண்ணு பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாடறா பாருங்க அவன்பேரில் அவ்வளவு காதலாம்!

' பாண்டியனைப் பார்க்காமல், நான் மேலும்மேலும் மெலிந்துகொண்டேபோனால், என்னுடைய சங்கு வளையல்கள் கீழே விழுந்து, உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அந்த வலம்புரிச் சங்கு சரியான நேரத்தில் ஒலித்து, அதன் இனமாகிய வளையல்களைக் காப்பாற்றிவிட்டது !'


செய்யார் எனினும் தமர்செய்வர் என்னும்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கைஆர்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்துஇயம்பக் கேட்டு.

(செய்யார் - (உதவி) செய்யமாட்டார்கள்
தமர் - தமக்கு உரியவர்கள் / உறவினர்கள்
விளங்கிழாய் - ஒளி மிகுந்த ஆபரணங்களை அணிந்த பெண்ணே
ஆர் - நிறைந்துள்ள
வரி வளை - நீண்ட வளையல்கள்
வையையார் - வைகை ஆறு
புரிவளை - வலம்புரிச் சங்கு
போந்து - வந்து
இயம்ப - சொல்ல)

குறளிலும் வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன் என்று தலைவி சொல்லுவதுபோல இருக்கும். அந்தக்குறளை இங்க எடுத்து அளிக்கிறவங்களுக்கு தீபாவளிக்கு செய்யப்போற மைபா அளிக்கப்படும்!


சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
என்கிறதுதிருவாசகம்,

உந்துமதகளிற்றன் என் ஆரம்பிக்கும் திருப்பாவையில் சீரார்வளையொலிப்ப என்று வரும்.
சூடகமே தோள்வளையே என்கிறது இன்னொரு திருப்பாவையில். சூடகம் என்றால் கைவளை.ச்சூடி ஹிந்தில வளை. மொழிகளுக்குள் வளை எப்படியெல்லாம் வளையவருது பாருங்க!

வளையல்கள் பெண்களின் வாழ்க்கையோடு வருகின்றன.அது ஒரு மங்கலச்சின்னம் என்பதால்
கணவன் இறந்ததும் வளையைக்கழற்றிவைத்துவிடுகிறார்கள் இப்போதும் சிலபெண்கள். கண்ணாடிவளையல்களை கணவனை இழந்தபெண்களின் கைகளிலிருந்து உடைத்து எடுப்பது ஒருசாரார் வழக்கமும். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஒழிஞ்சிட்டு வருவதில் நிம்மதி.

கன்னடத்துல வளைக்கு பளே (bale)என்பார்கள்.
உங்கதமிழ்ல எப்படி ஒரு ப , ஒரு த, ஒரு க ,ஒரு ச என்று வச்சிட்டு சமாளிக்கறீங்கப்பா ?’என்று பல கன்னட சிநேகிதிகள் வியப்பாக கேட்பார்கள். கோடு போட்டா ரோடுபோடும் நம் பெருமையை நாம் உணர்வோம் அவர்கள் அறிய வாய்ப்பில்லை !


கர்னாடகாவில் திருமணமான பெண்கள் கண்டிப்பா கண்ணாடிவளைபோட்டே தீரணும்..இப்போ நூல் இழையாய் ப்ரேஸ்லெட் தான் இளம்பெண்கள் கையில்! குஜராத்தில் வங்காளத்தில்கூட வளையல்கள் பிரசித்தம்...இன்னமும் இருக்கும் அதிகம்விவரம் தெரியவில்லை.





சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற ஒரு பழையபாட்டுல ஏகப்பட்ட வளை வரும்.

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான்
வளைகொண்ட கையாலே மெதுவாக மூட - என்
கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான்
பறந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற(நான் மல்ரொடுதனியாக)


வளையோசை கலகலவென

எங்கெல்லாம் வளையொசைகேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசைபறக்கின்றது

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ






இன்னும் வளைப்பாட்டு நிறைய இருக்கும். தெரிஞ்சவங்க இங்கபகிர்ந்துக்கலாமே!

