Social Icons

Pages

Tuesday, March 04, 2008

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்.

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் சின்னக்குழந்தைகள்
**************************************************************

சின்னவயதில் பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தனக்கென்று சுயமான பாதை எதுவும் தெரியாது. அப்பாவும் அம்மாவும் கைபிடித்துக்கூட்டிப்போகும் பாதைதான் அவர்களின் பாதையாகிறது.

பலருக்குத் தாங்கள் திரைநட்சத்திரமாக முடியாத ஏக்கத்தை அல்லது வெறியை தங்கள் வாரிசுகளின் மூலமாய் தீர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகளும் ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றிவிழும் ஆடம்பர வெளிச்சத்தை விரும்பி மாயவலையில் விழுந்துவிடுகிறார்கள்.வளரவளர அதற்காக படிப்பை இதர லட்சியங்களை அழித்திக்கொள்ளவும் சித்தமாகிறார்கள். பள்ளி செல்லும் பருவத்தில் தங்களது அடித்தளத்தையே
மாற்றிக்கொண்டு படப்பிடிக்குப்போகிறார்கள்.

ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்களுக்கு அரசாங்க விதிகள் இருப்பதால் சனிஞாயிறில்தான் ஷூட்டிங் செல்வார்களாம். அதிலும் அஞ்சுமணிநேரத்துக்குமெல் அங்கு குழந்தைகளை வேலைவாங்கக்கூடாதாம். தப்பித்தவறி பள்ளிநாட்களில் படப்பிடிப்புக்குவந்தால் பள்ளி
ஆசிரியரே ஸ்பாட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தரணுமாம்.

ஆனால் இந்தியாவிலோ தங்களது எதிர்காலம் எப்படிப்போகும் என்றே அறியாமல் குழந்தைகள் பள்ளியைவிட்டு படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.இதுவும் குழந்தைத்தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைதானே?

இப்படிப்பட்ட குழந்தைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை ஒளியோடு தருகிறார் நடிகை ரோகினி ஒரு ஆவணப்படம் மூலமாக.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வரும் ஏப்ரலில் நடக்க இருக்கும் Indian Film Festivalக்கு தேர்வாகி இருக்கிறது இவரது ஆவணப்படம்.

' நிலா நிலா ஓடிவா' இதன் பெயர்.

குழந்தைநட்சத்திரமாய் நடிக்கஆரம்பித்து பின் படிப்படியாய் கதாநாயகிநடிகையாய் நடித்த அனுபவம் , அப்போது ஏற்பட்ட
தாக்கம் அவரை இந்தப்படத்தை ஆழ்ந்து சிந்திக்கவைத்து சிறப்பாய் எடுக்க வைத்திருக்கிறதாகக் கூறுகிறார்.

பூனைக்கு மணி கட்டினாலும் அது எழுந்து ஓடினால்தான் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கும்?

9 comments:

  1. குழந்தைகள் சுட்டிடீவி போன்ற சேனல்களில் 24 மணி நேரமும் தோன்றுகின்றனர். இவர்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதா, இது குழந்தைத்தொழிலாலர் சட்டத்தால் கண்டிக்கப்படுவதில்லையா?? இதை பற்றி நானும் ஒரு பதிவை எழுத நினைத்திருந்தேன் தாங்களே அந்த வேலையை அருமையாக செய்திருக்கிறீர்கள்!! இருப்பினும் இது சம்மந்தமாக சட்ட ஆலோசகர்கள் என்ன கூறுகிறார்கள் என விசாரித்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. நம் குழந்தைகள் படும் பாட்டை யாரிடம் சொல்லி அழுவது.மாற்றம் ஏற்படுத்துமானால் இப்படம் எடுத்ததில் பலன் உண்டு.

    ReplyDelete
  3. \\\ கருப்பன்/Karuppan said...
    குழந்தைகள் சுட்டிடீவி போன்ற சேனல்களில் 24 மணி நேரமும் தோன்றுகின்றனர். இவர்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதா, இது குழந்தைத்தொழிலாலர் சட்டத்தால் கண்டிக்கப்படுவதில்லையா??
    \\\

    அதே..அதே...எங்க வீட்டு குட்டிஸ் எல்லாம் இதை பார்த்து ஒரே அமர்களம் பண்றாங்களாம்.

    ரோகினிக்கு வாழ்த்துக்கள் ;;)

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்ச்சி தருகின்ற தகவல். சினிமாக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்து விடுவதால் என்னவோ இந்த குழந்தைகளைப் பற்றிய பாராமுகம்.

    ReplyDelete
  5. அதிலும் விஜய் தொலைக்காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் மாணவர்களைக் குறிவைத்துதான் ஒளி பரப்பப் படுகின்றன!
    ஹூம்...என்னத்தைச் சொல்வது? யாரிடம் சொவது? யார்தான் கேட்கப்போகிறார்கள்?

    ReplyDelete
  6. //

    கருப்பன்/Karuppan said...
    குழந்தைகள் சுட்டிடீவி போன்ற சேனல்களில் 24 மணி நேரமும் தோன்றுகின்றனர். இவர்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதா, இது குழந்தைத்தொழிலாலர் சட்டத்தால் கண்டிக்கப்படுவதில்லையா
    இது சம்மந்தமாக சட்ட ஆலோசகர்கள் என்ன கூறுகிறார்கள் என விசாரித்துப் பார்க்கிறேன்!//

    செய்யுங்கள் கருப்பன்....சட்டத்திற்கு இவர்கள் அகப்படாமல் சிலர் மறைக்கவும் கூடும் என நினைகிறேன். நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  7. /யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    நம் குழந்தைகள் படும் பாட்டை யாரிடம் சொல்லி அழுவது.மாற்றம் ஏற்படுத்துமானால் இப்படம் எடுத்ததில் பலன் உண்டு.''
    //
    ஆமாம் நானும் அப்படியே நினைக்கிறேன் பொறுத்திருந்துபார்ப்போம்

    5:00 AM

    ReplyDelete
  8. ..//காரூரன் said...
    நல்ல விழிப்புணர்ச்சி தருகின்ற தகவல். சினிமாக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்து விடுவதால் என்னவோ இந்த குழந்தைகளைப் பற்றிய பாராமுகம்.
    //

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி காரூரன்

    ReplyDelete
  9. //P.VR. SUBBIAH said...
    அதிலும் விஜய் தொலைக்காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் மாணவர்களைக் குறிவைத்துதான் ஒளி பரப்பப் படுகின்றன!
    ஹூம்...என்னத்தைச் சொல்வது? யாரிடம் சொவது? யார்தான் கேட்கப்போகிறார்கள்?
    //
    ஆமாம் ....பிஞ்சுநெஞ்சில் நஞ்சினை வேண்டுமென்றே விதைக்கிறார்கள் புதுமை என்ற பெயரில் ...ஏன்ன சொல்ல போங்கள்..நன்றி சகோதரரே கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.