சென்ற ஆண்டி ல்இதே மஹாளய அமாவாசை தினம் ஆரம்பித்து நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அன்னைமீது பாடல்கள் எழுத அவள் அருள அது இனிதாய் நடந்தது இ்ந்த ஆண்டும் அவள் தாள் வணங்கி சக்தி ரதம் என தலைப்பிட்டு தினம் ஒரு கவிதையாக வழங்க எண்ணம் எண்ணிய முடிதல் வேண்டும்!
காப்பு
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
______________________________ _______________
நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்.
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
உடுப்பிகிருஷ்ணன் கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.
. .
Tweet | ||||
அருமை... வாழ்த்துக்கள்....
ReplyDeleteதமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteஇனி வரும் ஒன்பது நாட்களுக்கு ரசமான சக்தி ரத கவிதைகளை ஷைலஜா மூலம் படிக்க வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கணநாதனை வணங்குகிறேன்.முதற்கவிதையே அபாரம்.பின் குறிப்பும் சுவையாகவும் புதிதாகவும் இருந்தது..
ReplyDeleteஇனிய நவராத்ரி வாழ்த்துகள்
அழகிய சந்தத்தோடு பாடத்தூண்டும் அருமையான வரிகள். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் ஷைலஜா.
ReplyDeleteநீங்கள் படைத்திருக்கும் சக்தி ரதத்தில் ஏறி வலம் வர இருக்கும் அம்பாளை தினமும் தரிசித்து ஆனந்திக்க தயாராக இருக்கிறேன். தொடரட்டும் உங்கள் சக்தி ரத பாமாலை.
ReplyDeleteபாராட்டுக்கள்!
பாடல்கள் அருமை...
ReplyDeleteஅருமையான வரிகள்.... பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅன்னையவள் பாமாலை படித்து இன்புறுகின்றோம்.
ReplyDeleteநவராத்திரி வாழ்த்துகள்.
சக்தி ரதம் அருமை..!பாராட்டுக்கள்..!
ReplyDeleteArumaiyana azhahiya varigal paarattukkal
ReplyDeleteமிக அருமையான கருத்துக்களை இங்கு பின்னூட்டமாக அளித்துள்ள அனைவர்க்கும் மிக்க நன்றி. அன்னை அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்!
ReplyDeleteஉடுப்பிகிருஷ்ணன் கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.//
ReplyDeleteபுது தகவல்.
சக்தி ரதம் அருமை.
. .