சுத்திவளைச்சி எழுதாமல் சுமாரா படிக்கிறமாதிரி எழுதிமுடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.
இதுக்கே உடன்பிறவா சகோதரர்களான மௌலி(மதுரையம்பதி) ஆயில்யன்(கடகவலைவச்சிருப்பதால் கடகவளைபோடலாம்)அம்பி தக்குடு விஜு கே ஆரெஸ் ஜமால் சுபைர் ஜீவ்ஸு சென்ஷி லக்கி ஷாஜ்கான் இப்னு ப்ரசாத் குட்டி டின், பெரியடின்(முகிலன் தினேஷ்குமார்) விழியன் ஜோசப் .காமேஷ் கந்தவேல்ராஜன்இன்னும் அவசரத்துல மறந்துபோன மற்றவர்களும்..் அக்காவுக்கு ஜம்னு வைரக்கல் பதித்த வளையல் வாங்கப்போறாங்கன்னு என் வலைப்பூ கிளி ,கூவிக்கிட்டே இருக்கு!கூவிக்கிட்டே இருக்கு, கூவிக்கிட்டே இருக்கு!!!!

44 comments:

  1. வளையலை வைத்து இவ்வளவு எழுத முடியுமா????
    படிக்க படிக்க சுவாரஸ்யம்..
    அதிலும் தவளையிலும் வலை இருக்குன்னு சொன்னீங்க பாருங்க
    அங்க தான் நிக்குறீங்க...

    'மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்'
    எனக்குப் பிடித்த ஒரு வளைப்பாடல்.

    அருமையான படைப்பு சகோதரி.

    ReplyDelete
  2. haa haa வளையோசை கலகலவென இதுதான் சரியான டைட்டில்!!!

    ReplyDelete
  3. >>>>>>Your comment has been saved and will be visible after blog owner approval.

    பிரபல பதிவர் போல!!!!!!

    ReplyDelete
  4. பிளாக் லே அவுட் ஈஸ் சோ நீட் & சிம்ப்பிள் அண்ட் க்யூட்

    ReplyDelete
  5. அவ்வ்வ்வ்... தம்பிகளுக்கு ஒண்ணுமே இல்லையா ?

    ReplyDelete
  6. வளை காப்புக் கண்டேன்-நல்
    வளமிக்க தமிழில்
    விளை யாட்டாய் சொற்கள்-வந்து
    விழவின்பம் கொண்டேன்
    சுளை யாக தேன்பலா-என
    சுவைத்துமிக உண்டேன்
    களை காணப் பயிரே-தமிழ்
    காப்பதும் உயிரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. வளைகாப்பு..
    உறவுகள் யாவரும் மீண்டும் கூடிட ஒரு வாய்ப்பு
    உறவாடி வாழ்த்தி விருந்துண்டு போவது முத்தாய்ப்பு.

    சடங்குகளின் உண்மையான அவசியத்தை அரிது போற்றுவது சிறப்பே!

    வளைத்து வளைத்து சென்று வகையாக வைர வளையல்களில் நிறுத்தி
    அதற்கு அன்பு சகோதரர்கள் தாம் பொறுப்பு என்று சொன்னது இன்னும் சிறப்பு...

    நானோ, விஷயம் தெரியாமல் வந்து விட்டேன்... அறிந்தவர்கள் யாவரும்....
    வளையல் கடைக்கு சென்றதனால் வரத் தாமதம் மாகுமேனவே நினைக்கிறேன்.

    பதிவுக்கு நன்றிகள் சகோதிரி..

    ReplyDelete
  8. வளையைப் பற்றி வளைத்து வளைத்து நிறைய விஷயங்களைத் தந்து விட்டீர்கள். அதிலும் வேலைக்காரம்மாவாக இருந்து தொழிலதிபரான பெண்மணியின் கதை மனதில் அமர்ந்து கொண்டது. பிரமாதம் அக்கா...

    ReplyDelete
  9. வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...ஆளுக்கு அரைடஜனுக்குக்கம்மி இல்ல. செல்வத்துள் செல்வம் மழலைச்செல்வம்தான்! என்னது எப்படித்தான் பெத்தீங்களோன்னு கேக்கறீயா அதுக்கென்னடிம்மா மரம்வச்சவன் தண்ணி ஊத்தாமலயா போவான்?அப்படியாப்பட்ட அனுபவசாலிகள் உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்ற பெருமிதமான துணிவைத்தரும் வார்த்தைகளும் வளைகாப்புப்பெண்ணுக்கு பிரசவ பயத்தைப்போக்க உதவியா இருக்கலாம்!//

    இது நல்ல கருத்தாய் இருக்கே!

