பரிவுடனே நீ பார்க்கும்போது
பரவசத்தில் என் விழிகள்
படபடத்து இமை கொட்டுகின்றன
நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும்போது
பதில் கூறவும் தெரியாது
மௌனமாகிறேன்
கடந்து சென்ற பூக்கூடையினின்றும்
மிதந்துவரும் பூவாசம்போல
பிரிந்து சென்ற பின்பும்
உன் பார்வையின் தாக்கமும்
பேச்சின் வீச்சும் என்னுள்ளே
பரவிக்கிடக்கின்றன ..
உன்னைப்போல்
பார்க்கவும் தெரியாமல்
உன்னைப்போல்
பேசவும்தெரியாமல்
மௌனமாகவே இருக்கிறேன்,
இன்னமும்.
உன்னதங்களில்
மௌனமும் ஒன்று
அறிவாயா மௌனத்தின்
அர்த்தங்களை?
Tweet | ||||
வணக்கம் சைலஜா
ReplyDeleteவானொலி உலகில் நீங்களும் இருப்பதால் முடிந்தால் இக்கவிதைகளை ஒலிப்பதிவு செய்து இணையத்திலும் பதிக்கலாம்.
ஹைய்யா........................
ReplyDeleteஷைலூ,
நல்வரவு.
நலமா?
வந்தாச்சு வந்தாச்சு ரேய்..
ReplyDeleteவணக்கம் வணக்கமுங்க...வந்தாச்சு வந்தாச்சு ரேய்..இரண்டு பேர் வாழ்த்து சொல்லி இருக்காங்க..அவங்களுக்கு நன்றி சொல்லி கயமை செய்ய தெரியாதா உங்களுக்கு...
ReplyDeleteகானா ப்ரபா! நீங்க சொல்லி இருப்பதை விரைவில் செய்கிறேன் நன்றி
ReplyDeleteதுள்சிமேடம்! வரவேற்புக்கு நன்றிங்க!
அப்பப்பா! ஆனாலும் அவசரம்ப்பா செந்தழலுக்கு! இப்பத்தானே வந்துருக்கேன் ஆரம்பத்துல ஸ்லோ..ஸ்டார்ட்டிங்க் ட்ரபிள்! போகபோக சரியாகலாம்! ரவிக்கும் நன்றி!
ஏனுங்க...
ReplyDeleteநீங்க மரத்தடியில பலநாள் எல்லாரையும் கலாய்ச்சதா சொல்லுறாங்களே...
அந்த மேட்டரை கொஞ்சம் எழுதப்படாதா?
கடந்து சென்ற பூக்கூடையினின்றும்
ReplyDeleteமிதந்துவரும் பூவாசம்போல
பிரிந்து சென்ற பின்பும்
உன் பார்வையின் தாக்கமும்
பேச்சின் வீச்சும் என்னுள்ளே
பரவிக்கிடக்கின்றன ..
அருமை