எனதுனதென்பதெலாம் கனகமகள்
தனது திருவடியினில்சரணமென
மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட
கணப்பொழுதில் கரைந்துவிடும்
தினமுமருள் சேர்ந்துவரும்
மாதவனின்சக்தியவ்ள்
பாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
சேராது தடுத்துவிடும்
கற்பகமே கனியமுதே
கண்டோர்கள் கையெடுக்கும்
சிற்ப வடிவழகே
பொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!
Tweet | ||||
கனக மகள்,பொன் மகள் மாதவனின் சக்தியவள் எனக்கூறி அவள் பெருமைகளை விவரித்து அவள் பாதங்களை பணிந்தவர்கள் நன்மையே அடைவார்கள் என சிறப்பாக புனைந்த கவிதை மிக்க அருமை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே
கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"பாதமதைப்பணியுங்கால்பாதகங்கள் பறந்துவிடும்"கவிதை வரிகள். அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
செந்தாமரை எழிலாளுக்கு
ReplyDeleteஅழகிய பாமாலை...
திரு பார்த்தசாரதி மகேந்திரன் ரூபன் வியபதி ஆகியோரின் அருமையான பின்னூட்டத்திற்கு கனிவான நன்றி
ReplyDeleteபொற்புடைய பொன்மகளைப்
ReplyDeleteபோற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!//
பொன்மகள் பாதம் பணிவோம்.
//மாதவனின்சக்தியவ்ள்
ReplyDeleteபாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
சேராது தடுத்துவிடும் // அருமையான வரிகள்.
கனகமகளைப் பற்றிய பாமாளைக்குப் பாராட்டுக்கள்.
கோமதி அரசுக்கும் ரஞ்சனி நாராயணனுக்கும் வருகைக்கும் கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி
ReplyDelete