பொறப்பட்டுப்போன மச்சான்
பொம்பள என் மனசத்தான்
பொறுமை இழக்க வச்சான்
சந்தைக்குப் போயெனக்கு
சாதிமல்லி வாங்கியாந்து
சட்டுனு தலயில் வச்சி
சாகசமாப் பேசிப் போனான்
புதுப்பொண்ணு நாந்தனியே
புருஷனுக்குக் காத்திருக்க
புன்னகைச்ச (வேற)பொண்ணருகே
புல்லரிச்சி நிக்கிறானா?
புதிராக இருக்குதம்மா
புரியாத ஆண்மனசு
Tweet | ||||
நாட்டுபுறப் பாடல் சாயலில் எழுதியிருக்கிறீர்கள், நன்று.
ReplyDeleteநன்று. தொடர்ந்து எழுதவும்
ReplyDeleteகிள்ளி கூட எறியாதே
ReplyDeleteபிடித்து எறி வேரோடே
கூடாதடி சந்தேகம்!
ஷைலஜா அம்மா,
ReplyDeleteசந்தேகம் என்னும் ஒரு சரக்கு,
அது பெண்கள் மனசிலே தான் இருக்கு.
பாலா
கானா ப்ரபா முரளி நாகு பாலா!
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி
ஷைலஜா
சைலஷா!
ReplyDeleteபிரபா கூறியது போல்;நல்ல நாட்டுப் பாடல் பாணி! இவ்வகையில் தொடரவும்.
யோகன் பாரிஸ்