    வளைகாப்பு செய்வது குழந்தை உண்டாகி இருக்கும் பெண்ணை மகிழ்ச்சி படுத்த என்பார்கள். அந்த பெண் நல்ல மகிழ்ச்சியாக இருந்தால் தான் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பார்கள்.

    பெற்று பிழைத்த பெரியவர்களும் ஆசிர்வாதம் செய்தால் நல்லது என்பாதால் அவர்களையும் ஆசிர்வாதம் செய்ய சொல்வார்கள். இப்படி நிறைய காரணம் இருந்தாலும் நீங்கள் சொல்லும் காரணம் நல்லா இருக்கிறது.

    படகோட்டி படத்தில் வளையலின் சிறப்பைப் பற்றிக் கூறும் பாடல் உண்டு.

    திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் வளையல் விற்ற வரலாறூ உண்டு.

    வடநாட்டில் சுமங்கலி பெண்களுக்கு சிவப்பு வளையல் சங்கு வளையல் தான் முக்கியம்.

    ReplyDelete
  10. வைரக்கல் பதித்த வளையலாஆஆஆஆ... கூவிக்கிட்டே இருக்கட்டும்... பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. மகேந்திரன் said...
    வளையலை வைத்து இவ்வளவு எழுத முடியுமா????
    படிக்க படிக்க சுவாரஸ்யம்..
    அதிலும் தவளையிலும் வலை இருக்குன்னு சொன்னீங்க பாருங்க
    அங்க தான் நிக்குறீங்க...

    'மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்'
    எனக்குப் பிடித்த ஒரு வளைப்பாடல்.

    அருமையான படைப்பு சகோதரி.

    7:33 AM

    >>>>>>>>>>>>>>>>>>>>>

    நன்றி மகேந்திரன்... உங்க வளைப்பாடல் எனக்கும் பிடிக்கும் பதிவில் எழுதும்போது மறந்துவிட்டேன்

    ReplyDelete
  12. சி.பி.செந்தில்குமார் said...
    haa haa வளையோசை கலகலவென இதுதான் சரியான டைட்டில்!!!

    7:51 AM


    சி.பி.செந்தில்குமார் said...
    >>>>>>Your comment has been saved and will be visible after blog owner approval.

    பிரபல பதிவர் போல!!!!!!

    7:51 AM

    ...

    வாங்க செந்தில்///பிரபல பதிவரா அவ்வ்வ்வ் கிண்டல்தானே இது?:0 வருகைக்கு நன்றி டைட்டில் உங்களுது அழகு!

    ReplyDelete
  13. //சி.பி.செந்தில்குமார் said...
    பிளாக் லே அவுட் ஈஸ் சோ நீட் & சிம்ப்பிள் அண்ட் க்யூட்

    7:53
    ///
    படா சிம்பிளா இருக்கு....கொஞ்சம் மாத்தணும் டைம் இல்ல இதையும் பாராட்டிட்டிங்க செந்தில் நன்றி மிக

    ReplyDelete
  14. //Jeeves said...
    அவ்வ்வ்வ்... தம்பிகளுக்கு ஒண்ணுமே இல்லையா ?

    8:37 AM

    /////
    ஏன்ம்ப்பா நான் அங்க கேட்டதுக்கு பதிலைக்காணோமாம் மத்தவங்களுக்கு எஸ் ஆகிட்டாங்க என்னவோ போங்க:)

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு ஷைலஜா! வைரக்கல் வளையல் கைவந்து சேர்ந்ததும் மறக்காமல் இங்கே காட்டுங்கள். டிசைன் சுமாரா இருந்தா பொங்கலுக்கு இன்னொரு ஜோடி கேட்கலாம்:)!

