என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?
வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்
மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்
பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு
நில வெ(வொ)ளியில் திரிகிறது
என் காதல் நினைவுகள்
சில்லென்ற காற்றில்
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை.
Tweet | ||||
மாட்டிக் கொண்டீர்களா!
ReplyDeleteஇதைப் பாருங்கள்.
கைவண்ணம் அங்கே கண்டேன்-ஓ
ReplyDeleteகையின் வண்ணத்தீ வாசிக்கையிலே-உ
வகையன்றோ?குழந்தையின் - குறு
நகையைபோல் குதூகலம் தானே?
(நடராஜன்! மரபில் அசத்துவீங்க நீங்க நான் ஜுஜிபி சும்மா அடிச்சிவிட்றேன்!)
அத்தனை வரிகளும் அற்புதம்...குறிப்பாக..."மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
ReplyDeleteநுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்"---அருமையான வரிகள்.....பாராட்டுக்கள்..
பாராட்டிற்கு நன்றி சுடர்விழி
ReplyDeleteஷைலஜா
அருமை ஷைலஜா,
ReplyDelete/*மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்
பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு*/
அருமையான வரிகள்.