Social Icons

Pages

Thursday, October 19, 2006

விடுதலை ஹைக்கூ

பெண்விடுதலை பற்றிபேசவேண்டும்
அனுமதிகேட்கிறாள் கணவனிடம்
மனவி.

***************************
விடுதலை கிடைத்தும்
பறக்கமுடியாதநிலை
ஜோதிடக்கிளி

*****************************

மௌனத்திரை போட்டுவிட்டாய்
மனசிறைக்குள் வந்த உனக்கு,இல்லை
விடுதலை.
********************************

13 comments:

  1. விடுதலை கிடைத்தும்
    பறக்க முடியாத நிலை
    பந்தத்தில் சிக்கிய கிளி!

    என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்பது அடியவின் எண்ணம்-
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சகோதரி?

    சொந்தம் ஒரு கைவிலங்கு நான் போட்டது
    பந்தம் ஒரு கால் விலங்கு நீ போட்டது!
    - கண்ணதாசன்

    ReplyDelete
  2. நல்ல கவிதைகள் ஷைலஜா.... என்னதான் விடுதலைன்றத பெரிய விஷயமா பேசுனாலும் சின்ன சின்ன விஷயங்களில் உள்ள விடுதலையின் தேவைகள் அழகா சொல்லீருக்கீங்க.... வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  3. தமிழ்மணத்த்தில் ஹைக்கூ ஒரு புதிய முயற்ச்சி...!!!!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. சிறகில்லாத கிளியை
    விடுதலை செய்து என்ன பயன்?

    நம் மன விலங்குகள் போதும்.
    அவங்க என்ன நினைப்பார்களோ இவர்கள் என்ன நினைப்பார்களோ. இந்த சின்ன பிடி போதுமே.
    நல்ல் கவிதை ஷஇலஜா.

    ReplyDelete
  5. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்

    ReplyDelete
  6. சகோதரர் சுப்பையா அவர்களுக்கு
    அது ஜோதிடனின் கிளீ கூண்டுக்குள் இருப்பது.. சீட்டு எடுக்கறப்போமட்டும் சின்ன விடுதலைகிடைக்கும் ஆனாலும் அதைப்பறப்பதற்கு ஜோதிடர் அனுமதிக்கமாட்டார். இதான் செய்தி..ஆகவே பந்தம் இங்கே சரியாவராதுன்னு தோணுதுங்க..
    அமுதன் தேவ் ரவி வள்ளி சிம்ஹனுக்கும் எனது நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  7. Anonymous3:38 PM

    Muthal hikoo arumai :)

    ReplyDelete
  8. அனைத்து ஹைக்கூவும் நன்றாக இருக்கிறது.

    //பெண்விடுதலை பற்றிபேசவேண்டும்
    அனுமதிகேட்கிறாள் கணவனிடம்
    மனவி.//

    ரசித்தேன். தீபாவளி வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  9. //விடுதலை கிடைத்தும்
    பறக்கமுடியாதநிலை
    ஜோதிடக்கிளி//

    நல்ல ஹைக்கூ!

    சித்திரை பிறந்தால் உனக்கு
    ஏழரையிலிருந்து விடுதலை
    என்றது கூண்டுக்குள்
    சிறையிருந்த சோதிடனின்
    கிளி.

    இது மாதிரி நானும் சிலது கிறுக்கியிருக்கேன். நேரமிருந்தால் பாருங்கள்

    நன்றி

    ReplyDelete
  10. ஹைக்கூக்கள் ரசிக்கும் படி உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Anonymous1:28 AM

    வெறுமனே அழகியலை மட்டுமே பேசும் ஹைக்கூகளில் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ஹைக்கூகள்.
    படைப்பாளிக்கு என் பாராட்டுக்கள்ଧ

    ReplyDelete
  12. Anonymous7:24 PM

    பெண்விடுதலை பற்றிபேசவேண்டும்
    அனுமதிகேட்கிறாள் கணவனிடம்
    மனவி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.