    ReplyDelete
  16. //புலவர் சா இராமாநுசம் said...
    வளை காப்புக் கண்டேன்-நல்
    வளமிக்க தமிழில்
    விளை யாட்டாய் சொற்கள்-வந்து
    விழவின்பம் கொண்டேன்
    சுளை யாக தேன்பலா-என
    சுவைத்துமிக உண்டேன்
    களை காணப் பயிரே-தமிழ்
    காப்பதும் உயிரே

    புலவர் சா இராமாநுசம்

    9:11 AM

    //>>>>>>>>>>>>>>
    நன்றி புலவரே அழகுத்தமிழில் பாவால் கருத்து உரைத்தமைக்கு.

    ReplyDelete
  17. //தமிழ் விரும்பி said...
    வளைகாப்பு..
    உறவுகள் யாவரும் மீண்டும் கூடிட ஒரு வாய்ப்பு
    உறவாடி வாழ்த்தி விருந்துண்டு போவது முத்தாய்ப்பு.

    சடங்குகளின் உண்மையான அவசியத்தை அரிது போற்றுவது சிறப்பே!

    வளைத்து வளைத்து சென்று வகையாக வைர வளையல்களில் நிறுத்தி
    அதற்கு அன்பு சகோதரர்கள் தாம் பொறுப்பு என்று சொன்னது இன்னும் சிறப்பு...

    நானோ, விஷயம் தெரியாமல் வந்து விட்டேன்... அறிந்தவர்கள் யாவரும்....
    வளையல் கடைக்கு சென்றதனால் வரத் தாமதம் மாகுமேனவே நினைக்கிறேன்.

    பதிவுக்கு நன்றிகள் சகோதிரி..

    9:40 AM

    ///

    நீங்க வந்ததுதான் மகிழ்ச்சி தமிழ்விரும்பி.கடசில சொன்னீங்களே அதுக்கு முதல்ல நன்றி மேலும் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  18. //கணேஷ் said...
    வளையைப் பற்றி வளைத்து வளைத்து நிறைய விஷயங்களைத் தந்து விட்டீர்கள். அதிலும் வேலைக்காரம்மாவாக இருந்து தொழிலதிபரான பெண்மணியின் கதை மனதில் அமர்ந்து கொண்டது. பிரமாதம் அக்கா...

    10:10 AM

    ///>>>ஆமாங்க நிஜங்கள் எப்போவும் மனசை பாதிக்கும்....வருகைக்கும் கருத்துக்கும் ரொம்பவே நன்றி

    ReplyDelete
  19. என்னாது வைரம் பதிச்ச வளை-யா?
    குடுத்துட்டாப் போச்சு!
    ஒரு ரம் பாட்டில் வாங்கி மேசையில் வைக்கிறேன் = வை-ரம்
    எல்லாரும் சுத்தி வளைவா நின்னு மகிழ்வோம்!:) வை-ரம்-வளை

    என்ன இருந்தாலும் அக்காவை விட்டுக் குடு(டி)க்க முடியுமா? :))

    ReplyDelete
  20. என்ன பிராண்ட்-க்கா?
    Malibu நல்லா இருக்கும், Bacardi is also best! El Dorado will come close:))) வை-ரம்!

    ReplyDelete
  21. //கோமதி அரசு said...
    படகோட்டி படத்தில் வளையலின் சிறப்பைப் பற்றிக் கூறும் பாடல் உண்டு.

    திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் வளையல் விற்ற வரலாறூ உண்டு.

    வடநாட்டில் சுமங்கலி பெண்களுக்கு சிவப்பு வளையல் சங்கு வளையல் தான் முக்கியம்.

    12:30 PM

    ///

    வாங்க கோமதி அரசு.நீங்க கூறும் தகவல்கள் அருமை..வருகைக்கும் நல்ல கருத்துக்கும் நன்றிமிக

    ReplyDelete
  22. //மாய உலகம் said...
    வைரக்கல் பதித்த வளையலாஆஆஆஆ... கூவிக்கிட்டே இருக்கட்டும்... பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    12:33 PM

    //

    வாங்க மாயாவி(ச்சும்மா மாயௌலகம் வலைப்பூ பெயர் என்பதால்:)

    என்னது கிளி கூவிட்டே இருக்கட்டுமா அப்போவைரவலையை யாரும் கண்டுக்கமாட்டாங்கன்னு சொல்றீங்களா?:) என்னவோ எனக்கு நம்பிக்கை இருக்குங்க ராஜேஷ் வருகைக்கு நன்றி..உங்ககிட்ட வலைப்புல மாயம் செய்ய கத்துக்கணும்

    ReplyDelete
  23. அருள் said...
    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

    1:31 PM

    >>>>வருக.....என்ன பயணம் உங்க பதிவில் இருக்கா படிச்சி சொல்லட்டுமா?

    ReplyDelete
  24. //ராமலக்ஷ்மி said...
    அருமையான பகிர்வு ஷைலஜா! வைரக்கல் வளையல் கைவந்து சேர்ந்ததும் மறக்காமல் இங்கே காட்டுங்கள். டிசைன் சுமாரா இருந்தா பொங்கலுக்கு இன்னொரு ஜோடி கேட்கலாம்:)!

    6:20 PM

    ////வாங்க ராமல்ஷ்மி எங்கே இந்த தம்பிகள் யாரும் வாய்வார்த்தைக்காவது அதுக்கென்ன வைரவளைதானேன்னு சொல்ல வரலாம் ஆனா பாருங்க வேணும்னே தலைமறைவா இருக்காங்க இருக்கட்டும் ஆனைக்கு ஒருகாலம் வந்தா..:)

    வருகை+கருத்துக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  25. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    என்னாது வைரம் பதிச்ச வளை-யா?
    குடுத்துட்டாப் போச்சு!
    ஒரு ரம் பாட்டில் வாங்கி மேசையில் வைக்கிறேன் = வை-ரம்
    எல்லாரும் சுத்தி வளைவா நின்னு மகிழ்வோம்!:) வை-ரம்-வளை>>>>>

    ரவி...ரொம்ப ரம்யமான கருத்துன்னு நினைப்பா?:) அண்டங்க்காக்கா கொண்டைக்காரியையே நீங்க அண்டம் காக்கும் மீனாட்சி(கொண்டைமுடி அலங்காரி) என்று கருத்து சொன்னவரு இப்போ வைரம்க்கு இப்படி ஒரு விளக்கமா?:)

    என்ன இருந்தாலும் அக்காவை விட்டுக் குடு(டி)க்க முடியுமா? :))>>>>>>

    யப்பா....இதெல்லாம் ஓவரா இல்ல?:) நாடுவிட்டு நாடுவந்து சமத்தா இருக்கணும் என்ன?:)

    6:26 PM

    ///

    ReplyDelete
  26. வணக்கமுங்கோ..
    வளையளை வைத்து இப்படி ஒரு பதிவா? அருமை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. காட்டான் said...


    //வணக்கமுங்கோ..
    வளையளை வைத்து இப்படி ஒரு பதிவா? அருமை வாழ்த்துக்கள்..
    ////
    \வாங்க காட்டான் சிந்தனையை வளைச்சப்போ இந்த டாபிக்ல எழுததோணினது அவ்வளவுதான் நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  28. எப்போதும் போல கலக்கல் பதிவு......:)

    ReplyDelete
  29. //மதுரையம்பதி said...
    எப்போதும் போல கலக்கல் பதிவு......:)

    10:21 PM

    ////////

    நிஜமாவா மௌலி? நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  30. வளை பற்றி வலை பின்னியது போல அருமையான பல தகவல்கள். எல்லாம் அருமையோ அருமை.

    //ஆனாலும் தங்கவளை கையில் எவ்வளோ போட்டாலும் எவ்வளோ கையை மேடைலபேசறமாதிரி ஆட்டிப்பேசினாலும் அது சத்தமே போடாது. ................

    இதிலிருந்து என்ன தெரியுது உன்னதங்கள் அமைதியாய் அடக்கமாய் இருக்கும்னுதானே?!//

    உன்னதமான வரிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வளை பற்றி வலை பின்னியது போல அருமையான பல தகவல்கள். எல்லாம் அருமையோ அருமை.


    உன்னதமான வரிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    4:33 AM

    >>>>>>>>>>>>>>>>>>>



    vgkஅவர்களுக்கு நல்வரவு.
    உன்னதமான வரிகளைப்பாராட்டியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  32. சுவாரசியமா எழுதியிருக்கீங்க அக்கா,

    இதையும் சேர்த்துக்குங்க:

    [b]கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
    கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் – அம்மா
    பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
    வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க
    வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

    பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல்.....
    ...................
    ....................[/b}
    (படகோட்டி)

    ReplyDelete
  33. Post suuper!! but last paragraph yennoda computerla theriyaveyy maatengarthu. HTML code maathiri kaatarthu akka!! :PPP

    ReplyDelete
  34. இப்னு ஹம்துன் said...
    சுவாரசியமா எழுதியிருக்கீங்க அக்கா,

    இதையும் சேர்த்துக்குங்க:

    [b]கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
    கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் – அம்மா
    பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
    வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க
    வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

    பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல்.....

    <<<<<<<<<<<<<<<<<<<<
    அதெல்லாம் இருக்கட்டும் கடசிபாரா படிச்சீங்களா இல்லையா?:)

    ReplyDelete
  35. //தக்குடு said...
    Post suuper!! but last paragraph yennoda computerla theriyaveyy maatengarthu. HTML code maathiri kaatarthu akka!! :PPP

    ////

    கண்ணாடி வாங்கித்தரேன் தக்குடு தெரியுதா பாரு :) சரியான வாலுப்பா...

    ReplyDelete
  36. அம்பிக்கு வலைப்பூவில் மடலிட நேரமில்லாமல் தனிமடலில் இட்டதை இங்க அளிக்கிறேன்

    //G Rengaraman to me,
    show details 21 Oct (1 day ago)

    ஐஸ் வ்ளைகாப்பு எப்படி நடந்தது? என்ன கலர் டிரஸ்? யார் யார் வந்தாங்க? டிபனுக்கு கேசரி உண்டா? இப்படி ஒரு நேரடி ரிப்போர்ட் குடுப்பீங்கன்னு நெனச்சு பதிவு முழுக்க படிச்சேன். கடைசிலே வெச்சீங்க பாரு ஆப்பு. அவ்வ்வ்வ். :))

    நீங்களே வைரம் போல தங்கமான மனசுக்காரங்க, வைரத்துக்கே வைரம் போட முடியுமா? (ஸ்ப்பா எப்படியேல்லம் எஸ்கேப்பாக வேண்டி இருக்கு..?)

    பதிவு வழக்கம் போல அருமை, ஆய்வுக் கட்டுரை ரேஞ்சுக்கு கருத்துச் செரிவோட இருக்கு. நீங்க குறிப்பிட்ட "வலைக்கையில் வளையள்கள் நானல்லவா?" அந்த வரிகள் எனக்கும் ரெம்ப பிடிக்கும், வாலியின் வார்த்தை ஜாலத்தை எண்ணி பலமுறை வியந்துள்ளேன்.
    regards
    ambi

    ReplyDelete
  37. //---------- லக்கிஷாஜகானும் அம்பிவழியில் அளித்த மடல்..

    ----------
    From: lucky shajahan
    Date: 2011/10/21

    சும்மா வளைச்சி வளைச்சி எழுதியிருக்கீங்கக்கா வளையலை பத்தி..
    இளம் வயசுப்பொண்ண வசியம் பண்ணும் வலையல்காரன்னு பாட்டுதான் கேட்டிருக்கேன் .. இது எல்லா வயசுப்
    பொண்ணையும் வசியம் பண்ற பதிவுக்க்கா ..
    கட்சீல நம்ம பேரைப் போட்டீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க..
    அக்காவுக்கும் வாங்கிக் கொடுங்க அப்படியே அதுக்கு முன்னாடி எனக்கும்னு சொல்றாங்க வுட்டுக்கார அம்மணி .. :-)
    யக்கோவ் அங்கேயும் இதப் போட்ருக்கேன்... பாருங்க
    //


    எங்கயும் போடல லக்கி...நிஜமாவே வைரவளை கேட்ருவேனோ என்ற பயம் அம்பிபோல உங்களுக்குமா?:) கடவுளே.:) எப்டியோ ஏதோ கருத்தாவது சொன்னீங்களே போனாப்போகுது நன்றி தெரிவிச்சிக்கிறேன்:)

    ReplyDelete
  38. அக்காளுக்கு வளைகாப்பு
    அத்தான் முகத்தில புன்சிரிப்பு

    அக்கம்பக்கம் கலகலப்பு
    ஆரைப் பார்த்தாலும் சிறு சிரிப்பு.

    வளைகாப்பு ஐஸுக்கு நடந்தது எங்களுக்கெல்லாம் அருமையா பதிவு கிடைச்சுதுப்பா.
    நீங்கவேற வளையலுக்குப் போயாச்சு. எனக்கு இன்னும் அம்பி வஸ்த்ரகலாவே வாங்கித்தரலை:)

    ReplyDelete
  39. //வல்லிசிம்ஹன் said...
    அக்காளுக்கு வளைகாப்பு
    அத்தான் முகத்தில புன்சிரிப்பு

    அக்கம்பக்கம் கலகலப்பு
    ஆரைப் பார்த்தாலும் சிறு சிரிப்பு.

    வளைகாப்பு ஐஸுக்கு நடந்தது எங்களுக்கெல்லாம் அருமையா பதிவு கிடைச்சுதுப்பா.
    நீங்கவேற வளையலுக்குப் போயாச்சு. எனக்கு இன்னும் அம்பி வஸ்த்ரகலாவே வாங்கித்தரலை:)

    1:44 PM

    ..//

    வாங்க வல்லிமா நட்சத்திரமாய் ஜொலிச்சீங்கபோல்ருக்கே..அங்கயும் வாழ்த்தினேன் இங்கயும்..
    அம்பி தங்கக்கம்பி என்னிக்காவது நம்கனவை நனவாக்குவார் வல்லிமா...வருகைக்கு புதுப்பாட்டுக்கு நன்றி

    ReplyDelete
  40. வழமைபோல் சுவாரசியமான எழுத்து நடை... நிறையத் தகவல்கள்... இலங்கைத் தமிழர்கள் பேச்சு வழக்கில் வளையலைக் "காப்பு" என்று சொல்வார்கள்.
    ரொம்பப் பொல்லாத கிளியாயிருக்கே? வரும்போது பூனை ஒன்றை பிடித்துப் வரவேண்டும்.

    ReplyDelete
  41. //Vijay said...
    வழமைபோல் சுவாரசியமான எழுத்து நடை... நிறையத் தகவல்கள்... இலங்கைத் தமிழர்கள் பேச்சு வழக்கில் வளையலைக் "காப்பு" என்று சொல்வார்கள்.
    ரொம்பப் பொல்லாத கிளியாயிருக்கே? வரும்போது பூனை ஒன்றை பிடித்துப் வரவேண்டும்.

    7:50 AM

    /////வாங்க விஜு அருமை சகோதரனே இலங்கையின் இளம் புயலே நலமா? வளையலை காப்பு என்று சரியா சொன்னீங்க ஆனா என் கிளிக்கு பூனையைப்பிடிக்கணும்னு சொல்றது நியாயமா?:) கருத்துக்கு நன்றி விஜயாலயன்(பழைய மரத்தடி.காம்ல கொட்டமடிச்சது நினைவுக்கு வர்து:))

    ReplyDelete
  42. வளையோசை கலகலவென மாதிரி ஒரு சூப்பர் வளையல் பதிவு ஷைலஜா மேடம்...

    நிறைய தகவல்கள்... நிறைய புகைப்படங்கள் என்று பதிவு களைகட்டி விட்டதே...

    ReplyDelete
  43. உன்னதங்கள் அமைதியாய் அடக்கமாய் இருக்கும்/

    வளை பற்றி வனப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்>

    ReplyDelete
  44. //R.Gopi said...
    வளையோசை கலகலவென மாதிரி ஒரு சூப்பர் வளையல் பதிவு ஷைலஜா மேடம்...

    நிறைய தகவல்கள்... நிறைய புகைப்படங்கள் என்று பதிவு களைகட்டி விட்டதே...

    9:18 AM<<<>>நன்றி கோபி..பதிவில் இன்னும் பல இணைக்கணும் என்னவோ போங்க மகா லேசிலேடியா இருக்கேன் நன்றி கருத்துக்கு.


    இராஜராஜேஸ்வரி said...
    உன்னதங்கள் அமைதியாய் அடக்கமாய் இருக்கும்/

    வளை பற்றி வனப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்>

    6:56 PM

    //இராஜேஸ்வரியின் அன்பான பாராட்டுக்குமிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.